Monday, November 20, 2017

சேதுபதிகள் நானயங்களில் வரும் செய்தி

சேதுபதிகள் நானயங்களில் வரும் செய்தி



சேது என்னும் பெயரான "திருவனை" என்ற குறிப்பு வரலாற்றில் அபராஜித பல்லவன் காலத்திலிருந்து கிடைக்கிறது.அபராஜித பல்லவன் சேது "நந்தி" நாணயம் ஒன்றை வெளியிட்டுள்ளான். இதன் பின் பராந்தக சோழன் காலத்தில் சேது திருவனை பற்றிய "புலி நந்தி" முத்திரை  ஒன்றை வெளியிட்டுள்ளான். 16,17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தளவாய்சேதுபதி,சடையக்க உடைய தேவர் சேதுபதி காலத்தில் நந்தி,சூரியன்,சந்திரன்,மயில் சின்னங்களும் இடம்பெறுகின்றது. பிற்கால சேதுபதிகள் நானயத்தில் அன்னம்,யானை முதலிய சின்னங்களும் முதன் முதலில் முருகனை ஆறுதலைகளுடன் நானயங்களில் வெளியிட்டவர்கள் சேதுபதிகள். சேதுபதிகள் தமிழ் வளர்த்தலையே முதன்மையாக கொண்டுள்ளதால் அவர்களின் நாணயங்கள் தமிழிலிலே அதிகமாக கிடைக்கிறது.


சேதுபதிகளின் நாணயங்களில் சிலவற்றை பார்ப்போம்



பிற்கால சேதுபதிகளின் நாணயங்களில்

தளவாய் சேதுபதி காசுகள்:(1635-1646)


காசில் முதல் பக்கத்தில் இடது நோக்கிய நிற்கும் மயில் உள்ளது. பின் பக்கத்தில் "ரரதளவாய்"  என்று மன்னனின் பெயர் தமிழில் எழுதபட்டுள்ளது. ராசராச என்று எழுதுவதற்கு "ரர" என சுருக்கமாக எழுதுவது வழக்கம். சேதுபதி நாணயங்களில் முதலில் கிடைத்த நாணயம் இதுவே ஆகும்.ஒன்று பரமக்குடி இன்னொன்று மதுரையில் கிடைத்துள்ளது.

இந்த நாணயம் காலத்துக்கு மிகவும் முன்வந்ததாக இருக்கவேண்டும். அதாவது முதலாம் இராஜ இராஜ சோழ தேவரின் தளபதியாக இருந்த உடையணன் என்ற சேதுபதி ஈழத்தையும் கேரளத்தையும் வென்றார். இந்த உடைய தேவரையே ஐயப்பன் கதைகளில் வரும் சோழ மறவர் தளபதியாக இருக்கலாம்.

உடைய தேவர் சேதுபதி:(1711-1725)


இவரும் கேரளத்தை வென்ற உடைய தேவரின் வம்சமாக இருக்கலாம்.கரூரில் இவரது நாணயம் கிடைத்துள்ளது.. நாணயத்தில் சூரியன் சந்திரன் நந்தி சிவன் பொரிக்கபட்டுள்ளது. இவரின் நாணயங்கள் பெரும்பாலும் நந்தி பொரிக்கபட்டுள்ளது. இவரின் நாணயங்களில் "ஸ்ரீ உடைய தெவ" என பொரிக்கபட்டுள்ளது. இவரது நாணயங்கள் மதுரை,கரூர்,கும்பகோணம்,பரமக்குடியில் கிடைத்துள்ளது.


சேதுபதியின் பிற நாணயங்களில் சிவன்,காளை,மயில் சின்னங்கள் வந்துள்ளது.


ஆறுதலை முருகனை நாணயங்களில் முதன் முதலில் தமிழகத்தில் நாணயங்களாக வெளியட்டவர்கள் சேதுபதி மன்னர்களே.

மயில் சின்னம் பொரித்த சேது மன்னவர்கள்.


சேதுபதிகளின் குல தெய்வமான இராஜ இராஜேஸ்வரி அம்மனை நானயங்களில் வெளியிட்ட சேதுபதிகள்.


சேதுபதி,கோனேரிராயன் மற்றும் யாழ்பாண அரசனின் நாணயங்கள் ஒற்றுமை:


சேதுபதிகளின் நாணயங்களில் நந்தி மயில் சின்னங்களே அதிகமாக வந்துள்ளன.இதேபோல் யாழ்பாண அரசனின் நானயங்களிலும்
நந்தி மயில் சின்னங்களே அதிகமாக வந்துள்ளது. இடைக்காலத்தில் சோழநாட்டை ஆண்டை கோனேரிராயன் என்ற வைத்தியலிங்க 
காலிங்கராயனின் நாணயங்களிலும் நந்தி,சூரியன்,வாள் சின்னங்கள்வந்துள்ளது குறிப்பிடதக்கது.


