பழுவூரை ஆண்ட மறவர் வம்சத்தவர் யார்?
பழுவேட்டரையர் சோழருக்கு கீழ் சிற்றரசாக பனியாற்றியவர்கள்.இவர்களை பற்றி பதினாறு கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இந்தப் பதினாறு கல்வெட்டுகளையும் காலவரிசைப்படி பொருளறிந்து நன்கு நிறுவப்பட்ட சோழமன்னர்களின் ஆட்சியாண்டுகளுடன் ஒப்பிட்டு ஆராய்ந்தோமானால், கி பி 881 முதல் கி.பி 1020 வரை பழுவூரை ஆண்ட மன்னர்களைக் கீழ்க்கண்டவாறு வரிசைப் படுத்தலாம்.
1. குமரன் கண்டன்
2. குமரன் மறவன்
3. கண்டன் அமுதன்
4. மறவன் கண்டன்
5. கண்டன் சத்ருபயங்கரன்
6. கண்டன் சுந்தரசோழன்
7. கண்டன் மறவன்
இதுதான் கல்வெட்டுகளிலிருந்து வரலாற்றுச் செய்திகளை வடித்தெடுக்கும் முறை. கல்வெட்டுகளில் இருப்பவை பெரும்பாலும் நிவந்தங்கள் கொடையளித்த செய்திகள்தான். ஆனால் அவற்றினுள் ஒளிந்திருக்கும் செய்திகளை Reading through the lines என்று ஆராய்ச்சிக் கண்கொண்டு நோக்கினால், வரலாறு வெளிப்படும். ஒரு மின்விளக்கைக் கொடையளித்துவிட்டு, அதிலிருந்து வரும் வெளிச்சத்தை மறைக்குமளவுக்குத் தன் பெயரை எழுதிவைத்து விடும் இக்காலத்து வழக்கத்துடன் கல்வெட்டுகளை ஒப்பிட்டுப் புறந்தள்ளாமல், அவை எப்பேற்பட்ட அட்சயப் பாத்திரங்கள் என்று உணரத் தலைப்படுவோமே!
கண்டன் சத்ருபயங்கரன், கண்டன் சுந்தரசோழன், கண்டன் மறவன் ஆகிய மூவரும் உடன் பிறந்தவர்கள் என்ற செய்தி உடையார்குடி அனந்தீசுவரர் கோயில் கல்வெட்டின் மூலம் தெளிவாகின்றது. எனவே, இவர்கள் மூவரின் பெயர்களிலும் உள்ள கண்டன் என்பது மறவன் கண்டனின் பெயர் என்று புரிந்து கொள்ளலாம். இதே அடிப்படையில் பார்த்தால், இந்த 7 பேர்களுக்குள் உள்ள உறவு முறையைக் கீழ்க்கண்டவாறு பகுக்கலாம்.
"முதலாம் இராஜேந்திரரின் எட்டாம் ஆட்சியாண்டில் பழுவூரை ஆண்டுகொண்டிருந்த பழுவேட்டரையர் யாரென்பது உறுதியாகத் தெரியவில்லை. வேறு சான்றுகள் ஏதுமற்ற நிலையில் இவரைக் கண்டன் மறவனாகவே கொள்ளலாம். உத்தமச்சோழரின் பதினைந்தாம் ஆட்சியாண்டில் பழுவூர் மன்னராக ஆட்சிப் பொறுப்பினை ஏற்று, முதலாம் இராஜராஜர் காலத்தில் மன்னுபெரும் பழுவூரில் திருத்தோற்றமுடையார் கோயிலைச் செங்கல் திருப்பணியாய் எடுப்பித்து, முதலாம் இராஜேந்திரரின் எட்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுடன் வரலாற்று நீரோட்டத்திலிருந்து மறையும் கண்டன் மறவனுடன் பழுவேட்டரையர் மரபும் ஒரு முடிவுக்கு வருகிறது. முதலாம் ஆதித்தரின் பத்தாம் ஆட்சியாண்டில் பழுவூர் அரசராகப் பழுவேட்டரையர் குமரன் கண்டனோடு தொடங்கும் பழுவேட்டரையர் ஆட்சி முதலாம் இராஜேந்திரரின் எட்டாம் ஆட்சியாண்டில் பழுவேட்டரையர் கண்டன் மறவனை இறுதி மன்னராய்க் காட்டி முற்றுப் பெறுவதாகக் கருதலாம்." என்று பழுவூர் - அரசர்கள், கோயில்கள், சமுதாயம் என்ற தனது நூலில் முனைவர் இரா.கலைக்கோவன் உரைக்கிறார்.
மறவன் கண்டன் சுந்தரசோழரின் ஆட்சிக்காலத்தில் பழுவூரை ஆண்டவர். இவரது மூன்று பிள்ளைகளில் கண்டன் மறவன் சுந்தரசோழருக்குப் பிறகு சுமார் 40 ஆண்டுகள் பழுவூரை ஆண்டார். எனவே, அப்போது கண்டன் மறவன் சிறுபிள்ளையாயிருக்க, மூத்த சகோதரர்கள் கண்டன் சத்ருபயங்கரனும் கண்டன் சுந்தரசோழனுமே சுந்தரசோழர் காலத்தில் வாழ்ந்தவர்கள். இப்போது புரிகிறதா? கல்கி 'பெரிய பழுவேட்டரையரையும்', 'சின்னப் பழுவேட்டரையரையும்' எங்கிருந்து எடுத்தார் என்று?
இத்தனை சிறப்புகள் வாய்ந்த பழுவூரைக் காண வாசகர்கள் விரும்பினால், திருச்சிராப்பள்ளியிலிருந்து ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் 55வது கிலோமீட்டரில் தஞ்சாவூர்/திருவையாறு செல்லும் சாலை பிரியுமிடத்தில் அமைந்துள்ள பகைவிடையீசுவரம், அவனிகந்தர்ப்ப ஈசுவரம், திருவாலந்துறையார் கோயில் மற்றும் மறவனீசுவரம் ஆகிய கோயில்களுக்குச் சென்று வீரவரலாற்றைத் தரிசிக்கலாம். பழுவூர்க் கோயில்களின் சிற்பக்கலை, கட்டடக்கலை மற்றும் கல்வெட்டுகளை முழுமையாகப் புரிந்துகொள்ள விரும்பும் வாசகர்களுக்கு ஒரு பரிந்துரை. செல்லும்போது முடிந்தால் முனைவர் கலைக்கோவன் எழுதிய பழுவூர் - அரசர்கள், கோயில்கள், சமுதாயம் என்ற நூலை எடுத்துச் செல்லவும். கோயில்களின் மீதான உங்களின் பார்வை முற்றிலுமாக மாறி, சரித்திர ஆர்வ வியாதி முற்றுவதைக் கண்கூடாகக் காணலாம்.
மீண்டும் அடுத்த பயணத்தின்போது சந்திப்போம்.
.
1 ஸ்வஸ்தி ஸ்ரீ கொப்ப
2 ரகேசரி பம்மக்கு ய
3 ¡ண்டு கூ ஆவது அ
4 அடிகள் பழுவேட்டரைய
5 ர் மறவன் கண்டனா
6 ர் கன்மி அடிகள் அ
7 ருளிச் செய்ய சிறு ப
8 ழுவூர் திருவாலந்து ¨
9 ற திருக்கற்றளி மேனாய
10 கமாக நின்று செய்வித்த
11 மங்கல நாட்டு மங்கலத்து
12 கவிசியன் நக்கன் மாறபி
13 ரானான நம்பியாரூரன் திருவா
14 லந்துறை மகாதேவர்க்கு
15 மூன்று சந்திக்கும் வைத்த
16 தயிரமுது நாராய நாழி
17 யால் நாடுரி நாடுரிக்கு
18 ம் வைத்த சாவா மூவாப்
19 பேராடு இருபது இது
என்று முடியும்
இதுதான் கல்வெட்டுகளிலிருந்து வரலாற்றுச் செய்திகளை வடித்தெடுக்கும் முறை. கல்வெட்டுகளில் இருப்பவை பெரும்பாலும் நிவந்தங்கள் கொடையளித்த செய்திகள்தான். ஆனால் அவற்றினுள் ஒளிந்திருக்கும் செய்திகளை Reading through the lines என்று ஆராய்ச்சிக் கண்கொண்டு நோக்கினால், வரலாறு வெளிப்படும். ஒரு மின்விளக்கைக் கொடையளித்துவிட்டு, அதிலிருந்து வரும் வெளிச்சத்தை மறைக்குமளவுக்குத் தன் பெயரை எழுதிவைத்து விடும் இக்காலத்து வழக்கத்துடன் கல்வெட்டுகளை ஒப்பிட்டுப் புறந்தள்ளாமல், அவை எப்பேற்பட்ட அட்சயப் பாத்திரங்கள் என்று உணரத் தலைப்படுவோமே! கண்டன் சத்ருபயங்கரன், கண்டன் சுந்தரசோழன், கண்டன் மறவன் ஆகிய மூவரும் உடன் பிறந்தவர்கள் என்ற செய்தி உடையார்குடி அனந்தீசுவரர் கோயில் கல்வெட்டின் மூலம் தெளிவாகின்றது. எனவே, இவர்கள் மூவரின் பெயர்களிலும் உள்ள கண்டன் என்பது மறவன் கண்டனின் பெயர் என்று புரிந்து கொள்ளலாம். இதே அடிப்படையில் பார்த்தால், இந்த 7 பேர்களுக்குள் உள்ள உறவு முறையைக் கீழ்க்கண்டவாறு பகுக்கலாம். "முதலாம் இராஜேந்திரரின் எட்டாம் ஆட்சியாண்டில் பழுவூரை ஆண்டுகொண்டிருந்த பழுவேட்டரையர் யாரென்பது உறுதியாகத் தெரியவில்லை. வேறு சான்றுகள் ஏதுமற்ற நிலையில் இவரைக் கண்டன் மறவனாகவே கொள்ளலாம். உத்தமச்சோழரின் பதினைந்தாம் ஆட்சியாண்டில் பழுவூர் மன்னராக ஆட்சிப் பொறுப்பினை ஏற்று, முதலாம் இராஜராஜர் காலத்தில் மன்னுபெரும் பழுவூரில் திருத்தோற்றமுடையார் கோயிலைச் செங்கல் திருப்பணியாய் எடுப்பித்து, முதலாம் இராஜேந்திரரின் எட்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுடன் வரலாற்று நீரோட்டத்திலிருந்து மறையும் கண்டன் மறவனுடன் பழுவேட்டரையர் மரபும் ஒரு முடிவுக்கு வருகிறது. முதலாம் ஆதித்தரின் பத்தாம் ஆட்சியாண்டில் பழுவூர் அரசராகப் பழுவேட்டரையர் குமரன் கண்டனோடு தொடங்கும் பழுவேட்டரையர் ஆட்சி முதலாம் இராஜேந்திரரின் எட்டாம் ஆட்சியாண்டில் பழுவேட்டரையர் கண்டன் மறவனை இறுதி மன்னராய்க் காட்டி முற்றுப் பெறுவதாகக் கருதலாம்." என்று பழுவூர் - அரசர்கள், கோயில்கள், சமுதாயம் என்ற தனது நூலில் முனைவர் இரா.கலைக்கோவன் உரைக்கிறார்
பழுவேட்டரையன் குமரன் மறவன்
