Saturday, April 23, 2016

தளகர்த்தர்

ஊர்க்காடு ஜமீன்
 (நெல்லில் முத்து வேய்ந்த சிவனைந்த பெருமாள் சேதுராயர்)


ஊர்க்காடு ஜமீன் அம்பசமுத்திரம் அருகில் உள்ள ஊர்க்காடு ராஜா என்றாலே திக்கெட்டிலும் பெயர் பெற்றது.18 ஊர்களையும் தன் கட்டுக்குள் வைத்து ஆட்சி செய்து வந்தனர்.

தற்போது இந்த ஜமீன் வரலாறு வரிசைப்படி எதுவும் தெரியவில்லை ஆனால் அந்த ஊரை சென்று பார்த்தால் அனைத்து இடங்களிலும் ஜமீன் விட்டுச் சென்ற எச்சங்கள் உள்ளன.

இங்கு ஒரு காலத்தில் ஊரை சுற்றி ஐந்து பகுதியிலும் தாமிரபரணி ஓடி இருக்கிறது அதற்கான சுவடுகள் உள்ளன


வரலாற்று சுவடுகளையும் ஆன்மீக தகவல்களையும் இப்பகுதி மக்கள் மணிக்காக பேசிய வரலாறுகள் நிறைய இருக்கின்றன.

ஊர்க்காட்டில் இருந்த பட்டத்து அரன்மனை, கோவில் அரண்மனை, பூஜை அரன்மனை உள்ளிட்ட 5 அரண்மனைகள் இருந்துள்ளன. இதில் கோவில் அரண்மனை மட்டும் தற்போது இருந்துள்ளது. மற்ற அரண்மனைகள் எல்லாம் தரைமட்டமாகி விட்டன.

சுமார் 20 வருடங்களுக்கு முன் இந்த அரண்மனைகளைக் கட்டிடங்களை இடித்து எண்னெற்ற மரசாமாண்களை எடுத்து சென்றனர். அதன்பின் ஒன்றிரண்டு இடத்தில் கூட அரண்மனை இருந்தது காணாமல் போய்விட்டது. இதற்கிடையில் கோவில் அரண்மனை மட்டும் கோவில் மட்டும் கோவில் முன்பு கம்பீரமாக அழகுடன் இருக்கிறது. இந்த அரண்மனையில் ஒரு சேதுராயர் வசித்து வருகிறார்.இந்த அரன்மனை பூமனி என்னும் திரைப்படத்தி படமாக்கப்பட்டது. இந்த ஊர்க்காடு ஜமீனில் இருப்பவர் நெல்லில் முத்துவேய்ந்த சேதுராயர் என்று பெயர் பெற்றவர். இவர்கள் மறவர் இனத்தில் "கொத்து தாலி மறவர்" பிரிவை சார்ந்தவர்கள். 


"நெல்லில் முத்துவேய்ந்த" என்னும் பெயர் இப்பகுதியின் செழிப்பு தாமிரபரனிக் கரையில் அமைந்த ஜமீன் என்பதால் மூன்று போக வளங்கொழித்தால் இப்பெயர் பெற்றனர் இவர்கள் ஊர்க்காடு ஜமீனை ஆண்டுவந்தவரில் மீனாட்சி சுந்தர விநாயக பெருமாள் என்றழைக்கபட்ட ஜமீந்தான் கடைசி அரசர். அவருக்கு பின் எல்.கே.ரானி அரசாட்சிக்கு வந்துள்ளார். இறுதி காலத்தில் இந்த ரானி சென்னை அபிராமபுரத்தில் வாழ்ந்துள்ளார். வடபழனி முருகன் கோயிலுக்கு தந்து சொத்தை எல்லம் எழுதி வைத்துள்ளனர்.

நெல்லில் முத்துவேய்ந்த சேதுராயரைப் பற்றி சிறப்பான ஒரு வரலாறு இன்ரளவும் இந்த ஊரில் பேசப்பட்டு வருகிறது. ஊர்க்காடு சிவன் கோவிலைக் கட்டியவரே நெல்லில் முத்துவேய்ந்த சேதுராயர் தான். இதன் காலம் சரியாக தெரியவில்லை இந்த கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் நந்தியும் கொடிமரமும் உள்ளது. அதன் அருகே இடதுபுற கல்தூங்களில் பிரம்மாண்டமான ராஜ சிலை ஒன்று உள்ளது. இவர்தான் நெல்லில் முத்துவேய்ந்த சேதுராயர். இந்த ராஜ கும்பிட்டபடி இருப்பார். ஆனால் அவரது கை உடைக்கப்பட்டு கானப்படுகின்றது. ஆனால் அந்த சிலை கான அம்சமாக இருக்கிரது அநியாயமாய் ஒரு கலை நயம் கொண்ட சிலையை உடைத்துவிட்டார்களே என வருந்துபடி அந்த பிரம்மாண்டமான சிலைக்கு பின் ஒரு ஆச்சர்யமான கர்ணபரம்பரை கதை உள்ளது.

நெல்லில் முத்துவேய்ந்த சேதுராயர் வயதான காலத்தில் மிகவும் நோயுற்றார். இதனால் ரொம்ப நாட்களாக படுத்த படுக்கையாக இருந்தார் . இனி அவரை யாரும் காப்பற்ற முடியாது என மருத்துவர்கள் கூறிவிட்டதால் தன் உறவினர்கள் அவரை வந்து பார்ட்து சென்றனர். ஆனாலும் இவரது உயிர் போகவில்லை. உயிர் ஊசலாடிக்கொண்டே இருந்துள்ளது. ஏதோ நிறைவேறாத ஆசை இருக்கும் என நினைத்தனர்.எவ்வளவு கம்பீரமாக வாழ்ந்தவர் பல கோவில்களை கட்டியவர் ஏன் அவரது உயிர் சாந்தியுடன் அனையாமல் இப்படி ஊசலாடுகிறது என என்னி ஒரு ஜோதிடரை வரவழைத்து ஜோசியம் பார்த்தனர். ஜோதிடர் ஒரு காரனம் கூறினார். சேதுராயர் கட்டிய கோடிலிங்கேஸ்வரர் கோவிலில் சிவனை வணங்குவது போல் சிற்பம் உள்ளதனால் தான் இவரது உயிர் இன்னும் நீங்காமல் ஊசலாடுகிறது என்றும் அந்த வணங்கும் கையை உடைத்தால் உடனே உயிர் போக வாய்ப்பு உண்டு என ஆருடம் கூறினார்.

அதன்பின்பு ஒரு ஆசாரியை வரவழைத்து அந்த கையை உடைத்தனர் உடனே ராஜாவின் உயிர் பிரிந்தது.

அந்த அளவிற்க்கு கோட்டிலிங்கேஸ்வரர் காக்கும் தெய்வம். சிலைவடிவில் இருந்த ராஜாவின் உயிரை காத்த வள்ளல் ஈசன். இதனாலே அந்த ஊர் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு,கோட்டியப்பர்,கோட்டீஸ்வரர் என்று பெயர் வைத்து அழகு பார்த்தனர்.

ஊர்க்காட்டில் நிறையசத்திரங்களை கட்டிப்போட்டிருக்கிறார்கள் இந்த ஜமீண்தார்கள்.இந்த சத்திரங்களுக்கு எந்த வெள்ள பாதிப்பும் ஏற்படாமல் இருந்துள்ளாது..இந்த மக்களுக்கு இந்த சத்திரங்கள் நன்றாக பயன்பட்டு வந்தது.

ஊர்க்காடு பிரசித்தி பெற்ற சிலம்பு வரிசை:

 ஊர்க்காட்டின் மிக பிரசித்தி பெற்றது அவர்களின் சிலம்பு வரிசை!பிற ஜமீந்தார்கள் பலரும் கூட தங்கள் பகுதியில் ஆட்டங்காட்டும் கொள்ளையர்களை அடக்க இவர்களிடன் உதவி கேட்பது உண்டு. இவர்கள் உதவி செய்ய செல்வார்களே ஒழிய யாரிடமும் எந்த காரனத்துக்கும் சிலம்பு வரிசைகளை சொல்லித் தரமாட்டார்கள்.

ஊர்க்காடு ஜமீனில் மிகவும் விசேஷமானது இந்த சிலம்பு அரிசைதான். ஊர்க்காட்டில் சிலம்பு வகையில் வஸ்தாரி சுப்புத்தேவர் வரிசை,வஸ்தாரி அய்யங்கார் வரிசை என இரு வரிசைகள் உண்டு.

சுப்புத் தேவர் வரிசை என்றால் மாட்டு வண்டி நடுவில் இருக்கும் போர் போல ஒரு கம்பை எடுத்து சுழற்றுவார்கள். அது எழும்பும் ஒருவித இரைச்சல் விளையாடுபவரை கதி கலங்க செய்யும். பக்கத்தில் சுமார் 20 அடி தூரத்தில் இருந்து யாரும் கத்தி,கல் ,கம்பு கொண்டு எறிந்தாலும் இவர்களைத் தாக்காமல் எறிந்தவர்கள் மீதே திரும்பி சென்று விழுந்து விடும். எனவே இந்த விளையாட்ட்டில் எதிராளிகள் தாக்கு பிடிக்க முடியாது. அது மட்டுமில்லாமல் இந்த விளையாட்டைப் பார்ப்பவர்கள் எதிராளிகளை விரட்ட்டியடிக்கபடுவதைக் கண்டு அவர்களும் மற்ற ஜமீந்தார்களும் இக்கலையை கற்று கொள்ள துடிப்பார்கள்.