கொனெரிராயன் காலம் 14 ஆம் நூற்றாண்டு .யாழ்பாண அரசனின் நாணயம் 15 ஆம் நூற்றாண்டு. சேதுபதியின் காலம் 17 ஆம் நூற்றாண்டு.

இந்து மூன்று அரசர்களின் நாணயங்களிலும் வந்துள்ளது.



சேதுபதி நானயங்களில் கடல் திரவியமான "முத்து" அதிகமாக இடம்பெற்ரதுடன். தென் கடல் முழுவதும் "முத்து சல்லாபம்" சேதுபதியிடம் இருந்ததால் முத்து என்ற பெயரை தன் பெயரோடு சேர்த்து கொண்டனர். மேலும் முத்து நாணயங்களிலும் இடம் பெற்றது



நன்றி:
தமிழக தொல்லியல் துறை
ஆறுமுக சீத்தாராமன் 

Saturday, August 19, 2017

மூக்கறுப்பு போரின் "தடயங்கள்"


(Hunt for noses) war between Mysore and Madurai.
Sethupathi Saved Madurai From Kannada Forces.


மூக்கறுப்பு போர் வரலாற்றில் நடந்த மிகக்கொடுமையான போர் முறைகளில் ஒன்று.அதாவது எதிரியை வெட்டி வீழ்த்தாமல் அவன் மூக்கை மீசையுடன் அறுத்து நிரந்தரமான ஊனத்தை செயற்கையாக ஏற்படுத்தி அவன் முகத்தை சிதைப்பது தான் இந்த மூக்கருப்பு போரின் வடுக்கள்.















 தமிழ் மண்ணில் இது போன்ற செயல் சோழர், பாண்டியர்க்கு இடையில் நடந்த போர்களில் நடந்து உள்ளது.


சோழன் பாண்டிய நாட்டில் மீது போர் தொடுத்து பாண்டியன் மகனின் மூக்கையும், அவனுக்கு உதவி செய்த படைத்தலைவர்கள் மூக்கையும் அறுத்த செய்தியை சில கல்வெட்டுகள் சொல்கிறது.(1).



ஆனால் உச்சகட்டமாக ஆண்கள்,பெண்கள், குழந்தைகள் என கண்ணில் படும் அனைவரின் மூக்கை அறுத்த கொடூரமும் தமிழ் மண்ணில் அரங்கேறி உள்ளது.


இதைபற்றி சேலம் மாவட்டம் ஆறகளூர் கல்வெட்டு ஆய்வாளர் வெங்கடேசன் சில கல்வெட்டுகளை கண்டறிந்து "ஜன்னல்" இதழில் வெளியிட்டுள்ளார்.

 திருமலை நாயக்கர் காலத்தில் விஜயநகர பேரரசு வலுவிளக்க தொடங்கியது.திருமலை நாயக்கரின் ஆரம்ப காலத்தில்(1625) மைசூர் அரசனான சாமராஜ உடையாருக்கும் திருமலை நாயக்கருக்கும் போர் மூண்டது. திண்டுக்கல் வரை வந்த மைசூர் படையை திருமலை நாயக்கரின் தளபதி ராமபய்யனும் கன்னிவாடி பாளையக்காரர் ரங்கன்ன நயக்கரும் வீழ்த்தினர்.(2) பின் விஜய நகர அரசன் மூன்றாம் ஸ்ரீரங்கன் காலத்தில் மதுரை, தஞ்சை செஞ்சி ஆகிய நாயக்கர்களின் கூட்டுப்படைக்கும் விஜயநகர அரசன் மற்றும் மைசூர் அரசன் ஆகியோர் படைக்கும் போர் நடக்கிறது. நாயக்கர் கூட்டணி பீஜப்பூர் சுலதான் உதவியுடன் விஜய நகர் அரசை வீழ்த்தி சுதந்திர நாடாக மாற்றம் பெருகிறது.

இதில் மைசூர் அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்ப்படுகிறது. விஜய நகர அரசர் மைசூர் அரசனிடம் தஞ்சம் அடைகிறார்(3) .