குமரன் கண்டனுக்குப் பிறகு வரலாற்று வரிகளில் இடம்பெறும் அடுத்த பழுவேட்டரையர் குமரன் மறவனாவார். அவனி கந்தர்ப்ப ஈசுவர கிரகத்துத் தென்வாயில் ஸ்ரீ கோயிலின் தென்புறச் சுவரிலுள்ள இராசகேசரியின் இருபத்திரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகள் இரண்டு இவரை அறிமுகப்படுத்தீப் பெருமையடைகிண்றன. முதலாம் ஆதித்தனுடைய இக்கல்வெட்டுகளுள் ஒன்றைக் கல்வெட்டுத் தொகுதி பதின்மூன்றைப் பதிப்பித்த திரு. ஜி. வி. சீனிவாசராவ் முதலாம் இராசராசனுடையதென்று குறிப்பிட்டுள்ளார்47. இதை அப்படியே ஏற்றுக்கொண்ட பேராசிரியர் கோவிந்தசாமி குமரன் மறவனை இராசராசன் காலத்துப் பழுவேட்டரையனாகவும், கண்டன் மறவன் என்ற பிற்காலத்துப் பழுவேட்டரையர் ஒருவரின் மகனாகவும் அடையாளம் காட்டுகிறார் 48. அதனாலேயே பழுவேட்டரையர் மரபு பராந்தகன் காலந்தொட்டுதான் இயங்கத் தொடங்கியதென்ற பிழையான கருத்தையும் தம் நூலில் வெளிப்படுத்துகிறார். இக்கல்வெட்டுகள் ஆதித்தனுடையவைதாம் என்பதற்கு மூன்று தெளிவான காரணங்களைக் காட்டலாம். i) இங்குள்ள முதலாம் இராசராசனின் மெய்க் கீர்த்தியுடன் கூடிய கல்வெட்டுகளுக்கும் இந்த இருபத்திரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகளுக்கும் எழுத்தமைதியில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ii) பழுவூர்க் கோயில்களில் காணப்படும் உயரிய ஆட்சியாண்டுள்ள முதலாம் இராசராசனின் கல்வெட்டுகள் எதுவும் மெய்க்கீர்த்தியின்றிக் காணப்படவில்லை. ஆனால் கல்வெட்டுகள் அடைமொழி ஏதுமற்ற இராசகேசரியினுடையவை. ii) இக்கல்வெட்டுகளில் அவனி கந்தர்வ ஈசுவர கிரகம் உள்ள இடம் 'குன்றக் கூற்றத்து' என்ற சொற்களாலேயே சுட்டப்படுகிறது. வளநாட்டின் பெயர் காணப்படவில்லை. முதலாம் இராசராசனின் பதினேழாம் ஆட்சியாண்டிலேயே வளநாடுகள் பிரிக்கப்பட்ட நிலையில், இருபத்திரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகளான இவையிரண்டும், முதலாம் இராசராசனுடையவையாக இருப்பின், குன்றக்கூற்றம் எந்த வளநாட்டில் இருந்தது என்பதைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆலந்துறைக் கோயிலில் உள்ள இராசராசனின் இருபத்து நான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டிலும் இதே கோயிலில் உள்ள இராசராசனின் இருபத்தேழாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டிலும், இதே கோயிலில் உள்ள இராசராசனின் இருபத்தேழாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டிலும் 49 வளநாட்டின் பெயர் குறிக்கப்பட்டிருப்பது இங்கு நினைக்கத் தகுந்தது. வளநாட்டின் பெயர் சுட்டப் படாத இக்கல்வெட்டுகளை முதலாம் இராசராசனுக்குரியவையெனக் கொள்வது எவ்விதத்தாலும் பொருந்தாது. கள ஆய்வில் கண்ட இவ்வுண்மைகளால், குமரன் மறவனைச் சுட்டும் இராசகேசரியின் இருபத்திரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகள் இரண்டும் முதலாம் ஆதித்தனுடையவையே என்பது உறுதியாகிறது. குமரன் மறவனின் ஆணைப்படி இருவேறு தனியர்கள் செய்த நிலக் கொடைகளைச் சுட்டும் இவ்விரண்டு கல்வெட்டுகளின் சுருக்கமும் கல்வெட்டறிக்கையில் இடம் பெற்றுள்ளது. இவ்விரண்டினுள் ஒன்று கல்வெட்டுத் தொகுதி பதின்மூன்றில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளது.
முதல் கல்வெட்டு
1 ஸ்வஸ்தி ஸ்ரீ கொவிராசகேசரி பன்மர்க்கு யாண்டு இருபத்திரண்டாவது குன்றக் கூற்றத்து 2 அவனி கந்தர்வ ஈசுவரகிரகத்து மகாதேவர்க்கு பொய்கைக் குறுவிடத்து வெட்டக்குடான் 3மாதவன் பழுவேட்டரையன் குமரன் மறவன் பிரசா 4 தத்தினாலருளிச் செய்ய இத்தளி தேவதானம் ஊரகன்குடி அபோவனங்க் கிடந் 5 த பூமியைக் கல்லி இரண்டு புவும் விளைய மசக்கிக் குடுத்த நீர்நிலம் எட்டு மாஇப் 6 பூமியில் போன்த போகங்கொண்டு இரண்டு தளியிலும் ஒரோநாந்தா விளக்கு இர 7 வும் பகலும் எரிப்போமானோம் இத்தளிப் பட்டுடையோம் எழுவோம் இவ்விளக்கு 8 ரட்சிப்பார் அவனிகந்தர்வபுரத்து நகரத்தாரடி என் தலைமேலென 50.
இரண்டாம் கல்வெட்டு
டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வுப் பேரவையால் படிக்கப்பட்ட இக்கல்வெட்டின் ஒவ்வொரு வரியின் முதற்பகுதியும் கட்டடப் பகுதிக்குள் மறநிதுள்ளமையால் அப்பகுதிகளை மட்டும் விடுத்து, பிற பகுதிகள் படியெடுக்கப்பட்டன. 1 ... சரிபம்மர்க்கு யாண்டு இருபத்திரண்டாவது 2 ...து அவனி கந்தர்ப்ப ஈசுவரகிரகத்து மகா தேவர்க்கு செ 3 ...மகரிஷி வம்சத்து சத்திரியன் பொதுகள் பெருமாள் 4 ...பழுவேட்டரையன் குமரன் மறவன் பிரசா 5 ...ஹ நங்கிடந்த பூமியை கல்லி எட்டு மா செய் நீர் 6 ...போகங் கொண்டு இரண்டு தளியிலும் ஒரோநந் 7 ...கொண்டோம் இத்தளிப் பட்டுடையோம் எழுவோம் இவ்வி 8 ...கந்தர்ப்பபுரத்து நகரத்தார் ...51.
இவ்விரண்டு கல்வெட்டுகளிலும் வரும் மகரிஷி வம்சத்து சத்திரியன் பொதுகள பெருமாள், பொய்கைக் குறுவிடத்து வெட்டக்குடான் வடுகன் மாதவன் ஆகிய இரண்டு தனியர்களின் பெயர்களைப் பழுவேட்டரையன் குமரன் மறவன் பெயரோடு இணைத்து, இரண்டு குமரன் மறவன்களை உற்பத்தி செய்திருக்கிறது, அவனி கந்தர்வ ஈசுவர கிரகத்தின் முன்னால் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறையின் அறிவிப்புப் பலகை. பழுவேட்டரையர் என்னும் தலைப்பின் கீழ், இந்த அறிவிப்புப் பலகையில், i) மகரிஷி வம்சத்து சத்திரியன் பொதுகள பெருமாள் பழுவேட்டரையன் குமரன் மறவன், ii) பொய்கைக் குறுவிடத்து வெட்டக்குடான் வடுகன் மாதவன் பழுவேட்டரையன் குமரன் மறவன் என்ற இரண்டு பெயர்களைப் பார்க்கலாம். இதைக் கவனக் குறைவு என்பதா? கருத்துப் பிழை என்பதா? இந்த அறிவிப்புப் பலகையில் இருக்கும் செய்திகள் பெரும்பாலும் பிழைபட எழுதப்பட்டுள்ளன. தொடக்கத்திலிருந்து இறுதிவரை பிழைகள் மலிந்துள்ள இப்பலகையை ஒன்று அகற்றி விடலாம் அல்லது திருத்தி எழுதி அமைக்கலாம். அதுதான் அறிஞர் பெருமக்கள் நிறைந்துள்ள தொல்பொருள் ஆய்வுத் துறைக்குப் பெருமை சேர்க்கும். பொதுகள பெருமாள் தந்த கொடையைக் குமரன் மறவனே தந்ததாகத் தவறான தகவல் வெளியிட்டுள்ளது கல்வெட்டறிக்கை52. குமரன் மறவனைச் சுட்டும் பிற கல்வெட்டுகள் திருப்பழனத்திலொன்றும், லால்குடி சப்தரிஷீசுவரர் கோயிலில் ஒன்றும், திருவையாற்றுப் பஞ்சநதீசுவரர் கோயிலில் ஒன்றுமாய் உள்ளன. மறவன் கண்டன் சுந்தரசோழரின் ஆட்சிக்காலத்தில் பழுவூரை ஆண்டவர். இவரது மூன்று பிள்ளைகளில் கண்டன் மறவன் சுந்தரசோழருக்குப் பிறகு சுமார் 40 ஆண்டுகள் பழுவூரை ஆண்டார். எனவே, அப்போது கண்டன் மறவன் சிறுபிள்ளையாயிருக்க, மூத்த சகோதரர்கள் கண்டன் சத்ருபயங்கரனும் கண்டன் சுந்தரசோழனுமே சுந்தரசோழர் காலத்தில் வாழ்ந்தவர்கள். இப்போது புரிகிறதா? கல்கி 'பெரிய பழுவேட்டரையரையும்', 'சின்னப் பழுவேட்டரையரையும்' எங்கிருந்து எடுத்தார் என்று?
1 ஸ்வஸ்தி ஸ்ரீ கொப்ப 2 ரகேசரி பம்மக்கு ய 3 ¡ண்டு கூ ஆவது அ 4 அடிகள் பழுவேட்டரைய 5 ர் மறவன் கண்டனா 6 ர் கன்மி அடிகள் அ 7 ருளிச் செய்ய சிறு ப 8 ழுவூர் திருவாலந்து ¨ 9 ற திருக்கற்றளி மேனாய 10 கமாக நின்று செய்வித்த 11 மங்கல நாட்டு மங்கலத்து 12 கவிசியன் நக்கன் மாறபி 13 ரானான நம்பியாரூரன் திருவா 14 லந்துறை மகாதேவர்க்கு 15 மூன்று சந்திக்கும் வைத்த 16 தயிரமுது நாராய நாழி 17 யால் நாடுரி நாடுரிக்கு 18 ம் வைத்த சாவா மூவாப் 19 பேராடு இருபது இது என்று முடியும்
லால்குடி கல்வெட்டு
இவற்றுள் லால்குடி கல்வெட்டு முதலாம் பராந்தகனின் ஐந்தாம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டிருக்க, கல்வெட்டுத் தொகுதி பத்தொன்பதைப் பதிப்பித்த திரு. ஜி.வி. சீனிவாசராவ் இதைத் தவறாக உத்தமசோழனுடையது என்று குறித்துள்ளார்53. இக்கல்வெட்டால் குமரன் மறவன் இக்கோயிலில் விளக்கெரிக்க முப்பது கழஞ்சு பொன் தந்த செய்தி கிடைப்பதுடன் 'அடிகள் பழுவேட்டரையன் குமரன் மறவன்' என்று இப்பெருமான் சிறப்புடன் அழைக்கப் பட்ட நிலையும் தெரியவருகிறது.
