Monday, November 20, 2017

கானாடு கோனாடு

கானாடு கோனாடு மறவர் ஆதிக்கம்


படைப்பற்று குடியிருப்புகள் படையினருக்கு வழங்கப்பட்ட நிலக்கொடையாகும்.பெருவேந்தரின் மோதற்களமாகப் பயன்படுத்தப்பட்ட இப்பகுதியில் மறவர் மக்களுக்கு மட்டும் வேந்தர்கள் வழங்கிய படைப்பற்று கல்வெட்டுகள் விரையாச்சிலை,குருந்தன்பிறை,குழிபிறை,கோவனூர்,செவலூர்,பென்னமராவதி,பூலாங்குறிச்சி,ராங்கியம்.



கோனாடு:

சோழர் எல்லை படைப்பற்று:
1.குருந்தன் பிறை கான நாடு பாண்டியராட்சிப்பகுதி
2.விரையாச்சிலை கான நாடு பாண்டியராட்சிப்பகுதி
3.கோட்டூர் இலம்பலக்குடி கான நாடு பாண்டியராட்சிப்பகுதி
4. தெக்காடூர்(ஐந்தூர் படை பற்று) கான நாடு பாண்டியராட்சிப்பகுதி
5.அமாந்தூர் கான நாடு பாண்டியராட்சிப்பகுதி

கானாடு:
பாண்டிய எல்லை படைப்பற்று:
1.சிங்கமங்கலம் கவி நாடு சோழராட்சிப்பகுதி
2.சீரனூர் வட சிறுவாயில் நாடு சோழராட்சிப்பகுதி
3.மேலப்புதுவயல் வடகோனாடு சோழராட்சிப்பகுதி
4.கீழப்புதுவயல் வடகோனாடு சோழராட்சிப்பகுதி

NO.15.AR.NO.137 of 1908 Tirupattur,Ramanathapuram district
Inscriptions of Varaguna Maharaja a pandya king

"கோவரகுணமாராயர்க்கு யாண்டு ....நந்தா விளக்கு எரிய முத்தூர் கூற்றத்து 
பெருமாத்தூர் மறவன் அணுக்க பேரரையன் கடம்ப வேளாண்
வைத்த பழங்காசு பதினைந்து "




மேலைப்பனையூர் கல்வெட்டுகள்:

புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் வட்டம் ,அகிலாண்டேஸ்வரி கோவில் அர்த்தமண்டபம்,பாக்கற்கல்,தூன்கள் நிலைப்படி உள்ள கல்வெட்டுகள்.

காலம்: பாண்டியராட்சி 13 ஆம் நூற்றாண்டு

செய்தி:
இம்மண்டபத்தில் அர்த்தமண்டபம்,பாக்கற்கல்,தூன்கள் நிலைப்படிகள் செய்து கொடுத்தவர்களின் விபரம் கிழே:


1.குன்றாண்டார்.
2.தேசி மாதாக்கள்

மாதன் மக்கள்:

கல்வெட்டு என்: 33:2
"இப்பாக்கல் பனையூர் மறவரில் மாதன் மக்கள் தன்மம்"

"மாதன் மக்கள் என்பது  மாத்தாண்டன்(சூரியன்) மக்கள் அல்லது கொற்றவை மாதாவின்(அகிலாண்டேஸ்வரி) மக்கள் என்ற கூட்டம் கொண்ட மறவர்கள்  பாற்கல் செய்து கொத்துள்ளனர்.


சுந்தரபாண்டிய பேரரையன்:
கல்வெட்டு என்: 33:12
""இக்கால் பனையூர் மறவரில் எட்டி பொன்னனான சுந்தர பாண்டிய பேரரையன் தன்மம்"

பனையூர் மறவரில் பேரரையன் ஒருவன் கொடுத்த தூன் கால் ஒன்று கோவிலுக்கு செய்து கொடுத்தமை.

கோனாட்டு பேரரையன்:
கல்வெட்டு என்: 33:13
""இத்திருநிலைக்கால் இவ்வூர் மறவரில் கோனாட்டு பேரரையர் ஆதனமான சோழகோன் தன்மம்"

பனையூர் மறவரில் கோனாட்டு பேரரையன் சோழகோன் ஒருவன் கொடுத்த நிலைக் கால் ஒன்று கோவிலுக்கு செய்து கொடுத்தமை.


சூட்டத்தேவன் வன்னிமிண்ட்ன்:
கல்வெட்டு என்: 33:34
"இப்பாக்கல்லு இவ்வூர் மறவரில் சூட்டத்தேவன் வன்னிமிண்டன் தன்மம்"

பனையூர் மறவரில் இக்கோவிலுக்கு பாற்கல்லு செய்து கொடுத்தவன் சூட்டத்தேவன் வன்னிமிண்டன் ஆகும்.
வன்னிய பெயர் கொண்ட மறவர் இருந்தவைக்கு இது ஒன்று ஆதாரமாகும்.

சாமந்தார்:
கல்வெட்டு என்: 33:27
""இப்பாக்கல்லு இவ்வூர் மறவரில் சாமந்தார் கருத்தாண்டானான ஒற்றையில் வெட்டி தன்மம்"

சாமந்தார் என்பது தளபதி என்னும் பதவி. கருத்தாண்டான் என்னும் சாமந்தார் செய்த பாக்கல்லு செய்து கொடுத்தமை.


வாள்வீசிகாட்டினான்:
கல்வெட்டு என்: 33:32
""இந்த உத்திரம் மேற்படி கலத்து மறவரில் அடைக்கலங்காத்தனான வாள்வீசி காட்டினான் தன்மம்"

குலமங்கலத்து மறவரில் கோவிலுக்கு உத்திரம் கட்டியவன் அடைக்கலங்காத்தனான வாள்வீசி காட்டினான் குடுத்த தன்மம்..


சோழசிங்கபேரரையன்,மழவராயன்,மாளுவசக்கரவர்த்தி:

கல்வெட்டு என்: 33:34
"இந்த உத்திரம் மேற்படி குலமங்கலத்து மறவரில் அவையன் சோழசிங்க பேரரையன் உள்ளிட்டாரும் இரங்கல்மீட்ட மழவராயன் உள்ளிட்டாரும் பாதிமேற்படி வளத்தான் மாளுவசக்கரவர்த்தி பாதி ஆக தன்மம்"

குலமங்கலத்து மறவரில் கோவிலுக்கு உத்திரம் கட்டியவன் அவையன் சோழ சிங்க பேரரையனும் இரங்கல்மீட்ட மழவராயனும் மேற்படி பாதியை கட்டி கொடுத்தவன் வளத்தான் மாளுவசக்கரவர்த்தி என்னும் மறவனும் குடுத்த தன்மம்.

"கோவனூர் மறவன் தர்மன் குரலான மூவாயிர பேரரையன் தன்மம்"

இந்த கல்வெட்டுகள் யாவும் ஆவணம் 19 என்னும் கல்வெட்டு இதழில் 2008 ஆம் ஆண்டு வெளி வந்தவை ஆகும்.
இந்த கல்வெட்டுகள் யாவும் A.R.E இல் பதிவு செய்யபட்டும் புதுக்கோட்டை கல்வெட்டுகளின்(P.I) பதிவு செய்யபட்ட என்கள் கொண்டவை. இது இன்றும் பனையூர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் உள்ளது.

நன்றி:
திரு.கார்த்திக் தேவர் அவர்கள்.
ஆவணம் 19,2008 இதழ்
புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டுகள்

தாணான்மை நாட்டு வணங்காமுடி வழுவாத தேவர்கள் சரித்திரம்

(சேந்தங்குடி பாளையக்காரர்கள் வரலாறு)

பொன் விழையும் தஞ்சை சீமை அதில் புகழ் விளங்கிய வரலாறுகள் பல உள. அதில் உண்டான பேரரசுகளும் சிற்றரசுகளும் காவிரித் தமிழன்னைக்கு அழகு சேர்த்த செல்வங்களாக உள்ளன. அதில் சோழப் பேரரசர்களின் புகழ் வீழ்ந்த பின் பல அந்நியர்களின் கையில் வீழ்ந்த தஞ்சை மன்னில் தமிழ் வளர்த்த தொல்குடி சிற்றரசர்களின் புகழ்கள் காலத்தில் மறந்திரா வண்ணம் அறந்தாங்கிக்கும் பட்டுக்கோட்டைக்கும் இடையில் உள்ள கீரமங்கலம்,நகரம்,சேந்தங்குடி போன்ற பகுதிகளில் தமிழ் வளர்த்து பேராண்மையுடன் வாழ்ந்த தமிழ் சிற்றரசர்களான வழுவாட்டி தேவர்களின் சரித்தரத்தை பார்ப்போம். இந்நூல் அந்த வழுவாத தேவர்கள் சரித்திரத்தை அவர்களின் சந்ததியினர் வெளியிட்ட நூலின் மூலத்துடன் அவர்களின் ஒப்புதலாலும் ஊக்குவித்தலால் இக்கட்டுரையை சமர்பிக்கிரோம்.

