காரைக்குடி அருகே வ.சூரக்குடி என்ற ஊர் உள்ளது இது இன்று சிற்றூராக இருப்பினும் 13-ஆம் நூற்றாண்டு முதல் 16-ஆம் நூற்றாண்டு வரை காணாடு,சூரக்குடி,இராஜேந்திரமங்கலம்கோட்டையூர், மேலூர், கண்ணனூர், தெற்காட்டூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சோழர் மற்றும் பாண்டியருக்கு கீழ் சிற்றரசாக விளங்கியுள்ளது.இதை ஆண்டவர்.இதை மறவர் இனத்தை சார்ந்த பொன்னரசு கண்ட விஜயாலயத்தேவர் என்பவர் ஆண்டு வந்துள்ளார்.
[திரு எஸ்.இராமச்சந்திர ஐயர்(நாடார் சரித்திர ஆய்வாளர்) அவர்கள் கவனத்திற்கு தேவகோட்டை அருகிலுள்ள சூரைக்குடியில் கள்ளர் குலத்தைச் சேர்ந்த விசயாலத் தேவன் என்பவருக்கு வன்னியர் என்ற சாதிப்பட்டம் உண்டு. இவ்விசயாலத் தேவ வம்சத்தவர்கள் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் வலங்கை வாழவந்த விசயாலயத் தேவர் என்றே பட்டம் புனைந்தனர்.சாத்தூர்ப் பகுதியிலுள்ள ஏழாயிரம் பண்ணை வன்னியர் (கள்ளர்) வரலாறு பாளையப்பட்டு வம்சாவளியில் பதிவாகியுள்ளது.இதைப்போல் அழகாபுரி ஜமீன் பள்ளி(வன்னியர்) இனத்தை சார்ந்தது என்று பாளையப்பட்டு வம்சாவளியில் பதிவாகியுள்ளது. வலங்கை மாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும். எஸ். இராமச்சந்திரன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை - 600113
திரு இராமச்சந்திரன் அவர்களுக்கு தாங்கள் மறவர் இணத்தவர் சிற்றரசுகளான சூரைக்குடி,ஏழாயிரம் பன்னை முதலிய இனத்தவர்களை வன்னியர் கள்ளர் இனத்தவர்கள் என்றும்.அழகாபுரி ஜமீனை பள்ளி(வன்னியர்) என தங்கள் வலங்கைமாலை கட்டுரையில் கூறியிருந்தீர்கள்.மறவர் இனத்தவரை கள்ளர் என்று கூறுவதில் தவறில்லை ஏனெனில் கள்ளர்கள் சகோதர இனமே.மாற்றாரை பற்றி வரலாறு எழுதினால் முதலில் வரலாறை புரிந்து எழுத வேண்டும்.ஒரு வரலாறை பொய்யாக கூட கதை விடலாம் திரித்து கூறக்குடாது என்பதில் கவனம் தேவை. உதாரனமாக "புழுக்கை சானார்" எண்ற பிரிவினரை "புலி கை சான்றோர் வீரர்கள்" என்று எழுதிகிறீர்கள் அது கூட நியாம் தான் தங்கள் இனத்தை எப்படி வேண்டுமானாலும் புகழலாம்.ஆனால் மாற்றாரை பற்றி கூறும் போதும் தாங்கள் இப்படி செய்கிறீர்கள்.உதாரனமாக கள்ளர் சான்றார்,பள்ளி சான்றார்,பார்ப்பான சான்றார் என்று கூறுகிறீர்கள்.கள்ளர் இனத்தவருக்கு 2000-க்கு மேல் பட்டங்கள் இருப்பதாக தெரிகிறது.அவர்கள் ஏன் உங்களை தேடி வந்து இந்த சான்றார் பட்டத்தை சூடவேண்டும் என தெரியவில்லை.இதைப்போல் பிராமனர்கள் தான் ஜாதிய அடுக்கில் உயர்ந்தவர்கள் என கூறுகின்றார்கள்.அவர்கள் ஏன் இந்த சான்றார்பட்டத்தை சூட வேண்டும் மனநோயா?.பாண்டிய வன்னான்,பாண்டிய அம்பட்டர் போன்ற ஜாதியர்கள் உண்டு.பாண்டிய என்ற அடைமொழியை வைத்து அவர்கள் பாண்டியர்கள் என கூற முடியுமா.அதைப்போல் தான் கள்ளசான்றார்,பள்ளி சான்றார்,பார்ப்பானசான்றார் என்பது கள்ளர்,பள்ளி,பிராமனரிடம் பனிபுரிந்த சான்றார்கள் நன்றியின் பேரில் வைத்துகொண்ட முன்பட்டமே தவிர இவர்கள் கள்ளர்,பள்ளி,பிராமன இனத்தவர்கள் கிடையாது.அவர்கள் சான்றார் இனத்தவரே.இதைப்போலத்தான் பாண்டிய சான்றான்,மலையமான் சான்றான்,நாடாள்வ சான்றான்,தளவாய் சான்றான் என்பது அவர்களிடம் உதவிக்கு பனியமர்ந்த சான்றார்களே தவிர அவர்கள் வேறு இனத்தவர்கள் கிடையாது சுத்தமான சான்றார் இனத்தவர்களே.சான்றார் என்ற பெருமைக்குரிய?பட்டம் உங்கள் இனத்தை தவிர யாருக்கும் இருக்காது.அதை வேறு இனத்தவருக்கு சூட்டி மகிழ வேண்டாம்.
எனவே மாற்று இனத்தவரை பற்றிய அரைவேக்காட்டு தனமான் ஆராய்ச்சி ஆபத்தை தரும் என எச்சரிக்கிறேன்."சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே (புறம்:312)" என புறநானூறு கூறுகிறது.ஆனால் "சானார்களை சான்றோர் ஆக்குவது எனது கடனே" எனக்கூறும் உங்களை உங்கள் கடமையை செவ்வனே செய்யுமாறு கூறிவிட்டு நமது வரலாறை கான்போம்.]
சூரைக்குடி விஜயாலயத்தேவரின் வம்சத்தை சேர்ந்த
https://www.facebook.com/groups/532904683520538/
https://www.facebook.com/groups/532904683520538/
https://www.youtube.com/watch?v=g5nqnU6-Iqk
கொண்டையன் கோட்டை தலைவன் வம்சம் திருநெல்வேலியில் காணும் தலைவனார் வம்சத்தோடு தொடர்புடையவர்கள் வாலும்,வேலும் கொண்டு
வீரம் மனதில் கொண்டு
சிரம் நிமிர்ந்து நின்று
எதிர்த்து நிற்கும் எப்படையும் அழித்து நிற்கும் இப்படையும் கொண்ட எம்குடி
வீரம் மனதில் கொண்டு
சிரம் நிமிர்ந்து நின்று
எதிர்த்து நிற்கும் எப்படையும் அழித்து நிற்கும் இப்படையும் கொண்ட எம்குடி
அவ்வுலகமானாலும் இக்கலியுகம் ஆனால் நம் வீரம் மாறாது… நம் சிறப்பு அழிந்து போகாது…
எத்தொழிநுட்பம் வந்தாலும் அதிலும் நம் பெயர் பொறிக்கபட வேண்டும் என்பதற்காக நம் நாட்டிற்காக நான் உருவாக்கி ஒரு சிறு காட்சி தொகுப்பு
நன்றி :
நேம நாட்டு மறவர் பேரவை
குன்றக்குடி
காரைக்குடி
நேம நாட்டு மறவர் பேரவை
குன்றக்குடி
காரைக்குடி
நீண்ட நெடிய ஆய்விக்கு பின்னே நாம் கூறுவது இது தான். வன்னியர் என்பது பட்டமோ சாதியோ அல்லது அரசரால் வழங்கும் விருதோ கிடையாது. இது ஒரு காடு சூழ்ந்த பகுதியை குறிக்கும் காரண பெயராகும். எடுத்துகாட்டாக கொங்கு என எடுத்து கொள்வோம். கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து சாதியினருக்கும் கொங்கு என பெயர் இருக்கும். சோழிய என எடுத்து கொள்வோம் அது சோழநாட்டில் வாழும் சகல் பிரிவினருக்கும் ஏன் இசுலாமியருக்கும் மறாட்டியருக்கும் உள்ள பகுதி பேராகும். கொங்கு,சோழிய,பாண்டிய,நாஞ்சில்,கேரள,தொண்டை என்பது போல தான் வன்னி என்னும் பகுதியை குறிக்கும் பெயர். அதே போலத்தான் வன்னியர் என்பது தொண்டை மண்டலத்தில் உள்ள அனைத்து சாதியினரையும் குறிக்கும்.
தொண்டை மண்டலத்தை கச்சி வன நாடு (அ) வன்னிய நாடு என கூறுவர். இதில் குடியிருக்கும் இறைவனை கச்சி வனராசர் இறைவியை கச்சி வனத்தில் தவமிருக்கும் காமாச்சி என கூறுவர். காமாட்சி கோவில் தொண்டை மண்டல உட்பட எல்லா இடங்களிலும் காடுகளில் தான் அமைந்திருக்கும். காமாட்சியை வனக்காமாட்சி,வனப்பேச்சி அல்லது வன்னிய பேச்சி என கூறுவர். எனவே தொண்டை மண்டலத்தை பொருத்தவரை வன்னியராஜன் மற்றும் வன்னிய பேச்சி என்பது தொண்டை மண்டலத்தை ஆளும் ஏகாம்பரேஸ்வரர்-காமாட்சி அம்மனையே குறிக்கும்.
எனவே தொண்டை மண்டலம் மட்டுமல்ல காடுகள் எங்கல்லாம் உள்ளதோ அந்த பகுதியில் வாழும் அனைவருக்கும் உள்ள காரண பெயரே வன்னியர் (அ) காடுவாழ்னர்.
அரைவேக்காட்டு தற்க்குறித்தனமான வரலாற்று ஆய்வாளர்களின் சுயநல ஆய்வுகள் கூறுவது போல் ஏழாயிரம் பன்னை,அழகாபுரி,வ.சூரக்குடி(காரைக்குடி அருகில்) ஜமீண்கள் வேறு இணத்தவர்கள் ஜமீனல்ல. அவர்கள் தூய மறவர் பரம்பரை சார்ந்த தொல்குடி மன்னர்கள்.இதற்க்கு பல ஆதாரங்கள் உள்ளன.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjnzbwkwVEc_zM-QsUguujnfcnuWPuZJcMrgVyWeOQBTF6yV67D0Nt7vrVPrhBaGsnGHrAtjpdBE19gJRzMDBcViwmPS8I1WS2imm9xR-asKRn5s8Iq2ZHOu4M44rjUuUDSC13VmNFSAhU/s640/evid1.png)
உதாரனமாக எழாயிரம்பன்னை,அழகாபுரி ஜமீனகள் வன்னியர் பட்டம் உள்ள மறவர் இனம் என நிக்கோலஸ் டிரிக்க்சும்,கால்டுவெல்லும் திருநெல்வேலி மானுவலில் கூறுகிறார்கள்.
இதைப்போல் வ.சூரக்குடி என்ற சிற்றரசு வன்னியர் பட்டம் கொண்ட மறவர் இனத்தவரான விஜயாலத்தேவர் என்பர் ஆண்டது.இவர்கள் மறவர் இனத்தின் உட்பிரிவான வன்னிய மறவர் என்ற இனத்தை சார்ந்தவர்கள். இது 12-16ஆம் நூற்றாண்டு காலத்தில் புதுக்கோட்டைக்கு தெற்கு மற்றும் தென்மேற்கு பிரதேசமான் கானாடு,ஒளிநாடு,இராஜேந்திரமங்கலம்,ஒளிநாடுக்கு தலைநகராக இருந்துள்ளது.இது கானாடு,கோனாடு மறவர் அரையர்களையும் வெள்ளாளர்களையும் குடிமக்களாய் கொண்டது.இவரை பற்றி 40-க்கும் மேற்ப்பட்ட கல்வெட்டுகள் திருமயம்,விராச்சிலை பகுதியில் உள்ளதாக 40-கல்வெட்டையும் ஆராய்ந்த சுப்புராயுலு மற்றும் "புதுக்கோட்டை வரலாறு எழுதிய வீ.மானிக்கம். தம் நூலில் கூறுகிறார்.
கி.பி(1219)
I.P.S.(505) குளத்தூர் தாலுகா அரியூர் ஈஸ்வரன் கோவில் வாசற்படிக்கு தென்புறம்
ஸ்வஸ்தி ஸ்ரீ சோனாடு கொண்ட சுந்தரபாண்டியத் தேவர்க்கு யாண்டு.......திருவகந்தீஸ்வரமுடைய நாயனர் திருக்கோவில் மகாதேவரையும் நாச்சியாரையும் எழுந்தருவித்தால் மாங்குடி மறவன் அவையன் சாத்தன் (அதளையூர் நாட்டுப்) பேரரையன்............................