திருப்பழனக் கல்வெட்டு
முதலாம் பராந்தகனின் ஆறாம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ள திருப்பழனக் கல்வெட்டில் நந்தா விளக்கொன்று எரிக்கத் தீப்பாஞ்ச அழகியான் மறவன் என்பானோடு இணைந்து பழுவேட்டரையன் குமரன் மறவன் முப்பது கழஞ்சு பொன் தந்த செய்தி கிடைக்கிறது54.
திருவையாற்றுக் கல்வெட்டு
திருவையாற்றிலுள்ள பஞ்சநதீசுவரர் கோயில் கல்வெட்டு முதலாம் ஆதித்தனின் பத்தொன்பதாம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் பழுவேட்டரையர் நம்பி மறவனார் என்ற பெயர் காணப்படுகிறது55. இந்நம்பி மறவனார் நம் குமரன் மறவனே. இளையோரைக் குறிக்கப் பிள்ளையார், நம்பி என்ற சொற்களைப் பயன்படுத்துவதுண்டு. முதலாம் ஆதித்தனின் பத்தொன்பதாம் ஆட்சியாண்டில் குமரன் கண்டன் பழுவூர் அரியணையில் அமர்ந்திருந்தார். அதனால்தான் பஞ்சநதீசுவரர் கல்வெட்டு குமரன் மறவனை, நம்பி மறவன் என்றழைக்கிறது. இக்காலத்தில் இளையவராக இருந்த குமரன் மறவன், ஆதித்தனின் இருபத்திரண்டாம் ஆட்சியாண்டில் குமரன் மறவனாய்ப் பழுவூர் அரசாட்சியை ஏற்றுக்கொண்டார். இவ்வுண்மையை உணரா நிலையில் திரு. தியாகராசன் தம் தினமலர்க் கட்டுரையில் இவ்விருவரையும் இரண்டு வேறுபட்ட அரசர்களாகப் பட்டியலிடுகிறார்56. இவருடைய இரண்டாவது கட்டுரையான 'பழுவேட்டரையர் பள்ளிப்படைக் கோயிலில்', நம்பி மறவனைக் காணவில்லை. கல்வெட்டறிக்கையோ குமரன் மறவன், குமரன் கண்டன் என்ற இரண்டு பெயர்களும் ஒரே மன்னரைக் குறிப்பதாக மகிழ்ந்துரைக்கிறது57. திரு. எஸ். ஆர். பாலசுப்பிரமணியம் நம்பி மறவனைக் குறிக்கும் இக்கல்வெட்டைக் குமரன் கண்டனின் கல்வெட்டுகளைப் பட்டியலிட்டுள்ள இடத்தில் இணைத்திருப்பதன் பொருள் விளங்கவில்லை58. இருவரும் ஒருவரென்று கருதுகிறாரோ? முதலாம் ஆதித்தனின் பத்தாம் ஆட்சியாண்டில் பழுவூர் குமரன் கண்டனின் ஆட்சியில் இருந்தது. இருபத்திரண்டாம் ஆட்சியாண்டில் குமரன் மறவன் ஆட்சிக்கு வருகிறார். இவ்விரு வேந்தர்களின் பெயர்களிலும் பொதுவாக உள்ள 'குமரன்' என்ற முதற்சொல் இருவரின் தந்தையைக் குறிப்பதாகக் கொள்ளலாம். தந்தையுடைய பெயரின் பிற்பகுதியைத் தங்கள் பெயரின் முதற்பகுதியாகக் கொள்வதை ஓர் ஒழுங்கு முறையெனப் பழுவூர் மன்னர்கள் இறுதிவரை பின்பற்றியிருக்கிறார்கள் என்பதைக் கல்வெட்டுகள் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. இந்நிலையில் பழுவூர் மரபின் தோற்றத்தைப் பின்வருமாறு படம் பிடிக்கலாம். குமரன் கண்டன் எப்போது பழுவூர் மன்னரானார் என்பதற்கு திட்டவட்டமான சான்றுகள் இல்லையென்றாலும், கி.பி. 893இல் அவரது ஆட்சி முடிவுற்றமைக்குக் குமரன் மறவன் ஆட்சிப் பொறுப்பேற்றதே போதுமான சான்றாகும். குமரன் மறவனின் ஆட்சி தொடங்கியதற்குக் கிடைக்கும் சான்றுகள், அம்மன்னர் எப்போது பொறுப்பு விலகினார் அல்லது காலமானார் என்பதை நிலைநிறுத்தக் கிடைக்கவில்லை இந்நிலையில், இம்மரபில் வந்த அடுத்த மன்னராக அறியப்படுபவர் கண்டன் அமுதன். இவர் பெயரின் முதற்பகுதி மிகத்தெளிவாக, இவர் குமரன் கண்டனின் மகன் என்பதைச் சுட்டுகிறது. குமரன் கண்டன் ஆட்சிப் பொறுப்பைத் துறந்தபோது கண்டன் அமுதன் சிறுவனாக இருந்திருக்க வேண்டும். அதனாலேயே குமரன்கண்டனின் இளவலான குமரன்மறவன் அரியணையேறினார். கண்டன் அமுதன் ஆட்சிப் பொறுப்பேற்கும் வயதடைந்ததும் குமரன் மறவன் தன் அண்ணன் மகனுக்கு முடிசூட்டிவிட்டு அரச பதவியைத் துறந்திருக்கவேண்டும். கண்டன் அமுதனைக் குறிக்கும் கல்வெட்டுகள் ஆலந்துறையார் கோயிலில் ஒன்றும், திருவையாற்றில் ஒன்றுமாய்க் கிடைத்துள்ளன. இவற்றுள் ஆலந்துறையார் கோயில் கருவறையின் மேற்குப்புறச் சுவரிலுள்ள கல்வெட்டு மதுரை கொண்ட பரகேசரியான முதலாம் பராந்தகனின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டில் வெட்டப் பட்டுள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக்கல்வெட்டினால் முதற்பராந்தகனுக்கும் பாண்டியன் ராசசிம்மனுக்கும் இடையில் நடந்த வெள்ளூர்ப் போரில் பழுவேட்டரையன் கண்டன் அமுதன் கலந்துகொண்டு வெற்றிவாகை சூடிய செய்தி கிடைக்கிறது59.
வெள்ளூர்ப் போரும் விசித்திர முடிவுகளும்
கி.பி. 919இல், அதாவது முதலாம் பராஆந்தகனின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டில் நடந்த வெள்ளூர்ப் போரில் பாண்டியனும், அவனுக்குத் துணைவந்த ஈழப்படைகளும் தோற்றோடினர். கண்டன் அமுதனின் படைத்தலைமையின் கீழ், சோழப்படை பெருவெற்றிகண்டது. இந்தப் போரில் கண்டன் அமுதன் இறந்துவிட்டதாகத் திரு. சுந்தரேசனாரும்60, திரு. தியாகராசனும்61 கூறக் கல்வெட்டறிக்கை பாண்டியனும், ஈழதரையனும் இறந்ததாகக் கூறுகிறது62. இந்த விசித்திர முடிவுகளுக்குக் காரணங்களேதும் கூறப்படவில்லை. திரு. தியாகராசன் தம் தினமலர்க் கட்டுரையில் சில செய்திகளைச் சொல்கிறார். 1) "கீழப்பழுவூர்க் கல்வெட்டைத் தேடியெடுத்த இந்தியக் கல்வெட்டுத் துறையினர் வெள்ளூர்ப் போரில் பாண்டிய மன்னன் இறந்துவிட்டதாகத் தவறாக ஆண்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் கல்வெட்டில் பாண்டியன் இறந்ததாகச் செய்தி ஏதுமில்லை." 2) "இப்போரில் வீரத்துடன் போரிட்டுச் சோழனுக்கு வெற்றி தேடித்தந்த கண்டன் அமுதனார் இறந்து விட்டதாகத் தெரிகிறது. இதனைக் கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோயிலின் கருவறை மேற்குச் சுவரிலுள்ள கல்வெட்டு கூறுகிறது." 3) "இவ்வாண்டுக்குப் பிறகு பராந்தகனின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டிற்குப் பிறகு) கல்வெட்டுகளில் கண்டன் அமுதனார் யாண்டும் குறிப்பிடப்படவில்லை என்பதும் முக்கியமான ஒன்றாகும்." 4) திரு. தியாகராசன் பழுவூரில், தாம் கண்டுபிடித்த கல்வெட்டொன்று குறிக்கும் ஸ்ரீகண்டஈசுவரம் என்னும் பள்லிப்படைக்கோயில் கி.பி. 919இல் இறந்த கண்டன் அமுதனுக்கே எழுப்பப்பட்டதாகக் கூறிக் கண்டன் அமுதன் கதையை அத்துடன் முடிக்கிறார். 63. இதே ஆசிரியர் தினமலர்க் கட்டுரை வெளியான மூன்று மாதங்கள் கழித்து வெளியிட்ட இன்னொரு கட்டுரையில், இதே பள்ளிப்படை, குமரன் கண்டனுக்கு எழுப்பப்பட்டதாகத் தெரிவிக்கிறார்64. 'போரில் பாண்டியன் இறந்ததாகக் கல்வெட்டறிக்கை தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. போரில் இறந்தவன் கண்டன் அமுதன். இதைக் கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோயில் கல்வெட்டு கூறுகிறது.' என்ற தியாகராசனின் முதலிரண்டு செய்திகளை முதலில் பார்ப்போம். போரில் பாண்டியன் இறந்ததாகக் கல்வெட்டறிக்கை தவறாகக் குறிப்பிட்டுள்ளது என்று தியாகராசன் சொல்வது உண்மையே. 126ஆம் ஆண்டுக் கல்வெட்டறிக்கையிலும், கல்வெட்டுத் தொகுதி பதின்மூன்றிலும் வெள்ளூர்ப் போரில் பாண்டியன் இறந்ததாகவே செய்தி தரப்பட்டுள்ளது. இச்செய்தி முற்றிலும் தவறாகும், பாண்டியன் போரில் இறக்கவேயில்லை. இதைக் கண்டன் அமுதன் கல்வெட்டும் குறிப்பிடவேயில்லை. போரில் வீரர்கள் இறந்த செய்தி இக்கல்வெட்டில் மிகத் தெளிவாகச் "சென்ற இடத்தில் பட்ட" என்ற சொற்களால் விளக்கப்படுகிறது. ஆனால் பாண்டியனோ, ஈழத்தரையனோ இறந்ததாகக் குறிப்பு இல்லை. இருப்பினும் போரில் பாண்டியனும் ஈழதரையனும் இறந்ததாக 1926ஆம் ஆண்டுக் கல்வெட்டறிக்கை தயங்காமல் கூறுகிறது. இக்கல்வெட்டு பதிப்பிக்கப் பட்டுள்ள கல்வெட்டுத் தொகுதி மூன்றில், இப்படியொரு செய்தியில்லை67. 