தாணான்மை நாடும் வழுவாத தேவர்களும்:

தாணான்மை என்ற சொல்லிலே எவருக்கும் அடிபணியா "தாளான்மை" என்ற சிறப்புடன் தன்னகத்தே கொண்ட தன்னரசு நாடு என்பது விளங்கும். எனவே இச்சிற்றரசர்கள் சுயகவுரத்திற்கும் வீரத்திற்கும் பேர் போன வீர மக்களாகும். அதனாலே தங்கள் நாட்டுக்கு தாணான்மை நாடு என பெயர் வைத்துள்ளனர்.இதற்க்கு குலமங்கலம்,கீரமங்கலம்,நகரம்,சேந்தன்குடி இன்னும் சில பகுதிகளை உள்ளடக்கியது. இந்த தாணான்மை நாட்டுக்கு "சேந்தங்குடி" தலைநகரமாகும். இன்று அது சிற்றூராகினும் முன்னாளில் அது சிறப்புர விளங்கியுள்ளது. இதனாலே நகரம் என்னும் சிற்றூரும் அருகே உள்ளது.


வழுவாடி தேவர்கள்:

இந்த சிற்றரசர்களின் பட்டம் வழுவாட்டி தேவர்கள். வழுவாடி என்னும் பெயர் பாண்டிய மண்ணன் வழுதி என்னும் பெயருடனும் மற்றும் வீரத்தை குறிக்கும் பெயராக இருப்பினும். இவர்களின் முழுப்பட்டமான "வணங்காமுடி வழுவாட்டி தேவர்" என்னும் பெயரிலே அதற்க்கு விளக்கம் உள்ளது. அதாவது "வணங்காத முடி புணைந்து தன் தரித்த முடியை எக்காலகட்டத்திலும் வழுவாத பண்பை கொண்டவர்கள்".எனவே நீதி,செங்கோல் இவைகள் தன்னை விட்டு வழுவாமல் ஆட்சிபுரிந்தவர்கள் ஆதலில் இவர்கள் "வணங்காமுடி வழுவாத தேவர்கள்" என்ற பெயரே காலபோக்கில் "வணங்காமுடி வழுவாட்டி தேவர்கள்" என்ற பெயரானது.அத்தகை வீர மைந்தர்களின் பூர்வ வரலாறை பார்ப்போமாக.


பூர்வீகம்:

இவர்களின் வரலாறு சில ஒலை சுவடிகள் மூலமாகவும் செவி வழிகதைகளினாலும் மேலும் 1951-ல் புள்ளான்விடுதி மதுரகவி நடேசகோனார் அவர்கள் எழுதிய "விஜயாந்தகளிப்பு" என்ற நூலையும், சேந்தங்குடி செந்தமிழ் புலவர் து.அ.சுப்புராம் அவர்களால் எழுதப்பெற்று 1983-இல் வெளிவந்த "சேந்தங்குடி பாளையக்காரர்கள் வரலாறு" என்ற நூலையும் இன்னும் சிலரின் வரலாற்று  குறிப்புகளையும் ஆய்வு செய்து இன்நூலை எழுதியுள்ளதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.


இவர்கள் பாண்டிய நாட்டை பூர்வீகமாக கொண்ட குடிமக்களாகும். அவர்கள் தொடக்கத்தில் மதுரைப்பக்கத்திலிருந்து இங்கு வந்து சேர்ந்தவர்கள். அவர்கள் அவ்வாறு வந்தவர்கள் என்பதை பாளையத்தாரோடு நெருங்கிய உறவும் தொடர்பும் கொண்டிருந்த ஒரு குறிப்பில்

"ஆதியில் வீரத்தேவன்,ஆவாத்தேவன்,
ஆண்டித்தேவன்,கூத்தா தேவன், என்ற நான்கு
சகோதரர்கள் மதுரைக்கு மேற்கே உள்ள சிவகிரி வடமலையிலிருந்து பலவான்
குடிக்கு கீழ்புறமாய் உள்ள வன்னியன்
சூரைக்குடி" யிலும் கோனாப்பட்டுக்கு சமீபமாய்
உள்ள குருந்தம்பாரையிலும்
வந்து சிற்சில காலம் தங்கி கடைசியாக
இந்த குளமங்கலம் வந்து குடியேறினர்"
என்று அரண்மனை வழுவாட்டி வாசகத்திலிருந்து
படித்து இருக்கிரேன், ஆவாத்தேவன் வழி வந்தோர் என் மூதாதையர்"
என்றும் எழுதியுள்ளார்" -- புலவர் :தா.ச. இராமசாமி.


அந்த நால்வரும் ,குருந்தன்பாறையில் தங்கி இருந்த போது அங்கிருந்து இடம்பெயர்ந்த காரணத்திற்கு பல சமூகத்திலும் புழங்கும் "மகட்கொடை மறுப்பு கதையை" கூறுகின்றனர். "மகட்கொடை மறுப்பு கதை" ஒரு பகுதியிலிருந்து இன்னோரு பகுதிக்கு செல்லும் மக்கள் நாங்கள் பஞ்சம் பிழைக்க வந்தோம் என கூறுவது மரியாதை தராது என்பதற்காக "மன்னன் பெண் கேட்டு அதை ம்றுத்து" வந்தோம் என கூறுவது அவர்கள் கவுரவத்தை  உயர்வாக எண்ண தோன்றும் ஆதலில் அந்த வழக்கத்தை தொன்று தொட்டு பல்வேறு சமூகமும் கூறும் காரண கதையாகும்.

இப்படி வந்தவர்கள் தங்கிய இடம் "அரசர்குளம்" .அங்கு அரன்மனையில் தஞ்சம் அடைந்தனர். இவர்களின் வீர வரலாற்றை கேட்ட அரசர்குளம் அரசன். அவர்களுக்கு அடைக்கலம் தந்து அரண்மனையில் பாதுகாவலராக பணியில் அமர்த்தினான்.


இப்படி வந்த வீரத்தேவன் என்பவரும் அவரின் மனைவியும் கர்ப்பவதியான பொன்ன்மாள் அரசர்குளத்தில் தங்கி ஒரு ஆண் மகவை பெற்றெடுத்தாள் அக்குழந்தைக்கு "விஜயன்" என பெயர் வைத்தனர். உரிய  பிராயத்தில் விஜயன் வளர்ந்து கல்வி,போர் பயிற்ச்சிகளில் சிறந்தவனாக வளர்ந்து அவ்வரண்மனையில் படைதளபதியானான்.

செவி வழி கதையை ஆராய்ந்து நிஜவரலாறை சிந்திப்போம்:

மேலே சொன்னது செவி வழிக்கதையாய் இருப்பினும் அதில் சில உண்மைகளும் இருக்கிறது. இதில் சொன்ன "அரசர்குளம்" என்பது இன்றைய பாலையவநத்தம் ஜமீன். அதன் அரசன் வணங்காமுடி பண்டாற தொண்டைமான். அதைபோல் சேந்தங்குடி ஜமீன் மூதாதையர்கள் பாண்டிய நாடு சிவகிரி,வடமலை பகுதிகளில் இருந்த பாண்டிய நாட்டு மறவர் குலத்தோர்கள். இவர்கள் பாண்டிய சேனையில் தளபதிகளாகவும் சிற்றரசர்களாகவும் திகழ்ந்துள்ளனர். பிற்கால பாண்டிய பேரரசர்களின் ஆட்சி டில்லி சுல்தாண்களால் சிதைந்த பின் குருந்தன்பிறை சூரைக்குடியிலிருந்து கிளம்பி சென்றுள்ளனர். சூரைக்குடி பகுதியை ஆண்டவன் விஜயாலயதேவன் என்பது அதைப்போல் சேந்தங்குடி ஜமீந்தார்களின் பெயர்கள் விஜயதேவர்கள் என்பது ஒற்றுமை ஆய்வுக்குரியது. இதைப்போல் சூரைக்குடி அரசர்களுக்கு தொண்டைமான் என பெயர் இருப்பது போல அறந்தாங்கி தொண்டைமான் அவர்களின் வழித்தோன்றல்கள் பிற்காலத்தில் பாலவநத்தம் பகுதிக்கு குடியேறியதாக நம்ப படுகிறது. பாலவனத்தம் ஜமீனும் சேந்தங்குடி ஜமீனும் சம்பந்திமார்கள். இருவருக்கும் இடையில் 500 வருடமாக திருமண சம்பந்தங்கள் உள்ளது. என்வே அறந்தாங்கி தொண்டைமானும் சூரைக்குடி விஜ்யாலயத்தேவன் சந்நிதியும் பாலவனத்தம்,சேந்தங்குடி அரசர்களின் மூதாதயர்களாக கருதலாம்.















எனவே அரசர்குளம் என்பது பாலவநத்தம் ஜமீன். அரசன் ஒருமுறை வேட்டை ஆடுவதற்காக பாலைவனம் சுனையக்காட்டு பகுதிக்கு சென்றிருந்தார் அப்போது பட்டுக்கோட்டைப் பகுதியயை ஆண்ட பட்டு மழவராயன் வீராச்சாமி மழவராயன் ஆவுடையார் கோவில் தேர்த்திருவிழா காண சென்றபோது அரசன் வேட்டைக்கு சென்றுள்ளான் என்பதை அறிந்து கெட்ட எண்ணங்கலைக் கொண்டு அரசர்குளம் அரண்மனையை பிடிக்க முயன்றான். அப்போது விஜயனும் அரசர்மகனும் எதிர்த்து போரிட்டு விரட்டினார்கள்.