அய்யங்கார் வரிசை என்றால் உயிரை கொல்லும் வரிசை சிலம்பு கற்றவர்கள் எதிராளியை சாகடிக்க விரும்பினால் மர்மான முறையில் ஒரு இடத்தில் கம்பால் தட்டி விட்டால் போதும்...6 மாதத்திற்குள் எதிராளிக்கு மரணம் நிச்சயம். அவர்களை எந்த நரம்பியல் வைத்தியர்,வர்ம வைத்தியர்களிடம் காட்டினாலும் காப்பாற்றமுடியாது.இந்த இரண்டு விளையாட்டு வரிசைக்களையும் ஊர்க்காடு இளைஞர்களுக்கு மட்டுமே கற்று தருவர்.

அதன் பின்பு சிலம்பாட்டக்காரர்கள் சத்திய பிரமாணம் எடுப்பார்கள். அதில் " என் உடலை விட்டு தலை போனாலும்,உயிர் போனாலும் 5 அரண்மனை ஜமீன் ஆனையாக ஜமீந்தார் மீது ஆனையாக நாங்கள் கற்ற இந்த கலையை ஊர்க்காடு மண்ணின் மைந்தர்களை தவிர பிற சொல்லி தருவதில்லை என பிரமானம் எடுத்து கொள்வார்கள்". எனவே மற்ற ஜமீனை சார்ந்தவர்களால் இந்த கலையை கற்க இயலாது.

வாழ்ந்த ராஜாவும்,நெஞ்சை நெகிழ வைக்கும் வரலாறும்:


ஊர்க்காட்டு ஜமீனுக்கு மன்னராக வாழ்ந்த பூஜாதுரை என்ற  சிவனைந்த சேதுராய பெருமாள் ராஜா பிரசத்தி பெற்றவர். இவர்காலத்தில் இக்கோயிலுக்கு மிக அதிகமான நிலங்கலை தானமாக கொடுத்துள்ளார். கவிஞர்களுக்கு பரிசுகளும் வழிப்போக்கர்களுக்கு நிறைய சத்திரங்களும் அமைத்துள்ளார்.

சமஸ்தாணங்கள் பிரிந்த போது பால்துரை சேதுராயர் என்னும் மன்னன் ஆண்டு வந்துள்ளார். இவர் சேதுராயர் வம்சத்தில் 12-வது தலைமுறையில் வந்தவர் எண்கின்றனர்.  சிவனைந்த சேதுராய பெருமாள் ராஜா என்பவர் ஆண்டு வந்தபோது அவரின் ராணியாக அன்னபூரனி நாச்சியார் வாழ்ந்துள்ளார். அவர்களுக்கு வள்ளி நாச்சியார்,வடிவுக்கரசி நாச்சியார் என இரு மகள்களுடன் செழிப்பாக வாழ்ந்துவந்தார்.ராஜாவுக்கு ஆண் வாரிசு கிடையாது. இவர்களது உறவுக்காரர்கள்தான் பிள்ளைக்குளம் சமீந்தார்.தனது பெண்களில் ஒருவரை பிள்ளைகுளம் சமீந்தருக்கும் இராமநாதபுரம் சேது வாரிசுகளில் ஒருவருக்கும் திருமனம் செய்து வைதார். இப்படி ஊர்க்காடு ஜமீனுக்கு பல சம்ஸ்தானங்களுடன் தொடர்பு உண்டு.

ஊர்க்காடு ஜமீந்தாரோடு வந்த தெய்வங்கள்:

ஊர்க்காடு அரண்மனைக்கு 14 கண்ணார் வயல்காடுகள் உண்டு. கண்ணார் என்றால் குறு வாய்க்கால். அரண்மனைஸ் சாப்பட்டு வகைக்கு 30 ஏக்கர் கொண்ட மூட்டி கண்ணாரில் உள்ள வயற்காட்டில் விளையும் நெல்லை பயன்படுத்தி விருந்து படைக்க வேண்டும்

ஊர்க்காடு ஜமீனை சார்ந்த பல நிலங்கள் வடபழனி முருகன் கோவிலுக்கு லிங்க காந்திமதி நாச்சியார் எழுதி வைத்தார். எஞ்சிய நிலங்களை அரசு எடுத்து கொண்டது.ஆயினும்,குறிப்பிட்ட வரியை செலுத்திக் கொண்டு ஊருக்குள் பொதுமக்கல் விளைநிலங்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

ஜமீன் மிகுந்த தெய்வ பக்தி மிகுந்தவர் தான் கட்டிய கோட்ட்டீஸ்வரர் கோவிலுக்கு நிறை நகைகள் தந்தவர். இது இன்று அரசு அறநிலையத்துறை கட்டுப்பட்டில் உள்ளது.

இதனுடன் நிறை சாமிகளை ஊருக்கு கொண்டுவந்த பெருமை இந்த ஜமீனுக்கு உண்டு. இராமநாதபுரம் குத்துக்கல் வலசை சாமி தன் 18 குதிரை பரிவாரங்களுடன் இவ்வூருக்குள் குடிபுகுந்து கோவில் கொண்ட தெய்வம்.

ஊர்க்காடு சுடலை மாடன் சீவலப்பேரி சுடலையை போல் இப்பகுதியில் பிரசித்தம்.ஊர்க்காடு ஜமீனுக்கும்,சுடலைக்கும் கூட ஒரு சம்பந்தம் உண்டு. சுடலை ஆண்டவர் முதன் முதலில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அவதாரம் எடுத்து,ஊர்க்காடு ஜமீந்தார் மூலமாக தான் என்றும் கர்ணபரம்பரைக் கதைகள் கூறுகிறது. தாமிரபரனி ஆற்றில்தான் சுடலை கோயில் அதிகமாக உள்ளது. குறிப்பாக"உய்காட்டு சுடலை,பொழிக்கரை சுடலை,சீவலப்பேரி சுடலை,ஆழிகுடி மாரடிச்சான் சுடலை,ஆறுமுகமங்கல சுடலை,ஊர்க்காடு சுடலை" உள்பட்ட பல கோயில்கள் உள்ளது. இந்த ஆற்றங்கரை வழியாகத்தான் மலையாளத்தில் இருந்து பெரும்புலையனை சுடலை சம்காரம் செய்துவிட்டு வந்துள்ளார். பின்பு ஊர்க்காடு அருகே தாமிரபரணிய் ஆற்றில் ஒரு நாள் சிமினி ஒன்று ஊர்க்காடு அருகே ஒதுங்கியது. அப்போது ஊர்க்காடு ஜமீனாக இருந்த கோட்டிலிங்க சேதுராயர்,சிவனனைந்த சேதுராயர் இருவரும் தங்க நிறத்தில் இருந்த சிமினியை பார்த்து கையில் எடுத்தனர். அப்போது சிமினி வெடித்து சுடலை தோன்றினார்."நான் சுடலைமாடன் என்னை இவ்விடத்தில் நிலையம் போட்டு வண்ங்கு!" என்று கூறிவிட்டார். அதிலிருந்து சுடலைக்கு நிலையம் போட்டு வணங்க ஆரம்பித்தனர் ஜமீண்தார்கள். இங்குள்ள சுடலை வித்தியாசமாக கேரள கொண்டை போட்டு இருப்பார்.
இதுபோல பல தெய்வங்களை ஊர்க்காட்டில் வைத்து வணங்கினர் சேதுராயர்கள். தற்போது இவர்கள் இல்லாவிட்டலும் அந்த மக்கள் வணங்கிவருகிறார்கள்.

இப்படி பல செல்வாக்குடன் வாழ்ந்த ஊர்க்காடு ஜாமீனின் கடைசியாக லிங்க காந்திமதி நாச்சியார் ஆண்டுள்ளர். அவர் வார்சு இல்லாமல் இறந்து தன் சொத்துக்கள் அனைத்தையும் வடபழனி முருகனுக்கு எழுதி வைத்து மேலுலகம் சென்றார்.இந்த ஜமீண்களின் சிலர் ஊர்க்காட்டிலும் சிலர் நெல்லையிலும் வசித்து வருகின்றனர்.


நன்றி:விகடன் பிரசுரம்
முத்தாலங்குடி நிருபர்

காரண மறவர்

கல்தேர் ஓட்டிய காரண மறவர்

உத்திரகோசமங்கையில் கல் தேர் ஒட்டிய காரண மறத்தி என்னும் "பொன்னாச்சி அம்மன்" பற்றி கதையும் ஆதாரபூர்வமான சுவடியும் இருக்கும் அது காரண மறவர்களை குறிக்கின்றது. இவர்களை சக்கரவர்த்தி மறவர் எனவும் கூறுவர். மதுரை பூர்வீகமான மறவர்களில் இவர்களும் ஒருவர். மதுரை நெடுங்குளம்,பனங்காடி,கோச்ச்டை இன்னும் மதுரையில் பல இடங்களில் இருக்கும் மறவர்களில் இவர்கலும் ஒருவர். இதேப்போல் கொற்க்கை என்னும் தூத்துக்குடி பகுதியிலும் பரதவர் அருகே வாழும் இவர்கள் "பொன்னாச்சி அம்மன்" வழிபாடு உள்ளவர்கள். மதுரை பகுதிகளிலே "பொய்சொல்லா பாண்டியன்" மற்றும் "முத்தையா கருப்பையா" என்னும் இரட்டை தெய்வத்தை வழிபடுகின்றனர். இவர்களில் பலருக்கு கிளைகள் அறியாது சிலருக்கும் மட்டுமே கிளை முறைகள் அறிந்தவர்கள் அது.....

காரன[சக்கரவர்த்தி] மறவர்.