இது இன்றைய சிவகங்கை மாவட்டம் அருகில் உள்ளது. இவர் இன்னும் இவ்வூரிலே வாழ்கிறார் ஊரின் பெரியதனக்காரராகவும் (அம்பலம்) ஆக உள்ளார். இவரது முன்னோர்களில் ஒருவரான பொன்னன் விஜயாலத்தேவர் மதுரை மீனாட்சி அம்மன் மேல் பக்தி கொண்டவர் தினமும் மதுரைக்கு குதிரையில் சென்று வழிபடுவானாம். தன் வயதான காலத்தில் சென்று வழிபட இயலாததால் வ.சூரக்குடியிலும்,முறையூரிலும் மீனாட்சி அம்மன் கோயில் கட்டி வழிபட்டான். இன்றும் அந்த கோயிலும் முதல் மரியாதை பெறும் குடும்பமாக வாழ்கின்றனர்.இந்த கோயில் சிவகங்கை சமஸ்தானத்திற்கு உட்பட்ட கோயிலாகும்.
இவரை பற்றி கல்வெட்டு செய்திகளில் சில,
திருமையம் கல்வெட்டுகள்
சூரைக்குடி அரசு விசயாலத்தேவர்:
" மாங்குடி மறவன் அவையன் சாத்தன் அதலையூர் நாட்டு பெரைய்நு(பேரரையன்" என குறித்துள்ளான் அதலையூர் நாடாள்வான்(நாட்டுபேரரயன்).
மேலும் அறந்தாங்கி தொண்டைமான்,அன்பில் அஞ்சுகுடி அரையர்,சூரைக்குடி அரையர் இம்மூவருமே தொண்டைமான் வம்சமே.
சொரி வன்னிய சூரியன்: விஜயாலயன் தன்னை கடம்பன் எட்டி(வியாபாரி) எனவும் சாத்தன் எனவும் குறிப்பிட்டு கொள்கிறான். மேலும் சொரி வன்னிய சூரியன் என பெயர் கொண்டுள்ளான். பதினெட்டு வன்னியரை புறம் கண்டான் எனவும் பட்டம் உள்ளது.
"சொரி வன்னிய சூரியன்" என்ற இதே பட்டம் "சொரி முத்து வன்னியன்" என்ற பட்டம் சேதுபதிகளுக்கும் உள்ளது. இதற்க்கு இராகவ அய்யங்கார் "சொரி முத்து வன்னியர்" என்றால் கடலில் தோன்றும் சூரியன் என திரையன் என அர்த்தம்.
இப்போது புதிதாக விஜயாலையனை கோறும் கூட்டத்தினர் வன்னியர் என்ற வார்த்தை வைத்து கோறுகின்றனர். அவர்களுக்கு ஒரே ஒரு ஆதாரம் மட்டும் கேட்கிறோம். "சொரி வன்னியன்" என்ற பெயர் அவர்களிடம் எந்த பட்டயத்திலாவது அல்லது கல்வெட்டுகளில் இருந்தால் நாங்கள் விஜயாலத்தேவரை கோரவே இல்லை. நெடு நாளைக்கு முன்னரே இந்த கருத்தை எதிர்பார்த்தோம் அப்போது வைத்தூர் பல்லவராயரை கோரி விஜயாலத்தேவனின் மீது பழியை போட்டு பல்லவராயரை கோரிய கூட்டம் இன்று சூரைக்குடி அரையனை கோறுவது வினோதம்.
சொரிமுத்து வன்னியர்,18 வன்னியர் கண்டன் என்னும் பெயர் சேதுபதிகள்,விஜயாலயத் தேவர்,அறந்தாங்கி தொண்டைமான் மூவருக்குமே இந்த பட்டம் உள்ளது. அறந்தாங்கி தொண்டைமானும் தங்களை செயதுங்கராயன் என குறிப்பிடுகிறார் ஆக சேதுபதி விஜ்யாலயத் தேவர் தொண்டைமான் மூவரும் மறவரே.
விஷ்ணுகோயில் வளாகத்திலிருந்து முப்பது கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் பதினான்கு கல்வெட்டுகள் புதுக்கோட்டை மாநிலக் கல்வெட்டுகள் தொகுதியில் இடம்பெற்றுள்ளன. அதில் இடம்பெறாத ஒரு கல்வெட்டு தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 22ன் இரண்டாம் பிரிவில் பதிவாகியுள்ளது. நான்கு கல்வெட்டுகள் திருமதி நா. வள்ளியால் பதிப்பிக்கப்பட்டுள்ளன. பதினொரு கல்வெட்டுகள் கள ஆய்வின்போது இக்கட்டுரையாசிரியர்களால் கண்டறியப்பட்டவை. சுப்புராயுலு 36 திருமையம் கல்வெட்டுகளை கண்டுபிடித்துள்ளார்.
இதே கோயில் வளாகத்திலிருந்து புதிதாகக் கண்டறியப்பட்ட வீரவிருப்பண்ண உடையாரின் கி. பி. 1399ம் ஆண்டுக் கல்வெட்டு28 சூரைக்குடித் திருமேனி அழகியாரான நாயினார் விசையாலயதேவர், இவ்வளாகத்தில் பெருமாளைப் புதிதாக எழுந்தருளச் செய்தமை பற்றிக் குறிப்பிடுவதால், அக்கால கட்டத்தில் நின்றருளியதேவரின் திருமுன் படிக்கட்டின் புறச்சுவராக இருந்த பெருந்தேவிக் கல்வெட்டு அகற்றப்பட்டிருக்கலாம் என்று கருத இடமுண்டு.
அதே சுவரிலிருந்து கண்டறியப்பட்ட புதிய கல்வெட்டு, சொக்கநாராயண நல்லூர் எனும் பெயரிலமைந்த ஊரைச் சொக்க நாராயணரான விசையாலயதேவர் மெய்யத்து இறைவனுக்குத் தேவதானத் திருவிடையாட்டமாகத் தந்ததாகக் கூறுகிறது. பெருமளவிற்குச் சிதைந்தும் தொடர்பற்றும் காணப்படும் இக்கல்வெட்டின் காலத்தைப் பதினைந்தாம் நூற்றாண்டாகக் கொள்ளலாம்.30
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEib7VzeDN_hb8l37w8AxeN3-9RN5bsg6Ec7L7LfP5DPPknakpj0u6eyWlkeTR0eYLpC0-OQUoiecY6B1V6XeDJzPLk0mGFD3HSx1M1BrTCLVJ8h7TJHyiyL_e4Kr-e_DgvIyrhsut8U7ao/s640/vijayalaya4.jpg)
மண்டபத்தின் மேற்குச் சுவரில் வீரவிருப்பண்ண உடையார் ஆட்சிக்காலத்தே விபவ ஆண்டில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு,34 கானநாட்டு நாட்டார், கேரளசிங்க வளநாட்டு அதலையூர் நாட்டுத் தேனாற்றுப்போக்குச் சூரைக்குடியைச் சேர்ந்த திருமேனியழகியாரான விசையாலைய தேவரிடம் ஐந்தாயிரம் பணம் பெற்றுக்கொண்டு நிலம் விற்ற தகவலைத் தருகிறது. 'மாக்கல விலைப் பிரமாணம்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆவணத்தின் கையெழுத்தாளர்களின் ஊர்களாகக் கோட்டையூர், மேலூர், கண்ணனூர், தெற்காட்டூர் ஆகிய ஊர்களின் பெயர்கள் கிடைக்கின்றன. கானநாட்டுப் படைப்பற்றுகளுள் ஒன்றாகச் செங்குன்றநாடு விளங்கியதையும் நாட்டு மரியாதி எனும் வரியினத்தையும் இவ்ஆவணம் வழி அறியமுடிகிறது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj-dyoqJ8YO1AiCvwrL_jKFW484Oaxy_3iYw3brNuDGLNaoxh4NIs-ytgoZS2R0bA7N7KPDQ949XYjetEL1a3egP0v7r3dvCqoeCv_2PedNlAFi5F8QItXeSnNJaKd7bov0AByVkh9lhiU/s1600/maravarayars.bmp)
அதே சுவரில் கி. பி. 1452ல் வெட்டப்பட்டுள்ள அரசர் பெயரற்ற கல்வெட்டினால்35 கேரளசிங்க வளநாட்டு அதலையூர் நாட்டுச் சூரைக்குடிச் செண்பகப் பொன்னாயினாரான பராக்கிரம பாண்டிய விசையாலையதேவர், மெய்யத்து மலையாளரான விஷ்ணு பெருமானுக்குச் செண்பகப் பொன்னாயன் சந்தி அமைக்க வாய்ப்பாகப் புலிவலத்திருந்த தம் வயலான செண்பகப் பொன்னாயநல்லூரில், ஏற்கனவே தரப்பட்டிருந்த தேவதானத் திருவிடையாட்ட இறையிலி போக எஞ்சியிருந்த நிலப்பகுதியைக் கோயிலுக்குக் கொடையாகத் தந்த தகவலை அறியமுடிகிறது.
அதே சுவரில் கி. பி. 1669 தைத்திங்களில் வெட்டப்பட்டுள்ளஅரசர் பெயரற்ற மற்றொரு கல்வெட்டு,36 திருமலைச் சேதுபதி காத்த தளவாய் ரகுநாத நரேந்திரனுக்குப் புண்ணியமாக, அழகிய மெய்யருக்கு உதயகாலத்தில், 'ரகுநாத அவசரம்' என்னும் பெயரில் கட்டளையமைத்து, அதை நிறைவேற்ற வாய்ப்பாக ஊர் ஒன்றளித்த வானரவீரன் மதுரை சோலையப்பப் பிள்ளையான கங்கையராயர் பிள்ளையின் கொடையை எடுத்துரைக்கிறது.
கானநாட்டுக் கோட்டையூர்ப் புரவில் அநாதி தரிசாய்க் காடாக இருந்த புதுவயல், வலையன் வயல் உள்ளிட்ட நிலப்பகுதிகளை விலைக்குப் பெற்று அவற்றை வளமாக்கி, அந்தப் பகுதிக்கு ரகுநாதபுரமென்று பெயரிட்டுத் திருவாழிக்கல் நடுவித்துக் கோயிலுக்களித்த பிள்ளை, அறக்கட்டளையைக் காப்பாற்றும் பொறுப்பைக் கோட்டையூர் ஊரவரிடம் அளித்துள்ளார். சோதிடம், வைத்தியம் செய்வார்களுக்கு இந்நில வருவாயில் பங்கிருந்ததெனக் கருதுமாறு கல்வெட்டமைப்பிருந்த போதும், சிதைந்துள்ள வரிகள் தெளிவு காண இயலாது தடுக்கின்றன. குடிவாரம், மேல்வாரம், கடமை முதலிய வரியினங்களும் கல்வெட்டில் சுட்டப்பட்டுள்ளன.
அதே சுவரில் அதே ஆண்டுத் தைத்திங்களில் வெட்டப்பட்டுள்ள மற்றொரு கல்வெட்டு,37 பல சுவையான தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறது. விஷ்ணுகோயில் ஸ்ரீபண்டாரரும் நிருவாகமும் இணைந்து வானரவீரன் மதுரை சோலையப்பப் பிள்ளையான கங்கையராயருக்கு இக்கோயில் திருவிடையாட்டமான மலுக்கன் வயக்கலை, திருக்கோகர்ணம் மின்னல் என்று அழைக்கப்பட்ட பணம் முந்நூறுக்கு விற்றனர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjskrl_4_sJTWEkUsPC7X1c1GCY5YzTpM3KbwwKaMoTd6KIP-jvdT8_y0g3tSHosJf8zukbNkz5DjjrLm8hnbuNzM3hH7Nps2Xm6LSLY6K1rPNFv3BkNc_FQ1qyLUX6cC3l_nKGKoZDH8Y/s1600/virachillai7.bmp)
இரகுநாத நரேந்திரனுக்குப் புண்ணியமாக அழகியமெய்யருக்கு உதயகாலத்தில் ரகுநாத அவசரக் கட்டளையைச் சோலையப்பப்பிள்ளை தொடர்ந்து நடத்திவர அநுமதிக்கும் இந்த ஆவணம், அவருடைய நிருவாகத்திற்குக் கட்டளையாகக் கோயிலில் மூன்று படிச் சோறு பெற்றுக்கொள்ள அநுமதித் திருப்பதுடன், மலையப்பெருமாள் வீட்டுக்குத் தெற்கிலும் வேங்கைக் குளக்கரைத் திருவீதிக்கு வடக்காகவும் உள்ள மனையைக் கொள்ளவும் வழியமைத்துள்ளது.
சூரைக்குடி அரையன் விஜயாலயத்தேவன் விஜயாலயன் என்னும் பெயர் சோழர்களை நினைவுபடுத்துவதால் சோழர் எனவே கருதுவோம். விஜயத்தேவன் என்பதும் விஜயராயர் என்பது வணிக குழுவை தலைமை தாங்குபவன் என பொருள் படும். மேலும் அவையன் சாத்தன் நாட்டான் என்பது சாத்து வணிகர் தலைவன் என்பதேயாகும். மேலும் விஜாயலத்தேவனை பற்றி மறைக்கப்பட்ட கல்வெட்டும் அவன் வம்சமும் இது தான்.