"
"ஆங்கரசர் வேட்டைக்கு போன பின்னர்
அம்புக்கோவில் முதலாய் அரசு செய்வோன்
பாங்கான கள்ளர் குல மழ்வராயன்
பண்டு பட்டுக்கோட்டை தனில் அரசு செய்தோன்
நதீங்காக மாதர்கள் மானபங்கம்
செய்ததனால்....
அவன் பெயர் வீராச்சாமி மழவராயன்

அவன் மறுத்து கொடுமை கூறி
கூளிபோல் பொங்கியவன் சிறைபிடிப்பேன் குலமாதர்
தம்மை கொதித்தான் மன்னோ"


அரசர்க்குளம் அரசர் வீட்டில் இல்லை என்றாலும் பட்டுக்கோட்டை பட்டு மழவராயன் வீராச்சாமி அரசர்குளம் அரண்மனை அரசியையும் மற்றவர்கலையும் சிறைப் பிடிக்க முயன்றபோது விசயனும் இளவரசனும் பட்டு மழவராயன் படை மீது பாய்ந்து போர் தொடுத்தார்கள்

"வாள் விசயன் மெய்மறந்தான் சிறைபிடிப்பேன்
மாதர்கள் தம்மை யென்ர வார்த்தையாலே

தலை விசயம் கொண்டான் விஜயத்தேவன்
நண்ணார் மேல் பாய்ந்திடான் புலியே போல்
கேட்ட கேட்ட மக்களெல்லாம் ஓடிவந்தார்
கிடைத்தாரை சாடினர் மறவர் மக்கள்
ஓட்ட ஓட்டமாய் ஓடும் மழ்வராயர் உயிர்பிழைக்க!"

-அ.சுப்புராம செல்வமுத்துதுரைத்தேவர்

மாவீரன் விஜயத்தேவனை  பற்றி புள்ளான் விடுதி நடேசகோனார் அவர்கள் 1951 எழுதிவெளிவந்த சேந்தங்குடி ஜெமீன் விஜயானந்தக்களிப்பு நூலில் விஜயன் பட்டுக்கோட்டை பட்டு மழவராயனுடன் போரிட்ட வரலாறை விமர்சியாக பாடியுள்ளார்.


"அன்பே பைந்தங்கமே விஜயா -ஆர்க்கும்
அஞ்சாத மறவர் குல சிங்கமே விஜயா
வன்போரில் வாள் வெற்றி விஜயா"

"வாகொத்த பனங்குளம் கிராமம் மறவர் வந்து
குடியான குளமங்கலம் கிராமம்
கொற்றமங்கலம் கிராமம்
கீரமங்கலம் க்ராமம்
நகரம் சேந்தங்குடி கிராமம்
மாட்சிமை துலங்க வர ஆட்சி செய்யுமாறு
மகுடம் சூட்டி அரசர் ஜமீன் தர"


அரசர்குளம் ஆட்சிபகுதிகளில் அமைந்திருந்த அம்புலி ஆற்றிருக்கும் வில்லுனி ஆற்றுக்கும் இடைப்பட்ட சேந்தங்குடி,குளமங்கலம்,கொத்தமங்கலம்,கீரமங்கலம்,நகரம், பகுதிகலை உள்ளடக்கிய சேந்தங்குடி கிராமத்தை தலைமையிடமாக கொண்டு சேந்தங்குடிப்பாளையம் உருவாக்கி கி.பி.1486(கொல்லம் ஆண்டு 661) மாவீரன் விஜயத்தேவனை சேந்தங்குடி பாலையக்காரணக முடி சூட்டினார்கள். அதுமுதல் பதினைந்து பாளையக்காரர்கள் ஆட்சிபுரிந்து வந்துள்ளார்கள்.


சேந்தங்குடி பாளையக்காரர்கள் ஆட்சி தொடரும்போது அறந்தாங்கி தொண்டைமாண்கள் ஆண்டுவந்துள்ளனர். அம்புகோவில் பட்டுகோட்டை பகுதியில் பட்டு மழ்வராயர்கள் என்ற கள்ளர் குலத்தவர்கள் ஆண்டு வந்துள்ளனர். எனவே சிதம்பரம்,சீர்காழி சென்ற் ஆவாத்தேவன் கூத்தாடித்தேவன் குத்தாலம் சென்ற சிரம்பிராண்டி இவர்கள் அனைவரும் சேந்தங்குடி திரும்பி வந்தனர். இவர்கள் விஜயனின் சிற்றப்பன்மார்கள்.


மேற்கண்ட மூவரும் முதலில் குளமங்கலம் வந்து தங்கி இருந்தபோது இவர்கள் மறவர் இனத்து  தேவர் மரபினர்களாக இருந்ததால் இப்பகுதியில் கள்ளர்கள் குலபெண் எடுப்பதற்காக மாவீரன் விஜயத்தேவன் பெண் தேடி ஆலங்காடு சூரன்விடுதி,கீழாத்தூர்,தொண்டைமான் குலப்பெண்களை திருமணம் செய்து வைத்தார்கள்.


"திரை புகழும் விஜயன் வழுவாட்டித் தேவன் சிற்றப்பா மூவர் ஆவர் மேவிய ஆவாத்தேவன்"....

"முறையே ஆலங்காட்டு முத்து தொண்டைமான் அருந்தவப் புதல்வி மீனம்பாளையும் கீழாத்தூர் அருனாசல்த் தொண்டைமான் கொழுந்தான புதல்வி குலக்கொடி சூரன்விடுதி அருணாசலத் தொண்டைமான் புதல்வி பார்வதியும் திருமனம் செய்து வைத்தனர்".

பாளையக்காரன் மாவீரன் விஜயத்தேவன் மறவர் இனத்தேவனுக்கு பனங்குளம் பட்டுக்கோட்டை
 பூச்சு நாயக்கர் குல பெண்ணையும் இந்திர குள கள்ளர் மழவராயர் பெண்னையும் திருமனம் செய்து வைத்தார்கள்.

மாவீரன் விஜய்த்தேவன் மேற்கண்ட பனங்குளம் பெண்களைத் திருமனம் செய்து கொண்டு நாயக்கர் குலப்பெண் வேலரசுத்தேவன் என்ர மகனையும், மழவராயர் மகள் ரெகுநாதன் என்ற மகனையும் பெற்றனர். இதில் விஜ்யத் தேவன் 1526-ம் ஆண்டு இயற்கை எய்தினான். இதில் ரெகுநாத தேவன் சேந்தங்குடி பாளயக்காரனாக மூடிசூட்டப்ப பட்டாண்.

விஜய் ரெகுநாத தேவன் கி.பி.1526 ல் சேந்தங்குடி பாளையக்காரணானார். விஜய நகர பேரரசின் கீழ் தமிழ்நாடு இனைந்து இருந்த் விஜயநகர நாயக்கர் அரசின் மேலாண்மையை ஏற்று சேந்தங்குடியை ஆண்டு வந்தனர்.



சேந்தங்குடி ஜமீன் கி.பி.1553ல் ஆறுமுகத்தேவன் ஆட்சிக்கு வந்தார்
இவரின் பங்காளிகள் அவர்கள் முறையே
1.மொத்தி வீட்டார்
2.தோப்பு  வீட்டார்
3.செம்பன் வீட்டார்
4.பொட்டிரான் கொல்லையார்
5.உப்புக்கார வீட்டார்
6.காங்கேயன் வீட்டார்

இவர்கள் நகரம்,குளமங்கலம்,வலப்பிரமங்காடு,சித்துகாடு பகுதியில் வாழ்கிறார்கள்.


கி.பி.1553-86ல் முருகப்பதேவர் ஆட்சிக்கு வந்தார் இக்காலத்தில் மதுரை பகுதியில் குருந்தம்பாறையில் இருந்து 3-குடும்பங்கள் வந்தன இவர்களோடு பல தொழிலாளிகளையும் தச்சர்கள்,வண்ணார்கள் முதலிய பலரையும் அழைத்து வந்தனர்,

இவர்கள் வகையில் சின்னுத்தேவன் மக்களாகிய சவுக்குபுஞ்சை வகையிரா,ஏழுவீட்டார் வகையறா,நம்பன் புஞ்சை என்ற பிரிவுகளில் வாழ்ந்து வந்தனர்,

இக்காலக்கட்டத்தில் சேந்தங்குடி பாளையத்தில் கீரமங்கலம் சிவன் கோவில்,பனங்குளம் பெருமாள் கோவில் தேர் திருவிழாக்கள் நடைபெற்று வந்துள்ளதாக ஜமீன் தலைமையில் நடந்தது என தெரிகின்றது.


கி.பி.1586 இல் முள்ளிபுஞ்சை மன்னகுட்டி வாரிசுகளாக சேந்தங்குடியில் பட்டமெய்தினர்.


சேதுபதி மன்னர்களும் சேந்தகுடி பாளையக்காரர்கள் பற்றிய குறிப்புகள்:

இராமநாதபுரம் சேதுபதி மன்னன்,சேந்தங்குடி பாளையக்காரனிடம் வரி வசூலிக்க முகமதிய தூதுவனை சந்தங்குடிக்கு அனுப்பினான்.ஆண்டு தோறும் ஐந்நூறு  பொன் திறை என்றே வேண்டி யாங்கு செலுத்திவர மேலிரண்டு வருடங்கள் பூண்ட கப்பம் செலுத்தாமல் போகச் சேது மன்னன் தூண்டுத் தூதுவன் ஏவிச் செல்லும் கப்பம் கொணர்கள் என்றார்கள்.