1.தேவன்
2.ராயர்
3.பண்டையோன்
4.பருவச்சான்
5.முருகதினி
6.வளத்தான்

இவர்களை பற்றிய விரிவான வரலாறு விரைவில் பதிவேற்றப்படும். இவர்கள் "படை காரணவர்" களாக மறவர் பாண்டிய படைபற்றில் பனியாற்றிய கல்வெட்டு இரண்டை இங்கு சுட்டுகிறோம்.

க.என் 2/213 ஆண்டு:13-ஆம் நூற்றாண்டு
அரசு:பாண்டியர் அரசன்:கோனேரின்மை கொண்டான்
கோயில்:திருமறைநாதர்
இடம்:திருவாதவூர் மாவட்டம்:மதுரை

செய்தி: இலுப்பை குடி படைப்பற்றில் "படைகாரணவருக்கு" மானியமாக இலுப்பை குடி ஊரை பாண்டியன் வழங்கியுள்ளான்.

கல்வெட்டு:

ஸ்ரீ திருபுவன சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் களவழி நாட்டு இலுப்பை குடி காரணவர்க்கு திருவாதவூர் உடையார் திருமறைநாயனார் கோயில் செய்ய பெருமாள் ஆரணதொழு நின்றான இராசகோபால அமுதுபடி சாத்துபடி நின்றருளிபடி...........

படைகாரணவர் என்பது படைதொழில் செய்யும் படைமறவர்கள் காரணவர் என்றால் தலைவன் என அர்த்தம். படைகாரணவர் படைதொழில் பாண்டியர் வேண்டும் பொழுது படை தொழில் செய்பவர்கள் இவர்களுக்கு மானியமாக வழங்கபட்டுள்ளது.


இதேப்போல்
க.என் 10/2013 ஆண்டு:13-ஆம் நூற்றாண்டு
அரசு:பாண்டியர் அரசன்:கோனேரின்மை கொண்டான்
கோயில்:திருமறைநாதர்
இடம்:திருவாதவூர் மாவட்டம்:மதுரை:
செய்தி: படைப்பற்றில் "படைகாரணவருக்கு" மானியமாக பள்ளிகுறிச்சி என்னும் சமணர்படுகை உள்ள ஊரை பாண்டியன் வழங்கினான்.

கல்வெட்டு:
ஸ்ரீ திருபுவன சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் பள்ளிக்குறிச்சி படைகாரணவர்க்கு தங்களூர் ஆடிமாதம்..............

இவ்வாறு பாண்டிபடைப்பற்றில் பொன்னமராவதி விராச்சிலை மறவரகளை பார்த்தோம். இப்போது காரணமறவர் பற்றி பார்க்க போகின்றோம்.

இரு கல்வெடுகளில் "மதுரைக்கு காரணவரான பராக்கிரம பாண்டிய தேவர்" கொற்கை கொற்றவன் காரண சக்கரவர்த்தி என வந்துள்ளது. பாண்டியர்களின் மதுரை கொற்கை வழியினரான இவர்களை பற்றிய நெடிய பதிவை விரைவில் பதிவேற்றுவோம்..................

தன்னிகரில்லா தளகர்த்தன் மயிலப்பனின் கதை

‘மறம் கந்து ஆக நல்லமர் வீழ்ந்த
நீழ் கழல் மறவர் செல்வுழிச் செல்க! "(புறம்)

பார்போற்றும் சீர்மிகு செந்தமிழ் சீமையாம் சேது சீமை.இச்சீமையில் முதன்மையான நாடுகளில் ஒன்றாம் ஆப்பநாடு. அப்ப நாட்டு கோமறவர் கொண்டையங்கோட்டை கரந்தை மறவரின் பெருங்குடியில் சித்திரங்குடி(முதுகளத்தூர் அருகே) பிறந்தவராம் எங்கள் பெரிய வெள்ளைய தேவர் என்ற இயற்பெயரை கொண்டவராம் மயிலப்பன் சேர்வைக்காரர்.அவரின் வீறுகொண்ட வெஞ்சமர் கதை கூற வந்தோம் யாம்.

சித்திரங்குடி என்பது ஆப்பனூர் நாட்டில் உள்ள ஒரு சிறிய கிராமம். இந்த ஊர் இராச விசுவாசத்திலும் பாரம்பரிய வீர உணர்வுகளுக்கும் பேர்போன ஊர். கி.பி 1772-ல் இராமநாதபுரம் கோட்டைப் பிடித்த ஆற்காடு நவாபும் கும்பெனியாரும் சேது நாட்டை 9 ஆண்டுகள் நிர்வாகம் செய்த போது பலவிதமான இடைஞ்சல்களை ஏற்படுத்தி அந்த பகுதிக்குள் அன்னியர் நுழையாதபடி செய்தனர் அந்த ஊர் மக்கள் . அத்தகையை ஊரில் பிறந்தவர்தான் தளபதி மைலப்பன் சேர்வைக்காரர்.சேர்வைக்காரர் என்றால் அரச சேவையில் உள்ள தளபதி என்ற பொருளாகும். மைலப்பன் என்பது இவரது இயற்பெயர் அல்ல இவருக்கு முன் வாழ்ந்த மைலப்பன் என்ற பெருமகனாரின் வழித்தோன்றலான இவருக்கும் அந்த பெயர் வந்தது.

சிறுவயதில் மறவர் நாட்டை சென்று 3000 மாமறவர்களின் உயிர் கொன்ற கூலிப்படையான ஆங்கிலேய கம்பெனியும் அவனின் அன்றைய எஜமானனான ஆர்க்காடு நவாப்பின் படைகளும் ராம்நாதபுரம் கோட்டையை கைப்பற்றி சிறுவயது பாலகனான மன்னர் முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினரையும் கைது செய்து திருச்சி கோட்டைக்கு கொண்டு சென்றதை எதிர்த்து மாப்பிள்ளை தேவனுடன் சென்றதை எதிர்த்து போராடியது1797-ல் சேதுபதி மன்னருக்கு வழங்கிய வரி,இறைகளை கும்பெனியாருக்கு கொடுக்க மறுத்தது மைலப்பரின் போராட்டம் வவரிக்க முடியாத வரலாறு.

மயிலப்பனின் முதல் போர்: 
1763-இல் மறவர் நாட்டு முக்கிய நகரங்களில் ஒரு உள்நாட்டு கலவரம் வெடித்த போது அந்த குழப்பத்தை பயன்படுத்திகொண்டு அவர்களுக்குகெதிராக தனது விரிவாக்கத்திர்கான அரசியல் நடவடிக்கைகளை நவாப் திட்டமிட்டான்.

1772 ஜனவரியில் நவாப் படைகள் சிவகங்கையில் நுழைந்து முக்கியமான துறைமுகம் தொண்டியைக் கைப்பற்றினர். சௌமியலிங்க பிள்ளை தலைமையிலான மறவர் படைகள் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற இயலாது கலைந்து செல்ல நேரிட்டது. ஆனாலும் நவாப் கர்னாடகா மீது மராட்டியர்கள் படையெடுத்தையொட்டி தனது நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டான். மறுபடியும் மே-1772 இல் நவாப் மற்றும் ஜோசப் ஸ்மித் தலைமையிலான் கும்பினிப் படைகள் மீண்டும் தங்கள் தாக்குதலை தொடர்ந்து இராமநாதபுரம் கோட்டை ஒரு பெரும் பீரங்கியை ஐம்பது இலகுரக துப்பாக்கிகைளையும் பெரும் திடலையும் நாற்பத்து நாண்கு அரங்குகளையும் ஒரு அகழியையும் கொண்டிருந்தது அரசுக்கு எதிராக எந்த புகாரும் தெரிவிக்காத நிலையில் மே 28-ஆம் நால் இரானுவம் கோட்டைக்கு எதிரே திரண்டது. பாஞ்சேர் தலைமையில் மற்றோரு நிலைப்படை மதுரையிலிருந்து புறப்பட்டு சிவகங்கை கிழக்கு பகுதியில் முன்னேறி திருப்புவனத்தை கைப்பற்றியதன் மூலம் சிவகங்கை படைகள் சேதுபதிகளுக்கு உதவி செய்ய முடியாமல் தடுத்துவிட்டது.

ஆற்காடு முகமது அலியின் மகன் படையின் குழுத்தலைமை ஏற்று அரசியின் தூதரோடு பேச்சு வார்த்தை நடத்தி பாளயங்களை பனியவைக்க எடுத்த முயற்ச்சி தோற்றுப்போனது. ஜூன் முதல் நாள் ஸ்மித் ஒரு பொது முற்றுகை போருக்கு உத்தரவிட்டு மறுநாள் கோட்டை சுவரில் ஒரு பிளவை ஏற்படுத்தினான்.வையிட் தலைமையில் ஒரு எறிகுண்டுப்படையினர் கோட்டையை தாக்கினர். இதில் 3000 மறவர் படையினர் இறந்துவிட வளமிக்க நகரை சூறையாடினர் ஆங்கில படையினர்.

பின் இந்த சமஸ்தானத்தை கிழக்கில் ஜோசப்பும் மேற்க்கில் பான்சேரும் 1772 இல் கைப்பற்றினான். இது போன்ற படையெடுப்பை எதிர்பார்ததே சிவகங்கை உடையத்தேவர் சாலைகளில் தடைகளை நிறுவியும் பதுங்கு குழிகளை நிறுவியும் அமைத்திருந்தார்.