I.P.S.(452) திருமய்யம்,நெய்வாசல் அகஸ்தீஸ்வரமுடையார் கோவில் வீரபாண்டியத் தேவரின் கல்வெட்டு:
"தேனாற்று போக்கு ஆதளையூர் நாட்டு சூரைக்குடி அரையன் பெரியனான தொண்டைமானார்"
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivxIMjcVuiUKkFhzcqvpsXxUI3A3iNF5KIYr_uUiYkm1pw0PDYeFi4zGjjb35Nxge_UoJ8ut3sgiMSJGG2EmF6tEuuEN_ZcnE9Be2_Wo15oScF9vzExZvcLKVC2yDQnlysmb-bm2lzwVs/s640/Copy+of+first.jpg)
நன்றி:
அறந்தாங்கி தொண்டைமான் செப்பேடுகள்: புலவர் செ.இராசு
புதுக்கோட்டை வரலாறு: உயர்.திரு.ஐயா.வீ.மாணிக்கம் அவர்கள்
இதில் சூரைக்குடி அரையனான பெரியனான தொண்டைமானாருக்கு பாண்டியன் காவல் பொருப்புகளும் சில வரிகளையும் நிமித்தகளையும் வழங்குகிறார்.
அறந்தாங்கி தொண்டைமானும்,அன்பில் தொண்டைமானும் சூரைக்குடி தொண்டைமானும் மறவர்களே.
தொண்டைமானை புகழும் பெரும்பாணாற்றுபடை
"மறவர் மறவ தொண்டையோர் மருக".
திரையனாகிய சோழரின் இளவலான தொண்டை வேந்தன் மறவனே.
கல்வெட்டு சகாப்தம் 1313க்கு (கி. பி. 1391) உரியது.39 பிரமாதி ஆண்டுக் கணக்குப்படி மெய்யம் கல்வெட்டு கி. பி. 1399ல் பொறிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தலாம். இக்கல்வெட்டு, சூரைக்குடித் திருமேனி அழகியாரான நாயினார் விசையாலயதேவரின் அறச்செயல்களைப் படம்பிடிக்கிறது. மெய்யம் சத்தியமூர்த்திப் பெருமாள் திருக்கோயிலில் கண் நிறைந்த பெருமாளைப் புதிதாக எழுந்தருளுவித்து மகிழ்ந்த விசையாலயதேவர், கோயில் சுற்றில் சர்வமான்ய அகரமாக, 'ஓ ங்காரநாதத்து வேதமங்கலம்' என்னும் அகரத்தை அமைத்தார்.
பன்னிருவரைக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட இவ்வகரத்தின் உறுப்பினர்களுக்கு சர்வமான்ய தன்மதானமாகத் தர நிலம் தேவைப்பட்டது. ஒருவருக்கு ஏழு மா நிலமெனப் பன்னிருவருக்கு எண்பத்து நாலு மா நிலந்தர விரும்பிய விசையாலய தேவர், அதற்கான நிலத்தைத் தமக்கு விலைக்குத் தர வேண்டும் என்று கானநாடான விருதராஜ பயங்கர வளநாட்டு நாட்டவரையும் அந்நாட்டுப் படைப்பற்றான செங்குன்றூர் நாட்டவரையும் கேட்க, கானநாட்டு நாலூர் நிலப்பகுதி இறையிலிக் காராண்மையாக விற்கப்பட்டது
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEHvUgIVNGUPBxIaXIFM7dxc2VsiBcoFwDvmrF5Lb8hdCjwekweTF10aQQtmyGFgohHHa-672BCwbfrm16HkOLRQv_Tg4QwTSQtdqr4XYxCGixHaR75drgVEDf2I4yZebe4jCLylYO7NI/s1600/virachillai11.bmp)
கல்வெட்டு சகாப்தம் 1313க்கு (கி. பி. 1391) உரியது.39 பிரமாதி ஆண்டுக் கணக்குப்படி மெய்யம் கல்வெட்டு கி. பி. 1399ல் பொறிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தலாம். இக்கல்வெட்டு, சூரைக்குடித் திருமேனி அழகியாரான நாயினார் விசையாலயதேவரின் அறச்செயல்களைப் படம்பிடிக்கிறது. மெய்யம் சத்தியமூர்த்திப் பெருமாள் திருக்கோயிலில் கண் நிறைந்த பெருமாளைப் புதிதாக எழுந்தருளுவித்து மகிழ்ந்த விசையாலயதேவர், கோயில் சுற்றில் சர்வமான்ய அகரமாக, 'ஓ ங்காரநாதத்து வேதமங்கலம்' என்னும் அகரத்தை அமைத்தார்.
பன்னிருவரைக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட இவ்வகரத்தின் உறுப்பினர்களுக்கு சர்வமான்ய தன்மதானமாகத் தர நிலம் தேவைப்பட்டது. ஒருவருக்கு ஏழு மா நிலமெனப் பன்னிருவருக்கு எண்பத்து நாலு மா நிலந்தர விரும்பிய விசையாலய தேவர், அதற்கான நிலத்தைத் தமக்கு விலைக்குத் தர வேண்டும் என்று கானநாடான விருதராஜ பயங்கர வளநாட்டு நாட்டவரையும் அந்நாட்டுப் படைப்பற்றான செங்குன்றூர் நாட்டவரையும் கேட்க, கானநாட்டு நாலூர் நிலப்பகுதி இறையிலிக் காராண்மையாக விற்கப்பட்டது
இவ்ஆவணத்தில் கோட்டையூர் உலகளந்த சோழக் கானநாட்டு வேளார், மேலூர் முனையதரையர், கண்ணனூர் காலிங்கராயர், தெற்காட்டூர் வாணாதராயர், முனியந்தை உலகேந்திய வேளான், ஆதனூர் உகனையூர் சேதியராயர், யானூர் உடையார், மருங்கூர் சுந்தரபாண்டியக் கானநாட்டு வேளார், மெய்யம் சுந்தரத்தோள் நம்பி, இளஞ்சாற்குச் சேதியராயர் ஆகிய நாட்டார்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
இவர்களுடன் ஊர்க் கணக்குகளாக, விரையாச்சிலை ஊர்க் கணக்கு வைரக்கொழுந்து, செங்குன்றூர் நாட்டுக்குச் சமைந்த ஊர்க் கணக்குக் கானநாட்டுக் கணக்கு அழகியநாயன், மற்றோர் ஊர்க் கணக்கு அடைக்கலங்காத்தான் ஆகிய மூவர் கையெழுத்திட்டுள்ளனர். திருவரங்கம் கோயிலைச் சுற்றிப் பல அகரங்கள் உருவானமையைக் கல்வெட்டுகளால் அறிகிறோம். அது போல் மெய்யத்து வளாகத்தில் கி. பி. 1399ல் ஓங்காரநாதத்து வேத மங்கலம் என்ற அகரம் சூரைக்குடித் திருமேனி அழகியாரான நாயினார் விசையாலயதேவரால் பன்னிருவரைக் கொண்டு உருவாக்கப்பட்டமை வரலாற்றிற்குப் புதிய வரவு.
புதுக்கோட்டை மாவட்டக் கல்வெட்டுகளைக் கண்ணுற்றபோது, வீரவிருப்பண்ண உடையாரின் கல்வெட்டுகள் இந்தப் பகுதியில் பரவலாகக் காணப்படுவதை அறியமுடிந்தது. திருவிளாங்குடிக் கல்வெட்டில் அரியண உடையாரின் மகனாகக் குறிக்கப்படும் வீரவிருப்பண்ணரின் கி. பி. 1417ம் ஆண்டுக் கல்வெட்டு, மேலப்பனையூர் ஞானபுரீசுவரர் கோயிலில் உள்ளது.40 சூரைக்குடி விசையாலயதேவர் வீரவிருப்பண்ணரின் ஆட்சிக்குட்பட்ட சிற்றரசர் போலும்! மெய்யத்திலேயே அவரது வழித்தோன்றலான சொக்கநாராயண விசையாலயரின் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன.41 அவற்றுள் ஒன்று புதிதாகக் கண்டறியப்பட்டதாகும்
சுந்தரபாண்டியன் மண்டபத் தூணொன்றிலிருந்து படியெடுக்கப்பட்ட புதிய கல்வெட்டு, பாடல் கல்வெட்டாக அமைந்துள்ளது. இறைவனை, 'மெய்யம் அமர்ந்த பெருமாள்' என்றும் 'மணஞ்சொல் செண்பக மெய்யர்' என்றும் கொண்டாடும் இக்கல்வெட்டின் முழுப் பொருளை அறியக்கூடவில்லை. மண்டபத்தின் கிழக்குப் படிக்கட்டுகளுக்கான தென்புறப் பிடிச்சுவரில் உள்ள கல்வெட்டு, 'இ ந்தப் படியும் சுருளும் வீரபாண்டியதரையர் தன்மம்' என்கிறது. எழுத்தமைதி கொண்டு இக்கல்வெட்டுகளைப் பதினான்காம் நூற்றாண்டினவாகக் கொள்ளலாம்.42
கோயில் வளாகத்தின் கிழக்குச் சுற்றிலுள்ள சேனைமுதலியார் திருமுன்னில் இடம்பெற்றுள்ள கல்வெட்டுகளுள் ஒன்று, கேரளசிங்க வளநாட்டுச் சூரைக்குடிச் சொக்க நாராயணரான விசையாலயதேவரும் திருநெல்வேலிப் பெருமாளான சுந்தரபாண்டிய விசையாலயதேவரும் கானநாட்டுத் தேவதான பிரமதேயமான திருமெய்யத்தில் எழுந்தருளியிருக்கும் மெய்யத்து மலையாளரின் திருவிழாவிற்கு முதலாகப் 'பச்சை வினியோகம்' எனும் வரியினமாய் வந்த பணம் முந்நூற்று முப்பத்துமூன்றையும் வழங்கிய தகவலைத் தருகிறது.43
இவ்வாறு விஜயாலய்த்தேவரை பற்றி பல அரிய கல்வெட்டுகளும் அரசாண்ட வரலாறும் இங்கு நிறைய இருக்கின்றன.
அதே சுவரில் கி. பி. 1461ல் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டொன்றால்,44 அதலையூர் நாட்டு நியமப்பற்றுச் சூரைக்குடி அவையாண்டாரான சுந்தரபாண்டிய விசையாலய தேவர், மெய்யத்து மலையாளருக்கு, தம்முடைய பெயரால், தம்முடைய பிறந்த நாளில், 'சுந்தரபாண்டிய விசையாலய தேவன் சந்தி' என ஒன்றமைத்து, அது போழ்து தளிகை படைக்கவும் திருமாலை, திருப்பரிவட்டம் முதலாயின சாத்தவும் வாய்ப்பாக, கானநாட்டுப் படைப்பற்றான இளஞ்சார்ப் புரவில், சுந்தரபாண்டிய நல்லூரைத் திருவிடையாட்டமாக்கிக் கோயிலுக்கு சர்வமானியமாக அளித்த செய்தியைப் பெறமுடிகிறது.
திருமுன்னின் முகமண்டப உட்சுவரில் காணப்படும் பராக்கிரம பாண்டியரின் ஏழாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு அவருடைய மெய்க்கீர்த்தியைத் தருவதுடன், இக்கோயிலில் அவர் பெயரால் உருவாக்கப்பட்ட பராக்கிரம பாண்டியன் சந்தியை வெளிச்சப்படுத்துகிறது. 'திருமெய்ய மலையாளன்' என்றழைக்கப்பட்ட நின்றருளிய தேவருக்கான சிறப்புப் பூசையாக அமைக்கப்பட்ட இச்சந்தியை நிறைவேற்ற வாய்ப்பாக மஞ்சக்குடிப் பற்றிலிருந்த சாத்தனூர், கோயிலுக்குக் கொடையாகத் தரப்பட்டது
நன்றி.புதுக்கோட்டை மாவட்ட வரலாறு:வீ.மானிக்கம்.............புதுக்கோட்டை கல்வெட்டுகள்..சுப்புராயலு குறிப்புகள் 27. கே. வி. செளந்தரராஜன், மு. கு. நூல், ப. 103; பெரும்பிடுகுப் பெருந்தேவி, கோயிலைப் புதுப்பித்துக் கொடையளித்த செய்திகளைக் குறிப்பிடும் கல்வெட்டு, என்று எழுதும் ஜெ. ராஜாமுகமது, அக்கல்வெட்டின் அடிப்படையில், 'குகை இக்காலத்திற்கு முன்பே இருந்திருக்கவேண்டும்' என்றும் எழுதியுள்ளார். மு. கு. நூல், ப. 240. சு. இராசவேல், அ. கி. சேஷாத்திரி இவர்கள் இக்கல்வெட்டு குடைவரைக் கோயிலிலேயே இருப்பதாகவும் பெருந்தேவியே குடைவரையைக் குடைந்து அமைத்ததாகவும் எழுதியுள்ளனர். மு. கு. நூல், ப. 186. 28. New Indian Eகpress, 30. 5. 2006. 29. IPS: 439; என். சேதுராமன், பாண்டியர் வரலாறு, ப. 154. 30. The Hindu, 17. 8. 2003. 31. IPS: 735. 32. IPS: 459; என். சேதுராமன், மு. கு. நூல், ப. 194. 33. IPS: 460. 34. IPS: 685. 35. IPS: 792. 36. IPS: 872. 37. IPS: 873. 38. IPS: 967. 39. IPS: 687. 40. IPS: 692. 41. IPS: 764. 42. தினமணி, 5. 8. 2003. 43. IPS: 764. 44. IPS: 800. 45. IPS: 893. 46. IPS: 923. 47. தினமணி, 5. 8. 2003. 48. The Hindu, 17. 8. 2003. 49. தினமணி, 5. 8. 2003. 50. மேற்படி. 51. இது திருமங்கையாழ்வாரின் பாடல் பெற்ற தலம் என்று குறிப்பிடும் ஜெ. ராஜாமுகமது, அடைப்புக்குறிகளுக்குள் பெரிய திருமொழி என்று வேறு எழுதியுள்ளார். மு. கு. நூல், ப. 240. திருமங்கையாழ்வார் தம் பெரிய திருமடலிலும் ஓரிடத்தில் இத்தலத்தைக் குறிப்பிடுவது இங்குக் கருதத்தக்கது. சு. இராசவேல், அ. கி. சேஷாத்திரி, ஆகியோர், 'இ ச்சிற்பக் காட்சி இக்குடைவரையைப் பெரிதும் அழகு செய்கின்றது. இதனைத் திருமங்கை ஆழ்வார் பாடியுள்ளார். இவ்விறைவனைத் 'திருமேய மலையாளன் எனக் குறிக்கிறார்' என்றெல்லாம் எழுதியுள்ளனர். மு. கு. நூல். ப. 240. 52. திருமங்கையாழ்வார் 1206, 1524, 1660, 1760, 1852, 2016, 2674 (126) நாலாயிர திவ்யப் பிரபந்தம், ப. 799.