வந்த தூதுவன் பலாப்பலம் சாப்பிட ஆசைப்பட்டான்

பலாப்பலம் சாப்பிட்ட தூதுவன் மீசையில் பிசிர் ஒட்டிக் கொண்டது . அதற்க்கு சாம்பலை தேய்த்தால் அது நீங்கிவிடும் என கூறி சாம்பலை தடவ பிசிர் போகாத நிலையில் வேறு வழியில்லாமல் தூதுவனின் மீசையும் கிருதாவையும் வெட்டி அனுப்பினர். ஊரே கேலி செய்தது தூதுவன் நிலை கண்டு. தன் தூதுவன் அடைந்த அவமானம் கண்டு சேதுபதி படையெடுத்து வந்து சேந்தங்குடி பாளையக் கிராமங்களை தீயிட்டு கொழுத்தினர்.

இதன் பின் சேதுவின் படைகளை முறியடிக்க சேந்தங்குடி மறவர் படைகளை தயார் செய்து விஜயத்தேவர் போரிட்டார். இதன் பின் சேதுபதியும் வழுவாடியும் சமாதனம் பேசப்பட்டு இருவரும் நன்பராணார்கள்

"தோழர் பலரும் தொடர்ந்து பின் வர
ஆழி சூழ் சேதுவின் அணிநரரெய்திக்
கோபதி விஜய ரகுனாத சேதுபதி புகுந்து
வணங்கி..

..மன்னவன் வழுவாட்டிக்கு அவரின் வீரத்தை பாராட்டினார், இது போக சேதுபதி மன்னரிடம் பேய்குதிரையும் அடக்கி ஆத்திக்கோட்டை ஆயிரம் வேலியும் முன்பாலை கிராமத்தையும் பெற்றார் வழுவாடித்தேவர்.

இராமநாதபுரம் சேதுபதி வழுவாட்டி தேவருக்கு சிற்ப்பான ஒரு விருதாக "வனங்காமுடி  வழுவாட்டி தேவர்" என்ற பட்டத்தையும் வழங்கினார். நாயக்கர் ஆட்சிக்குபின் சேதுமன்னர்கள் ஆட்சிக்கு கீழ்  சேந்தங்குடி பாளையக்காரர்கள் ஆண்டு வந்தனர். கி.பி.1625ல் மன்னன் வழுவாட்டியும் மெய்காவலன் மங்கங்காலடியும் பட்டுக்கோட்டை அருகே சூரியபுரம்,அலிவலம் பகுதியில் வெட்டி கொன்றனர். ப்ன்னாளில் அக்கோவில் முன் இருவரும் உருவச்சிலை அமைத்து வீரவணக்கம் நடைபெற்று வருகிறது.

தஞ்சை நாயக்கர் ஆட்சிக்கு பின் இராமநாதபுரம் சேதுபதியின் ஆட்சிக்குக்கு கீழ் 
1.சேந்தங்குடி
2.பாளையவனம்
3.சிங்கவனம்
4.புனல்வாசல்
5.நெடுவாசல்
6.பாதரங்கோட்டை
7.கல்லாகோட்டை
8.கந்தர்வகோட்டை
9.சில்லத்தூர்
10.கோனூர்
11.மதுக்கூர்
12.அத்திவெட்டி
13.பாப்பாநாடு
 போன்ற பாளையபட்டுகள் இருந்து வந்தது.



இதில் கோனூர்,அத்திவெட்டி,சிங்கவனம் அஞ்சுகொத்து மறவர்கள். சேந்தங்குடி வனங்காமுடி கோப்பி குல மறவர்கள்,நேம நாட்டுமறவர்கள்,அணில் ஏறாக்கோட்டை மறவர் அதலை மறவர் என இப்பிரிவுகள் எதிலாவது வரலாம்.
மொத்தத்தில் மறவரே எனினும்  இன்னும் உட்பிரிவு கண்டறியப்படவில்லை.


1676ல் இராமநாதபுரம் கிழவன் சேதுபதி மன்னர் கறம்பக்குடி,பிலாவிடுதி பச்சைதொண்டைமான் தன் படைத்தலைவனாக்கி ஆண்டுவந்தான். இவன் சகோதரி காத்தாயியை சேதுபதி திருமனம் செய்து கொண்டு புதுக்கோட்டை பல்லவராயனை கொன்று அவனது பகுதிகளுக்கு பச்சை தொண்டைமானை இரகுநாதராய தொண்டைமானை என பெயர்  சூட்டி புதுக்கோட்டைக்கு அரசனாக்கினார்.
பின்னாளில் தஞ்சை மராட்டியர்கள் ஆளுகைக்கு வந்தது சேந்தங்குடி வந்தது. அப்போது ஒரு சிறு புலிக்குட்டியை குடுத்து பரிசளித்தார். இதனால் தஞ்சை மன்னர்களால் பாராட்டப்பட்டார்.


சேந்தங்குடி வழுவாடித்தேவர்கள் பாண்டியர் வழித்தோன்றல்?

சேந்தங்குடி பாளைய்க்காரர்களின் குல தெய்வம் பெருங்கரைமிண்ட அய்யனார் கோவில் கல்தூன்களில் மீன் சின்னங்கள் மதுரையை ஆண்ட பாண்டியர்களை நினைவுபடுத்துகின்றது.மேலும் "சேந்தன்" என்னும் பெயர் மதுரை பாண்டியர்களில் கானப்படுகின்றது. வழுவாடித்தேவர் என்னும் பெயர் கூட வழுதி என்னும் பாண்டியரின் பெயரை குறிக்கின்றது. மேலும் சேந்தங்குடி ஜமிந்தார்கள் மதுரை பகுதிகளிலிருந்து வந்தவர்கள் என்பதில் இவர்கள் பாண்டியர்களின் ஒரு பிரிவினராக கருதலாம்.

ஒருமுறை மராட்டிய மன்னர் அழைப்பை ஏற்று தஞ்சை அரண்மனை மேல் மாடியில்  மன்னருடன் பேசிகொண்டிருந்தார் அப்போது ஒரு நாரை தலைக்குமேல் பறந்தது. அப்போது  பறந்த நாரையை வில்லம்பால் வீழ்த்தினார் வழுவாடியார் இதனால் வியந்த மராட்டியமன்னர் அதம்பை,காயாவூரி கிராமங்களை வழங்கினார்.

கி.பி.1728ல் ரகுநாத வழுவாடித்தேவர் பட்டத்துக்கு வந்தார்.
இவரின் வழி வந்தவர்கள் ஆறுபிரிவினர்கள்
1.மொத்திவீட்டார்
2.முள்ளிபுஞ்சையார்
3.வடக்குவீட்டார்
4.முண்டன் கரை
5.தெற்குவாடியார்
6.நாட்டாம் புஞ்சையர்.என கூறுகின்றனர்.


ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சென்னை ஆளுநர் நேப்பியர் பிரபு அவர்கள் 25-1-1871 ஓர் ஆனையின் மூலம்  நேப்பியர் பிரபு அவர்கள் 25-1-1871 ஓர் ஆனையின் மூலம்,தமிழகத்தில் உள்ள பாளையக்காரர்களுக்கு வரையறை செய்து ஆனையிட்டுள்ளார்.  தஞ்சை மாவட்டத்தில் இருந்த சேந்தங்குடி பாளையக்காரர்கள் மற்றும் 12 பாளையக்காரர்கள்,ஜெமீந்தார்களுக்கு இந்த ஆனையின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த விபரம்,தஞ்சை.ந.மு.வேங்கடசாமி நாட்டார் கள்ளர் சரித்திரத்தில்
சேந்தங்குடி பாளையக்காரர்கள்,கள்ளர் மரபினர்கள் என்று எழுதியுள்ளார்.

ஆனால் சேந்தங்குடி பாளையக்காரர்களின் முன்னோர் மதுரைப்பகுதியில் இருந்து வந்த மறவர்கள். மறவர் இனத்தின் பொதுவாண தேவர் பட்டம் கொண்ட மறவர்கள். இவர்களில் சேந்தங்குடி முதல் பாளையக்காரன்,மாவீரன் விஜயத்தேவன்(கி.பி.1486) இவரைப்பற்றி புள்ளான்விடுதி நடேசகோணார் 1951ல் எழுதி வெளிவந்த "விஜயானந்த களிப்பு"என்னும் நூலின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளனர். சேந்தங்குடி பாளையக்காரர்களின் வழிதோன்றிய அனைவரும் மறவர் இனத்து தேவர் குல மக்களே.

கள்ளர் பெண்களை அதிகமாக மணந்த சேந்தங்குடி ஜமிந்தார்கள்:

சேந்தங்குடி ஜெமீன் வழி வந்தவர்கள் கள்ளர் இனப்பெண்களையே ஆதியில் ஆலங்காடு,சூரண்விடுதி,கீழாத்தூர் பனங்குளம் மழவராயன் பெண்களை எடுத்து வந்துள்ளார்கள்.பிண்ணாளில் சேதுபதி சேர்வைக்காரர் வழி வந்த மாப்பிள்ளை துரை பெண்களை மனந்தார்.

"தானான்மை நாட்டில் வெகு பெண்களிருக்க
நத்தமாலே பழநி சென்றார் இரண்டு
நாரியரும் வன்னியர்குமாரிகளே கொண்டார்
வித்தாரமாச் சிலது நாளே துரைகள்
விந்தையோடு வாழ்ந்தார்"
- நடேசக்கோணார்

பழனி சென்று வன்னிய குல கள்ளர் மரபினரான பழநி கருப்பண்ண தேவரின் இருமகள்களாகிய முத்துலெட்சுமி ஆயியாரை 13-வது ஜமிந்தாருக்கும் அவர் தம்பி ராசுத்துரை தங்கம்மாள் ஆயியாரையும் திருமணம் செய்து கொண்டணர்.