1656 ஆம் ஆண்டு இரண்டு முறை வீழ்த்தபட்டதுக்கு பழிக்குப்பழிவாங்கவும் முயற்ச்சியிலும்,விஜய நகர் அரசை மீண்டும் தோற்றுவிக்கும் முயற்ச்சியிலும் திருமலை நாயக்கர் ராஜியத்தின் மீது மைசூர் அரசர் கந்தரூவ நரசராஜா போர் தொடுக்கிறார்.(4)

மைசூர் அரசனின் தளபதி கொம்பையா திருமலை நாயக்கரின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியான சத்திய மங்கலத்தை கைபற்றுகிறான்(இன்றய சேலம் மாவட்டம்). சத்தியமங்கலத்துக்குள் நுழைந்த கன்னட வடுகப்படை ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் தாக்கியது.
 தாக்கப்பட்டவர் மூக்குகள் மேலுதடுடன் சேர்த்து அறுக்கப்பட்டு சாக்கில் போடப்பட்டு அரசரின் பார்வைக்கு அனுப்பட்டது.

 இதையடுத்து தொடர்ச்சியாக பல ஊர்களை தாக்கி திண்டுக்கல்லை அடைந்து மதுரையை நோக்கி முன்னேறியது கன்னடர் படை.(5) திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத திருமலை நாயக்கர் காட்டுக்குள் ஓடி ஒழிந்து கொள்கிறார்.(6)


நிலமை கைமீறியதை உணர்ந்த திருமலை நாயக்கர் நேரடியாக அல்லாமல் தன் மனைவி மூலம் தன் நாட்டிற்க்கு ஏற்பட்டிருக்கும் அவளத்தை சேதுபதி ரகுநாத தேவருக்கு எடுத்து சொல்லி உதவுமாறு கோரிக்கை வைக்கிறார். (7)



திருமலை நாயக்கரின் தொடக்க காலத்தில் தன் முன்னோருடம் போர் நடந்த போதிலும்,ஒரு சுமூகமான நிலமை இரு நாட்டிற்க்கும் இல்லாத போதிலும் மதுரை சீமையின் பொது மக்கள் தாக்கப்படப்போகும் அபாயத்தையும்,

 விஜய நகர அரசோ மைசூர் அரசோ மதுரையில் நிலைபெற்றால் அவர்களுடன் பெரும் போர் நடந்த வேண்டி இருக்கும் என்பதை சேதுபதி ரகுநாத தேவர் நண்கு உணர்ந்து இருந்தார்.எல்லாம் முடிந்துவிட்டது மதுரை இனி அவளவு தான் என்ற நிலையில் மறவர்களிடம் இருந்து எதிர்பாராத உதவி கிடைக்கிறது. (8)


சிறிதும் தாமதிக்காமல் ஒரே நாளில் இருபத்து ஐயாயிரம்(25000) மறவர்களை திரட்டிக்கொண்டு மதுரையை அடைந்தார் சேதுபதி ரகுநாத தேவர்.

மைசூர் வடுக படைக்கும் மதுரைக்கும் இடையில் ஒரு சுவர் போல் மறவர்கள் நின்றார்கள்.(வெறும் ஆறு மணிநேரத்தில் இருபத்தி ஐந்து ஆயிரம்(25000) மறவர்களுடன் சேதுபதி மதுரையை அடைந்ததாக சொல்லப்படுகிறது) (9) சேதுபதி ரகுநாத தேவர், நாலுகோட்டை சீமையின் தலைவர் மதியாரழக தேவர், (சிவகங்கை சீமையை உருவாக்கிய சசிவர்ண தேவரின் முன்னோர்), படமாத்தூர் சீமை தலைவர் பொய்யாரழகத்தேவர்(மதியாரழகரின் தம்பி,கௌரி வல்லபதேவரின் முன்னோர்) மதுரை கிழக்கு பகுதியான வண்டியூரில் முகாமிட்டு இருந்தனர்.(10)


 சேதுபதியின் படையில் இருபத்தைந்து ஆயிரம்(25000) மதுரை படையில் சேர்ந்த முப்பத்தைந்து ஆயிரம்(35000) என மொத்தம் அறுபது ஆயிரம் (60000) எண்ணிக்கையிலான படைக்கு தலைமை தாங்கிய சேதுபதி கன்னட படையின் மதுரை முற்றுகையை தகர்த்தார்.

 மைசூர் வடுகப்படை திண்டுக்கல் நோக்கி விரட்டி அடிக்கப்படுகிறது.(11) சேதுபதியின் படைக்கு முன் தன்னை பலவீனமாக உணர்ந்த மைசூர் தளபதி கூடுதல் படை வேண்டும் என மைசூருக்கு தகவல் அனுப்புகிறான்.