'அஸ்திக்கடை' என்ற சொல்லுகு 'Fierce Battle' (கடுமையான சண்டை) என்று ஆங்கில மொழிபெயர்ப்பு தந்துள்ளார்கள். அடிக்குறிப்புப் பகுதியில், 'அஸ்திக் கடை செய் நான்று, The translation of this phrase by a deadly battle is purely conjectural. It is not found in the dictionaries. The word may also mean a 'fight on elephant' என்று விளக்கம் தந்துள்ளார்கள்68. திரு. நீலகண்ட சாஸ்திரியார் சோழர்களைப் பற்றிய தம்முடைய நூலில் வெள்ளூர்ப் போரில் தோற்றோடிய இராசசிம்மன் முதலில் இலங்கைக்குச் சென்றதாகவும், பின் கேரளம் சென்று உறைந்ததாகவும் மகாவம்சக் குறிப்புகளின் உதவியுடன் மெய்ப்பித்துள்ளார்69. திருவாலங்காட்டுச் செப்பேட்டு வரிகளும் இதை உறுதி செய்கின்றன. "Encircled by the first of his (Parantaka's) prowess, the Pandya as if desirous of cooling the heat caused by it, quickly enetered the sea (embarked for ceylon) abandoning his royal state and the Kingdom inherited from his ancestors"70. திரு. பண்டாரத்தாரும் இதே செய்தியைத் தம் நூலில் தருவதன் மூலம் இராசசிம்மன் வெள்ளூர்ப் போரில் இறக்கவில்லை என்பதைத் தெளிவாக்குகிறார்71. நிலைமைகள் இப்படியிருக்க 1926ஆம் ஆண்டுக் கல்வெட்டறிக்கையும், கல்வெட்டுத் தொகுதி பதின்மூன்றும்72 ஏனோ தெரியவில்லை பாண்டியனையும் ஈழதரையனையும் போரில் தீர்த்துக்கட்டி விடுகின்றன. 'போரில் இறந்தவன் கண்டன் அமுதன். இதைக் கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோயில் கல்வெட்டு கூறுகிறது' என்ற தியாகராசனின் கருத்து அடிப்படையற்றதாகும், கீழப்பழுவூர்க் கல்வெட்டை முன்பே பார்த்தோம். இக்கல்வெட்டின் ஆறாம் வரியிலிருந்து பத்தாம் வரி வரையுள்ள பகுதிதான் வெள்ளூர்ப் போரைப் பற்றிப் பேசுகிறது. பெருமானடிகளான முதற்பராந்தகனோடு, பாண்டிய மன்னன் ஈழப்படை கொணர்ந்து, வெள்ளூரில் போரிட்டபோது கண்டன் அமுதன் வீரஸ்ரீ பெற்றதை இவ்வரிகள் சுட்டுகின்றன. இதில் எந்த இடத்தில் கண்டன் அமுதன் இறந்த குறிப்பு உள்ளது என்பதுதான் விளங்கவேயில்லை. இவரும், 'அஸ்திக் கடை செய் நான்று' என்ற சொல்லாட்சியைத்தான் தவறாகப் பொருள் புரிந்து கொண்டு பேசுகிறாரோ என்றால், அதற்கும் கல்வெட்டு வரிகள் கச்சிதமாய் அமையவில்லை. 'அஸ்திக் கடை செய் நான்று' பாண்டியனுக்கும் ஈழதரையனுக்கும் பொருந்துமே அல்லாது கண்டன் அமுதனுக்குப் பொருந்த 'தமிழ்' அனுமதிக்கவில்லை. எனவே எந்த அடித்தளமும் இல்லாமல் 'கல்வெட்டே கண்டன் அமுதன் இறந்த செய்தியைத் டஹ்ருவதாக' இவர் குறிப்பது பிழையாகும். 'பராந்தகனின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டிற்குப் பிறகு கண்டன் அமுதன், கல்வெட்டுகளில் யாண்டும் குறிப்பிடப்படவில்லை' என்பது இவரது அடுத்த கருத்து. இக்கருத்தைத் தகர்க்கிறது திருவையாற்றுப் பஞ்சநதீசுவரர் கோயில் கல்வெட்டொன்று. கண்டன் அமுதன் வெள்ளூர்ப் போரில் இறக்கவில்லை என்பதற்கான இவ்வலிமையான கல்வெட்டுச் சான்று பரகேசரிவர்மனின் பதினான்காம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு பழுவேடரையன் கண்டன் அமுதன் திருவையாற்று மகாதேவர்க்கு நந்தா விளக்கொன்றெரிக்கத் தொண்ணூறு ஆடுகள் கொடையாகத் தந்ததைக் குறிக்கிறது73. முதலாம் பராந்தகனுடையதான இப்பதினான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் கொடையளித்துள்ள கண்டன் அமுதன் எப்படிப் பராந்தகனின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டில் நடந்த வெள்ளூர்ப் போரில் இறந்திருக்க முடியும்? திரு. தியாகராசனும், திரு. சுந்தரேசனாரும் பஞ்சநதீசுவரர் கல்வெட்டைப் பார்த்திருந்தால் கண்டன் அமுதன் இறந்ததாகக் கருத்து கொண்டிருக்க மாட்டார்கள் என்பதோடு, பராந்தகனின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டிற்குப் பிறகு அமுதனைப் பற்றிய கல்வெட்டேயில்லை என்று தியாகராசன் அடித்துச் சொல்லியிருக்கவும் மாட்டார். பழுவூரில் தியாகராசனால் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கல்வெட்டு குறிக்கும் பள்ளிப்படைக் கோயில், கண்டன் மறவனால் 'ஸ்ரீகண்ட ஈசுவர்ம்' என்ற பெயரில் எழுப்பப்பட்டதாகும். இது கண்டன் அமுதனுக்கு எழுப்பப்பட்டது என்று தினமலரிலும், குமரன் கண்டனுக்கு எழுப்பப்பட்டது என்று அஞ்சல்வழிக் கருத்தரங்கக் கட்டுரையிலும் தியாகராசன் குறிப்பிட்டுள்ளார். இன்றைக்குச் சுவடழிந்து போயிருக்கும் இப்பள்ளிப்படைக் கோயில் கண்டன் அமுதனுக்கோ குமரன் கண்டனுக்கோ எழுப்பப்பட்டதல்ல74. கண்டன் அமுதன் கி.பி. 919இல் வெள்ளூர்ப் போரில் இறக்கவில்லை என்பதை முன்னரே நிறுவியுள்ளோம். 'ஸ்ரீகண்ட ஈசுவரம்' என்ற பெயரே இக்கோயிலுக்குரிய மன்னர், கண்டன் என்ற இயற்பெயரை உடையவர் என்பதைத் தெளிவாய்த் தெரிவிக்கிறது. இந்நிலையில் இக்கோயிலை அமுதன் என்ற இயற்பெயரை உடையவரின் பள்ளிப்படையாகக் காட்டுவது எப்படிப் பொருந்தும்? இதைச் சற்றுக் காலங்கடந்து புரிந்துகொண்ட நிலையில்தான் தியாகராசன் தம் இரண்டாவது கட்டுரையில் இக்கோயிலைக் குமரன் கண்டனுடையதாக்கிவிட்டார். இப்பள்ளிப்படைக்குரியவர்களாய் இருவரைத்தான் கொள்ள முடியும். ஒருவர் தியாகராசன் குறிக்கும் குமரன் கண்டன். மற்றவர் குமரன் மறவனின் மகனான மறவன் கண்டன். திரு. தியாகராசன், 'குமரன் கண்டன் தொனொடை மண்டலப் போரில் கலந்துகொண்டு வீர மரணம் எய்திவிட்டார் போலும். அதனால் இறந்துவிட்ட குமரன் கண்டனுக்கு இவருடயை இயற்பெயரில் ஸ்ரீகண்ட ஈசுவரம் என்ற பள்ளிப்படை எழுப்பப்பட்டது', என்று குறிப்பிடுகிறார்75. குமரன் கண்டன் தொண்டை மண்டலப்போரில் கலந்துகொண்டதற்கோ, அதில் வீரமரணம் அடைந்ததற்கோ எந்தவிதமான சான்றுகளும் இல்லாத நிலையில் இப்படியொரு கற்பனை திரு. தியாகராசனுக்கு ஏன் தோன்றியதென்று விளங்கவில்லை. முதற்கட்டுரையில் கண்டன் அமுதன் வீர மரணம் அடைந்ததாகக் கூறி அவனுக்கே பள்ளிப்படை என்றார். இரண்டாம் கட்டுரையில் குமரன் கண்டன் வீரமரணம் அடைந்ததாகக் கூறி அவனுக்குத்தான் பள்ளிப்படை என்கிறார். எத்தனை முன்னுக்குப்பின் முரண். எந்த அடித்தளமும் இல்லாத இக்கற்பனைக் கூற்றினை ஏற்றுக்கொண்டு இக்கோயிலைக் குமரன் கண்டனின் பள்ளிப்படையாகக் கருதுவதைவிட வரலாற்றில் அதிகம் பேசப்படுபவரும், திருவாலந்துறைத் திருக்கோயிலைக் கற்றளியாக்கியவருமான மறவன் கண்டனே இப்பள்ளிப்படைக் கோயிலுக்குரிய பெருமகனாவார் எனக் கொள்வதே பொருந்துவதாகும். மேலும் இக்கோயிலை எழுப்பியவன் இவர் மகனான கண்டன் மறவன் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அரிய சாதனைகளைச் செய்த தன் அன்புத் தந்தைக்கு மகன் பள்ளிப்படை எடுத்தது முற்றிலும் பொருத்தமே.
பகைவிடை ஈசுவரத்துத் தேவனார்
முதலாம் ஆதித்தனின் பன்னிரெண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு குறிப்பது போல், முதலாம் இராசராசனின் பதினோராம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும் ஒரு பகைவிடை ஈசுவரத்துத் தேவனாரை அறிமுகப்படுத்துகிறது. இக்கல்வெட்டின் சுருக்கும் மட்டுமே கல்வெட்டறிக்கையில் வெளியாகியுள்ளது41. அச்சுருக்கத்தில் பகைவிடை ஈசுவரத்துத் தேவனார் பெயர் இல்லை. டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வுப் பேரவை பழுவூர்க் கோயில்களில் மேற்கொண்ட முழுமையான கள ஆய்வின்போது இக்கல்வெட்டு முற்றிலுமாய்ப் படியெடுக்கப்பட்ட நிலையில் மூன்று பேருண்மைகள் வெளிப்பட்டன. இக்கல்வெட்டிலும் ஒரு பகைவிடை ஈசுவரத்துத் தேவனார் இடம் பெற்றிருப்பது அத்தேவனார்க்கு நக்கன் கரிய வீரநானி நிலக்கொடையளித்திருப்பது பழுவூரைச் சேர்ந்த இப்பகைவிடை ஈசுவரத்தில் ஒரு தளிச்சேரி அமையப் பெற்றிருந்தது42. இம்மூன்று உண்மைகளும் இதுநாள் வரையிலும் பழுவூர் தொடர்பாக வந்துள்ள எந்த ஆய்வுக் கட்டுரைகளிலும், நூல்களிலும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இக்கல்வெட்டை டாக்டர் பாலாம்பாள் முழுமையாகப் படித்திருப்பார்களேயானால் தம்முடைய கருத்தை மாற்றிக்கொண்டிருக்கக்கூடும்.