(சூரைக்குடி
சத்தியபுத்திரர் திரையன் வம்சம் குறித்த ஆய்வு)
தொண்டைமான் என்ற சொல்லே அரசர் அதிகாரம் செய்பவர் என பொருள் ஆகும் . "தோட்டி முதல் தொண்டைமான் வரை" என்ற பழமொழி வருவதை காணலாம். தமிழகத்தில் ஆர் விகுதி கூறும் மரபு தொண்டைமான் மரபேயாகும் "தொண்டைமானார்" என அம்மரபுக்கு தமிழ் மக்கள் கொடுத்த மரியாதைக்கும்
இதுவே சாண்று.
தொண்டைமான் பூர்வீகம்:
திருப்பதி பகுதியில் "தொண்டைமான் கோட்டை" என்ற இடம் உண்டு அவர்கள் பூர்வீகம் என்று கருதப்படுகின்றது. "வினைநவில் யானை விறற்போர் தொண்டைர்" என யானையை அட்க்குவதில் ஆற்றல் பெற்ற பழங்குடியினர் ஆதலில் இவர்கள் பல பேரரசர்கள் பலரிடம் பணிபுரிந்து இத்தொண்டை மான்கள் இறுதியில் புதுக்கோட்டை பகுதியில் அறந்தாங்கி,அன்பில்,சூரைக்குடி போன்ற இடங்களிலும் குடியேறி வாழ்ந்தவர்கள்.
பெரும்பாணாற்று பாட்டுடை தலைவனாக தொண்டைமான் இளந்திரையன் விளங்குகிறான்.
"திரைதரு மரபின் உரவோன்"(பெரும்:31) என்னும் தொடருக்கு உரை எழுதும் நச்சினார்கினியர் தொண்டைமான் மரபின் தோற்ற செய்தியை விளக்குகிறார்.
நாகபட்டினத்து செம்பியன் ஆன சோழன் பிலாத்துவாரத்தால் நாகநாடு சென்று நாகர்குலத்தை சார்ந்த பீலிவளை என்பவர் நாகர் மகள் ஆவாள். அவன் பெற்ற மைந்தனே திரையால் கடத்தப்பட்டுக் கரை சேர்ந்த முதல் தொண்டைமான். அவன் தொண்டைக் கொடியால் உந்தப்பட்டு வந்தமையின் திரையன் என்றும் வழங்கப்பெற்றான். அவன் மரபினரே தம் தாயகம் தாங்கிப் பெரும்பாணாற்றுப் படையில் புகழ்பெற்ற தொண்டைமான் இளந்திரையன் ஆவன்' என விளக்கியுள்ளார்.
கரிகாலன் நாகர் மகளை மணந்து பெற்ற இளந்திரையன் தொண்டை மண்டலம் ஆண்டான் என்பது ஆராய்ச்சிக்கு உரியன. மேலும், தொண்டையர், இன்ன இடத்திலுருந்து தாம் வந்ததாக ஒரு பட்டயத்திலும் கூறிற்றில்லர் என்பது கவனிக்கத்தக்கது.
தொண்டை மண்டலம் குறும்பர்களின் பூர்வீகமான பூமியாகும். அதனை கரிகால சோழன் வென்றான் எனவும். கரிகாலன் தொண்டை மண்டலத்தில் உள்ள ஒளியரையும் அருவாளரையும் வென்று அடக்கினான் எனவும் பட்டினப்பாலை கூறுகின்றது.தொண்டை மண்டலம் சோழர் ஆட்சிக்கு வந்தது. முதல் சோழர் மரபினர் ஒருவர் தொண்டை மண்டலத்தை ஆண்ட செய்தி சங்கநூல்களில் காணக்கிடைக்கின்றது. 'திரையன்' அருவாவடதலை நாட்டை ஆண்டபோது, 'இளந்திரையன்' அருவா நாட்டை ஆண்டனன் என்பதும் அறியக்கிடக்கிறது. தொண்டைமான் இளந்திரையன் என்பவன் காஞ்சியை ஆண்ட தமிழ் அரசனாகப் பெரும்பாணாற்றுப்படையில் சிறப்பிக்கப்படுகிறான்.
பல யூகக்கதைகளை முடிவுக்கு கொண்டு வரும்முன் இன்னும் குழம்பி பிதற்றுகின்ற ஒரு இன ஆய்வுக்கும் முடிவு கட்டுவோம்.
நாகர் என்போர் யார்?
இதற்க்கு பல சார்பாளர்களும் சார்பற்றவர்களும் தங்களுக்கு ஏற்ற பதிலை காலம் காலமாக உமிழ்ந்து சென்றுவிட்டனர். இனியாவது உணர்வோம். நாகர் யாரென.
மனித இனங்கள் மூன்று தான் 1)நீக்ராய்டுகள்(Negroid) 2)மங்கோலாய்டுகள்(Mongoloid)3)காகேசியன்கள்(Caucasian). ஆதாவது முதல் மனித இனமான நீக்ராய்டுகள் அதிலிருந்து இடம்பெயர்ந்த சீன,மங்கோலிய முக அமைப்பை கொண்ட மங்கோலாய்டு அவர்களிலிருந்து பிரிந்த காகேசியன் அல்லது வெள்ளை இனத்தவர். இந்த மூன்று மட்டும் தான் உலகில் உள்ள அனைத்து இனங்களும் இதில் அடக்கம்.
இதில் முதல் மனிதன் அல்லது நீக்ராய்டுகள்(நாகர்) என்பவர்களே நாகர்கள் அல்லது நகுஷா அல்ல நெகோஸ்டா என்பன. இந்தியாவின் அனைத்து குடிகளும் இவர்கள் தான். ஆப்ரிக்காவில் இருந்து வந்தவர்கள் அல்ல இந்தியாவும் அப்ரிக்காவும் ஒட்டி இருந்த பகுதி கடற்கோளாள் பிரிந்தது. அதனாலே ஆப்ரிக்காவில் உள்ள சிங்கம் பாலைவனம் காடு எல்லாம் இந்தியாவில் கானலாம். இந்தியாவில் பல இனக்கலப்பு நிகழ்ந்தாழும் பலருக்கும் இருப்பது ஆப்ரிக்க மண்டை ஒடுகள் தான். எனவே இந்தியாவில் உள்ள அனைத்து அரசுகளும் கலாச்சாரங்களும் நாகரிங்களும் நாகரிலிருந்து தான் தோன்றியவை. எல்லா ஜாதியும் உட்பட செய்யும் தொழிலாலே தங்களை பிரித்து கொள்கின்றனர் நாகரே இந்தியாவை விட்டு இந்தோனேசியா,கம்போடியா,ஜப்பான் தெனமெரிக்கா முதலிய இடத்தில் சென்றனர் பின்பு மத்திய ஆசியாவிலிருந்து கிளம்பி ஐரோப்பாவிற்கு சென்று தட்பவெட்பம் காரணமாக காகேசியன்களாக மாறினர்.
பீலிவளை மட்டும் நாகர் அல்ல சோழனும் சூரியன் குலத்தையும் புலி முத்திரையும் பயன்படுத்தும் நாகன் தான்.
இப்படி சோழன் நாகநாடு சென்றான் என கூறுகின்றது. இது இலங்கையாக இருக்கலாம் அல்லது கம்போடியாவாகவும் இருக்கலாம் ஏனேனில் சோழன் திரையன் என்கின்ற கடலோடும் வம்சத்தவன் ஆதலால் தான் பிற்காலத்தில் கடாரம்,ஸ்ரீ விஜயம் என தெற்காசியாவிலே ஏன் உலகத்திலே பலம் வாய்ந்த கப்பல் படை நடத்தி வெற்றி பெற்றவன் ஆதலால் சோழனை திரையன் என்ற கடலோடி என கூறுவது சாலப்பொருத்தமாகும்.
இப்படி திரையனாகிய சோழனின் மகனே இளந்திரையன்(Junior Lineage) அல்லது இளையன் இளவரையன் கச்சி என்னும் காஞ்சிபுரத்தை நிறுவி மல்லை என்னும் பட்டினத்தை ஸ்தாபித்து அரசாண்டவேன் தொண்டைமான்.
பல்லவரும் தொண்டைமான்களும் ஒரே மரபினரா?:
பல்லவர்கள் பற்றி 5 ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்னே எந்த கல்வெட்டும் கிடையாது. பல ஆராய்ச்சியாளர்களிடம் பல்லவர் யாரென கேட்டால் இன்னும் புரியாத புதிர் தான். சிலர் பாரசீகர்கள் என்கின்றர்கள். சிலர் கம்போடியர்கள் என்கின்றனர். சிலர் ஆந்திரவின் சாதாவாகனர் என்கின்றனர் எனவும் கன்னடர்கள் என்றும் இல்லை தொண்டை மண்டலத்தை ஆண்ட குறும்பர்கள் எனவும் கூறுகின்றனர். மொத்தத்தில் இவர்கள் தமிழரே அல்ல எனவும் முழுக்க பிராகிருத மொழி பயன்படுத்தியுள்ளனர். சிலைகளின் அமைப்புகளின் நீண்ட தலைகளும் தொப்பிகளும் கானப்படுகின்றனர். இன்னும் இவர்கள் வாணத்தில் இருந்து குதித்தனரா என கூட பலருக்கும் புரியவில்லை.
பல்லவர்கள் பற்றிய சிறு வதந்தி:
இந்தியாவின் மீது படையெடுத்த அலெக்சாண்டரின் முக்கிய நோக்கம் பாரசீக பேரரசன் டாரியசை வீழ்த்துவது தான் கிரேக்கர்களுக்கும்-பாரசீகர்களுக்குமான போராட்டங்கள் காலம் கடந்தது. அலெக்சாண்டருக்கு பின் அவனது தளபதி செலுக்கஸ் நிகோடரை வீழ்த்திய சந்திர குப்தன் மௌரியன் பாரசீகர்களை பாதுகாத்தான் எனவும். இருந்தும் கிரேக்க-பாரசீக சண்டை ஓயவில்லை எனவும். செலுக்கசின் பரம்பரை துரத்த பாரசீகரின் ஒரு பிரிவினர் தெற்கே சென்றனர் எனவும். அவர்களை பின் தொடர்ந்த செலுக்கசின் கிரேக்கர்கள் ஸ்தாபித்தது தான் இன்றை மகாராஸ்டிரத்தில் உருவான சளுக்க(செலுக்கஸ்) சாம்ராஜ்யம் என்றும் செலுக்கஸின் தாக்குதலில் சென்ற பாரசீகர்கள் உருவாக்கியது தான் பல்லவ(தாரியஸ்) சாம்ராஜ்ஜயம் எனவும் ஒரு கருத்து உண்டு. சளுக்கருக்கும் பல்லவருக்குமான சண்டை பழைய கிரேக்க-பாரசீக போராட்டம் எனவும். சளுக்கர்கள் வைனவர்கள் எனவும் அதனாலே வராகம்(பன்றி=யூனிக்காரன்) கொடி பயன்படுத்துகின்றனர் எனவும்.
பல்லவர்கள் சைவர்கள் எனவும் அதனாலே நந்தி(பசு=ஆக்சன்) பயன்படுத்தினர் எனவும் ஒரு நிலைப்படு உண்டு. இவர்கள் தங்களை காப்பாற்றிய மௌரிய பேரரசுக்கு கட்டுபட்டு இருந்தனர் எனவும் கூறுகின்றனர்.
இறுதியில் தங்களை துரத்திய சளுக்கர்களின் நகரத்தை கொளுத்தி "வாதாபி கொண்டான்" என பட்டத்தை பல்லவர் சூடினர் எனவும் நம்புவோர் உண்டு.