பிண்ணாளில் பாலையவனம் ஜெமிந்தார் விஜயரகுநாத வணங்காமுடி பண்டாரத்தார் இரு புதல்விகளாகிய சின்ன ராசாமணி ஆயியார்,பெரிய ராமசாமி ஆயியார் இருவரையும் திருமணம் செய்து கொண்டார்கள் ஜமீன் தம்பி ராசுத்துரைத்தேவர்.

சேந்தங்குடி மன்னர்களின் ஜாதி பற்றிய முரணான செய்திகள்:

சேந்தங்குடி ஜமீன் பற்றி முதல் தவரான் குறிப்பை புதுக்கோட்டை மேனுவலில் வெங்கட் ராம அய்யர்
வெளியிட்ட குறிப்பில் புதுக்கோட்டை திவான் ஸ்ரீனிவாச அய்யர் தந்த குறிப்பில் நகரம் ஜமிந்தார்கள் வலையர் வகுப்பார் என தவராக எழுதியுள்ளார் தஞ்சை மாவட்டத்தில் இருந்த அன்றைய சேந்தங்குடிஜமீன் பற்றி தெரியாமல் ஏதோ மராட்டிய மன்னர் சரபோஜி தந்த நிலத்தில் மன்னரானார் வழுவாடி என
தவராக எழுதியுள்ளார். இது ஒரு குறிப்புகளில் முற்றிலும் அரைவேக்காடான செவி வழிசெய்தியை பதிவு செய்துள்ளனர்.

நாயக்கர் காலத்துக்கு முன்னே அறந்தாங்கி தொண்டைமான் காலத்தே ஏற்பட்ட ஜமீன் சேந்தங்குடி.

இதன் பின் சென்னை ஆளுநர் நேப்பியர் பிரபுவின் 25-01-1871 நிர்வாக ஆனையில் அது தஞ்சை பகுதி 
கள்ளர் ஜமீன் என குறிக்கபடுகின்றது. அதுவும் அறியா தகவலே.
கள்ளர் சரித்திரம் எழுதிய வேங்கடசாமி நாட்டாரும் சேந்தங்குடி ஜமீன் என குறித்துள்ளார்.

சேந்தங்குடி ஜமீன் பெரும்பாலும் பெண் எடுப்பது பாலையவனம் கள்ளர் ஜமீனில் தான். ஒரு வலையர் சமூகம் அதுவும் கள்ளர் ஜமீனில் பெண் எடுப்பது இயலாத காரியம். மேலும் வழுவாடித்தேவர் பங்காளிகள்,
சம்பந்தகாரர்கள் மழவராயர்,கச்சிராயர்,தொண்டைமான்,பல்லவராயர்,வாயாடியர் என அனைவரும் கள்ளர் என சான்றிதழ்கள் வைத்துள்ளனர். அவர்கள் கீரமங்கலம்,நகரம்,சேந்தங்குடியிலும் அதிகமாக உள்ளனர்.
மேலும் வழுவாடித்தேவர்கள் சிலருக்கும் கள்ளர் என சான்றிதழ்கள் உள்ளன.

மேலும் தஞ்சை சீமையிலே உள்ள அத்திவெட்டி,கோனூர் போன்ற அஞ்சுகொத்து மறவர்கள் என பலரும் அறிந்ததே அவர்களுடனும் வழுவாடித்தேவர் சம்பந்தமுள்ளது.

1949-இல் குமாரசாமி வழுவாடியார் தம் பத்திரத்தில் தனக்கு கடைசியாக இருந்த சேர்வை என்ற பட்டத்தை
வைத்து அவர் அறியாமல் "அகமுடையார்" என சான்றிதழ் வாங்கியுள்ளார். வழுவாடி சேர்வைக்கார்
இரண்டு பத்திரங்களிலும் "அகமுடையார்" என்றே பதியபட்டுள்ளது.

இது பிற்பாடு "அகமுடையார்" என்ற சாதி சான்றிதலை எம்.பி.சி சலுகைக்காக தங்களுக்கு இருந்த அம்பலம்,சேர்வை என்ற பட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த "அம்பலக்காரர்" என மாற்றியுள்ளனர்.
இதுவே சேந்தங்குடி ஜமீந்தாரை  முத்திரையர் சமூகம் என கருத காரணமானது. இது சான்றிதல் குறைபாடுதான் ஒழிய வேறு சம்பந்தமில்லை.

ஆனால் அவர்கள் சம்பந்தம் பூராம் கள்ள்ருடனே தான் ஒழிய முத்திரையர் சமூகத்துடன் அல்ல.

தஞ்சை கள்ளர் சீமையிலே தேவர் பட்டம் பெற்றவர்கள் வழுவாடித்தேவர்களே எனவே தாங்கள் மறவர் இனத்தவர்தான் என பூரணமாக அறிந்திருந்தனர்.

எனவே கடந்த 60 வருடகாலத்துக்கு மேலாக தங்களை மறவர் இனம் மறவர் ஜாதி என கிட்டதட்ட 10 புத்தகங்களுக்கு மேலாக எழுதியுள்ளனர்.

தங்களை அம்பலக்காரர் சமூகம் என காட்டபட்டாலும் தங்களுக்குள்ளே சம்பந்தம் செய்து கொண்டு முத்திரையர் மக்களுக்கும் ஆதரவாக இருந்து தொண்டாற்றி வந்துள்ளனர்.

இவர்கள் தென்பகுதிமக்களே. இந்த கட்டுரையை கண்மூடி தனமாக மட்டும் எழுதவில்லை கோனூர்,அத்திவெட்டி,சிங்கவனம் ஜமீன்கள் மறவர் சமூகத்தவர் என்பதும் அஞ்சுகொத்து திருவாடனை மறவர்கள். அவர்கள் உறவினர்களான செந்தங்குடி மற்றும்  பாலையவன்ம் ஜமிந்தாரின் சம்பந்திகள் எந்த சமூகமாக இருக்க முடியும்.சேந்தங்குடி மறவர் ஜமீனே என்பது தின்னம்.

இவர்கள் வணங்காமுடி கோப்பிகுல மறவர் அல்லது வன்னிய மறவராகவோ அல்லது அனிலேறாக்கோட்டை மறவராகவோ இருக்க கூடும்.  இது சேந்தங்குடி பாளையக்காரர்களே தங்களே மறவர் சமூகம் என ஆனித்தரமாக எழுதிய பல புத்தகங்களையும் அதற்க்கு ஆதரமாக காட்டிய நூல்களும் சான்று.

மேற்கண்ட சேந்தங்குடி பாளையக்காரர்கள் வரலாற்றை தொகுத்து
புள்ளான்விடுதி அமிர்தகவி சு.வெ.நடேசக்கோனார் அவர்கள் எழுதிய "விஜ்யானந்த களிப்பு" என்ற கவிதை நூலை 1951 ஆண்டு எழுதி வெளியிட்டுள்ளார். அந்த கவிதை நூலில் முதல் பாளையக்காரன் பற்றியும் அவர்கள் ஊரில்,அவர்கள் இனம்(ஜாதி) பற்றியும் அவனை அரசர்குளம் அரசர் பாராட்டுவத்ம். அவ்னது சிறியதந்தைகள்

"சொந்தவர் வடமலை முன்னே மறவர் சூழ்ந்துவள வூரதனில் வாழ்ந்தவர்கள் பின்னே வந்தவூர் மாகுருந்த்பிறை அதனில் வாழுமியல் கூறுகிறேன்.

அரசர்குளம் அரசர் மாவீரன் விஜயத்தேவனை பாராட்டுதல்

"அன்பேபைன் தங்கமே விஜயா ஆர்க்கும் அஞ்சாத மறவர் குல சிங்கமே விஜயா
வன்போரில் வாள்வெற்றி விஜயா போர்க்கு வந்தவரை
வென்று புகழ் வந்தவனே விஜயா"

என சேந்தங்குடி ஜமீனின் தோற்றத்தை கூறுகிறது.



இத்னை யாருடை கவுரவத்திற்கு குறைவாது என கணிவோடு கூறுகிறோம்.


சேந்தங்குடி பதினான்காவது அரசி ஸ்ரீ ராணி மாது தங்கம்மாள் ஆயியார் கி.பி.1925-1943

சிவகங்கை எப்படி ஒரு வேலுநாச்சியார் ஆண்டாரோ அதே போல் ராமநாதபுரத்தை ஆண்ட் முத்து திருவாயிநாச்சியார் ஆண்டாரோ அதே போல் சேந்தங்குடி ஜமீனை தங்கம்மாள் ஆயியார் என்னும் வீர நாச்சியார் ஆண்டுவந்தார். இவர் காலத்தில் நாட்டாங்கொல்லை ரகுபதி வழுவாடியார் ஜெமீன் மனியக்காரராகவும் இருந்து பின் ஜமிந்தார் தங்கம்மாள் ஆயியார் சிறிய தந்தை பெரியசாமி வன்னியனார் சேந்தங்குடி மனியக்காரராக மாறினார். தங்கம்மாள் ஆயியார் தந்தை பெயர் பெரியசாமி வன்னியனார்.