1 ஸ்வஸ்திஸ்ரீ சாலை கலமறுத்த கோ 2 ராஜகேசரி பன்மர்க்கு யாண்டு 3 பதினொன்னாவது குன்றக் கூற்றத்து தேவ 4 தானம் அவனி கந்தர்ப்ப ஈ 5 சுவர கிரகத்து வடவாயில் ஸ்ரீ கோயில் 6 மகாதேவர்க்கு அடிகள் பழுவேட்ட 7 ரையன் கண்டன் மறவனுக்கு ஸ்ரீ கார்ய 8 மாகின கோயில் கோனடிகள் மே 9 னாயத்து பகைவிடை ஈசுவரத்து தேவ 10 நார் மகள் நக்கன் வீரநானி சந்திராதித்த 11 வல் இரவும்பகலும் எரியும் விளக்கு ஒன்றுக்கு தேவர் உழ 12 க்கால் நிசதம் உழக்கு நெய் எரிய வைத்த நொந்தா விள 13 க்கு ஒன்றினுக்கு குடுத்த என் பங்கரையாவது ப 14 கை(விடை) ஈசுவரத்துத் தளிச்சேரி வடசிறகில் நக்கன் பெற்றமை பங்குக்கு 15 மேற்கு விழா வீதிக்கு வடக்கும் பகைவிடை ஈசுவரத்து தேவர்க்கு நா 16 ன் கொடுத்த பங்கரைக்குக் கிழக்கும் திருவெளி பட்டாலகன் தோட்டத்துக் 17 கு தெற்கு நடுவுபட்ட பங்கரையும் சுட்டி வந்த போகமான நெல்லு 18 மற்றும் இப்பங்கால் வந்தது எப்பேர்ப்பட்டதும் குடுத்து இத்தேவர்க்கு சந் 19 திராதித்தவள் ஒரு நொந்த விளக்கு வைத்தேன் கரிய வீரநானியேன்
என்ற முதலாம் இராசராசனின் இக்கல்வெட்டில், பகைவிடை ஈசுவரத்துத் தேவனார் மகளாகும் பெருமை நக்கன் வீரநானிக்குக் கிடைத்துள்ளது. இந்தத் தேவனார் யார்? இவருக்கும் நக்கன் பூதியின் (டாக்டர் பாலாம்பாள் கருத்துப்படி நக்கன்பூதி பழுவேட்டரையன் குமரன் கண்டனின்) தந்தையாகக் கருதப்படும் பகைவிடை ஈசுவரத்துத் தேவனாருக்கும் என்ன தொடர்பு? நக்கன் பூதியின் தந்தையாக ஆதித்தனின் கல்வெட்டால் குறிக்கப்பெறும் பகைவிடை ஈசுவரத்துத் தேவனாரின் காலம் கி.பி. 884. வீரநானியின் தந்தையாக முதலாம் இராசராசன் கல்வெட்டால் குறிக்கப்பெறும் பகைவிடை ஈசுவரத்துத் தேவனாரின் காலம் கி.பி. 996. இப்படி இரண்டு பகைவிடை ஈசுவரத்துத் தேவனார்கள் இருவேறுபட்ட காலங்களில் வாழ்ந்தார்களா? அப்படி வாழ்ந்தார்களென்றால் அவர்களுக்கும் பழுவேட்டரையர்களுக்கும் என்ன தொடர்பு? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் வீரநானியின் கல்வெட்டே பதில் சொல்லிவிடுகிறது. இப்பெருமாட்டி தந்த செய்தி இக்கல்வெட்டிலேயே காணக்கிடைக்கிறது. இந்தச் செய்தியொன்றே பகைவிடை ஈசுவரத்துத் தேவனார், இறைவன் என்பதை உறுதிப்படுத்தப் போதுமானதாகும். பகைவிடை ஈசுவரம் ஒரு கோயில். ஆனால் டாக்டர் பாலாம்பாளும், பேராசிரியர் கோவிந்தசாமியும் பகைவிடை ஈசுவரமென்பது பழுவூரின் மற்றொரு பெயரென்று தவராகக் கருதிக்கொண்டமையால் தடுமாம்றியுள்ளனர் 43. மன்னு'பெரும் பழுவூர்ப் பகைவிடை ஈசுவரத்து மகாதேவர்க்கு' என்று வரும் கல்வெட்டு வரியே 44 இப்பகைவிடை ஈசுவரம் பெரும் பழுவூரிலிருந்த கோயில் என்பதைத் தெள்ளிதின் உணர்த்தியும் பேராசிரியர்கள் தெளிவு காண இயலாது தவிக்கின்றனர். இவர்கள் கல்வெட்டுகளைச் சற்று ஆழ்ந்து படித்திருந்தால் இக்குழப்பங்கள் நேர்ந்திரா. பகைவிடை ஈசுவரத்துத் தேவனார் என்ற கல்வெட்டு வரியிலுள்ள 'தேவனார்' என்ற சொல் அக்கோயில் இறைவனையே சுட்டுகிறது. ஈசுவரத்துக்குத் தேவனார், அந்த ஈசுவரனைத் தவிர வேறு யாராக இருக்கமுடியும்? மேலும் கோயில் இறைவனுக்குத்தானே நிலக்கொடையளிக்க முடியும்! மன்னனுக்கு மக்கள் நிலக்கொடையளித்ததாக எந்தக் கல்வெட்டும் இதுவரை சொன்னதில்லை. வீரநானியின் வடவாயில் கோயில் கல்வெட்டே பகைவிடை ஈசுவரத்துத்தேவனார் இறைவன் என்பதை மெய்ப்பிக்கும் நிலையில், பாலாம்பாள் இத்தேவனார் விசயாலயன் காலத்திலேயே சிற்றரசனாக இருந்ததாகவும், ஆதித்தன் காலத்தில் உடையார்பாளையம் உள்ளிட்ட நிலப்பகுதியை ஆண்டு வந்ததாகவும் எழுதுவது எத்தனை பிழை! இறைவனுக்கு முடிசூட்டி அரசனாக்கியிருக்கும் இத்தவறுக்குக் காரணம் முறையான கல ஆய்வுகளும் அறிவியல் நோக்கும் இல்லாமல் போனமைதான். இனி, பகைவிடை ஈசுவரத்துத் தேவனாரை மறந்து குமரன் கண்டனிடம் வருவோம். திருவையாறு பஞ்சநதீசுவரர் கோயிலில் உள்ள முதலாம் ஆதித்தனின் பத்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும் பழுவூர் அவனிகந்தர்ப்ப ஈசுவர கிரகத்திலுள்ள முதலாம் ஆதித்தனின் பதின்மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும், வரலாற்றில் முதல் பழுவெட்டரையனாக வெளிப்படும் முமரன் கண்டனைச் சுட்டுவதைக் கண்டோம். பேராசிரியர் கோவிந்தசாமி இக்கும்ரன் கண்டனைப் பற்றிப் பேசவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது 45. இக்கல்வெட்டுகள் திட்டவடட்மாக வெளிப்படுத்தும் முதல் பழுவேட்டரையனைப் பேராசிரியர் எப்படி மறந்தார் என்பது வியப்பாகவே உள்ளது. இம்மன்னரைப் பற்றி இரண்டே கல்வெட்டுகள் கிடைத்திருக்கும் நிலையில், குமரன் கண்டனைப் பற்றிப் பல சான்றுகள் உள்ளதாகவும், அவர் பல கோயில்களுக்குக் கொடையளித்தவரென்றும் இல்லாததையெல்லாம் எழுதுகிறார் டாக்டர் பாலாம்பாள் 46.
கேரள இளவரசி யார்?