பல்லவரும் தொண்டை மானும் வேறு என்றே தோன்றுகின்றது:
பல்லவரை பற்றி சங்க இலக்கியத்தில் எந்த இடத்திலும் குறிப்பிட படாததால் அவர்கள் ஆண்ட பிரதேசமான தொண்டைமண்டலத்தை சங்க காலத்தில் ஆண்ட தொண்டைமான் மரபினர் என சிலர் பொருத்தி பார்க்கின்றனர். ஆனால் பல்லவர் தன்னை பற்றி எந்த இடத்திலும் திரையன் மரபினன் என்றோ அல்லது சோழரின் வழிவந்தவர் என்றோ நாககன்னிகைக்கு பிறந்தவர் என்றோ சூரிய குலத்தில் தோன்றியவர்கள் என்றோ குறிப்பிடவில்லை. பல்லவர் தம்மை சந்திர குலத்தினர் என கூறுகின்றதாக அதியமான் கல்வெட்டு ஒன்று கூறுகின்றது. பல்லவர் தம்மை "பாரத்துவாச" கோத்திரத்தினர் எனவும் "பிரம்ம சத்திரியர்கள்" என கூறுகின்றனர்.
காஞ்சிபுரமாவட்ட கல்வெட்டுகள் 80% பிராமனர்களை சுட்டுகின்றது இதில் அதிகமாக "பாரத்துவாச" கோத்திர பிராமனர்கள் அதிகமாக வருகின்றனர். மேலும் "பிரம்ம சத்திரியர்கள்" என்பதற்கு ஆயுதம் ஏந்திய பிராமனர்கள் என ஒரு அர்த்தம் உண்டாம்[ரிஷி பரசுராமரை] போல. எனவே இவர்கள் பிராமனரா அல்லது பாரசீக சத்திரய வம்சத்தை சார்ந்தவர்களாக இருக்குமோ என தோன்றுகின்றது. பிற்காலத்தில் மதுரை பகுதியில் கண்ட கல்வெட்டு ஒன்று "பல்லவர் வம்ச வந்த காடுவெட்டிகள்" என காடுவெட்டிகள் என பல்லவர் தம்மை தம்மை குறித்துள்ள்னர்.
ஆனால் 12-ஆம் நூற்றாண்டுக்கு பின் தோன்றிய அறந்தாங்கி தொண்டைமான்கள் தம்மை "பாரத்துவாச கோத்திரத்தினர்" என எந்த இடத்திலும் கூறியது கிடையாது. அறந்தாங்கி தொண்டைமான்கள் தம்மை "கச்சியாண்டவன்" "மல்லைபுரிநாயகன்" என கூறுகின்றனரே பல்லவர் குலத்தை சார்ந்தவன் என கூறியது கிடையாது. மேலும் தம்மை "சூரிய குலத்தில் தோன்றியவன்,புறாவிற்க்கு சதை கொடுத்தவன்,நாககன்னிகை வங்கிசேர்ப்பவன், புலிக்கொடியை மேருவில் பொரித்தவன்,கலிங்கம் வென்ற கருனாகரன் என சோழரோடே" தம்மை இனைத்து கூறிக்கொள்கின்றனர். மேலும் தொண்டைமான்கள் தம்மை காடுவெட்டிகள் என எந்த பட்டயத்தில் கூறியது கிடையாது.
இதெல்லாம் விட பல்லவரின் உயர்ந்த கீர்த்தியான "வாதாபியை வென்ற நரசிங்க போத்தரையன்" என்ற ஒரு அடைமொழியையும் பயன்படுத்தியது கிடையாது.
"கலிங்கம் வென்ற கருனாகரன்" என்றுதான் கூறுகின்றனர்.
இதற்க்கும் எல்லாம் வேறு ஆதாரமான மெக்கன்சி கையெழுத்து பிரதியென்றில்.
'தொண்டைமான் சக்கரவர்த்திக்கும் விசுவாவசுராசனுக்கும் போர் நடந்தது' என்னும் செவிமரபுச் செய்தி ஒன்று கர்னெல் மக்கென்சி எழுதியுள்ள குறிப்புகளில் காணப்படுகிறது. விசுவாவசுரனே தொண்டை மண்டலத்தை வென்ற முதல் பல்லவனோ என்பது விளங்கவில்லை. எனினும், இச்செய்தி பல்லவரது தொண்டை மண்டலப் படையெடுப்பைக் குறிப்பதென்பதில் ஐயமில்லை.
இப்படி தொண்டமண்டல்த்தை கைப்பற்றிய பல்லவன் தன்னை "தொண்டயர் கோன் பல்லவன்" என்றும் சோழரின் எழுச்சிக்கு பின் வீழ்ச்சி அடைந்த பல்லவர் பகுதியான வண்டை நகரை ஆண்டதான் "வண்டை வேந்தன் பல்லவராய தொண்டைமான்" எனவும் கூறிக்கொண்டுள்ள்னர்.
எனவே தொண்டையர் கோன் என பல்லவரும் பல்லவராஜன் என தொண்டைமானும் தம் அடைமொழியாக பயன்படுத்தியுள்ளனர்.
எனவே இருவரும் ஒருவரல்ல பல்லவர் வேறு தொண்டைமான் வேறு எனறே தோன்றுகின்றது.
பின்பு சத்தியபுத்திரர்கள் யார்?
கி.பி.2 ஆன் நூற்றாண்டில் அசோகனின் இரண்டாம் கல்வெட்டு Shabhazgarhi (S), Khalsi (K), Girnar (G), Dhauli (D), Jaugarh (J) ஆகிய ஐந்து இடங்களில் காணப்படுகிறது. அந்தக் கல்வெட்டுகளில் இரண்டாம் வரியில் சோழ, பாண்டிய, சதியபுத்ர, கேதலபுதோ ஆகிய அரசுகளைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. இவற்றில் சில கல்வெட்டுகள் சிதைந்து காணப்படுகின்றன. இந்தக் கல்வெட்டின் ஆங்கில எழுத்துப்பெயர்ப்பு இவ்வாறு அமைகிறது.
Everywhere within Beloved-of-the-Gods, King Piyadasi’s domain, and among the people beyond the borders, the Cholas, the Pandyas, the Satiyaputras, the Keralaputras, as far as Tamraparni and where the Greek King Antiochos rules, and among the kings who are neighbors of Antiochos, …
(Available here : http://www.cs.colostate.edu/~malaiya/ashoka.html)
இவற்றில்Girnar (G) என்ற இடத்தில் உள்ள கல்வெட்டில் இரண்டாம் கல்வெட்டில் இப்பகுதி இடம்பெற்றுள்ளதைப் பிராமி எழுத்துகளில் இங்கு காணலாம். சிவப்பு மையினால் அடிக்கோடிடப்பட்டுள்ள நான்கு சொற்களும் முறையே சேட(chEda), பண்டியா(paNdiyA), ஸதியபுதோ(sathiyaputhO), கேதலபுதோ (kEdhalaputhO) என சில எழுத்துப்பிழைகளுடன் இருப்பதைக் காணலாம்.
இதில் முக்கியமான விஷயம் கேரளபுத்திரன் என்று எங்கும் குறிப்பிடவில்லை. கேதலபுதோ , அதாவது கேதலன் மகன் என்று குறிபிட்டுள்ளது. இது சேரலனின் திரிபே ஆகும்.
இதில் ஸ்திய புதோ என்பது அதியமான் என இன்று நிறுவுகின்றனர். ஆனால் அதியாமானின் ஆட்சி அவ்வளாவு பரந்து இருந்துள்ளதா என கேள்வி குறி? ஆக அதியமானை குறிக்காது.
"ஸ்தியபுதோ அதியமான் நெடுமான் அஞ்சி"
ஸதியபுதோ = அதியபுதோ ஆதாவது ஸ என்பது துனையெழுத்து என்பதும்
சமனம்=அமனம்
சதிய=அதிய என சொல்லாறிய்ச்சியில் ஈடுபடுகின்றனர். இது மாதிரி சொல்லாறாய்ச்சியில் ஈடுபட்டு தான் மள்ளர் என்பது பள்ளர் என வந்து நிற்கின்றது. அப்போது மற்ற வார்தைகள் மலம்=பலம்,மனம்=பனம்,மன்னர்=பன்னர் என மற்ற வார்தைகள் ஏன் மாறாமல் போனது. என்ன சொல்ல.
அதியமானும் மலையமானும் சேரரின் கிளைக்குடியினராயினும் அதியமானும் ஸதியபுதோ என குறிக்க பட்டார். என ஸதியபுதோ என்பது அதியபுதோ அல்ல அதிய சத்தியபுத்திரர் என்னும் வார்த்தையை தான் குறிக்கும்
சத்தியபுத்திரர் = கலியுக மெய்யனான அய்யனார்:
சத்தியபுத்திரர் என அதியமான் மட்டுமில்லை மலையமானும் தொண்டைமானும் அழைக்கபட்டனர். எனவே அசோகர் கல்வெட்டில் கூறியிருப்பது தொண்டைமான் சக்கரவர்த்தியும் மலையமானும் அதியமானும் சேர்த்து தான்.
ஐயனார் வழிபாடு என்பது சாஸ்தா என அழைக்கபட்ட சாத்தன் வழிபாடுதான். சாஸ்தா(சத்தியபுத்திரர் என்ற மெய்யுடை தேவன்). சாத்தன் வழிபாடு சமணர்களோடு தொடர்புடையது. சாத்து என்னும் வணிககுழு பல இடங்களுக்கு செல்லுகையில் அவர்களை பாதுகாக்கும் போர்குடி தலைவனையே சாத்தன் என அழைக்கின்றது.ஐயனாரைத் தொண்ணூற்றறு வகைப் பாசண்டச் சாத்தன் எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. பைரவரைச் சிவபெருமானின் பிள்ளை எனப் பெரியபுராணம் குறிப்பிடுவது போன்றே சிவபிரான், “சாத்தனை மகனா வைத்தார்” என அப்பர் பெருமான் தமது தேவாரத்தில் குறிப்பிடுகிறார். இத்தகைய ஒப்புமைகள் காணப்பட்டாலும், ஐயனார் அல்லது ஐயப்பன் என்ற பெயர் தகப்பனைக் குறிக்குமே தவிரப் பிள்ளையைக் குறிக்காது. கூற்று வழிபாடு என்பது பைரவ வடிவம், யமன் என்ற தென்புலக் காவல்காரன் வடிவம் ஆகியவற்றோடுதான் நெருக்கமுடையதாகும். யமன் என்பது இறந்து, மீண்டும் பிறக்கும் தன்மையின் உருவகமே. ஆனால், ஐயன் (பித்ரு) என்பதோ சிவபதம் என்றும், சாயுஜ்யம் என்றும் பிற்காலச் சைவ சித்தாந்தத்தில் குறிப்பிடப்படுவது போன்று, மீண்டும் பிறவாத உலகுக்குச் சென்றுவிட்ட தென்புலத் தலைவன் வடிவமாகும். தென்புலத் தெய்வம் என்பது netherworld எனக்குறிப்பிடப்பட்ட நெய்தல் உலகின் தலைவனாகிய வருணனையே குறிக்கும்.
சமண மதத்தின் மகாவீரர்(சாஸ்தா) வழிபாடு வனிகர்களும் வனிகர்களை பாதுகாக்கும் போர்குடியினரான மறவர்களை குறித்த வழிபாடு தான். இன்றைய அய்யனார் வழிபாடு என்பது மகாவீரர் வழிபாட்டின் மீட்சியே.
சமண மதத்துக்கு பிறகு பௌத்தத்தில் சாத்தனாக புத்தரான போதி சத்துவர் குறிக்கபடுகிறார். நாகர் தலையுடன் புத்தரின் சிலை நாகர்களுக்கு அபையம் அளித்த போதி சத்துவர் வழிபாடாக மாறியது.
சபரிமலையில் வன்புலி வாகனனாகக் காட்சியளிக்கும் ஐயன், பெளத்த சமயத்தவரின் தர்மசாஸ்தாவாக உருவெடுக்கும் முன்னர், கூற்றுத் தெய்வத்தின் தன்மைகள் கொண்ட காரியாகவே இருந்திருக்க வேண்டும் என நாம் முடிவு செய்யலாம். காரி(மலையமான்?) என்ற பெயர் சாத்தனுக்கும் உரியதென்றும் தமிழ் நிகண்டுகள் குறிப்பிடுகின்றன.
சமணம்,பௌத்தம் ஆகிய வீழ்ச்சிக்கு பின் சமணர் கோவில்கள் சிவன் கோவிலாகவும் பௌத்த கோவில் விஷ்னுகிரகங்களாக மாறின. நாகர் தலையுடன் இருக்கும் புத்தர் விஷ்னு கடவுளாக மாற்றினர் என்றும்.
இது ஐயனார் கடவுளின் இருதேவியர் புத்தரின் காலத்தில் இரு இயக்கியர்களாகவும் பின்பு வைனவத்தில் ஸ்ரீதேவி பூதேவி வடிவத்தில் உருபெற்றது. இப்படி தான்
ஐயனார் = மகாவீரர் = போதி சத்துவர் = மகாவிஷ்னு
வாக சிலை மாறிய கதைகளும். பல கோயில்களிலும் இந்த கதை உண்டு.