வழுவாடித்தேவர்கள் மதுரை பகுதியிலிருந்து வந்தவர்கள். மதுரை,ராமநாதபுரம்,சிவகங்கை,திருநெல்வேலி பகுதியில் கள்ளர்,மறவர்,அகம்படியார் வீடுகளில் இறந்தால் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்த ஆண்கள் மேனியில் துண்டு,சட்டை அனியாமல் துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு துக்கம் அனுசரிப்பது வழக்கம் அதுபோலே இன்றும் வ்ழுவாடித்தேவர்கள் அனுசரித்து வந்திருக்கிறார்கள்.

சேந்தங்குடி 15-வது ஜமீந்தார் சேதுபதி சேர்வைக்காரர்:

சேந்தங்குடி ஜமிந்தார்களுக்கு சேதுபதி என்னும் பெயர் கொண்ட வழுவாடித்தேவர்களும் உள்ளனர்.
சேதுபதிகளின் உறவினர்களும் வழுவாடித்தேவர்களுடன் சம்பந்தம் செய்துள்ளனர்.

சேந்தங்குடி பாளையக்கார்களின் நகரம் பாலசுப்பிரமணியர் கோவில்
சேந்தங்குடி ஜமிந்தார்கள் பழநி முருகன். ஆண்டுதோறும் ஊர்கூடி காவடிகளும் மாலை அணிந்து பழநி செல்வது வழக்கம். பழனி முருகண் கோவில் போல் செயற்கை குன்று அமைத்து ஒரு முருகன் கோவில் கட்டவேண்டும் என்ற ஆவல் கொண்ட் வழுவாடித் தேவர் 1878-79ல் புதுக்கோட்டை திவான் சேசுவா சாஸ்திரி உதவியுடன் நகரம் முருகன் கோவிலை அமைத்தார்.
இந்த கோவிலுக்கு சேதுபதி மன்னர்,தஞ்சை சரபோஜி மன்னர்களும் நிலக்கொடை வழங்கியுள்ளனர்.
மிக பிரசித்தி பெற்ற கோவில் இது.

மேற்கண்ட சேந்தங்குடி பாளையக்காரர்கள் வரலாற்றை தொகுத்து
புள்ளான்விடுதி அமிர்தகவி சு.வெ.நடேசக்கோனார் அவர்கள் எழுதிய "விஜ்யானந்த களிப்பு" என்ற கவிதை நூலை 1951 ஆண்டு எழுதி வெளியிட்டுள்ளார். அந்த கவிதை நூலில் முதல் பாளையக்காரன் பற்றியும் அவர்கள் ஊரி,அவர்கள் இனம்(ஜாதி) பற்றியும் அவனை அரசர்குளம் அரசர் பாராட்டுவத்ம். அவ்னது சிறியதந்தைகள்

"சொந்தவர் வடமலை முன்னே மறவர் சூழ்ந்துவள வூரதனில் வாழ்ந்தவர்கள் பின்னேவந்தவூர் மாகுருந்த்பிறை அதனில் வாழுமியல் கூறுகிறேன்.
அரசர்குளம் அரசர் மாவீரன் விஜயத்தேவனை பாராட்டுதல்

"அன்பேபைன் தங்கமே விஜயா ஆர்க்கும் அஞ்சாத மறவர் குல சிங்கமே விஜயா
வன்போரில் வாள்வெற்றி விஜயா போர்க்கு வந்தவரை
வென்று புகழ் வந்தவனே விஜயா

பாருக்கு சீரிட்ட  மறவர் கால பாசமே வந்தாலும் பயம்ற்ற மறவர்
போருக்கே பேர்பெற்ற மறவர் உடலை
போட்டாலும் போரில் வென்காட்டாத மறவர்
வீரமேயுருவான மறவர் அமரில் வீராதி வீரரை வீழ்த்கிற மறவர்
ஆருமே நிகரற்ற மறவர் ஆர்க்கும் அஞ்சாத வேந்தரையும்
கெஞ்சாத மறவர்"
-புள்ளான் விடுதி நடேசக்கோனார்("விஜயன் களிப்பு")

மேற்கண்ட கவிதை நூலின் வாயிலாகவும்,மதுரைபகுதியில் இருந்து வந்தவர்கள் என்றும் இவர்கள் மறவர் இனத்து தேவர் பட்டம் பெற்றவர்கள் என்பதும் தெளிவாக்கபட்டுள்ளது.

சேந்தங்குடி பாளையக்காரர்கள் ஏறக்குறைய பதினைந்து பாளையக்காரர்கள் ஆட்சியில் அவர்கள் கட்டிய சேந்தங்குடி கருப்பண்ண சுவாமி கற்கோவில் முகப்பில் மீன் சின்னம் காணப்படுகின்றது. அவர்கள் கட்டிய நகரம்,அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி மலைக்கோவில் முகப்பில் மீன் சின்னம் காண்ப்படுகிறது. அதன் அருகில் உள்ள இடும்பர் கோவில் முகப்பின் மீன் சின்னம் காணப்படுகின்றது இவைகலைக்கொண்டு பார்க்கும் போது இவர்கள் மதுரைபகுதியில் இருந்து வந்த பாண்டிய மன்னர்களின் ஒரு பிரிவினர் என உறுதியாகின்றது.

சேந்தங்குடி பாளையக்காரர்கள் கி.பி 1486 முதல் கி.பி1948 ஆண்டுகள் ஆட்சியில் தொண்டைமான்,விஜயநர மன்னர்,தஞ்சை மராட்டியர்,இராமநாதபுரம் சேதுபதி இறுதியில்
ஆங்கிலேயர் மன்னர்கள் போன்ற பலர் ஆளுகையில் இருந்தாலும் தன்னரசு ஆட்சி நடத்தினர்.

இவர்களிடம் அவ்வப்போது ஆட்சி மாற்றங்கள் வாரிசு உரிமைப்போர்கள் நடைபெற்றுள்ளன.

பெண்களும் வாரிசு உரிமை போர்கள் ஏற்பட்ட போது ஆட்சிக்கட்டில் ஏறி உள்ளனர்.

அவ்வகையில் சேந்தங்குடி ஜெமிந்தார் ராணி தங்கம்மாள் ஆயியார் வாரிசு தன் மகனுக்காக பசுமகரானியாக இருந்து மகன் இறப்புக்கு பின் இப்பகுதியில் பதினெட்டு ஆண்டுகள் ஆட்சி நடத்தியுள்ளனர். சேந்தங்குடி ராணி தங்கம்மாள்  வாரிசு இல்லாமல் 21-03-1943ல் இறந்து போனார். அதனால் ஏற்பட்ட வாரிசு உரிமைப்போர்களில் நீதி மன்றங்கள் ஏறியுள்ளனர்.

இந்தியா விடுதலை பெற்ற சூழலிலும் ஜெமின் வாரிசு உரிமைபோர் நடைபெற்று அதற்க்கு தீர்வு காண இங்கிலாந்து பிரிகௌன்சில் மற்றும் இந்திய உச்ச் நீதிமன்றம் வரை சென்று தீர்வு கண்டுள்ளார்கள்.

சேந்தங்குடி ஜமீன் பரம்பரையினர் நகரம்,கீரமங்கலம்,குளமங்கலம்,கொத்தமங்கலம் கோயில் பரம்பரை அறங்காவலர்களாக இருந்து வருகிறார்கள்.

சேந்தங்குடி ஜெமீன் பரம்பரையினர் இப்பகுதியில் தமிழகம் பூராவும் பரவி பெருமையுடன் வாழ்ந்து வருகிறார்கள் மேலும்,முதல் பாளையக்காரர் வழி வந்த சிறிய தந்தை ஆவாத்தேவன் வழிவந்த குளமங்கலம் கோப்பியர் முதுகாடு குழு செல்லையா பழைய சட்டமண்ற உறுப்பினர் மற்றும் கீரமங்கலம் சு.சண்முகனாதன்  பழைய சட்டமண்ற உறுப்பினரும் மறவர் இனத்து தேவர்களே.

மேலும் அரசியல் பலம் பெற்ற இம்மக்கள் 1952-2013 வரை புதுக்கோட்டை ஆலங்குடி தொகுதி பேராவூரனி தொகுதி சட்டமண்ற உறுப்பினர்களாகவும் பதவி வகித்தனர்.
இதுபோக பேராவூரனி ஒன்றியம்,திருவரங்குளம் ஒன்றியம்,அறந்தாங்கி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் என்னற்ற ஊராட்சி தலைவர்களாகவும் பதவி வகித்து வந்துள்ளனர்..

மேற்கோள் நூல்கள்:

14-05-1891 நகரம் பாலசுப்பிரமனி கோவில் குடமுழுக்கு விழா இதழ்
1863 கிராம மக்கள் நிலங்கள் தானம்
சென்னை ஆளுநர் நேப்பியர் பிரபுவின் 25-01-1871 நிர்வாக ஆனை
கள்ளர் சரித்திரம் நமு.வெங்கடசாமி நாட்டார் 1928
சேந்தங்குடி கிரயசாசன்ம் 1943
சேந்தங்குடி ஜமீன் விடுதலை பத்திரம் 27-7-1944
புள்ளான் விடுதி நடேசக்கோனார்
தஞ்சை மாவட்ட நீதி மன்ற தீர்ப்புகள் 1947,50,56...
விஜயானந்த களிப்பு உறை செந்தமிழ் புலவர் செல்வமுத்துதுரை தேவர்
"தாணான்மை நாட்டு வரலாறு"-செந்தமிழ் புலவர் செல்வமுத்துதுரை தேவர்
1993- "தானான்மை தங்கம்மாள்"

சேந்தங்குடி ஜமீன் வழுவாடியார் தீக்கதீர்,தனமலர்,மற்றும் இதழ்கள்.
"பாலசுப்பிரமனிய கோவில் ஆண்டு இதழ்"
என ஆவணங்கள் பல.