முகமது அலி அவரிடம் திரைப்பணம் ஒரு லட்ச ரூபாய் தருமாறு கேட்ட போது அவர் மறுத்து விட்டார். ஜூன்-21 ஆம் நாள் ஸ்மித்தும் பான்சேரும் ஒருங்கினைந்து சிவகங்கையை ஆக்கிரமித்தனர். மறுநாள் படைகள் காளையார் கோயிலை நோக்கி சென்று கீரனூர் சோழவரம் ஆகிய சாவடிகளைக் கைப்பற்றினான். இந்த சூழ்நிலையில் சிவகங்கை அமைச்சர் தாண்டவராய பிள்ளை முகமது அலிக்கு ஒரு உடன்பாடு தயாராகயிருப்பதாக செய்தி அனுப்பினார். ஆனால் அந்த கடித்ததை சிவகங்கை படைகள் தடுத்தி நிறுத்தி வட்டனர். ஜூன் 25 ஆம் ஆண்டு 1772 ஆம் ஆண்டு சிவகங்கை படைகளோடு மோதினான். இதில் சிவகங்கை அரசர் தனது ஆதரவார்களோடு போரில் இறந்தார் அவரது மனைவியும்,தளபதிகளான மருது சகோதரர்களும் திண்டுக்கல் விருப்பாச்சிக்கு தப்பி சென்றனர்.படையெடுத்து வந்தவர்கள் 50000 பகோடா மதிப்புள்ள நகைகளை கைப்பற்றிக்கொண்டனர்.

நவாப் இவ்வாறு மறவர்களை வென்று அவர்களது பெரும் பகுதிகளை இனைந்த்து கொண்டான். இந்த நிலை உருவாக காரணம் அவ்விரு அரசுகளும் வலுவற்றிருந்தது மட்டுமின்றி தென்னிந்தியாவின் மற்ற பாளையங்களில் இருந்து தனிமை பட்டிருந்தது. மேலும் சிவகங்கை அரச குடும்பம் தனது எதிரி நாடான மைசூருக்கு ஓடியது. பிரச்சனைக்கு கூடுதல் காரணமாகியதால் இவ்வாறு அரச குடும்பம் ஒடுக்கபட்டது மக்களின் உறுதியான சுதந்திரத்துக்கும் உணர்வுக்கும் அரச விசுவாசத்திற்கும் ஒத்து போகவில்லை.

இரண்டாம் மைசூர் யுத்த தொடக்கத்தில் இராம்நாதபுரம் மற்றும் சிவகங்கையின் கட்டுப்பட்டினை முகம்மது அலி இழந்த போது இந்தப்பாளையங்கள் இணைக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் பின்னும் நவாப்புக்கும் பாளையக்காரர்களுடனான சமரசம் தோல்வியை கண்டது.

இராமநாதபுரம் பகுதிகளில் போர் வீரர்களாகவும் விவசாயிகளாகவும் இருந்த மறவர்களுக்கு போர் தொடுப்பதிலும் பின்பு அங்கிருந்து விடுபட்டு தங்கள் பயிர் நிலங்களுக்கு திரும்புவதிலும் ஆக இருவகையிலும் சூழலுக்கு ஏற்ப மாறி கொண்டும் கள்ளர்களோடு உடன்பாடுகண்டும் நெருங்க முடியாத வனங்களில் சாவடி அமைத்தும் மற்றும் சர்க்கார் பகுதிகளில் கலவரங்களை உருவாக்கி கொண்டும் இருந்தனர். ஈட்டிகளையும்,துப்பாக்கிகளையும் ஏந்தி கும்பினியின் முகாம்களைக் கொள்ளையிட்டதோடு நவாப் படை கொண்டிருந்த கோட்டைகளுக்குள் எறிகணைகளை வீசினர். இதன் விளைவு 1780 இல் நவாப் நிர்வாகம் கோட்டைக்ளுக்குள் புகலிடம் கேட்க நேரிட்டது. நாட்டின் பெரும் பகுதி சேதுபதிகளின் மாமனான மாப்பிள்ளை தேவரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

இதற்கிடையில் சிவகங்கையின் முன்னாள் திவான் தாண்டவராயபிள்ளை போரில் இறந்துபட்ட உடையத்தேவரின் நாடு மீட்கப்பட உதவுமாறு கைதர் அலியை வேண்டினார் மைசூர் மன்னர், மறவர் நாடுகளை மீட்க உறுதியளித்த சில மாதங்களுக்குள் தாண்டவராய பிள்ளை மறைந்தார். அவரது மறைவுக்கு பின் மருது சகோதரர்கள் இருவரும் ஆக்கிரமிக்கப்ட்ட பகுதிகளின் பிரச்சனைகளில் முன் நின்றனர்.1780-இல் கைதர் அலி ஆற்க்காட்டின் மீது படைஎடுத்து திண்டுக்கல்லை கைப்பற்றி நவாப்பின் ஆட்சிப் பகுதிகளில் மதுரை நகர் எல்லை வரை கைப்பற்றி விட்டனர். மருது சகோதரர்கள் சிவகங்கையில் நுழைந்து விட்டவுடன் உள்ளூர் மக்கள் அவர்களுடன் சேர்ந்து கொள்ள கலவரம் பரவியது. இதில் வேலுநாச்சியாருடன் சிவகங்கை படைக்கு தலைமையேற்ற மருது பாண்டியர் மிகப்பெரிய வெற்றியை பெற்றனர்.

நாடு துண்டாடபட்ட போதும் தகர்க்கவியலாத சுதந்திர உணர்ச்சியுடைய மக்கள் இறுதியில் வென்றனர். அதன் பின்.முகமது அலி கிளர்ச்சியாளர்களின் செல்வாக்கு வளர்வதை தடுக்க 20 வயது நிரம்பிய முத்துராமலிங்க சேதுபதியை சிறையிலிருந்து விடுத்து 1781-இல் சேதுபதியாக நியமித்தான்.இதனால் கோபமான மாப்பிள்ளைத்தேவர் ஹைதர் அலியுடன் சேர்ந்து கொண்டார்.1772-இல் மே மாதம்,கடைசி வாரம் மீண்டும் ஒரு பெரும் படை இராமநாதபுரம் கோட்டை வெளியில் தஞ்சை படையை விட அளவிலும்,வலிமையிலும்,மிஞ்சிய அற்க்காடு நவாப்பின் படையும் கும்பெனியாரின் பரங்கிப்படையுடன்

கி..பி 1799 ஏப்ரல் 24-ல் காலை,அமைதியைக் குழைத்து முதுகுளத்தூரில் துப்பாக்கிகள் படபடக்கும் ஓசை கேட்டது. சர்க்கார் கச்சேரி முன்னர் வேலும் வாளும் நாட்டு துப்பக்கிகளும் பிடித்த மறவர் கூட்டம் ஒன்று திரண்டு நின்றது. கச்சேரிக்குள்ளிருந்து அமில்தார் அடித்து இழுத்து வரப்பட்டார். அங்கு காவலில் இருந்த கும்பெனி சிப்பாய்களது துப்பாக்கிகள் அனைத்தும் பறிக்கப்பட்டன. மறுத்த சிப்பாய்களுக்கு உதை விழுந்தது. அடுத்து அபிராமம் கச்சேரியைத் தாக்கி அங்கும் ஆயுதங்களைக் கைப்பற்றினர். அமில்தாரை அழைத்து சென்று கும்பென்யாரது துணிக் கிடங்கை திறந்து விடுமாறு பலவந்தப் படுத்தினர். கூடி நின்ற மக்கள் சர்க்கார்த் துனிகளை கொள்ளையிட்டு அள்ளிச் சென்றனர். இதனை போன்றோ கமுதிக் கச்சேரி ஆயுதங்களும் தானியக் கிடங்கும் கைப்பற்றப்பட்டன.

பொது மக்கள் கும்பெனியாருக்கும் எதிராக கிளர்ந்து எழுந்து வன்முறையில் ஈடுபட்ட இத்தகைய நிகழ்ச்சி, அன்று முதுகுளத்தூர் தொடங்கி அபிராமம், கமுதி ஆக்ய ஊர்களில் தொடர்ந்து நடைபெற்றன். இந்த கிளர்ச்சியை தலைமை தாங்கி நடத்தியவர் மைலப்பன் என்ற குடிமகன் ஆவார்.

அவரது அறிவுரைப்படி குடிமக்கள் கும்பெனியாருக்கு செலுத்த வேண்டிய தீர்வைப் பணத்தை செலுத்த மறுத்தனர். இந்த கிளர்ஹ்க்சிகளின் பாதிப்பு பற்றி மதுரைச் சீமை வரலாற்றில் இவ்விதம் குறிப்பிடபட்டுள்ளது.

சிறையில் உள்ள சேதுபதி மன்னரை மீண்டும் பதவியில் இருத்த வேண்டும் என்ற இலட்சியத்தில் ,23-4-1797-ல் துவக்கப்பட்டது போன்ற புதிய கிளர்ச்சியொன்று மையிலப்பன் சேர்வைக்காரர் புதிய கிளர்ச்சி யொன்று கும்பெனியாருக்கு எதிராக உருப்பெறுவது போல்த் தோன்றியது. இராமநாதபுரம் கிளர்ச்சியால் பாதிப்புக்கு ஆளானது.