எனவே பிற்காலத்தில் சத்தியபுத்திரர் என்னும் பெயர் மெய்யனான பெருமாள் என விஷ்னுவின் திருநாமமங்களிலும் மாறிப்போனது காலத்தின் மாற்றம்.
அதியமானின் குனசீலம்,நாமக்கலில் கானப்படும் மெய்ய பெருமாள்(விஷ்னு) மற்றும் திருமெய்யம்,திருப்பதியில் கானப்படுவது சத்தியபுத்திரரே.
சத்தியபுத்திரர் என்ற பெயர் சாத்து வணிகர்களின் காவலன் என்பதே உன்மை.
தொண்டைமான் மன்னனும் சத்தியபுத்திரன் என வணிகர்களின் காவலனாக கச்சியில் சக்கரவர்த்தியாக வீற்று இருந்தான் பின்பு சோழநாடு பெயர்ந்து புதுக்கோட்டை பகுதிக்கு பெயர்ந்த பின்பும் வணிகர் காவலனாக மாறினான்.
தொண்டைமான் தன்னை விஷ்னு குலத்தவன் என்றும். இரட்டை சங்கு ஏந்தியவன் எனவும்.மெய்நின்றபெருமாள் என(க.ஆ227,1942) குறிப்பிடுகிறான்.
திருமெய்யம் தொடர்பு:
திருமெய்யம் என்ற பெயரே 'திருமையம்' என்று அழைக்கப்டுகின்றது. திருமய்யம் 'சத்யம்' என காணப்படுவது.'மெய்நின்றபெருமாள்' என்ற அறந்தாங்கி தொண்டைமான் ஒருவன் காணப்ப்டுகின்றான்.'கலியுக மெய்யன் காலிங்கராயர்' என ஒரு கல்வெட்டு உ ள்ளது.
நகரத்தார்கள்:
நாட்டு கோட்டை செட்டிகள் என்று அழைக்கபடும் நகரத்தார்கள் கல்வெட்டுகளில் 'ஐநூற்றுவர்' என கல்வெட்டுகளில் கானப்படுகின்றனர். இசுலாமியரில் 'அஞ்சுவண்ணத்தார்கள்' என்பவர்களும் 'ஐநூற்றுவர்கள்' தான். இவர்கள் ஆரம்ப காலத்தில் காஞ்சிபுரத்தில் உப்பு வணிகர்களாக இருந்தவர்கள் என்றும் அங்கிருந்து பூம்புகாருக்கு பெயர்ந்து பின்பு பாண்டியன் ஒருவன் வேண்டுகோளுக்கு இனங்க பாண்டிய நாட்டில் குடிபெயர்ந்தனர் எனவும் வரலாறு வருகின்றனர். செட்டி என தமிழ்குடியினர் இவர்களே அன்றி வேறொருவர் இல்லை. ஐநூற்றுவர் சுவடுகள் இந்தியா முழுவதும் உள்ளது. இந்தியா மட்டுமல்ல கிழக்காசியா,இலங்கை என ஐநூற்றுவர் கோலோச்சாத இடமேயில்லை. இலங்கை வரலாற்றில் ஐநூற்றுவர் வணிகர் கணங்களின் வீரர்களை சோழர்,பாண்டியர்களின் போர் படை வீரகளாக இருந்துள்ளனர்.
வணிகர்கள் அரசர்களுக்கு இணையாக இயங்கியுள்ளனர் என்பதற்குச் சான்றாக அவர்கள் தங்களை வீரகொடியார், வீரர், எரிவீரர், முனைவீரர், முனை வீரகொடியார், கொங்கவாளர், இளஞ்சிங்க வீரர், வில்லிகள் என்று அழைத்துக்கொண்டனர். இது ஒருபுறமிருக்க - வணிகச் சமூகமும்,நிலவுடைமைச் சமூகமும் ஒரே மாதிரியான அரசியல் போக்குகளைக் கொண்டிருந்தன என்பதற்கு இரு கல்வெட்டுகளை ஆசிரியர் ஒப்பாய்ந்துள்ளார்.
கி.பி.1050-இல் அய் நூற்றுவர் கல்வெட்டில் தங்கள் சமயதர்மம் செங் கோலினை முன்வைத்து - அதாவது, அரசாதிகாரத் தினை முன்வைத்து இயங்கும் என்பதனை வெளிப் படுத்தியுள்ளனர். சித்திரமேழிப்பெருமக்களார் 1062 -இல் வெளியிட்ட கல்வெட்டில் தங்கள் சித்திர மேழிதர்மம் செங்கோலினைத் தெய்வமாக வைத்து -அதாவது,அரசின் செங்கோலினை முன்வைத்து இயங்கும் என்று வெளிப்படுத்தியுள்ளார்.
சில கல்வெட்டுகளில் இவ்வணிகர்கள் விற்ற பொருள்களைப்பட்டியலிட்டுள்ளனர். அவை: மிளகு, பாக்கு, துணிகள், குதிரை, ஒட்டகம், மருத்துவப்பொருள்கள், மணப்பொருள்கள், சந்தனம், சூடம், எருமைமயிர், பசு, காளை, கன்று, எருமை, பட்டுத்துணி, காண்டாமிருகத்தின் கொம்பு, கஸ்தூரி, இரும்புப் பாளங்கள், நெல், வைக்கோல், தானியங்கள், சங்கு, உலர்கோதுமை, அவரை, கடுகு, புளி, இலவங்கம், மாலை, யானைத்தந்தம் இன்ன பிற.இப்பட்டியலில் சுட்டப்பட்டுள்ள பொருள்களின் ஒருவகை மேற்குக் கடற்கரைக்கும்,பிறிதொரு வகைப் பொருள்கள் கிழக்குக் கடற்கரைக்கும் வந்து இறங்கியிருக்க வேண்டும்.
வணிகர்கள் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு வகையில் தங்களை அழைத்துக் கொண்டு உள்ளனர். தமிழகத்தில்தம்மை நாட்டுச் செட்டிகள்,தளச்செட்டிகள்,செட்டி வீரப்புத்திரர்கள்,மலைமண்டலத்து பலநகரங்கள்,முனைவீரகொடியார், அறுபத்துநான்குமுனை என்றும், இலங்கையில் தம்மை தவலத்துச் செட்டி, செட்டிபுத்திரன், கவரை, காத்திரிபன், ஓட்டன், உள்பசும்பைக்காரன், அங்ககாரன், ஆவணகாரன் ,பாவாடை வீரன் என்றும் அழைத்துக்கொண்டனர். கர்நாடகப் பகுதியில் இவர்கள் தம்மை எம்துநாட பதினறுவர்,ஐநூற்றுவ ஸ்வாமிகளு, செட்டிகுத்தாரு, கவுண்ட சாமி, பிரான், அம்மகாரன், பாரிகான், கவரே, நகர, காத்திரிகாரு, வீரவணிகரு, வீரர், அக்காலே, கழனை, பணிசெய்மக்கள் என்றும் அழைத்துக் கொள்கின்றனர்.
சத்தியபுத்திரர் என்னும் பெயரை நாட்டுகோட்டை செட்டியார்கள் "மெய்யன்" "மெய்யப்பன்" ஏவிஎம் தலைவர் மெய்யப்பசெட்டியார் என்ற பெயர் கூட இதன் தாக்கம் தான்.
சாத்தன் என்னும் ஐநூற்றுவரின் காவல் வீரர்களும் தலைவர்களும் யார்?
சாத்து வணிகர்கள் என ஐநூற்றுவரின் தளங்களாக புதுக்கோட்டை பகுதியில் உள்ள வீராச்சிலை,திருமெய்யம்,சிவகங்கை,காரைக்குடி,தேவகோட்டை,காணாடுகாத்தான் போன்ற இடத்தில் வணிக தளங்கள் அமைத்தனர். இவர்களின் காவலர்களாக பாண்டியர்கள்,சோழர்களும் படைப்பற்றை நிறுவி வீரர்களை நியமித்திருந்தனர்.
படைப்பற்று குடியிருப்புகள் படையினருக்கு வழங்கப்பட்ட நிலக்கொடையாகும்.பெருவேந்தரின் மோதற்களமாகப் பயன்படுத்தப்பட்ட இப்பகுதியில் மறவர் மக்களுக்கு மட்டும் வேந்தர்கள் வழங்கிய படைப்பற்று கல்வெட்டுகள் விரையாச்சிலை,குருந்தன்பிறை க.என்க.என்(354,727,743),மலையாலங்குடி க.என்(402,403),பெருங்குடி க.என்(364,712).இளஞ்சார்,புலிவலம் க.என்(648,792).படைப்பற்றின் மக்களாக மறவர்களே அரையர்களாகவும்,ஊரவர்களாகவும் செயல்பட்டனர் க.என்(393).இது இரண்டாம் இராஜாதிராஜன் காலத்திய கல்வெட்டு செய்தி (1926:257) உறுதிப்படுத்திகிறது.
புதுக்கோட்டை கல்வெட்டுகளில் கானப்படும் கல்வெட்டுகளில் படைப்பற்றுகளை பாண்டிய நாட்டு எல்லைக்கு உட்பட்ட படைப்பற்று என்றும் சோழ நாட்டு படைப்பற்று என்றும் இருவகை படுத்தலாம்.
பாண்டிய எல்லை படைப்பற்று:
1.குருந்தன் பிறை கான நாடு பாண்டியராட்சிப்பகுதி
2.விரையாச்சிலை கான நாடு பாண்டியராட்சிப்பகுதி
3.கோட்டூர் இலம்பலக்குடி கான நாடு பாண்டியராட்சிப்பகுதி
4. தெக்காடூர்(ஐந்தூர் படை பற்று) கான நாடு பாண்டியராட்சிப்பகுதி
5.அமாந்தூர் கான நாடு பாண்டியராட்சிப்பகுதி
சோழர் எல்லை படைப்பற்று:
1.சிங்கமங்கலம் கவி நாடு சோழராட்சிப்பகுதி
2.சீரனூர் வட சிறுவாயில் நாடு சோழராட்சிப்பகுதி
3.மேலப்புதுவயல் வடகோனாடு சோழராட்சிப்பகுதி
4.கீழப்புதுவயல் வடகோனாடு சோழராட்சிப்பகுதி
பெருமான்= பெரியோர்+மகன்= வர்மா
இந்த பெயர் அரையன் அல்லது ராஜா எனும் போது அது வர்ம ராஜா அல்லது பெருமாள் அரசர் என பொருள் படும். இதற்க்கு நிகரான பட்டம் தான் பேரரையர்.
வணிகர் குழுவுக்கான தலைவன் யார்?
காலம் 13 ஆம்நூற்றாண்டு(கி.பி.1266)
I.P.S.(346)
மேற்படி தாலுகா விரையாச்சிலை பில்லவனேசர் கோவில் சுவாமி கோவில் தென்புரம் சுவரில்
நம்பி ஐநூற்றுவ பெரியான்
ஸ்வஸ்தி ஸ்ரீ கோச்சடை பன்மரான திரியுவன சக்கரவர்த்தி ஸ்ரீ சுந்தரபாண்டியத்தேவர்......................குடுத்த பரிசாவது..... முன்னால் குலசேகர தேவருக்கு இவ்வூர் மறவன் நம்பியான் ஐநூற்றுவ பெரியான் உள்ளிட்டார் பக்கல் விலை கொண்டு உடையார்............... இவ்வூர் மறவரில் மாலையிட்டான் மக்கள் தற்குரியும்..............................
I.P.S.(376)
புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் தாலுகா விரையாச்சிலை தேவவயல் தென்னி வயலுக்கு பொதுவான ஆலமரத்து தெற்கு வரப்பிற்கு பகுதியிலுள்ள கல்வெட்டு
ஸ்ரீ குலசேகர தேவர்க்கு ஸ்வஸ்தி ஸ்ரீ கல்வாயில் நாட்டு சுந்தர பாண்டிய புரத்து அரவத்துடைய பிள்ளை திருமாலிஞ்சோலை தாதர் சோதியர் மூவர்க்கு விரையாச்சிலை மறவன் நம்பி ஐநூற்றுவ பேரரையர் உள்ளிட்டார் பக்கல் விலை கொண்ட தேவர் குளமும்...............
எட்டி(செட்டி) பொன்னான சுந்தரபாண்டிய பேரரையன்
மேறபடி கோவிலில் மண்டபத்தில் உள்ள நடுத்தூனில் உள்ள கல்வெட்டு
இந்த தூன் இவ்வூர் மறவரில் எட்டி பொன்னான சுந்தரபாண்டிய பேரரையன் தன்மம்
எனவே ஐநூற்றுவர் குழுவுக்கு தலைமை தாங்கியவர்கள் மறவர்களை. இவர்களே இலங்கையில் கொங்கவாளர்,கத்திரியர்,முனைவீரர்,எறிவீரர் முதலிய படைகளாக பணியாற்றினர்.
இந்த சத்தியபுத்திரர்(சத்தியமூர்த்தி) என்னும் அவையன் சாத்தன் எனும் தொண்டைமான் யார்?
சூரைக்குடி அரையன் அவையன் சாத்தன்(அதளையூர் நாடாள்வான்):
சூரைக்குடியை ஆண்ட இனத்தார் யார்?