உதயேந்திரம் செப்பேடுகள் குறிக்கும் கேரள இளவரசி இராசாதித்தன் தாயான கோக்கிழானடிகள் இல்லையென்றால் வெறு யார்? இந்தக் கேள்விகான விடையைப் பெற மீண்டும் அன்பில் செப்பேடுகளையே அணுகலாம். உதயேந்திரம் செப்பேடுகள் தராத சில புதிய தகவல்களை அன்பில் செப்பேடுகள் தருகின்றன. "This same king (Parantaka) married the daughter resembling regal glory incarnate of the Kerala king, who was also called paluvettarayar. Like unto victory born of prowess and policy and like the unequalled heaven the outcome of sacrifice and sacrificial gifts, a son named Arichika of unequalled fame was born to these two."" பராந்தகன் மணந்துகொண்ட கேரள இளவரசியின் தந்தை பழுவேட்டரையர் என்றும் அறியப்பட்டார் பராந்தகனுக்கும் கேரள இளவரசியான பழுவேட்டரையர் மகளுக்கும் பிறந்தவனே அரிஞ்சயன். உதயேந்திரம் செப்பேடுகள் கங்கமன்னன் இரண்டாம் பிருதிவிபதியால் வெளியிடப்பெற்றவை. அதனால் அதில் பராந்தகனின் திருமணம் மட்டும் இடம் பெற்றது. அன்பில் செப்பேடுகள் பராந்தகனின் பேரனும், அரிஞ்சயனின் மகனுமான சுந்தரசோழனால் வெளியிடப்பெற்றதால் மரபுவழி கூறுமிடத்து அரிஞ்சயன் பிறப்பு பற்றியும், அப்பேரரசனது பெற்றோர்கள் பற்றியும் விளக்கமான செய்திகளைத் தந்துள்ளன. திரு. பண்டாரத்தார் அன்பில் செப்பேடுகளின் செய்திகளைத் தவறாகத் தெளிந்துகொண்டு பின்வருமாறு எழுதுகிறார். "பராந்தகனுக்கு மற்றொரு சேரர்குலப் பெண்மணியும் மனைவியாய் இருந்தனள் என்பது அன்பில் செப்பேடுகளால் அறியப்படுகின்றது. அவள், மழநாட்டிலுள்ள பழுவூரில் வாழ்ந்துகொண்டிருந்த கேரள மன்னனாகிய பழுவேட்டரையன் மகள் ஆவாள். அவ்வரசிபாற் பிறந்தவனே அரிஞ்சயன் என்ற அரசகுமாரன் என்பது குறிப்பிடத்தக்கதாகும் 14. அன்பில் செப்பேடுகளில் எந்த இடத்திலும் பரந்தகன் இரண்டு சேரப்பெண்களை மணந்து கொண்டதாகக் குறிப்பில்லை. திரு. பண்டாரத்தார், உதயேந்திரம் செப்பேடுகள் குறிக்கும் கேரள இளவரசியை ஒரு மனைவியாகவும், அன்பில் செப்பேடுகள் குறிக்கும் அதே கேரள இளவரசியை இன்னொரு மனைவியாகவும் காட்டுகிறார். இந்தக்குழப்பம் பண்டாரத்தார்க்கு எப்படி நேர்ந்ததென்பது விளங்கவில்லை. உதயேந்திரம் செப்பேடுகளும் அன்பில் செப்பேடுகளும் குறிக்கும் கேரள இளவரசி ஒருவரே. அவர் பழுவேட்டரையர் என்றும் அறியப்பட்ட கேரல அரசரின் திருமகளாவார். இந்தக் கேரள இளவரசியை அடையாளம் காண, திருச்சென்னம் பூண்டிக் கல்வெட்டொன்று உதவுகிறது. 1) ஸ்வஸ்திஸ்ரீ மதிரை கொண்ட கொப்பரகேசரி பன்மற்கு யா 2) ண்டு பத்னேழாவது இடையாற்று நாட்டுத் திருசடைமுடி ம 3) காதேவர்க்கு சந்திராதித்தரளவும் ஒரு முழுத்திருவிளக்கினுக்கு பழுவேட்ட 4) ரையர் மகளார் நம்பிராட்டியார் அருமொழி நங்கையார் பரிவாரம் குணவன் 5) சூரதொங்கி வைத்த பொன் பதினாறு கழஞ்சு...15 அ. உதயேந்திரம் செப்பேடு: பராந்தகன் கேரள அரசனின் மகளை மணந்து கொண்டான். ஆ. அன்பில் செப்பேடு: அக்கேரள அரசன் பழுவேட்டரையன் என்றும் அறியப்பட்டான். இ. திருச்சென்னம் பூண்டிக் கல்வெட்டு: பழுவேட்டரையர் மகள் அருள்மொழி நங்கை பராந்தகன் மனைவி. இந்த மூன்று ஆவணங்களையும் இணைத்துப் பார்க்கும் பொது தெளிவான உண்மைகள் புலப்படுகின்றன. பழுவேட்டரையரென்று அழைக்கப்பட்ட கேரள அரசரின் மகளான அருள்மொழி நங்கையைப் பராந்தகன் தன் பதினைந்தாம் ஆட்சியாண்டிற்கு முன்பே மணந்துகொண்டான். இவ்விருவருக்கும் பிறந்தவனே அரிஞ்சய சோழன். உண்மைகள் இவ்வளவு தெளிவாக இருந்தும் இவற்றைத் தம் நூலில் திரு. பண்டாரத்தாரே குறிப்பிட்ட்டிருந்தும், இணைத்துப் பார்க்கத் தவறிய காரணத்தால் அவரால் அருள்மொழி நங்கையை அடையாளம் காணமுடியவில்லை. அப்பெருமாட்டியைப் பராந்தகனின் மற்ற மனைவிமார் பட்டியலில் தள்ளி இருக்கிறார்16. பண்டாரத்தார் கூற்றுப்படி பார்த்தால் பராந்தகன் பாவம், ஒரே பெண்ணை மூன்று முறை மணந்திருக்க வேண்டும். உதயேந்திரம் செபேடுகளும் அன்பில் செப்பேடுகளும் குறிக்கும் கேரள இளவரசி திருச்சென்னம்பூண்டிக் கல்வெட்டில் இடம் பெறும் பழுவேட்டரையர் மகளான அருள்மொழி நங்கையே என்பது தெளீவான நிலையில், பழுவேட்டரையர்களுக்கும் கேரளத்திற்குமுள்ள தொடர்பும் உறுதிப்படுகிறது. திரு. சுந்தரேச வாண்டையார் தம்முடைய பழுவேட்டரையர் என்னும் கட்டுரையில் பல குழப்பமான தகவல்களைத் தருகிறார். அவற்றுள் இரண்டு பழுவேடரையரின் கேரளத் தொடர்பு பற்றியது. i) "பழுவேட்டரையர் சேரர் குலத்தினர் ஆகார். இவர் சேரர்குலச்சோழர்களுக்குச் சம்பந்திமார். அதாவது மகட்கொடைக்கு உரியவர்". ii) "அன்பில் செப்பேட்டின் வடமொழிப் பகுதி கூறுவது கொண்டு பழுவேட்டரையர் சேரர் குலத்தினர் என்பது பொருந்துவதாகாது".17 அன்பில் செப்பேடுகளையே திரு. சுந்தரேசனார் நம்பத் தயாராக இல்லை. ஒன்றை இங்கு நாம் மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அன்பிலைச் சேர்ந்த அநிருத்த பிரும்மராயர் என்னும் தன் அமைச்சனுக்குத் திருவழுந்தூரைச் சேஎர்ந்த கருணாகர மங்கலம் என்னும் ஊரைச் சுந்தரசோழன் இறையிலியாகக் கொடையளித்ததைச் சுட்டும் உரிமை ஆவணமே அன்பில் செப்பேடுகள்18. இதை வழங்கியவன் சுந்தரசோழன். தான் வழன்கிய ஒரு செப்பேட்டில் தன் தந்தையைப் பற்றியும், அவருடைய பெற்றோஒர்களைப் பற்றியும் தவறான செய்திகள் வர ஒரு மன்னன் இடம்கொடுப்பானா? அன்பில் செப்பேடுகள் பொய்யுரைக்கின்றனவென்றே வைத்துக்கொண்டாலும், உதயேந்திரம் செப்பேடுகளின் நிலை என்ன? இரண்டு செப்பேடுகளும் கூட்டுச்சேர்ந்து பொய் உரைக்க நேர்ந்த அவசியமென்ன? செப்பேடுகளில் காணப்படும் புகழுரைகளும், மரபு வழியின் தொடக்கம் பற்றீய செய்திகளும் வேண்டுமானால் புனைந்துரையெனக் கொள்ளலாம். ஆனால் தன் தந்தையைப் பற்றியும், அவர் பெற்றோர்கள் பற்றியும் கூட ஒரு மன்னன் தவறாகச் செய்தி தருவான் என்று நினைப்பது நியாயமன்று. திரு. சுந்தரேசனார் பழுவேட்டரையர்கள் சேரர் குலத்தினர் ஆகார் என்பதோடு நில்லாமல், இவர்கள் சேரர் குலச்சோழர்களுக்குச் சம்பந்திமார் என்று வேறு எழுதியுள்ளார். இதன் பொருள் விளங்கவேயில்லை. சேரர் குலச்சோழர்கள் என்பவர்கள் யார்? இதற்கான விளக்கங்கள் அவரது கட்டுரையில் காணப்படவில்லை. பழுவேட்டரையர்கள் சேரர்குலத்தினராகார் என்பதற்கு அவர் தரும் காரணங்களும் சற்றும் பொருந்தாதவை. டாக்டர் பாலாம்பாள், அன்பில் செப்பேடுகள் தவிர, 'சோழரின் வேறெந்தக் கல்வெட்டுகளோ அல்லது செப்புப் பட்டயங்களோ கேரள அரசனான் அபழுவேட்டரையன் மகளை முதலாம் பராந்தகன் மணந்தான் என்ற குறிப்பைத் தருவதில்லை. எனவே பழுவேட்டரையர் சேஎர மரபினருள் ஒரு கிளையினர் எனும் கருத்தை ஏற்பதற்கில்லை' என்கிறார் 19." உதயேந்திரம் செப்பேடுகளையும், திருச்சென்னம் பூண்டிக்கல்வெட்டையும் அவர் கருத்தில் கொள்ளவில்லை என்பது இந்த வரியினால் தெளிவாகிறது. இவ்விரு ஆவணங்களையும் அவர் அன்பில் செப்பேடுகளுடன் இணைத்துப் பார்த்திருந்தாரானால் பழுவேட்டரையர்கள் கேரளர்கள் அல்லர் என்ற தம் கருத்தை மாற்ற்க்கொண்டிருக்கக் கூடும். இவர் அன்பில் செப்பேடுகளையே முறையாகப் பார்க்கவில்லை என்படு, 'மழநாட்டிலுள்ள பழுவூரில் வாழ்ந்து கொண்டிருந்த கேரள மன்னனாகிய பழுவேட்டரையர் மகளை முதலாம் பராந்தகன் மணந்துகொண்டார் என்று அன்பில் செப்பேடுகள் கூறுகின்றன.'20 என்ற வரியிலிருந்து புலனாகின்றது. அன்பில் செப்பேடு மழநாடு, பழுவூர் இவற்றையெல்லாம் குறிப்பிடவே இல்லை. இவை திரு. பண்டாரத்தாரின் இணைப்பு21. பண்டாரட்தாரின் வரிகளை டாக்டர். பாலாம்பாள் அப்படியே தம் நூலில் சேர்த்துக்கொண்டார். கல்வெட்டுத் தொகுதி பதின்மூன்றைப் பதிப்பித்த திரு. ஜி. வி. சீனிவாசராவ் பழுவேட்டரையர் மரபுத் தொடக்கம் பற்றீ ஒரு புது விளக்கம் தருகிறார். பராந்தகனின் இருபத்தொன்பதாம் ஆட்சியாண்டில் இரவி நீலி என்றொரு சேர இளவரசி திருவொற்றியூரிலுள்ள ஆதிபுரீசுவரர் கோயிலுக்கு விளக்கொன்று எரிக்கப் பொற்கொடை தந்த்திருக்க்ன்றாள் 22, இவள் தந்தையாக விசயராகதேவன் என்ற சேர அரசன் இராசாத்தித சோழனுக்கு உதவிய வெள்ளான் குமரன் போல் பராந்தகனுக்கு மிகவும் உதவியதாகவும் அதனால் மகிழ்ந்த பராந்தகன் இம்மன்னனுக்குப் பழுவுரைத் டஹ்ந்து பழுவேட்டரையர் மரபைத் தொடக்கியதாகவும் எழுதுகிறார். "He (Vijayaraghava Deva) must have taken service under the Chola like the Kerala general Vellankumaran under prince Rajaditya and his help to Parantaka might have been suitably recognized by the king of grant of chiefship over a large tract of land."23 ஆதித்தனின் பத்தாம் ஆட்சியாண்டிலேயே பழுவேடட்ரையன் குமரன் கண்டன் அறிமுகமாகிறார். இருபத்திரண்டாம் ஆட்சியாண்டில் குமரன் மறவனும் பராந்தகனின் பன்னிரண்டாம் ஆட்சியாண்டில் கண்டன் அமுதனும் வெளிச்சத்திற்கு வருகின்றனர். இந்நிலையில், ஆதித்தனின் பத்தாம் ஆட்சியாண்டிலேயே பழுவூர் மரபு வரலாற்று வரிகளில் இடம்பெற்றாகிவிட்ட பிறகும், தன்னுடைய இருபத்தொன்பதாம் ஆட்சியாண்டில், பழுவூர் மரபுக்குப் பராந்தகன் விதை போட்டதாகத் திரு. ராவ் எழுதுவது பிழையாகும். இதே இரவி நீலியையும், வெள்ளான் குமரன் படைத்தலைமையையும், சேர மன்னன் ஸ்தானு ரவி, ஆதித்தன் நட்புறவையும் இணைத்துப் பார்த்த பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் முதலாம் ஆதித்தன் காலத்திலிருந்தே சோழ கேரளத் தொடர்புகள் வலிமை பெற்று விளங்கியதை அழகாய் உணர்ந்து அருமையாய் விளக்கியுள்ளார்.24
சோழ, கேரளத் தொடர்புகள்
சோழ, கெரளத் தொடர்புகளைப் பற்றீய முதல் செய்தியைத் தருவது தில்லைதானத்திலுள்ள இராசகேசரியின் கல்வெட்டு.