மைலப்பன் ஏற்கெனவே இராம்நாதபுரம் அரசில் சேர்வைக்காரராக இருந்தவர். முதுகுள்த்தூரை அடுத்த சித்திரங்குடியில் பிறந்த விவசாயி. அன்று இந்த சிற்றூர் வீரத்தின் விளை நிலமாக விளங்கியது. கி.பி.1772-ல் கும்பெனியாரும் நவாப்பும் கூட்டாக இராமநாதபுரத்தை பிடித்த பொழுது நிகழந்த போரிலும் கி.பி.1781-ல் மாப்பிள்ளைத் தேவன் தலைமையிலான புரட்சி அணியுடன் இளைஞர் முத்துராமலிங்கம் போரிட்ட பொழுதும் தங்கள் உயிரை கானிக்கையாக தந்து, மறவர் சீமையின் மாண்பை உயர்த்தியவர்களில் குறிப்பிடதக்கவர்கள் இந்த சித்திரங்குடி ஊரினர். இந்த கிளர்ச்சியாளர்களுக்கு உதவிய காடல்குடி பாளைய்க்காரரும் தளபதி மையிலப்பனது உதவிக்கு முன்னூறு வீரர்களை அனுப்பி வைத்ததுடன், சர்க்கார் சீமைக் கிராமங்களில் தமது ஆட்களுடன் அவர் கொள்ளைகளை மேற்க்கொண்டார்.

மைலப்பனின் கிளர்ச்சி ஒரு முக்கியமான குறிக்கோளுடன் சிறையில் உள்ள சேதுபதி மன்னரை விடுவிப்பதற்காக துவக்கபட்டுள்ளது என்றும் அதனை கும்பெனி தளபதி மார்டின்சின் விசாரனைகள் உறுதிப்படுத்துவதுமாகவும் குறிப்பிட்டிருந்தார். சேதுபதி மன்னர்டம் சேர்வைக்காரராக பனியாற்றிய மையிலப்பன் என்வவர் அந்த கிளர்ச்சிக்கு தலைமை தாங்கி வருவதாகவும் அவர் அன்மையில் திருச்சி கோட்டைக்கு சென்று சேதுபதி மன்னரச் சந்தித்து திரும்பிய பிறகு கிளர்ச்சியை முடுக்கிவிட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

சேதுபதி மன்னரிடம் பனியாற்றிய பல அலுவலர்கள் தொடர்ந்து திருச்சியில் உள்ள சேதுபதி மன்னருடன் தொடர்பு கொண்டு இருப்பதால் மைலப்பனது முயற்ச்சிக்குச் சேதுபதியின் ஆதரவு இருந்துவருவது நம்பகத்தன்மையுள்ளதாக உள்ளது என அதன் காரணமாக மறவர் சீமையில் உள்ள நாட்டுத்தலைவர்கள் பலருக்கும் மையிலப்பன் ஒலைகள் அனுப்பி,சேதுபதி மன்னருக்கு ஏற்பட்டுள்ள சிறுமையைக் களையவும் கும்பெனியாரிடமிருந்து மறவர் சிமையை விடுவிக்கவும் குடிகள் அனைவரும் கிளர்ந்து எழுமாறு கோரிக்கை விடுத்து இருப்பதாகவும், அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார் ஆகையால் இந்த கிளர்ச்சி நடவடிக்கைகளை முழுமையாகத்தடுத்து நிறுத்த தவறினால் விபரிதமான விளைவுகளை எதிர்கொள்ள இருக்கின்றன என்று அச்சுறுத்தி இருந்தார். சேதுபதி மன்னர் திருச்சிக்கோட்டையில் இருந்து தப்பித்து செல்ல இயலாத முறையில் நெல்லூர் இரானுவ தளத்திற்கு அனுப்பி வைக்க யோசனை தெரிவித்தார்.

இதற்கிடையில் மக்கள் கிளர்ச்சி பங்குனி மாத பகற்பொழுது போன்று கடுமையாககிக் கொண்டுவந்தது கும்பெனியாரது கூலிப்பட்டாளத்திடம் துப்பாக்கி போன்ற ஆயுதங்களைக் கைப்பற்றுவதும் அவர்களது இருப்புக் கிடங்குகளில் உள்ள துனிகள்,தானியங்களைச் சூறையாடி பேரிழப்பு ஏற்படுத்துவது போன்ற நடவடிக்களில் மட்டும் கிளர்ச்சிக்காரர்கள் ஈடுப்பட்டிருந்தனர். அபிராமத்திலும்,கமுதியிலும், தவிர்க்க முடியாத நிலையில் பொது மக்கள் இருவர் கொல்லப்பட்டனர். இதத் தவிர வெறுக்கதக்க போக்கு வேறு எதுவும் கிளர்ச்சியில் காணப்படவில்லை என்றாலும் கிளர்ச்சி வேகமாகப் பரவியது. பாப்பான் குளம்,பள்ளிமடம் ஆகிய பகுதிளில் கிளிர்ச்சிக்காரர்கள் முனைந்து நின்றனர். பொதுவாக வைகைப் பகுதிக்கும் குண்டாற்றுக்கு இடைப்பட்ட நீண்ட பகுதியில் கிளர்ச்சி உச்சநிலையில் இருந்தது அதனை கிளர்ச்சி தலைவர் மையிலப்பனின் சொற்களில் சொல்ல வேண்டுமானால் இந்த இயக்கம் காட்டாற்று வெள்ளம் போல் பரந்து பரவிக் காணப்பட்டது. பண்ணிரண்டாயிரம் மக்கள் அதில் பங்கு கொண்டனர்.

கிளர்ச்சியின் போது கலெக்டர் லூசிங்டன் அதன் நிலவரத்தை அறிந்து கொள்ள நாண்கு கள்ளர்களை முதுகளத்தூர் பகுதிக்கு அனுப்பி வைத்தார் அவர்களும் கிளர்ச்சியாளர்களை கண்டு அவர்களின் எண்ணிக்கை முதலிய பல விஷயங்களை நோட்டமிட்டு தெரிவித்தனர்.

கும்பெனியாரது முதல் அணி முதுகளத்தூருக்கு இராமநாதபுரம் கோட்டையிலிருந்து தளபதி மார்டின்ஸ் தலைமையில் புறப்பட்டது.வழியில் அந்த அணி மறைந்து இருந்த கிளர்ச்சிக்காரர்களால் பலமாக தாக்கப்பட்டது கும்பெனிப் பட்டாளத்தில் ஐவர் மடிந்தனர். மார்டின்ஸ் மேலும் முன்னேறாமல் தன் இராமனாதபுரம் கோட்டைக்கு திரும்பினான். இன்னோர் அணி மேஜர் கிரீம்ஸ் தலைமையில் 100 பேர்களுடன் 50 துப்பாக்கிகளுடன் 200 ஈட்டிக்காரர்களுடனும் மற்றொரு வழியாக மேற்கே காமன் கோட்டை பாதையில் தெற்கே முதுகுளத்தூரை அடைய முடியவில்லை மிகவும் பீதியடைந்த கலைக்டர் லூசிங்டன் பாளையங்கோட்டை தொடர்பு கொண்டு மேஜர் பானர்மேனைப் புறப்பட்டு வருமாறு கேட்டுக் கொண்டார். அவரும் மூன்று பவுண்டர் பீரங்கி அனியுடன் புற்ப்பட்டு 26-5-1779-ல் பள்ளி மடம் வந்து சேர்ந்தார். மதுரையிலிருந்து மேஜர் டக்பர்ன் தலைமையில் இன்னொரு சிறிய அணியும் பள்ளிமடம் வந்து மேஜர் பானர்மேனுடன் சேர்ந்து கொண்டது. பிறகு கமுதியை நோக்கி ஒரு அனும் அப்பனூரை நோக்கி இன்னோரு அனுய்மாகப் புறப்பட்டன் மன்னொரு சிறிய அனியில் அத்தனை பேரும் அயுதங்களைத் தாங்கியவர்களாக இருந்தனர். ஒரு சிலரிடம் துப்பாக்கிகளும் "மட்ச்லாக்கும்" இருந்தனர். ஊருக்கு அரை மைல் தொலைவில் இருந்த வெளியில் பட்டப்பகலில் தங்களது தாக்குதலை பயமின்றி தொடுத்தனர். இராமநாதபுரம் அரசரது முன்னாள் பிராதனியாக இருந்த முத்துக்கருப்ப பிள்ளை ஒரு கருப்புகுடையை பிடித்து கொண்டு கிளர்ச்சிக்காரகளுக்கு அவ்வபோது கட்டளைகளைப் பிறப்பித்தும் ஆப்பனூர் சேர்வைக்காரர்கள் கும்பெனிக்கு அளித்து வந்த உதவிகள் காரனமாக கிளர்ச்சிக்காரர்கள் பலத்த காயங்களுடன் பக்கத்தில் இருந்த காட்டிற்குள் பின்வாங்கினர். சேதுபதி மன்னருக்கு பரம வைரியான அபிராமம் வீசுகொண்ட தேவர் என்ற கிளர்ச்சிக்காரர்களுக்கு மிகுந்த இழப்புகள் ஏற்பட்டன. அன்றைய கிள்ர்ச்சியின் முக்கிய தலமாக கமுதிக்கோட்டை விளங்கியது. முழ்வதும் கல்லினாலாகிய இந்த வலிமையான அரனை பிரஞ்சுப் பொறியாளர்களைக் கொண்டு அமைத்தவர் விஜய ரகுநாத சேதுபதி மன்னர்(கி.பி.1711-21) அதனுடைய பாதுகாப்பு இடமாக கிளர்ச்சிக்காரர்கள் பயன்படுத்தி வந்தனர். கிளர்ச்சிக்காரர்களின் தலைவர்கலான சிங்கன்செட்டி,பட்டூர்,மைலப்பன் ஆகியோர்களது நடமாட்டமும் அங்கு மிகுந்து இருந்தது. கும்பெனிப் படைக்கும் கிளர்ச்சிக்காரர்களுக்கும் இங்கு பயங்கர மோதல்கள் பல ஏற்பட்டன. மறவர்களிடையே வீர சாகஸங்கள் புகுந்து இருந்த பொழுதும் கும்பெனியாரது சக்தி வாய்ந்த வெடிமருந்து திறனுடன் இயங்கிய பீரங்கிகளுக்கு முன்னர் கிளர்ச்சிக்காரர்களது தாக்குதல் பயனற்று போயின.