திருமெய்யம் என்னும் கோவிலை கட்டி அதில் மெய்நின்றபெருமாள் என்னும் சத்தியமூர்த்தி விஷ்னுகோயிலை கட்டியவனான சத்தியபுத்திரனான சாத்தன் என்பவனை பற்றிய கல்வெட்டு:
ஆதளையூர் நாடாள்வான் பொன்னனான விஜாயலயத்தேவர் கி.பி(1219)
I.P.S.(505) குளத்தூர் தாலுகா அரியூர் ஈஸ்வரன் கோவில் வாசற்படிக்கு தென்புறம்
ஸ்வஸ்தி ஸ்ரீ சோனாடு கொண்ட சுந்தரபாண்டியத் தேவர்க்கு யாண்டு.......திருவகந்தீஸ்வரமுடைய நாயனர் திருக்கோவில் மகாதேவரையும் நாச்சியாரையும் எழுந்தருவித்தால் மாங்குடி மறவனான அவையன் சாத்தன் அதளையூர் நாட்டுப் பேரரையன்............................
சூரைக்குடி அரையன் விஜயாலயத்தேவன் விஜயாலயன் என்னும் பெயர் சோழர்களை நினைவுபடுத்துவதால் சோழர் எனவே கருதுவோம். விஜயத்தேவன் என்பதும் விஜயராயர் என்பது வணிக குழுவை தலைமை தாங்குபவன் என பொருள் படும். மேலும் அவையன் சாத்தன் நாட்டான் என்பது சாத்து வணிகர் தலைவன் என்பதேயாகும். மேலும் விஜாயலத்தேவனை பற்றி மறைக்கப்பட்ட கல்வெட்டும் அவன் வம்சமும் இது தான்.
I.P.S.(452) திருமய்யம்,நெய்வாசல் அகஸ்தீஸ்வரமுடையார் கோவில் வீரபாண்டியத் தேவரின் கல்வெட்டு:
"தேனாற்று போக்கு ஆதளையூர் நாட்டு சூரைக்குடி அரையன் பெரியனான தொண்டைமானார்"
நன்றி:
அறந்தாங்கி தொண்டைமான் செப்பேடுகள்: புலவர் செ.இராசு
புதுக்கோட்டை வரலாறு: உயர்.திரு.ஐயா.வீ.மாணிக்கம் அவர்கள்
இதில் சூரைக்குடி அரையனான பெரியனான தொண்டைமானாருக்கு பாண்டியன் காவல் பொருப்புகளும் சில வரிகளையும் நிமித்தகளையும் வழங்குகிறார்.
அறந்தாங்கி தொண்டைமானும்,அன்பில் தொண்டைமானும் சூரைக்குடி தொண்டைமானும் மறவர்களே.
தொண்டைமானை புகழும் பெரும்பாணாற்றுபடை
"மறவர் மறவ தொண்டையோர் மருக".
திரையனாகிய சோழரின் இளவலான தொண்டை வேந்தன் மறவனே.
திரையன் மரபினரை கோரும் தகுதிகள் என்ன?
திரையன் என்றால் கடலால் கடலில் வந்த கடலோடிகள் என அர்த்தம்.
சோழரின் முதல் நகரம் உருவாண இடம் பூம்புகார். இது கடலில் அமைந்த காவிரி பூம்பட்டினம்.
கரிகால் சோழரின் புகழ்பாடுவது "பட்டிணப்பாலை". மருதனிலமோ வேறு எந்த பகுதியும் கிடையாது.
பட்டினம் என்றால் கடலை ஒட்டி அமைந்த நகரம். பாலை நிலம் என்றால் என்ன? குறிஞ்சியும் முல்லையும் திரிந்த நிலம் பாலை என்பர். அது தவறு. கடலால் தீண்டபட்டு விவசாயத்துக்கு தகுதியற்ற நிலமே பாலை.
பாலை என்பது கடல் அருகே இருக்கும் வறண்ட நிலம் தான். அதனால் தான் நாகபட்டினம்,பூம்புகார்,வஞ்சி(கொச்சி),மணலூர்,கொற்கை,இரமநாதபுரம் எல்லம் கடற்கரையை ஒட்டிய வறண்ட நிலம் தான்.
முதல் பாண்டியன் அமைத்த தலைநகர் "மணலூர்" என இராமநாதபுரத்தில் தான் உள்ளது. வறண்ட பாலை நிலத்தில் இருந்து தோன்றியது தான் அரசுகள். சோழன் திரையனே ஆகு. அதன் பின்னே தான் மேற்கே தஞ்சை பகுதிக்கு வந்து வளங்களை பெருக்கி "வளவன்" ஆனான். வேறு எங்கும் இல்லை அதற்க்கு மேலே சந்தேகம் இருந்தால் புறநானூறு பாடல்,
கரிகாலன் தம்பி மாவளத்தான். மறவர் பெருமான் என்றால் மறவரில் பெரியோர் மகன் என அர்த்தம்.
43. பிறப்பும் சிறப்பும்!
பாடியவர்: தாமப்பல் கண்ணனார்,
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்.
திணை : வாகை. துறை: அரசவாகை.
குறிப்பு : புலவரும் அரச குமரனும் வட்டுப் பொருவுழிக் கைகரப்ப, வெகுண்டு, வட்டுக் கொண்டு எறிந்தானைச் , 'சோழன் மகன்
அல்லை' என, நாணியுருந்தானை அவர் பாடியது.
"தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி யஞ்சிச் சீரை புக்க
வரையா ஈகை உரவோன் மருக!
நேரார்க் கடந்த முரண்மிகு திருவின்
தேர்வண் கிள்ளி தம்பி! வார் கோல்,
கொடுமர மறவர் பெரும! கடுமான்
கைவண் தோன்றல்! ஐயம் உடையேன்:"
பொருள்:
புறாவுக்கு சதை ஈன்ற வள்ளல் குலத்தோன். நல்ல தேர் செலுத்தும் கிள்ளி தம்பி. மறவர் குலத்தின் பெரியோர் மகன். வெற்றி உடையோன். புலிக் குல தோன்றல்.
சூரைக்குடி தொண்டைமானே அந்த மறவர்களின் படைபற்றுக்கு தலைவன்
திருமய்யம் விராச்சிலை என்பது தொண்டைமானின் வீரர்களின் சாலையே.
விராச்சிலையிலிருப்பது தொண்டைமானின் வீரகள் தான் இவர்கள் சூடும் ஒவ்வொர் பட்டத்திலும் அறந்தாங்கி தொண்டைமான் பெயர் இருக்கும்.
அறந்தாங்கி தொண்டைமான்களின் பெயர்கள்:
1.அழகிய மணவாள பெருமாள் தொண்டைமானார்
2.திருநெல்வேலி பெருமாள் தொண்டைமானார்.
3.இன்பவணப்பெருமாள் தொண்டைமானார்.
4. அழகிய பெருமாள் தொண்டைமானார்.
5. நயினான் பொன்னம்பலநாத தொண்டைமானார்
இதே பெயரில் சூரைக்குடி அவையன் சாத்தன் தொண்டைமான்
அழகிய நயினார்
விஷ்ணுகோயில் வளாகத்திலிருந்து முப்பது கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் பதினான்கு கல்வெட்டுகள் புதுக்கோட்டை மாநிலக் கல்வெட்டுகள் தொகுதியில் இடம்பெற்றுள்ளன. அதில் இடம்பெறாத ஒரு கல்வெட்டு தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 22ன் இரண்டாம் பிரிவில் பதிவாகியுள்ளது. நான்கு கல்வெட்டுகள் திருமதி நா. வள்ளியால் பதிப்பிக்கப்பட்டுள்ளன. பதினொரு கல்வெட்டுகள் கள ஆய்வின்போது இக்கட்டுரையாசிரியர்களால் கண்டறியப்பட்டவை. சுப்புராயுலு 36 திருமையம் கல்வெட்டுகளை கண்டுபிடித்துள்ளார்.
இதே கோயில் வளாகத்திலிருந்து புதிதாகக் கண்டறியப்பட்ட வீரவிருப்பண்ண உடையாரின் கி. பி. 1399ம் ஆண்டுக் கல்வெட்டு28 சூரைக்குடித் திருமேனி அழகியாரான நாயினார் விசையாலயதேவர், இவ்வளாகத்தில் பெருமாளைப் புதிதாக எழுந்தருளச் செய்தமை பற்றிக் குறிப்பிடுவதால், அக்கால கட்டத்தில் நின்றருளியதேவரின் திருமுன் படிக்கட்டின் புறச்சுவராக இருந்த பெருந்தேவிக் கல்வெட்டு அகற்றப்பட்டிருக்கலாம் என்று கருத இடமுண்டு.
அதே சுவரிலிருந்து கண்டறியப்பட்ட புதிய கல்வெட்டு, சொக்கநாராயண நல்லூர் எனும் பெயரிலமைந்த ஊரைச் சொக்க நாராயணரான விசையாலயதேவர் மெய்யத்து இறைவனுக்குத் தேவதானத் திருவிடையாட்டமாகத் தந்ததாகக் கூறுகிறது. பெருமளவிற்குச் சிதைந்தும் தொடர்பற்றும் காணப்படும் இக்கல்வெட்டின் காலத்தைப் பதினைந்தாம் நூற்றாண்டாகக் கொள்ளலாம்.30
மண்டபத்தின் மேற்குச் சுவரில் வீரவிருப்பண்ண உடையார் ஆட்சிக்காலத்தே விபவ ஆண்டில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு,34 கானநாட்டு நாட்டார், கேரளசிங்க வளநாட்டு அதலையூர் நாட்டுத் தேனாற்றுப்போக்குச் சூரைக்குடியைச் சேர்ந்த திருமேனியழகியாரான விசையாலைய தேவரிடம் ஐந்தாயிரம் பணம் பெற்றுக்கொண்டு நிலம் விற்ற தகவலைத் தருகிறது. 'மாக்கல விலைப் பிரமாணம்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆவணத்தின் கையெழுத்தாளர்களின் ஊர்களாகக் கோட்டையூர், மேலூர், கண்ணனூர், தெற்காட்டூர் ஆகிய ஊர்களின் பெயர்கள் கிடைக்கின்றன. கானநாட்டுப் படைப்பற்றுகளுள் ஒன்றாகச் செங்குன்றநாடு விளங்கியதையும் நாட்டு மரியாதி எனும் வரியினத்தையும் இவ்ஆவணம் வழி அறியமுடிகிறது.
பொன் நயினார் பராக்கிரம பாண்டியன்:
அதே சுவரில் கி. பி. 1452ல் வெட்டப்பட்டுள்ள அரசர் பெயரற்ற கல்வெட்டினால்35 கேரளசிங்க வளநாட்டு அதலையூர் நாட்டுச் சூரைக்குடிச் செண்பகப் பொன்னாயினாரான பராக்கிரம பாண்டிய விசையாலையதேவர், மெய்யத்து மலையாளரான விஷ்ணு பெருமானுக்குச் செண்பகப் பொன்னாயன் சந்தி அமைக்க வாய்ப்பாகப் புலிவலத்திருந்த தம் வயலான செண்பகப் பொன்னாயநல்லூரில், ஏற்கனவே தரப்பட்டிருந்த தேவதானத் திருவிடையாட்ட இறையிலி போக எஞ்சியிருந்த நிலப்பகுதியைக் கோயிலுக்குக் கொடையாகத் தந்த தகவலை அறியமுடிகிறது.
கல்வெட்டு சகாப்தம் 1313க்கு (கி. பி. 1391) உரியது.39 பிரமாதி ஆண்டுக் கணக்குப்படி மெய்யம் கல்வெட்டு கி. பி. 1399ல் பொறிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தலாம். இக்கல்வெட்டு, சூரைக்குடித் திருமேனி அழகியாரான நாயினார் விசையாலயதேவரின் அறச்செயல்களைப் படம்பிடிக்கிறது. மெய்யம் சத்தியமூர்த்திப் பெருமாள் திருக்கோயிலில் கண் நிறைந்த பெருமாளைப் புதிதாக எழுந்தருளுவித்து மகிழ்ந்த விசையாலயதேவர், கோயில் சுற்றில் சர்வமான்ய அகரமாக, 'ஓ ங்காரநாதத்து வேதமங்கலம்' என்னும் அகரத்தை அமைத்தார்.
கல்வெட்டு சகாப்தம் 1313க்கு (கி. பி. 1391) உரியது.39 பிரமாதி ஆண்டுக் கணக்குப்படி மெய்யம் கல்வெட்டு கி. பி. 1399ல் பொறிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தலாம். இக்கல்வெட்டு, சூரைக்குடித் திருமேனி அழகியாரான நாயினார் விசையாலயதேவரின் அறச்செயல்களைப் படம்பிடிக்கிறது. மெய்யம் சத்தியமூர்த்திப் பெருமாள் திருக்கோயிலில் கண் நிறைந்த பெருமாளைப் புதிதாக எழுந்தருளுவித்து மகிழ்ந்த விசையாலயதேவர், கோயில் சுற்றில் சர்வமான்ய அகரமாக, 'ஓ ங்காரநாதத்து வேதமங்கலம்' என்னும் அகரத்தை அமைத்தார்.