1 ஸ்வஸ்திஸ்ரீ தொண்டைநாடு பரவின சோழன் பல் 2 யானைக் கோக்கண்டனாயின ராசகேசரி பன்மனா 3 லுஞ் சேரமான் கோத்தாணு இரவியாலும் தவிசுஞ்சா 4 மரையும் சிவிகையும் திமிலையும் கோயிலும் போனக 5 மும் காளமும் களிற்று நிரையுஞ் செம்பியன் தமிழவேளெ 6 ன்னும் குலப்பெயரும் பெற்ற விக்கியண்ணன்..."25
இக்கெல்வெட்டினால் கேரள அரசன் ஸ்தாணுரவியும் முதலாம் ஆதித்தனும் நல்ல நட்புறவுடன் இருந்தது தெளிவாகிறது. உதயேந்திரம் செப்பேடுகள் கேரள அரசகுமாரியைப் பராந்தகன் மணந்துகொண்ட தகவலைத் தருகின்றன. இது பராந்தகனின் பதினைந்தாம் ஆட்சியாண்டிற்கு முன்பே நடந்தது. பராந்தகனின் இருபத்தொன்பதாம் ஆட்சியாண்டில் திருமுனைப்பாடி நாட்டில் இராசாதித்தன் படைப்பிரிவொன்றிற்குத் தலைமையேற்றுக் கேரளத்தைச் சேர்ந்த வெள்ளான் குமரன் தங்கியிருந்தான் 26. இவனே பெண்ணையாற்றின் கரையில் மௌலி கிராமத்தில் சிவன் கோயிலொன்றையும் எடுப்பித்துள்ளான். இது பராந்தகனின் முப்பத்தாறாம் ஆட்சியாண்டில் நடந்துள்ளது. 27 பராந்தகனின் இருபத்தொன்பதாம் ஆட்சியாண்டில் விசயராகவதேவன் என்னும் சேர மன்னனின் மகள் இரவி நீலி, திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயிலில் விளக்கெரிக்கப் பொன் தந்திருக்கிறாள். 1 ....... மதிரை கொண்ட கொ 2 ப்பரகேசரி பன்மற்கு யாண்டு இருபத்தொன்பதாவ 3 து சேரமானார் விஜயராகவதேவர் மகள் இரவிநீ 4 லி திருவொற்றியூர் மகாதேவர்க்கொரு நந்தா விளக்கு" 27 இந்த நான்கு செய்திகளும் ஆதித்தன், பராந்தகன் காலத்தில் சோழ கேரளத் தொடர்புகள் மிகமிக இனிய நிலையில் இருந்தமைக்குப் போதுமான சான்றுகளாகும். ஆதித்தனுக்கு முன்பே கேரள அரசமரபின் கிளைவழியினர் அல்லது ஒரு பிரிவினர் தமிழகம் வந்திருக்கவேண்டும். பரசுராமர் தலமென்று போற்றப்படும் பழுவூரில் இவர்கள் தங்கியிருக்கலாம். பழுவூர் மலையாளர் ஆதிக்கத்தில் இருந்ததைச் சம்பந்தரே உறுதிப்படுத்துகிறார். பழுவூர்ப் பதிகத்தில் மலையாள அந்தணர்கள் பழுவூர்க்கோயிலில் வழிபாடு நடத்தியதாகச் சொல்லப்படுகிறது. மண்ணின்மிசை ஆடிமலை யாளர்தொழு தேத்திப் பண்ணினொலி கொண்டுபயில் கின்ற பழுவூரே29 அந்தணர்க ளானமலை யாளரவர் ஏத்தும் பந்தமலி கின்றபழு வூரரனை30 இவ்வரிகளையும் பழுவூர்த்தலவரலாற்றில் பரசுராமரை இக்கோயிலுடன் (ஆலந்துறையார்) தொடர்புபடுத்திப் பேசப்படும் கதையையும்31 இணைத்துப் பார்க்கும் போது சம்பந்தர் காலமான கி.பி. ஏழாம் நூற்றாண்டிலேயே பழுவூரில் கேரள வழியினர் தங்கியிருந்த உண்மை உறுதிப்படுகீறது. முதலாம் ஆதித்தனுக்கு முற்பட்ட காலத்துக் கல்வெட்டுகள் எதிலும் பழுவேட்டரையர்களின் பெயர்கள் காணப்படவில்லை என்பதொன்றே சோழராட்சிக்கு முன் இவர்கள் 'சிற்றரசர்' என்ற நிலையை அடையவில்லை என்பதை மெய்ப்பிக்கப் போதுமான சான்றாகும். விசயாலயன் முத்டஹ்ரையரை வென்று தஞ்சையைக் கொண்டதும், பின் நடந்த திருப்புறம்பியப் போரும் பழுவூரார் எழுச்சிக்குக் காரணங்களாக இருக்கலாம். சோழர்களின் போர்களுக்கு இப்பழுவூர்க் கேரளர்கள் பெருமளவில் உதவிய நிலையில் விசயாலயனின் காலத்திலோ அல்லது ஆதித்தன் ஆட்சியின் தொடக்கக் காலத்திலோ இவர்களுக்கு சிற்றரச உரிமை தரப்பட்டிருக்கலாம். இவையெல்லாம் ஊகங்கள்தாம் என்றாலும் தர்க்கரீதியாகப் பார்க்கும் போது பொருத்தயாய் அமைகின்றன. பழுவூர் மன்னர்கள் கேரள வழியினர் என்பதும், உதயேந்திரம், என்பில் செப்பேடுகள் குறிபிடுவது போல் பராந்தகன் மணந்தது இவர்தம் பெண்ணான அருள்மொழி நங்கையை என்பதும் உறுதியான நிலையில், இனி பரந்தகனுக்குப் பெண் கொடுத்த பழுவேடட்ரையர் யாரென்பதைப் பார்ப்போம்.
அருள்மொழி நங்கையின் தந்தை யார்?
பழுவேட்டரையர்களின் கல்வெட்டுகள் பெருமளவு பழுவூரிலும், ஒன்றிரண்டு லால்குடியிலும், திருப்பழனத்திலும், திருவையாற்றிலும் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுகளின் துணைகொண்டே இம்மனர்களின் மரபுவழியை நிர்ணயிக்க வேண்டும்.
திருவையாற்றில் அறிமுகமாகும் முதல் பழுவேட்டரையர்-குமரன் கண்டன்
பழுவேட்டரையர்களைப் பற்றீய முதல் செய்தியைத் தருவது திருவையாற்றிலுள்ள பஞ்சநதீசுவரர் கோயில் கல்வெட்டுதான். இராசகேசரிவர்மனின் பத்தாம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டிருக்கும் இக்கல்வெட்டால் பழுவேட்டரையர் குமரன் கண்டன் அறிமுகமாகிறார். நீலன் நாராயணன் என்பார் இக்கோயிலுக்குக் கொடையாகத் தந்த நிலத்தின் எல்லைகளைக் கூறுமிடத்தில் பழுவேட்டரையர் குமரன் கண்டனின் நிலம் கிழக்கெல்லையாகவும், வடக்கெல்லையாகவும் குறிப்பிடப்படுகிறது32. பஞ்சநதீசுவரர் கோயிலில் இராசகேசரிவர்மனின் உயரிய ஆட்சியாண்டுக் கல்வெட்டுகள் பல உள்ளன. முதலாம் ஆதிட்த்ஹனுடையதென உறுதி செய்யப்பட்டுள்ள இக்கல்வெட்டுகளும், குமரன் கண்டனைக் குறிக்கும் இப்பத்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும் எழுத்தமைதியில் ஒத்திருப்பதால் இக்கல்வெட்டு குறிக்கும் இராசகேசரிவர்மனும் முதலாம் ஆதித்தனே என்பதில் ஐயமில்லை. இதன்படி முதலாம் ஆதித்தனின் பத்தாம் ஆட்சியாண்டில்தான் பழுவேட்டரையர்கள் வரலாற்று வெளிச்சத்திற்கே வருகின்றனர். பழுவூர் அவனி கந்தர்ப்ப ஈசுவரகிரகத்துத் தென்வாயில் ஸ்ரீகோயிலின் தென்புறச்சுவரிலுள்ள இராசகேசரியின் பதின்மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும் குமரன் கண்டனைக் குறிப்பிடுகின்றது. இக்கல்வெட்டுக்குரிய இராசகேசரிவர்மன் முதலாம் ஆதித்தனாவான். இவ்வுண்மையை இதே இடத்திலுள்ள இராசகேசரிவர்மனான ஆதித்தனின் இருபத்திரண்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுகள் இரண்டும் உறுதி செய்கின்றன. 1 ஸ்வஸ்தி ஸ்ரீ கொவிராசகேசரிவம்மற்கு யாண்டு பன்னிரெண்டாவது 2 குன்றக்கூற்றத்து அவனிகந்தர்வ ஈசுவரகிரகத்து மகாதேவர்க்கு இன்னாட்டு பழுவூர் 3 பகைவிடை ஈசுவரத்து தேவனார்மகன் நக்கன் பூதி பழுவேட்டரையன் குமரன் கண் 4 டன் பிரசாதத்தினால் அருளிச்செய்ய இத்தளி தேவதானம் ஊரகன்குடி...33 இக்கெல்வெட்டிலுள்ள 'பழுவேட்டரையன் குமரன் கண்டன் பிரசாதத்தினால்' என்ற குறிப்பு ஆதித்தனின் பதின்மூன்றாம் ஆட்சியாண்டில் பழுவேட்டரையர்கள் சிற்றரசர் தகுதியை அடைந்து விட்டமையைச் சுட்டுகிறது. பகைவிடை ஈசுவரத்துத் தேவனார் மகன் நக்கன்பூதி என்பார் பழுவேடட்ரையன் குமரன் கண்டனின் பிரசாதத்தினால் செய்த கொடையை இக்கல்வெட்டு சுட்டுகிறது. சில அறிஞர்கள் இக்கல்வெட்டைத் தவறாகப் புரிந்துகொண்டு பல குழப்பங்களுக்கு ஆளாகியுள்ளனர். டாக்டர் பாலாம்பாள் நக்கன் பூபதியையும், பழுவேடட்ரையன் குமரன் கண்டனையும் ஒருவராக்கி, நக்கன் பூதி பழுவேட்டரையன் குமரன் கண்டன் என்று கொண்டுள்ளார்.34 1924ஆம் ஆண்டுக் கல்வெட்டறிக்கையிலும் இதே பிழை நேர்ந்துள்ளது35 கீழையூர் அவனிகந்தர்ப்ப ஈசுவர கிரகத்தின் முன் வைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறையின் அறிவிப்புப் பலகையிலும் இதே தவறு காணப்படுகிறது. இத்தவறினால், பழுவேட்டரையர்களை வேளிர்கள் என்று வேறு இந்த அறிவிப்பு குறிப்பிடுகிறது.36 திரு. சுந்தரேசனாரும் நக்கன் பூதியைப் பழுவேட்டரையன் குமரன் கண்டனோடு இணைத்து ஒருவராக்கி மகிழ்கிறார்.37 திரு. எஸ். ஆர். பாலசுப்பிரமணீயமும் அதே வழியில் நக்கன் பூதியையும், குமரன் கண்டனையும் ஒருவராகவே கருதியுள்ளார். இப்படிக் கருதியதாலேயே பழுவேட்டரையர்களைப் 'புதி' என்ற சொல்லின் அடிப்படையில் 'வேளிர்கள்' என்றும் குறிப்பிடுகிறார்.38 கல்வெட்டுத் தொகுதி பதின்மூன்றைப் பதிப்பித்த திரு. ஜி. வி. சீனிவாசராவ் கல்வெட்டறிக்கையின் பிழையை உணர்ந்து தம் முன்னுரையில் அதற்கு விளக்கம் தந்துள்ளார்: By a slight misinterpretation in the text of htis record the chief has been taken to teh son of pagaividai-Isvarathu-Devanar, whereas the latter's son was correctly Nakkan pudi, who under orders of Kumaran kandan brought some fallow lands at Uragankudi under cultivation.39 நிலைமைகள் இப்படியிருக்க, டாக்டர் பாலாம்பாள் நக்கன் பூதியையும், பழுவேட்டரையன் குமரன் கண்டனையும் ஒன்றாக் ஐணைத்து ஒருவராகப் பார்த்த காரணத்தால், பகைவிடை ஈசுவரத்துத் தேவனாரின் மகன் குமரன் கண்டன் எனக் கொண்டு (பகைவிடை ஈசுவரத்துத் தேவனார் மகன் நக்கன் பூதி பழுவேடரையன் குமரன் கண்டன்), பகைவிடை ஈசுவரத்துத் தேவனாரே பழுவேட்டரையர் மரபின் முதலோன் என்று எழுதுகிறார். அத்துடன் நில்லாமல் ஆதித்தனின் தொடக்கக் காலத்தில் அவனுடைய சிற்றரசனாக இருந்து இப்பகைவிடை ஈசுவரத்துத் தேவனார், உடையார் பாளையம் உட்பட்ட பழுவூர் நிலப்பரப்பை ஆண்டுவந்ததாகவும், இவர் விசயாலயனின் சிற்றரசனாகவும் இருந்திருக்கலாமென்றும் குறிப்பிடுகிறார்40. இவர் அரசராகக் குறிக்கும் பகைவிடை ஈசுவரத்துத் தேவனார் யாரென்று பார்ப்போம்.