அந்த வீர போரில் தங்களது தோழர்கள் பலரைக் களப்பலியாக கொடுத்த கிள்ர்ச்சிக்காரர்கள் வடதிசையில் நழுவினர். அவர்களைப் பின் தொடர்ந்த சுபேதார் சேக் மீரானும் அவந்து அணியும் கிளர்ச்சிக்காரர்களை வீர சோழன், அபிராமம் ஆகிய பகுதிகளில் இருந்து விரட்டி இராமநாதபுரத்தின் தெற்கு பகுதிக்குப் பின்னடையுமாறு நிர்ப்பந்தம் செய்தனர். மையிலப்பனும் அவரை சூழ்ந்து நின்ற நானூருக்கும் அதிகமான மறவர்களும் கீழ்க்குளம் காட்டிற்குள் நுழந்தனர்.

அதே சமயத்தில் இராமநாதபுரத்திலிருந்து கலெக்டர் லூசிங்டன், சிவகங்கை சேர்வைக்காரர்களிடமிருந்த பெற்ற கூலிப்படையின் பாதுகாப்பில் கமுதி கோட்டைக்கு வந்து சேர்ந்தார் பெரும்பாலும் அவர் மானாமதுரையிலிருந்து திருச்சுழி வழியாக அழிமானம் மிகவும் பரந்த அளவில் இருப்பதாக லூசிங்டன் பணியில் அவர் தீவிரமாக முனைந்தார். இப்போது அவர் அடக்க சிவகங்கை சீமை சேவைக்காரர்கள்படையை பயன்படுத்துவது அவர்களின் அடுத்த திட்டம்.

கீழ்குளம் காட்டில் சண்டை தொடர்ந்தது கிளர்ச்சிக்காரர்கள் வீரப் போரிட்டு முப்பது மறவர்களை இழந்தனர். ஐம்பது பேருக்கு படுகாயம், நாற்பது பேர் சிறைபிடிக்கபட்டனர். எஞ்சியவர்கள் வெள்ளைகுளம் நோக்கி சென்றனர்.சிங்கண்செட்டியும் கிளர்ச்சிக்கரர்களான தேவர்களும் சேர்வைக்காரர்களும் சிதறியோடினர். மைலப்பனும் அவனை சேர்ந்த முப்பதுபேர்களைக் கொண்ட படை கிழக்கில் நோக்கி பின்வாங்கியது. மறவர் சீமையில் சேது மன்னருக்கு இழைக்கப்பட்ட கும்பெனியாரது கொடுமைக்கு எதிராக கிளர்ந்து எழுந்த மக்கள் பலர் கொலலப்பட்டனர் சிலரது தலைகள் நீண்ட ஈட்டி நுனிகளில் சொருகி பல கிராமங்களில் ஆங்காங்கு நட்டுவைத்து தங்களது "அ(நாகரீக)" தன்மையை வெளிப்படுத்தினர்.இறந்தவர்களுக்கு மனமுவந்து மிக்க மரியாதை செய்யும் இந்த புனித பூமியில் அவர்களது சடலங்களை இங்கனம் இழிவுபடுத்துவதை அவர்களால் சகித்து கொள்ள முடியாமல் இருந்தது.

அப்போது மறவர் சீமையெங்கும் இராமநாதபுரம் கலெக்டர் பகிரங்கப்படுத்திய பொது மன்னிப்பு விளம்பரத்தையும் வேண்டுகோளையும் தொடர்ந்து குடிகள் பலர் வீடுகளுக்கு திரும்பினர். ஆனால் இந்த மன்னிப்பு கிளர்ச்சியை தலைமை தாங்கி நடத்திய மைலப்பனுக்கும் முத்து இருளப்பபிள்ளை ஆகிய இருவருக்கும் மட்டும் பொருந்தாது ஆனால் அவர்களை உயிரோடு பிடிப்பதற்குத் திட்டமிட்டனர். அவர்கள் தலைக்கு விலையாக பரிசுகளும் ஏற்படுத்தினார்கள். மையிலப்பன் கடலாடி வழியாக காடல்குடிக்கும் பின்னர் பிள்ளையார் குளம், வில்லார் கோயில் ஆகிய ஊர்களுக்கும் சென்று சில நாட்களைக் கழித்த் பிறகு கமுதிக்குள் நுலையாமல் மண்டலமாணிக்கத்திற்கு வந்தார். அங்குள்ள நிலவரங்களைக் நன்கு புரிந்து கொண்டு மாறு உடையில் தஞ்சை பகுதிக்கு தப்பிச் சென்றார். அங்கு வெள்ளூர் பகுதியில் சிலகாலம் விவசாயக் கூலியாக தலைமறைவு வாழ்க்கை நடத்தியதாகவும் தெரிகின்றது.

மைலப்பனின் இரண்டாவது போர்: 


அன்னிய எதிர்ப்பு உனர்வும் ஆவேசமும் கொண்ட போர்கோலம் பூண்ட மறவர்களின் வீழ்ச்சியை கேள்விபட்ட திருச்சி கோட்டை சிறையில் இருந்த ரெபல் முத்துராமலிங்க சேதுபதியின் கவலை ஆயிரமடங்கு அதிகமாகியது. தொன்று தொட்டு வந்துள்ள மறவர் மக்களின் தன்னரசைப் புறக்கணித்து அவர்களது சுதந்திர உணர்வுகளை மதிக்காது ஆட்சி செய்யும் பரங்கியரையும்,நவாப்பையும் மதிக்காத அடிபனியாத மானமிகுந்த சுதந்திர மன்னனாக மறவர் சீமையை என்றென்றும் மிளிரச் செய்ய வேண்டும் என்ற சிறப்பான இலட்சியங்களச் செயல்படுத்த சேதுபதிமன்னர் தனக்காக கிளர்ச்சிகளை தலைமை தாங்கிய மாவீரன் மைலப்பன் தன் பிறந்த மன்ன்னான முதுகளத்தூரில் தொடங்கி மாப்பிள்ளைத் தேவனுடன் நடத்திய மோதல்களில் பங்கு கொண்டு இராமநாதபுரம் அரசுக்கு சிறந்த சேவை செய்த சேர்வைக்காரர் ஏற்கெனவே சேதுபதி மன்னரைத் திருச்சி கோட்டைக்குள் சிறை வைத்த பின்னரும் அவரை விடுவிக்க முனைந்தவர் கிளர்ச்சி நடந்த பகுதியகலையும் அங்குள்ள மக்களையும் நன்கு அறிந்தவர் நிலமைகளை தெரிந்து திட்டங்களுடன் எதிரிக்கு பலமான இழப்பையும் தோல்வியையும் ஏற்படுத்தகூடிய அரசியல் தலைவர் சித்திரங்குடி,ஆப்பனூர் வேண்டா புல்லுருவிக் கயவர்களால் அவனுக்கு எதிரான் அணியில் சேர்ந்து இவ்விதம் துரோகத்தை செய்தனர்.

இதன் பின் சிவகங்கை சின்னமருது தஞ்சை தரனியில் தலைமறைவாக இருந்த மைலப்பனை சந்தித்து தென்னாட்டு கலகத்துக்கும் ஆயுதப்புரட்சிக்கும் தலைமை தாங்குமாறு அழைப்பு விடுத்தார். இதன் பின்பு தஞ்சை சீமையில் தலைமரைவாக இருந்த தளபதி மைலப்பன் மறவர் சீமைக்கு திரும்பினார்.

அவரையும் அவரது கிளர்ச்சி ஆதரவாளர்களையும் அடக்கி ஒடுகக் முன்பு கும்பெனியாருக்கு சிவகங்கை படைகளைக் கொடுத்து உதவியவர்கள், இப்பொழுது மயிலப்பனை, தங்களுக்கு பக்கபலமாக பரங்கியருக்கு எதிரான புரட்ச்சித் திட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். மைலப்பனது மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது எனவே இருவருக்கும் பொது எதிரியான பரங்கியாரை அழிக்க இனைந்து செயல்பட்டார். அவரது தாக்குதல்கள் இப்பொழுது இன்னும் கடுமையானதாக இருந்தது. பரங்கிகளது குறிப்புகளில் மைலப்பனுக்கு "முரடன்"(ரோக்) என்ற அடைமொழி சேர்க்கபட்டது.அவரது பேராற்றலை கண்ட சின்னமருதும்,பாஞ்சை பாளையக்காரரும்,அவருக்கு பல அன்பளிப்பு வழங்கி சிறப்பித்தனர். மேல மாந்தையிலிருந்த் மறவமங்களம் வரை அவர் சுழன்று சுழன்று போரிட்டு வந்தார்.

மைசூர் மன்னர் திப்புசுல்தானுட்ன் தொடுத்த போர் முடிந்து விட்டதால் தங்களது மூல பலம் முழுவதையும் மறவர் சீமையின் மீது முடுக்கி விட்டனர் கும்பெனியார்.பரங்கி அணிகள் பல இராமநாதபுரம் சிமையையும் சிவகெங்கை சீமையையும் துளைத்து தொல்லைகள் கொடுத்து சுடுகாடாக்கினர்.