அதே நேரம் மதுரை படையில் இருந்த ஒரு பிராமண தளபதிக்கு கையூட்டு(லஞ்சம்) கொடுக்கிறான்.
கையூட்டு பெற்ற பிராமண தளபதி சண்டை தொடங்காமல் காலம் தாழ்த்தி வந்தான்.(மதுரை படை சரணடைகிறது என அறிவித்ததாக சில ஆவணங்கள் சொல்கிறது).
 இது மறவர்களை மிகவும் ஆத்திரம் அடையச்செய்தது.(12) பொறுமை இழந்த மறவர்கள் துரோகம் இழைந்த அந்த பிராமண தளபதியை நிலவறையில் அடைத்துவிட்டு மைசூர் வடுகப்படையை மேல் பாய்ந்து அதனை துண்டு துண்டாகவெட்டி வீழ்த்த ஆரமித்தனர்.(13)

 மைசூர் படை திண்டுக்கல் கோட்டையில் தஞ்சம் அடைந்தது, சிறிது நாட்களில் அவர்கள் எதிர்பார்த்த 20,000 பேர் கொண்ட படை மைசூரில் இருந்து வந்தது.(14) சேதுபதியின் தலைமையிலான படைகளும் மைசூர் படைகளும் நேருக்கு நேராக மோதுகிறது. வெறி கொண்ட தாக்குதலில் இரண்டு பக்கமும் பனிரெண்டாயிரம்(12000) நபர்கள் கொல்லப்பட்டனர். (15)

 இறந்தவர்கள் உடல்கள் அதே இடத்தில் பல நாட்கள் இருந்து சிதைந்து போனதால் அந்த இடமே கருவாட்டு பொட்டல் என அழைக்கப்பட்டது.(16). இன்றும் திண்டுக்கல்லில் அதே கருவாட்டுபொட்டல் காணப்படுகின்றது. கருவாட்டுபொட்டல் திண்டுகல்லில் காணப்படும் மந்தை போன்ற இடமாகும்.


 சேதுபதி படையின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் மைசூர் வடுகர் படை சிதறி ஓடியது. மைசூர் வரை அவர்களை துரத்திச்சென்ற மறவர்கள் அவர்கள் மூக்கை அறுத்தனர். மைசூர் வடுகர் படை எடுப்பு முறியடிக்கப்பட்டு மதுரை காப்பாற்றப்பட்டது.(17)


 ஒருவேளை சேதுபதி உதவாமல் இருந்தால் மதுரை சீமையில் இருந்த பல ஆயிரம் பொது மக்களின் மூக்குகள் அறுக்கப்பட்டு இருக்கும்.மன்னரே காட்டுக்குள் ஓடி ஒழிந்த நிலையில் மதுரை வீழ்த்தப்பட்டு இருக்கும். பின் செஞ்சி மற்றும் தஞ்சை நாயக்கர் எளிதாக வீழ்த்தப்பட்டு இருப்பர் அதன் விளைவாக மீண்டும் விஜய நகர அரசு உருவாக்கப்பட்டிருக்கும்.


பல்வேறு விதமான பேராபத்தில் இருந்து மதுரையை காத்தது மறவர்களே. (மைசூர் படைகள் மதுரையை அடைந்த பாதையின் வரைபடம், மறவர்கள் மதுரையை அடைந்த பாதையின் வரைபடம்,





சேதுபதி மைசூர் படையை விரட்டி அடித்த பாதையின் வரைபடம் இணைக்கப்பட்டு உள்ளது) (மூக்கறுப்பு போர் குறித்து ஜன்னல் மாத இதழில் வந்த செய்தி படங்கள் இணைப்பில்) அடிக்குறிப்புகள்:

மூக்கருப்பு போர் கல்வெட்டுகள் : கல்வெட்டு ஆய்வாளர் ஆறகளூர் வெங்கடேசன்.

 1-Inscription In The Pudukkottai State
 2,3,4-History of the Nayaks of Madura - R.Sathyanatha Aiyar
 5,6-Jesuit Records
 7-The Madura Country: A Manual-James Henry Nelson



Thursday, July 20, 2017

நாடு கடத்தபட்ட நாங்குநேரி மறவர்கள்



தென் இந்திய விடுதலை புரட்சிகள் - இராஜய்யன்

விடுதலைப்போரில் 1801 ல் தூத்துகுடி துறைமுகத்திலிருந்து விடுதலைபோரில் தோற்ற 73 போராளிகளை பினாங்கு மற்றும் மலைசியாவிற்கு நாடு கடத்திய பிரித்தானிய அரசாங்கம்.எனவே ஆயுத ஒடுக்குமுறை சட்டம் என்பது வேறு குற்றப்பரம்பரை சட்டம் என்பது வேறு







No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.