இந்தப் பதினாறு கல்வெட்டுகளையும் காலவரிசைப்படி பொருளறிந்து நன்கு நிறுவப்பட்ட சோழமன்னர்களின் ஆட்சியாண்டுகளுடன் ஒப்பிட்டு ஆராய்ந்தோமானால், கி.பி 881 முதல் கி.பி 1020 வரை பழுவூரை ஆண்ட மன்னர்களைக் கீழ்க்கண்டவாறு வரிசைப் படுத்தலாம்.
1. குமரன் கண்டன்
2. குமரன் மறவன்
3. கண்டன் அமுதன்
4. மறவன் கண்டன்
5. கண்டன் சத்ருபயங்கரன்
6. கண்டன் சுந்தரசோழன்
7. கண்டன் மறவன்
இதுதான் கல்வெட்டுகளிலிருந்து வரலாற்றுச் செய்திகளை வடித்தெடுக்கும் முறை. கல்வெட்டுகளில் இருப்பவை பெரும்பாலும் நிவந்தங்கள் கொடையளித்த செய்திகள்தான். ஆனால் அவற்றினுள் ஒளிந்திருக்கும் செய்திகளை Reading through the lines என்று ஆராய்ச்சிக் கண்கொண்டு நோக்கினால், வரலாறு வெளிப்படும். ஒரு மின்விளக்கைக் கொடையளித்துவிட்டு, அதிலிருந்து வரும் வெளிச்சத்தை மறைக்குமளவுக்குத் தன் பெயரை எழுதிவைத்து விடும் இக்காலத்து வழக்கத்துடன் கல்வெட்டுகளை ஒப்பிட்டுப் புறந்தள்ளாமல், அவை எப்பேற்பட்ட அட்சயப் பாத்திரங்கள் என்று உணரத் தலைப்படுவோமே!
கண்டன் சத்ருபயங்கரன், கண்டன் சுந்தரசோழன், கண்டன் மறவன் ஆகிய மூவரும் உடன் பிறந்தவர்கள் என்ற செய்தி உடையார்குடி அனந்தீசுவரர் கோயில் கல்வெட்டின் மூலம் தெளிவாகின்றது. எனவே, இவர்கள் மூவரின் பெயர்களிலும் உள்ள கண்டன் என்பது மறவன் கண்டனின் பெயர் என்று புரிந்து கொள்ளலாம். இதே அடிப்படையில் பார்த்தால், இந்த 7 பேர்களுக்குள் உள்ள உறவு முறையைக் கீழ்க்கண்டவாறு பகுக்கலாம்.
"முதலாம் இராஜேந்திரரின் எட்டாம் ஆட்சியாண்டில் பழுவூரை ஆண்டுகொண்டிருந்த பழுவேட்டரையர் யாரென்பது உறுதியாகத் தெரியவில்லை. வேறு சான்றுகள் ஏதுமற்ற நிலையில் இவரைக் கண்டன் மறவனாகவே கொள்ளலாம். உத்தமச்சோழரின் பதினைந்தாம் ஆட்சியாண்டில் பழுவூர் மன்னராக ஆட்சிப் பொறுப்பினை ஏற்று, முதலாம் இராஜராஜர் காலத்தில் மன்னுபெரும் பழுவூரில் திருத்தோற்றமுடையார் கோயிலைச் செங்கல் திருப்பணியாய் எடுப்பித்து, முதலாம் இராஜேந்திரரின் எட்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுடன் வரலாற்று நீரோட்டத்திலிருந்து மறையும் கண்டன் மறவனுடன் பழுவேட்டரையர் மரபும் ஒரு முடிவுக்கு வருகிறது. முதலாம் ஆதித்தரின் பத்தாம் ஆட்சியாண்டில் பழுவூர் அரசராகப் பழுவேட்டரையர் குமரன் கண்டனோடு தொடங்கும் பழுவேட்டரையர் ஆட்சி முதலாம் இராஜேந்திரரின் எட்டாம் ஆட்சியாண்டில் பழுவேட்டரையர் கண்டன் மறவனை இறுதி மன்னராய்க் காட்டி முற்றுப் பெறுவதாகக் கருதலாம்." என்று பழுவூர் - அரசர்கள், கோயில்கள், சமுதாயம் என்ற தனது நூலில் முனைவர் இரா.கலைக்கோவன் உரைக்கிறார்.
மறவன் கண்டன் சுந்தரசோழரின் ஆட்சிக்காலத்தில் பழுவூரை ஆண்டவர். இவரது மூன்று பிள்ளைகளில் கண்டன் மறவன் சுந்தரசோழருக்குப் பிறகு சுமார் 40 ஆண்டுகள் பழுவூரை ஆண்டார். எனவே, அப்போது கண்டன் மறவன் சிறுபிள்ளையாயிருக்க, மூத்த சகோதரர்கள் கண்டன் சத்ருபயங்கரனும் கண்டன் சுந்தரசோழனுமே சுந்தரசோழர் காலத்தில் வாழ்ந்தவர்கள். இப்போது புரிகிறதா? கல்கி 'பெரிய பழுவேட்டரையரையும்', 'சின்னப் பழுவேட்டரையரையும்' எங்கிருந்து எடுத்தார் என்று?
இத்தனை சிறப்புகள் வாய்ந்த பழுவூரைக் காண வாசகர்கள் விரும்பினால், திருச்சிராப்பள்ளியிலிருந்து ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் 55வது கிலோமீட்டரில் தஞ்சாவூர்/திருவையாறு செல்லும் சாலை பிரியுமிடத்தில் அமைந்துள்ள பகைவிடையீசுவரம், அவனிகந்தர்ப்ப ஈசுவரம், திருவாலந்துறையார் கோயில் மற்றும் மறவனீசுவரம் ஆகிய கோயில்களுக்குச் சென்று வீரவரலாற்றைத் தரிசிக்கலாம். பழுவூர்க் கோயில்களின் சிற்பக்கலை, கட்டடக்கலை மற்றும் கல்வெட்டுகளை முழுமையாகப் புரிந்துகொள்ள விரும்பும் வாசகர்களுக்கு ஒரு பரிந்துரை. செல்லும்போது முடிந்தால் முனைவர் கலைக்கோவன் எழுதிய பழுவூர் - அரசர்கள், கோயில்கள், சமுதாயம் என்ற நூலை எடுத்துச் செல்லவும். கோயில்களின் மீதான உங்களின் பார்வை முற்றிலுமாக மாறி, சரித்திர ஆர்வ வியாதி முற்றுவதைக் கண்கூடாகக் காணலாம்.
தொடரும்... அடிக்குறிப்புகள்: 25. S.I.I. Vol, III, Ins. No. 89 26. A.R.E. 739 of 1905 27. A.R.E. 735 of 1905 28. S.I.I. Vol, III, Ins. No. 103 29. சம்பந்தர், இரண்டாம் திருமுறை, தருமபுர ஆதீஇன வெளியீடு, 1954, பக். 151 30. சம்பந்தர், இரண்டாம் திருமுறை, தருமபுர ஆதீஇன வெளியீடு, 1954, பக். 153 31. வி.சா. குருசாமி தேசிகர், திருப்பழுவூர்-திருமழபாடி பதிகங்கள், தருமபுர ஆதீன வெளியீடு, 1977, பக் 10-11 32. S.I.I. Vol V, Ins. No. 523 33. S.I.I. Vol V, Ins. No. 235 34. வெ. பாலாம்பாள், பழுவேட்டரையர்கள், பக். 14 35. A.R.E. 357 of 1924 36. அவனிகந்தர்ப்ப ஈசுவர கிரகத்துக்கு முன்னால் நிறுவப்பட்டுள்ல அறிவிப்புப் பலகை காண்க; Indian Express, Daily, 10-9-1988. 37. வை. சுந்தரேச வாண்டையார், பழுவேட்ட்ரையர், கட்டுரை, கல்வெட்டுக் கருந்த்தரங்கு, பக். 124 38. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், சோழர் கலைப்பாணி, சென்னை, பாரி நிலையம், 1966, பக். 56 39. S.I.I. Vol XIII, Introduction, P. viii 40. V. Balambal, Feudatories of South India, Allahabad, Chugh Publications, 1978, PP. 179-180.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.