1799-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி வைகறைப் பொழுதில் மைலப்பன் சேர்வைக்காரர் தலைமையிலான புரட்சிக்காரர்கள் முதுகளத்தூரிலுள்ள கும்பெனியார் கச்சேரியைத் தாக்கி, அங்கு காவலில் இருந்த கும்பெனிப் பனியாளர்களை விரட்டியடித்து விட்டு அவர்களது ஆயுதங்களை எடுத்து சென்றனர். அடுத்து அபிராமத்திற்குச் சென்று அங்குள்ள கச்சேரியையும் கைத்தறிக் கிட்டங்கியையும் தாக்கி துணிகளை சூறையாடினர். இந்த நிகழ்ச்ச்களின் தொடர்ச்சியாக அவர்கள் கமுதிக்கும் சென்று கச்சேரியை தாக்கி நெற்களஞ்சியங்களையும் கொள்ளையிட்டனர். இந்த கிளர்ச்சியினால் முதுகளத்தூர்,கமுதி சீமை மக்கள் ஒரு புதிய தெம்புடன் கிளர்ந்து எழுந்ததுடன் கும்பெனியாரைத் துரத்தி விட்டு மீண்டும் சேதுபதி மன்னரது ஆட்சியை ஏற்படுத்தி விடலாம் என நம்பினர். இதனால் அந்த பகுதியில் ஆங்காங்கு குடிமக்களின் உதவியை பெற்று ஆங்கில கலெக்டர் லூசிங்டன் அந்த பகுதி நிலவரத்தை அறிய இயலாதவாறு துண்டித்து விட்டனர்.காமன்கோட்டை,கமுதி,முதுகுளத்தூர்,கிடாரத்திருக்கை,கருமல் முதலிய பகுதிகளில் 42 நாட்களுக்கு மேல் ஆங்கிலேயருக்கு எதிராக போராடினர். சிவகங்கை,எட்டையபுரம் தலைவர்களின் உதவியதன் காரனமாக ஆங்கிலேயருக்கு உதவியதால் தன்னுடைய கிளர்ச்சியாளர்களின் பெரும்பகுதியினரையும்,சிங்கன்செட்டி,இப்ராஹிம் சாகிப் போன்ற அவரது தோழர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

கிளர்ச்சிக்காரர்கள் கை ஓய்ந்ததால் அந்த பகுதியில் இயல்பு நிலையை ஏற்படுத்த கும்பெனியர் முயன்றனர். மைலப்பன் சேர்வைக்காரரை தவிர அனைத்து கிளர்ச்சிக்காரகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கினர்.பின்பு மைலப்பன் சேர்வைக்காரரைத் தம்மிடம் ஒப்படைகுமாறு மருது சகோதரர்களுக்கு தாக்கீது அனுப்பினார். ஆனால் மருது சகோதரர்கள் கலெக்டர் உத்தரவை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை

மருது சகோரர்களது இறுதி முயற்ச்சியான காளையார் கோயில் போரில் 02-10-1801 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டனர். அவர்களை சார்ந்திருந்த மீனங்குடி முத்துகருப்பு தேவரையும்,சித்திரங்குடி மைலப்ப சேர்வைக்காரர் பிடிப்பதற்க்கு தீவிரமான முயற்ச்சிகளில் கும்பெனி இறங்கியது. தன்னந்தனியாக மைலப்பன் சேர்வைக்கரர் முதுகளத்தூர் கமுதிப் பகுதிகளில் தலைமறைவாக சுற்றித் திரிந்தார். அவர் சக துரோகி ஒருவனால் காட்டிக் கொடுக்கபட்டு 06-08-1802 அன்று அபிராமத்தில் தூக்கிலடப்பட்டனர்.

தொடர்ந்து இழப்புகளும்,வேதனைகளும் உங்களை துரத்திய பொழுதும்,தன் குடும்பமே அழிந்தும் மனம் கலங்காமல் தாயகத்திற்காக நின்று அஞ்சாது போரிட்ட வீர மறவனே!

எங்களின் ராஜ கோபுரம் நீங்கள்,ஆங்கிலேய கம்பெனியோடு உறுதியாக நின்று போரிட்ட
வீரமறவர்களும்,வீரமைந்தர்களும் கொல்லப்பட்ட போதும்,
சூரியனாய் விளங்கி எதிரிகளை சுட்டெரித்து எங்களின் மறமைந்தனே!

நீன் போர் களத்தில் நின்றபோது உமது தோற்றம் கண்டு, நீர்போரிடும் ஆற்றலை கண்டு எதிரிகள் மலைத்து உம்மைபற்றி
கூறியவை வராலாற்றின் பதிவுகளாய் உள்ளது

உமது வாழ்வு எங்களுக்கு வழிகாட்டியாய் இருக்கட்டும்
தளராத நெஞ்சுறுதியோடு யுத்த முனியிலே நின்ற எங்கள் மாவீரரே!

எங்கள் தேவனே! உங்கள் வாழ்வு எங்களுக்கு வழிகாட்டடும்!
எந்தநிலையிலும் விலை போகாத துரோகம் இழைக்காத

இந்த மான மறவனின் வாழ்க்கை ஒவ்வொரு மறவ்னுக்கும் பாடமாகட்டும்
சத்தியம் காத்திட களமாடிய எங்கள் மாவீரரே

என்றும் உங்கள் வாழ்கை எங்களுக்கு சரித்திரமாகட்டும்
உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறோம்.

நன்றி: உயர்திரு. ஐயா எஸ்.எம்.கமால், சேதுபதிகள் சரித்திரம்
நன்றி:முத்துராஜா(வழக்கறிஞர்) அவர்கள்

ஆய்வுகளின் துனை:

1.Military consulation, vol.188 A,21-7-1794,pp.3302
2.Madurai Dist, Records, vol.1133
3.Madurai Consulation, vol.179,25-2-1975
4.Revenue Consulation, vol.161
5.Fort st.George diary consulations,letter 22-6-1794 from collection Madras
6.Alexandar Nelson Madurai district manual(1896)

7.Rajayyan, k.vol South Indian Rebellion(1800,1801)...

வந்தியதேவர்-குந்தவை நாச்சியாரின் வாரிசுகள்


மாவீரர் வாண்டாயத் தேவன் வரலாறு


(A rebel of kollamkondaan against british)


கொல்லங் கொண்டான் சமீனைச் சேர்ந்த பாளையக்காரர் வாண்டாயத் தேவன். ஆங்கிலேயர்களை எதிர்த்து பூலித்தேவர் போரிட்ட காலத்தில், நெல்கட்டுஞ் செவலுக்கு அருகில் உள்ள பாளையக்காரரான இவர் பூலித் தேவருக்கு மிகவும் உதவியாக இருந்தார்.
பூர்வீகம்:
இவர் தமிழ் மூவேந்தர் காலத்தில் தோன்றிய மன்னர் வம்சமாகும். இவர்கள் மூதாதையர்கள் பல்லவ நாட்டில் இருந்தவர்கள். என்று கூறுகின்றனர். இவர்கள் பண்டாற மறவர் என்ற "வணங்காமுடி பண்டார மறவர்" என்ற உட்பிரிவை சார்ந்தவர்கள்.
பின்பு அங்கு இருந்து பெயர்ந்து சோழ நாட்டை அடைந்தனர். பின்பு சோழனிடம் தளபதிகளை வேலை செய்தனர். ஆதாவது வந்தியதேவர்-குந்தவை நாச்சியாரின் வாரிசுகள் என்று தம்மை கூறி கொள்வதாக கொல்லம்கொண்டான் வம்சாவளி நமக்கு கூறுகிறது. வந்தியதேவர்கள் என்ற வார்த்தையே "வாண்டாயாத்தேவர்கள்" என மறுவியதாக கூறுகின்றனர்.
இவர்கள் சோழர்களுடன் ஆதரவாக பாண்டியரை வென்று பின்பு சேரநாட்டில் உள்ள கொல்லத்தை வென்று சோழர்கள் இவர்களை இப்பகுதிக்கு குறுநிலை மன்னராக முடிசூட்டி சோழ நாட்டிற்கு சென்று விடுகின்றன்ர்.கொல்லம் கொண்டான் தோன்றிய ஆண்டு 11-ஆம் நூற்றாண்டு என கால்டுவெல்லும் கூறுகிறார்.சோழ ஆளுகை இப்பகதியில் இருந்தததற்கு "சோழபுரம்" என்ற ஊர் அருகில் உள்ளது. இதன் பின்பு பாண்டிய மன்னர்கலுக்கு உட்பட்ட குறுநில மன்னர்களாக இருந்தனர்.

நாயக்கர் ஆட்சி காலத்தில் கொல்லம் கொண்டான் ஜமீன் 72 பாளையங்களில் ஒன்றாக மாற்றபட்டது.அப்போது திருமலை நாயக்கர் இப்பகுதியிலிருந்து மீன் உனவு செல்லுமாம்.ஒரு தடவை இம்மன்னன் அந்த உனவை தன் எல்லை தாண்டி செல்ல அனுமதிக்கமல் தடை செய்தாராம். இதனால் வெகுண்ட திருமலை நாயக்கர் இப்பாளயத்தின் மீது படை நடத்தி அழித்தாராம். பின்பு வருந்திய திருமலை நாயக்கர் இந்த அரன்மனையை கட்டி கொடுத்தாரம். அதிலிருந்து திருமலை என்ற பட்டமும் வழங்கினாராம். இதன் பின்பு இம்மன்னர்களுக்கு திருமலை வாண்டாயாத்தேவர் என்ற பெயர் உருவாகிஉள்ளது.(எ-டு)லிங்க திருமலை வாண்டாயதேவர்,சங்கர பாண்டிய திருமலை வாண்டாயதேவர், அரிகர திருமலை வாண்டாயதேவர் என பலர் வாழ்ந்துள்ளனர்.