-
நன்றிகள்:
"தமிழக வரலாற்றில் சேந்தன்குடி பாளையக்காரர்கள் வரலாறு"
இந்த கட்டுரைக்கு ஆதரவான நூல் எழுதிய
நூல் ஆசிரியர்:
சே.சி கந்தசாமி தலைமை ஆசிரியர் (பணி ஓய்வு)
(அ) கந்தசாமி வழுவாடித்தேவர்
முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்
தானான்மை நாட்டு முக்குலத்தோர் பேரவை தலைவர்
சேந்தன்குடி

அன்பு சகோதரர் தமிழியக்கன் சேர்வை

சேதுபதிகள் நானயங்களில் வரும் செய்தி

சேதுபதிகள் நானயங்களில் வரும் செய்தி



சேது என்னும் பெயரான "திருவனை" என்ற குறிப்பு வரலாற்றில் அபராஜித பல்லவன் காலத்திலிருந்து கிடைக்கிறது.அபராஜித பல்லவன் சேது "நந்தி" நாணயம் ஒன்றை வெளியிட்டுள்ளான். இதன் பின் பராந்தக சோழன் காலத்தில் சேது திருவனை பற்றிய "புலி நந்தி" முத்திரை  ஒன்றை வெளியிட்டுள்ளான். 16,17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தளவாய்சேதுபதி,சடையக்க உடைய தேவர் சேதுபதி காலத்தில் நந்தி,சூரியன்,சந்திரன்,மயில் சின்னங்களும் இடம்பெறுகின்றது. பிற்கால சேதுபதிகள் நானயத்தில் அன்னம்,யானை முதலிய சின்னங்களும் முதன் முதலில் முருகனை ஆறுதலைகளுடன் நானயங்களில் வெளியிட்டவர்கள் சேதுபதிகள். சேதுபதிகள் தமிழ் வளர்த்தலையே முதன்மையாக கொண்டுள்ளதால் அவர்களின் நாணயங்கள் தமிழிலிலே அதிகமாக கிடைக்கிறது.


சேதுபதிகளின் நாணயங்களில் சிலவற்றை பார்ப்போம்



பிற்கால சேதுபதிகளின் நாணயங்களில்

தளவாய் சேதுபதி காசுகள்:(1635-1646)


காசில் முதல் பக்கத்தில் இடது நோக்கிய நிற்கும் மயில் உள்ளது. பின் பக்கத்தில் "ரரதளவாய்"  என்று மன்னனின் பெயர் தமிழில் எழுதபட்டுள்ளது. ராசராச என்று எழுதுவதற்கு "ரர" என சுருக்கமாக எழுதுவது வழக்கம். சேதுபதி நாணயங்களில் முதலில் கிடைத்த நாணயம் இதுவே ஆகும்.ஒன்று பரமக்குடி இன்னொன்று மதுரையில் கிடைத்துள்ளது.

இந்த நாணயம் காலத்துக்கு மிகவும் முன்வந்ததாக இருக்கவேண்டும். அதாவது முதலாம் இராஜ இராஜ சோழ தேவரின் தளபதியாக இருந்த உடையணன் என்ற சேதுபதி ஈழத்தையும் கேரளத்தையும் வென்றார். இந்த உடைய தேவரையே ஐயப்பன் கதைகளில் வரும் சோழ மறவர் தளபதியாக இருக்கலாம்.

உடைய தேவர் சேதுபதி:(1711-1725)


இவரும் கேரளத்தை வென்ற உடைய தேவரின் வம்சமாக இருக்கலாம்.கரூரில் இவரது நாணயம் கிடைத்துள்ளது.. நாணயத்தில் சூரியன் சந்திரன் நந்தி சிவன் பொரிக்கபட்டுள்ளது. இவரின் நாணயங்கள் பெரும்பாலும் நந்தி பொரிக்கபட்டுள்ளது. இவரின் நாணயங்களில் "ஸ்ரீ உடைய தெவ" என பொரிக்கபட்டுள்ளது. இவரது நாணயங்கள் மதுரை,கரூர்,கும்பகோணம்,பரமக்குடியில் கிடைத்துள்ளது.


சேதுபதியின் பிற நாணயங்களில் சிவன்,காளை,மயில் சின்னங்கள் வந்துள்ளது.


ஆறுதலை முருகனை நாணயங்களில் முதன் முதலில் தமிழகத்தில் நாணயங்களாக வெளியட்டவர்கள் சேதுபதி மன்னர்களே.

மயில் சின்னம் பொரித்த சேது மன்னவர்கள்.


சேதுபதிகளின் குல தெய்வமான இராஜ இராஜேஸ்வரி அம்மனை நானயங்களில் வெளியிட்ட சேதுபதிகள்.


சேதுபதி,கோனேரிராயன் மற்றும் யாழ்பாண அரசனின் நாணயங்கள் ஒற்றுமை:


சேதுபதிகளின் நாணயங்களில் நந்தி மயில் சின்னங்களே அதிகமாக வந்துள்ளன.இதேபோல் யாழ்பாண அரசனின் நானயங்களிலும்
நந்தி மயில் சின்னங்களே அதிகமாக வந்துள்ளது. இடைக்காலத்தில் சோழநாட்டை ஆண்டை கோனேரிராயன் என்ற வைத்தியலிங்க 
காலிங்கராயனின் நாணயங்களிலும் நந்தி,சூரியன்,வாள் சின்னங்கள்வந்துள்ளது குறிப்பிடதக்கது.


கொனெரிராயன் காலம் 14 ஆம் நூற்றாண்டு .யாழ்பாண அரசனின் நாணயம் 15 ஆம் நூற்றாண்டு. சேதுபதியின் காலம் 17 ஆம் நூற்றாண்டு.

இந்து மூன்று அரசர்களின் நாணயங்களிலும் வந்துள்ளது.



சேதுபதி நானயங்களில் கடல் திரவியமான "முத்து" அதிகமாக இடம்பெற்ரதுடன். தென் கடல் முழுவதும் "முத்து சல்லாபம்" சேதுபதியிடம் இருந்ததால் முத்து என்ற பெயரை தன் பெயரோடு சேர்த்து கொண்டனர். மேலும் முத்து நாணயங்களிலும் இடம் பெற்றது



நன்றி:
தமிழக தொல்லியல் துறை
ஆறுமுக சீத்தாராமன் 

Saturday, August 19, 2017

மூக்கறுப்பு போரின் "தடயங்கள்"


(Hunt for noses) war between Mysore and Madurai.
Sethupathi Saved Madurai From Kannada Forces.


மூக்கறுப்பு போர் வரலாற்றில் நடந்த மிகக்கொடுமையான போர் முறைகளில் ஒன்று.அதாவது எதிரியை வெட்டி வீழ்த்தாமல் அவன் மூக்கை மீசையுடன் அறுத்து நிரந்தரமான ஊனத்தை செயற்கையாக ஏற்படுத்தி அவன் முகத்தை சிதைப்பது தான் இந்த மூக்கருப்பு போரின் வடுக்கள்.















 தமிழ் மண்ணில் இது போன்ற செயல் சோழர், பாண்டியர்க்கு இடையில் நடந்த போர்களில் நடந்து உள்ளது.


சோழன் பாண்டிய நாட்டில் மீது போர் தொடுத்து பாண்டியன் மகனின் மூக்கையும், அவனுக்கு உதவி செய்த படைத்தலைவர்கள் மூக்கையும் அறுத்த செய்தியை சில கல்வெட்டுகள் சொல்கிறது.(1).



ஆனால் உச்சகட்டமாக ஆண்கள்,பெண்கள், குழந்தைகள் என கண்ணில் படும் அனைவரின் மூக்கை அறுத்த கொடூரமும் தமிழ் மண்ணில் அரங்கேறி உள்ளது.


இதைபற்றி சேலம் மாவட்டம் ஆறகளூர் கல்வெட்டு ஆய்வாளர் வெங்கடேசன் சில கல்வெட்டுகளை கண்டறிந்து "ஜன்னல்" இதழில் வெளியிட்டுள்ளார்.

 திருமலை நாயக்கர் காலத்தில் விஜயநகர பேரரசு வலுவிளக்க தொடங்கியது.திருமலை நாயக்கரின் ஆரம்ப காலத்தில்(1625) மைசூர் அரசனான சாமராஜ உடையாருக்கும் திருமலை நாயக்கருக்கும் போர் மூண்டது. திண்டுக்கல் வரை வந்த மைசூர் படையை திருமலை நாயக்கரின் தளபதி ராமபய்யனும் கன்னிவாடி பாளையக்காரர் ரங்கன்ன நயக்கரும் வீழ்த்தினர்.(2) பின் விஜய நகர அரசன் மூன்றாம் ஸ்ரீரங்கன் காலத்தில் மதுரை, தஞ்சை செஞ்சி ஆகிய நாயக்கர்களின் கூட்டுப்படைக்கும் விஜயநகர அரசன் மற்றும் மைசூர் அரசன் ஆகியோர் படைக்கும் போர் நடக்கிறது. நாயக்கர் கூட்டணி பீஜப்பூர் சுலதான் உதவியுடன் விஜய நகர் அரசை வீழ்த்தி சுதந்திர நாடாக மாற்றம் பெருகிறது.