 
முதற்போர்
இவர் பூலித்தேவருக்கு உதவியதால் ஆங்கிலேயர்கள் கொல்லங்கொண்டான் மீதும் படையெடுத்துச் சென்றார்கள். ஆங்கிலேயப் படைகளால் வாண்டாயத் தேவனின் கொல்லங்கொண்டான் கோட்டை முற்றுகை இடப்பட்டது. அந்த படையை மேஜர் பிளின்ட் மற்றும் கேப்டன் பெயிண்டர் போன்ற பரங்கித் தளபதிகள் வழிநடத்திச் சென்றனர்.

 முரட்டுத்தனமான போர்

1766ல் நெல்லையிலிருந்து வந்த அந்த இரண்டு தளபதிகளின் படைகளை வாண்டாயத் தேவன் எதிர்த்து நடத்திய போரை வரலாற்றாளர்கள் முரட்டுத்தனமான போர் என்று கூறுகின்றனர். பரங்கிப்படை அப்படி ஒரு தாக்குதலை அதுவரை கண்டதில்லை எனக் கூறப்படுகிறது. பரங்கிப்படை வாண்டாயத்தேவனின் தாக்குதல் முறையை கணிப்பதற்கு முன்பே பரங்கிப்படையில் பாதியை வாண்டாயத்தேவன் அழித்துவிட்டான். மேலும் அதில் ஐந்து முக்கிய பரங்கித்தளபதிகள் கொல்லப்பட்டனர். அதனால் வலிமையிழந்த பரங்கிப்படை பின் வாங்கியது.

இரண்டாம் போர்

1767ல் மீண்டும் பரங்கிப்படை கொல்லங்கொண்டான் கோட்டையை கர்னல் டொனால்ட் கேம்பல் கீழ் பீரங்கிப்படையுடன் தாக்கியது. இம்முறை பரங்கிப்படை நெல்லை தவிர்த்து சென்னையிலிருந்தும் வந்ததால் கொல்லங்கொண்டான் கோட்டை தகர்க்கப்பட்டது. அப்போது வாண்டாயத் தேவனின் மனைவி கர்ப்பிணியாக இருந்தார். போர் நடைபெறும் போது ஒருவேளை தோல்வியைத் தழுவ நேரலாம் அல்லது வீர மரணத்தைத் தழுவ வேண்டிய நிலை வரலாம். எனவே, தன் குல வாரிசைக் கருவில் தாங்கி நிற்கும் தன் மனைவியை, அரண்மனையில் இருந்து வெளியேற்றி விட வேண்டும் என்று வாண்டாயத் தேவன் நினைத்தார். அதனால் தனக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரிய ஒருவரின் துணையுடன் தன் மனைவியை, ரகசிய வழி ஒன்றின் மூலம் அரண்மனையை விட்டு வெளியேறச் செய்தார். அவர் எதிர்பார்த்தபடி அடுத்த நாள் காலையில் போர் உக்கிரமாக நடந்ததால் வாண்டாயத்தேவன் வீர மரணம் அடைந்தார்.

 மகன்

இரவோடு, இரவாக, அரண்மனையை விட்டு வெளியேறிய வாண்டாயத் தேவனின் மனைவி, தன் நாட்டின் எல்லையில் உள்ள ஒரு ஊரில் போய் மக்களோடு மக்களாகக் குடியேறினார். எதிர்பார்த்தது போலவே, ஆங்கிலேயருடன் நடந்த யுத்தத்தில் வாண்டாயத் தேவன் கொல்லப்பட்டார். என்றாலும், அவரின் மனைவியான நாச்சியார், மனத்திடத்துடன் மக்களோடு மக்களாக எளிய வாழ்க்கை வாழ்ந்து, குறிப்பிட்ட காலத்தில் அழகான ஒரு ஆண் மகவைப் பெற்றெடுத்தாள். தாயையும் சேயையும், அவ்வூர் மக்கள் உதவிகள் புரிந்து பாதுகாத்து வந்தார்கள்.அரண்மனையில் பிறந்து வளர்ந்து ஒரு பாளையக்காரருக்கு மனைவியாக வாழ்க்கைப் பட்ட நாச்சியார், காலம் செய்த கோலத்தால் வெள்ளையரின் படை எடுப்பால் பஞ்சைப் பதாரி போல், ஏழை, எளிய மக்களுடன் வாழ நேர்ந்த காரணத்தால், பிற்காலத்தில் அவ்வூரையே மக்கள் பஞ்சம் பட்டி என்று அழைத்தார்கள் என்று அவ்வூரைச் சேர்ந்த தகவலாளர் ஒருவர் கூறினார்.

வலைவீச்சு

இவரது மகனுக்கும் வாண்டாயத் தேவன் என்றே பெயரிடப்பட்டது. இவர் சிறிய வயதிலேயே அக்கிராம மக்களை அச்சுறுத்தி வந்த புலியை அடக்கினார். அந்த புகழினால் இவர் வாண்டாயத்தேவனின் மகன் என ஊர் மக்கள் கண்டு கொண்டனர். அந்த செய்தி பரங்கியருக்கும் எட்டி விட்டதால், பரங்கியர் தங்களைத் தாக்கக் கூடும் என்றறிந்த வாண்டாயத் தேவன் குடும்பமும் அந்த கிராம மக்களும் பஞ்சம்பட்டி கிராமத்தை காலி செய்து விட்டு வேறொரு ஊருக்கு சென்று விட்டதாகத் தெரிகிறது. அதன்பிறகு அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.

 நடன மங்கையர்

கொல்லங்கொண்டான் பாளையக்காரரான வாண்டாயத் தேவனின் கோட்டைக்கு அருகில் இடர் தீர்த்த பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் நாட்டியமாட மயிலாள், குயிலாள் என்ற இரண்டு தேவதாசிப் பெண்களை நியமித்திருந்தார் வாண்டாயத் தேவன். ஆங்கிலேயர்களுடன் போர் தொடங்கிய காலத்தில், வெள்ளையர்களின் படை பலத்தை அறிந்து கொள்வதற்காகவும், உளவுபார்த்து வரவும் இவ்விரு நடன மங்கையர்களை வாண்டாயத் தேவன் அக்கம்பக்கத்துப் பாளையங்களுக்கும் அனுப்பி வைத்தார். இப்படி, கலைப்பணியையும், அரசியல் பணியையும் ஒருசேரச் செய்த சகோதரிகளுக்கு, இருகுளத்துப்பரவுகளை (குளத்துநீர் பாயும் வயல்களை) தானமாகக் கொடுத்துள்ளார்.
வாண்டாயத் தேவர் கொடுத்த அக்குளங்கள் இன்றும் குயிலாள் குளம், மயிலாள் குளம் என்று அவ்வூர் மக்களால் அழைக்கப்படுகின்றன.

முடிவுரை:
KollamkondanLocation of Kollamkondan in Tamil NaduKollamkondan (Tamil: கொல்லன் கொண்டான்) was a territory (Zamin) in the former Tirunelveli province of Madurai Nayak Dynasty ruled by Polygar. Post Independence of India it split into as 2 villages Ayan Kollan Kondan and Zamin Kollan Kondan and come under Virudhunagar District in the southern Indian State of TamilNadu in India.[1] Contents [hide] 1 Palayam Location 2 Polygar 3 Decline and Merger with Sethur Zamin 4 Post abolition of Zamindari 5 References [edit] Palayam Location This Maravar palayam was located near Rajapalayam, at the foot of the Western Ghats, in the former Tirunelveli province of the Nayak dynasty of Madura.[2] [edit] Polygar Polygar Vanda Thevar belonged to the Pandara subcaste of the Maravar. The polygar family was granted the lands by Raja Parakrama Pandya of Pandya Dynasty before the establishment of the Madurai state by Visvanatha Nayaka in the 16th century.[3] It joined Puli Thevar’s coalition in 1754-1762. The polygar of Kollamkondan led a new insurrection in 1764, following Yusuf Khan’s execution for having betrayed the Nawab. Victories over the Anglo-Nawabi forces helped the revolt spread to other polygars. [3] See also: Polygar [edit] Decline and Merger with Sethur Zamin After 1766, General Donald Campbell began a systematic campaign, taking the forts of the major confederates one by one. In 1802, the polygar of Kollamkondan, held only four villagesIn 1879, the zamindari had an area of 1.35 sq. m., and a population of 9,021. Later in 19th century it was included in the zamindari of Sethur. [3] [edit] Post abolition of Zamindari Kollamkondan post independence comprises 2 villages . Both are revenue villages under the Rajapalayam Taluk[1] Zamin Kollan kondan Ayan Kollan kondan - Notable person post independence - Dr.N.Rasaiah - Tamilwriter

இதன் பின்பு 18-ஆம் நூற்றன் இறுதியில் சேத்தூர் ஜமீனுடன் இனைக்க பட்டது கொல்லம்கொண்டான்.
இந்த வரலாற்றை தற்போதய ஜமீன் வாரிசானலிங்க திருமலை வாண்டாயதேவர்,இராமநாதன் கூற நாம் வழங்கியுள்ளோம்.

 மூலம்

  • குங்குமம் வார இதழ் கட்டுரை[1]

  1.  இரா. மணிகண்டன் (மார்ச் 2011). “வீரப்புலி வாண்டாயத் தேவன்”. குங்குமம் (8): 124 – 129.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.