இதில் மைசூர் அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்ப்படுகிறது. விஜய நகர அரசர் மைசூர் அரசனிடம் தஞ்சம் அடைகிறார்(3) .

1656 ஆம் ஆண்டு இரண்டு முறை வீழ்த்தபட்டதுக்கு பழிக்குப்பழிவாங்கவும் முயற்ச்சியிலும்,விஜய நகர் அரசை மீண்டும் தோற்றுவிக்கும் முயற்ச்சியிலும் திருமலை நாயக்கர் ராஜியத்தின் மீது மைசூர் அரசர் கந்தரூவ நரசராஜா போர் தொடுக்கிறார்.(4)

மைசூர் அரசனின் தளபதி கொம்பையா திருமலை நாயக்கரின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியான சத்திய மங்கலத்தை கைபற்றுகிறான்(இன்றய சேலம் மாவட்டம்). சத்தியமங்கலத்துக்குள் நுழைந்த கன்னட வடுகப்படை ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் தாக்கியது.
 தாக்கப்பட்டவர் மூக்குகள் மேலுதடுடன் சேர்த்து அறுக்கப்பட்டு சாக்கில் போடப்பட்டு அரசரின் பார்வைக்கு அனுப்பட்டது.

 இதையடுத்து தொடர்ச்சியாக பல ஊர்களை தாக்கி திண்டுக்கல்லை அடைந்து மதுரையை நோக்கி முன்னேறியது கன்னடர் படை.(5) திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத திருமலை நாயக்கர் காட்டுக்குள் ஓடி ஒழிந்து கொள்கிறார்.(6)


நிலமை கைமீறியதை உணர்ந்த திருமலை நாயக்கர் நேரடியாக அல்லாமல் தன் மனைவி மூலம் தன் நாட்டிற்க்கு ஏற்பட்டிருக்கும் அவளத்தை சேதுபதி ரகுநாத தேவருக்கு எடுத்து சொல்லி உதவுமாறு கோரிக்கை வைக்கிறார். (7)



திருமலை நாயக்கரின் தொடக்க காலத்தில் தன் முன்னோருடம் போர் நடந்த போதிலும்,ஒரு சுமூகமான நிலமை இரு நாட்டிற்க்கும் இல்லாத போதிலும் மதுரை சீமையின் பொது மக்கள் தாக்கப்படப்போகும் அபாயத்தையும்,

 விஜய நகர அரசோ மைசூர் அரசோ மதுரையில் நிலைபெற்றால் அவர்களுடன் பெரும் போர் நடந்த வேண்டி இருக்கும் என்பதை சேதுபதி ரகுநாத தேவர் நண்கு உணர்ந்து இருந்தார்.எல்லாம் முடிந்துவிட்டது மதுரை இனி அவளவு தான் என்ற நிலையில் மறவர்களிடம் இருந்து எதிர்பாராத உதவி கிடைக்கிறது. (8)


சிறிதும் தாமதிக்காமல் ஒரே நாளில் இருபத்து ஐயாயிரம்(25000) மறவர்களை திரட்டிக்கொண்டு மதுரையை அடைந்தார் சேதுபதி ரகுநாத தேவர்.

மைசூர் வடுக படைக்கும் மதுரைக்கும் இடையில் ஒரு சுவர் போல் மறவர்கள் நின்றார்கள்.(வெறும் ஆறு மணிநேரத்தில் இருபத்தி ஐந்து ஆயிரம்(25000) மறவர்களுடன் சேதுபதி மதுரையை அடைந்ததாக சொல்லப்படுகிறது) (9) சேதுபதி ரகுநாத தேவர், நாலுகோட்டை சீமையின் தலைவர் மதியாரழக தேவர், (சிவகங்கை சீமையை உருவாக்கிய சசிவர்ண தேவரின் முன்னோர்), படமாத்தூர் சீமை தலைவர் பொய்யாரழகத்தேவர்(மதியாரழகரின் தம்பி,கௌரி வல்லபதேவரின் முன்னோர்) மதுரை கிழக்கு பகுதியான வண்டியூரில் முகாமிட்டு இருந்தனர்.(10)


 சேதுபதியின் படையில் இருபத்தைந்து ஆயிரம்(25000) மதுரை படையில் சேர்ந்த முப்பத்தைந்து ஆயிரம்(35000) என மொத்தம் அறுபது ஆயிரம் (60000) எண்ணிக்கையிலான படைக்கு தலைமை தாங்கிய சேதுபதி கன்னட படையின் மதுரை முற்றுகையை தகர்த்தார்.

 மைசூர் வடுகப்படை திண்டுக்கல் நோக்கி விரட்டி அடிக்கப்படுகிறது.(11) சேதுபதியின் படைக்கு முன் தன்னை பலவீனமாக உணர்ந்த மைசூர் தளபதி கூடுதல் படை வேண்டும் என மைசூருக்கு தகவல் அனுப்புகிறான்.

அதே நேரம் மதுரை படையில் இருந்த ஒரு பிராமண தளபதிக்கு கையூட்டு(லஞ்சம்) கொடுக்கிறான்.
கையூட்டு பெற்ற பிராமண தளபதி சண்டை தொடங்காமல் காலம் தாழ்த்தி வந்தான்.(மதுரை படை சரணடைகிறது என அறிவித்ததாக சில ஆவணங்கள் சொல்கிறது).
 இது மறவர்களை மிகவும் ஆத்திரம் அடையச்செய்தது.(12) பொறுமை இழந்த மறவர்கள் துரோகம் இழைந்த அந்த பிராமண தளபதியை நிலவறையில் அடைத்துவிட்டு மைசூர் வடுகப்படையை மேல் பாய்ந்து அதனை துண்டு துண்டாகவெட்டி வீழ்த்த ஆரமித்தனர்.(13)

 மைசூர் படை திண்டுக்கல் கோட்டையில் தஞ்சம் அடைந்தது, சிறிது நாட்களில் அவர்கள் எதிர்பார்த்த 20,000 பேர் கொண்ட படை மைசூரில் இருந்து வந்தது.(14) சேதுபதியின் தலைமையிலான படைகளும் மைசூர் படைகளும் நேருக்கு நேராக மோதுகிறது. வெறி கொண்ட தாக்குதலில் இரண்டு பக்கமும் பனிரெண்டாயிரம்(12000) நபர்கள் கொல்லப்பட்டனர். (15)

 இறந்தவர்கள் உடல்கள் அதே இடத்தில் பல நாட்கள் இருந்து சிதைந்து போனதால் அந்த இடமே கருவாட்டு பொட்டல் என அழைக்கப்பட்டது.(16). இன்றும் திண்டுக்கல்லில் அதே கருவாட்டுபொட்டல் காணப்படுகின்றது. கருவாட்டுபொட்டல் திண்டுகல்லில் காணப்படும் மந்தை போன்ற இடமாகும்.


 சேதுபதி படையின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் மைசூர் வடுகர் படை சிதறி ஓடியது. மைசூர் வரை அவர்களை துரத்திச்சென்ற மறவர்கள் அவர்கள் மூக்கை அறுத்தனர். மைசூர் வடுகர் படை எடுப்பு முறியடிக்கப்பட்டு மதுரை காப்பாற்றப்பட்டது.(17)


 ஒருவேளை சேதுபதி உதவாமல் இருந்தால் மதுரை சீமையில் இருந்த பல ஆயிரம் பொது மக்களின் மூக்குகள் அறுக்கப்பட்டு இருக்கும்.மன்னரே காட்டுக்குள் ஓடி ஒழிந்த நிலையில் மதுரை வீழ்த்தப்பட்டு இருக்கும். பின் செஞ்சி மற்றும் தஞ்சை நாயக்கர் எளிதாக வீழ்த்தப்பட்டு இருப்பர் அதன் விளைவாக மீண்டும் விஜய நகர அரசு உருவாக்கப்பட்டிருக்கும்.


பல்வேறு விதமான பேராபத்தில் இருந்து மதுரையை காத்தது மறவர்களே. (மைசூர் படைகள் மதுரையை அடைந்த பாதையின் வரைபடம், மறவர்கள் மதுரையை அடைந்த பாதையின் வரைபடம்,





சேதுபதி மைசூர் படையை விரட்டி அடித்த பாதையின் வரைபடம் இணைக்கப்பட்டு உள்ளது) (மூக்கறுப்பு போர் குறித்து ஜன்னல் மாத இதழில் வந்த செய்தி படங்கள் இணைப்பில்) அடிக்குறிப்புகள்:

மூக்கருப்பு போர் கல்வெட்டுகள் : கல்வெட்டு ஆய்வாளர் ஆறகளூர் வெங்கடேசன்.

 1-Inscription In The Pudukkottai State
 2,3,4-History of the Nayaks of Madura - R.Sathyanatha Aiyar
 5,6-Jesuit Records
 7-The Madura Country: A Manual-James Henry Nelson



Thursday, July 20, 2017

நாடு கடத்தபட்ட நாங்குநேரி மறவர்கள்



தென் இந்திய விடுதலை புரட்சிகள் - இராஜய்யன்

விடுதலைப்போரில் 1801 ல் தூத்துகுடி துறைமுகத்திலிருந்து விடுதலைபோரில் தோற்ற 73 போராளிகளை பினாங்கு மற்றும் மலைசியாவிற்கு நாடு கடத்திய பிரித்தானிய அரசாங்கம்.எனவே ஆயுத ஒடுக்குமுறை சட்டம் என்பது வேறு குற்றப்பரம்பரை சட்டம் என்பது வேறு