இவர்களுடன் ஊர்க் கணக்குகளாக, விரையாச்சிலை ஊர்க் கணக்கு வைரக்கொழுந்து, செங்குன்றூர் நாட்டுக்குச் சமைந்த ஊர்க் கணக்குக் கானநாட்டுக் கணக்கு அழகியநாயன், மற்றோர் ஊர்க் கணக்கு அடைக்கலங்காத்தான் ஆகிய மூவர் கையெழுத்திட்டுள்ளனர். திருவரங்கம் கோயிலைச் சுற்றிப் பல அகரங்கள் உருவானமையைக் கல்வெட்டுகளால் அறிகிறோம். அது போல் மெய்யத்து வளாகத்தில் கி. பி. 1399ல் ஓங்காரநாதத்து வேத மங்கலம் என்ற அகரம் சூரைக்குடித் திருமேனி அழகியாரான நாயினார் விசையாலயதேவரால் பன்னிருவரைக் கொண்டு உருவாக்கப்பட்டமை வரலாற்றிற்குப் புதிய வரவு.
புதுக்கோட்டை மாவட்டக் கல்வெட்டுகளைக் கண்ணுற்றபோது, வீரவிருப்பண்ண உடையாரின் கல்வெட்டுகள் இந்தப் பகுதியில் பரவலாகக் காணப்படுவதை அறியமுடிந்தது. திருவிளாங்குடிக் கல்வெட்டில் அரியண உடையாரின் மகனாகக் குறிக்கப்படும் வீரவிருப்பண்ணரின் கி. பி. 1417ம் ஆண்டுக் கல்வெட்டு, மேலப்பனையூர் ஞானபுரீசுவரர் கோயிலில் உள்ளது.40 சூரைக்குடி விசையாலயதேவர் வீரவிருப்பண்ணரின் ஆட்சிக்குட்பட்ட சிற்றரசர் போலும்! மெய்யத்திலேயே அவரது வழித்தோன்றலான சொக்கநாராயண விசையாலயரின் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன.41 அவற்றுள் ஒன்று புதிதாகக் கண்டறியப்பட்டதாகும்
சுந்தரபாண்டியன் மண்டபத் தூணொன்றிலிருந்து படியெடுக்கப்பட்ட புதிய கல்வெட்டு, பாடல் கல்வெட்டாக அமைந்துள்ளது. இறைவனை, 'மெய்யம் அமர்ந்த பெருமாள்' என்றும் 'மணஞ்சொல் செண்பக மெய்யர்' என்றும் கொண்டாடும் இக்கல்வெட்டின் முழுப் பொருளை அறியக்கூடவில்லை. மண்டபத்தின் கிழக்குப் படிக்கட்டுகளுக்கான தென்புறப் பிடிச்சுவரில் உள்ள கல்வெட்டு, 'இ ந்தப் படியும் சுருளும் வீரபாண்டியதரையர் தன்மம்' என்கிறது. எழுத்தமைதி கொண்டு இக்கல்வெட்டுகளைப் பதினான்காம் நூற்றாண்டினவாகக் கொள்ளலாம்.42
திருநெலவேலி பெருமாள் சொக்க நாராயணன்:
கோயில் வளாகத்தின் கிழக்குச் சுற்றிலுள்ள சேனைமுதலியார் திருமுன்னில் இடம்பெற்றுள்ள கல்வெட்டுகளுள் ஒன்று, கேரளசிங்க வளநாட்டுச் சூரைக்குடிச் சொக்க நாராயணரான விசையாலயதேவரும் திருநெல்வேலிப் பெருமாளான சுந்தரபாண்டிய விசையாலயதேவரும் கானநாட்டுத் தேவதான பிரமதேயமான திருமெய்யத்தில் எழுந்தருளியிருக்கும் மெய்யத்து மலையாளரின் திருவிழாவிற்கு முதலாகப் 'பச்சை வினியோகம்' எனும் வரியினமாய் வந்த பணம் முந்நூற்று முப்பத்துமூன்றையும் வழங்கிய தகவலைத் தருகிறது.43
அதே சுவரில் கி. பி. 1461ல் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டொன்றால்,44 அதலையூர் நாட்டு நியமப்பற்றுச் சூரைக்குடி அவையாண்டாரான சுந்தரபாண்டிய விசையாலய தேவர், மெய்யத்து மலையாளருக்கு, தம்முடைய பெயரால், தம்முடைய பிறந்த நாளில், 'சுந்தரபாண்டிய விசையாலய தேவன் சந்தி' என ஒன்றமைத்து, அது போழ்து தளிகை படைக்கவும் திருமாலை, திருப்பரிவட்டம் முதலாயின சாத்தவும் வாய்ப்பாக, கானநாட்டுப் படைப்பற்றான இளஞ்சார்ப் புரவில், சுந்தரபாண்டிய நல்லூரைத் திருவிடையாட்டமாக்கிக் கோயிலுக்கு சர்வமானியமாக அளித்த செய்தியைப் பெறமுடிகிறது.
திருமுன்னின் முகமண்டப உட்சுவரில் காணப்படும் பராக்கிரம பாண்டியரின் ஏழாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு அவருடைய மெய்க்கீர்த்தியைத் தருவதுடன், இக்கோயிலில் அவர் பெயரால் உருவாக்கப்பட்ட பராக்கிரம பாண்டியன் சந்தியை வெளிச்சப்படுத்துகிறது. 'திருமெய்ய மலையாளன்' என்றழைக்கப்பட்ட நின்றருளிய தேவருக்கான சிறப்புப் பூசையாக அமைக்கப்பட்ட இச்சந்தியை நிறைவேற்ற வாய்ப்பாக மஞ்சக்குடிப் பற்றிலிருந்த சாத்தனூர், கோயிலுக்குக் கொடையாகத் தரப்பட்டது
சூரைக்குடி தொண்டைமான் விஜயாலயத்தேவரின் கீர்த்திகள்:
"இராவுத்த மிண்டான் பதினெட்டு வன்னியரை புறமுதுகு கண்டான்"
"வன்னியநார் அடைக்கலம் காத்த நாடு மதித்தி விஜயாலயத்தேவன்"
"பாண்டியன் படி அமுக்க பரி ஏறும் பெருமாள்"
"காங்கேயனை வெட்டி மாவலிக்கு விருந்து படைத்தான்"
"வாளால் வழிதிறந்தான் மெய்யத்து பள்ளி கொண்ட பெருமாள் விசயாலயன்"
சூரைக்குடி தொண்டைமான் "வைத்தூர் பல்லவராயர்கள்" என்னும் அரசர்களை அழித்துள்ளார்.
சூரைக்குடி அரசு விசயாலத்தேவர்:
" மாங்குடி மறவன் அவையன் சாத்தன் அதலையூர் நாட்டு பெரைய்நு(பேரரையன்" என குறித்துள்ளான் அதலையூர் நாடாள்வான்(நாட்டுபேரரயன்).
மேலும் அறந்தாங்கி தொண்டைமான்,அன்பில் அஞ்சுகுடி அரையர்,சூரைக்குடி அரையர் இம்மூவருமே தொண்டைமான் வம்சமே.
சொரி வன்னிய சூரியன்: விஜயாலயன் தன்னை கடம்பன் எட்டி(வியாபாரி) எனவும் சாத்தன் எனவும் குறிப்பிட்டு கொள்கிறான். மேலும் சொரி வன்னிய சூரியன் என பெயர் கொண்டுள்ளான். பதினெட்டு வன்னியரை புறம் கண்டான் எனவும் பட்டம் உள்ளது.
"சொரி வன்னிய சூரியன்" என்ற இதே பட்டம் "சொரி முத்து வன்னியன்" என்ற பட்டம் சேதுபதிகளுக்கும் உள்ளது. இதற்க்கு இராகவ அய்யங்கார் "சொரி முத்து வன்னியர்" என்றால் கடலில் தோன்றும் சூரியன் என திரையன் என அர்த்தம்.
இப்போது புதிதாக விஜயாலையனை கோறும் கூட்டத்தினர் வன்னியர் என்ற வார்த்தை வைத்து கோறுகின்றனர். அவர்களுக்கு ஒரே ஒரு ஆதாரம் மட்டும் கேட்கிறோம். "சொரி வன்னியன்" என்ற பெயர் அவர்களிடம் எந்த பட்டயத்திலாவது அல்லது கல்வெட்டுகளில் இருந்தால் நாங்கள் விஜயாலத்தேவரை கோரவே இல்லை. நெடு நாளைக்கு முன்னரே இந்த கருத்தை எதிர்பார்த்தோம் அப்போது வைத்தூர் பல்லவராயரை கோரி விஜயாலத்தேவனின் மீது பழியை போட்டு பல்லவராயரை கோரிய கூட்டம் இன்று சூரைக்குடி அரையனை கோறுவது வினோதம்.
சொரிமுத்து வன்னியர்,18 வன்னியர் கண்டன் என்னும் பெயர் சேதுபதிகள்,விஜயாலயத் தேவர்,அறந்தாங்கி தொண்டைமான் மூவருக்குமே இந்த பட்டம் உள்ளது. அறந்தாங்கி தொண்டைமானும் தங்களை செயதுங்கராயன் என குறிப்பிடுகிறார் ஆக சேதுபதி விஜ்யாலயத் தேவர் தொண்டைமான் மூவரும் மறவரே.
அதற்க்காக விராய்சிலை மறவர்களும் சூரைக்குடி அரையரும் மதுரை நாயக்கருக்கு அபராதம் செலுத்திய நெல்வாசல் கோவிலில் பொரித்தது.ஹிஜிரா கல்வெட்டு எண் : 771(கிபி 1300 இல் இருந்து 1330 க்குள்)
இடம் : கண்டதேவி படி எடுக்கப்பட்ட ஆண்டு அல்லது பதியப்பட்ட ஆண்டு
-1921
மதுரையில் பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சி 1290 களில் துவங்குகிறது.(சுந்தர
பாண்டிய தேவர்) சுல்தான்கள் மதுரையை தாக்கி பாமினி ஆட்சியை நிறுவுகிறார்கள்.பாண்டிய
மன்னர்கள் தென்காசியை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்ய துவங்கிறார்கள். ஆனாலும்
காரைக்குடி,திருப்பத்தூர்,தேவகோட்டை பகுதி கள்ளர்களில் சிலர் , ஆங்காங்கே
சுல்தான்களின் படையை தாக்கியும்,சூறையாடியும் பெரும் சேதம் விளைவிக்கிறார்கள்.
கோபம் கொண்ட சுல்தான் மறவர் படைகள் வாழ்ந்த கண்டதேவியை ஆண்ட சூரைக்குடி என்னும்
விஜயாலயத்தேவரின் வன்னிய சூரைக்குடியை தாக்கி பெரும் சேதம் விளைவிக்கிறார்கள்.
கத்தி முனையில் இனிமேல் சுல்தான் ஆட்சியை எதிர்த்து தாக்குதல்,சூறையாடல் நடத்த
மாட்டோம் என்று கள்ளர், கருமார்,உள்ளிட்டோர் முன்னிலையில் ஒப்பந்தம் கல்வெட்டாக
பெறப்படுகிறது.அப்படி ஒப்பந்தத்தை மீறினால் கீழ்காணும் தண்டனையை ஏற்றுக்கொள்கிறோம்
என்பது தான் கல்வெட்டு. 1) எங்கள் மீசையை மற்றும் தாடியை மழித்து கொள்கிறோம். 2)
எங்கள் மனைவியை ஒப்படைக்கிறோம். 3) புலையர்,பள்ளர் உள்ளிட்ட
கீழ்சாதியினர் எங்களை பெண் ஓவியமாக வரைந்து அவர்களின் குழந்தைகளின் காலில் கட்டி
சுத்தட்டும். என கல்வெட்டு முடிகிறது.
இதில் கள்ளர் கருமார் புறத்தார் மற்றும் பொன்னமராவதி ஊராவர்களுக்கும்
சுல்த்தானுக்குமான உடன்படிக்கையில் கள்ளர்கள் உடன்படிக்கை செய்து
கொள்கின்றனர்.
இதில் எங்களுக்கு சாத்துவான அறந்தான்கியார் மறவர்கள் என சுல்த்தானுக்கு
எதிரிகளான மறவர்களுடன் நாங்கள் தொடர்பு வைக்க மாட்டோம் என கூறுகின்றனர்.
என கல்வெட்டு முடிகின்றது.
“கள்ளர் கருமர்
புறத்தார் பட்டர்கள் வித்துவான்கள் பாடகர்கள்
எங்களுக்கு சத்ருக்கலான
அறந்தாங்கியார் மறவரும்”
இதிலிருந்து மதுரை
சுல்த்தான்காளின் எதிரிகள் அறந்தாங்கி மறவர்கள். இவர்கள் அஞ்சுக்குடி அரையர்
என்னும் அஞ்சுகொத்து மறவரின் உட்பிரிவினர் இவர்களே அஞ்சுகோட்டை நாடாள்வானாக
இலங்காபுரத தண்ட நாயன்கனிடம் போரிட்டவர்கள்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidwhxotMKo3U3XVoopEF9MRQ_TQAkGqsuN_bsnhBV0gxnThHTQqrcJ2tPXoaO4iN-ISTCaNXkmpQwatvLAc6KPPg9CdroqN7FOe-D_S5c6jyOu_FsQNMZmy7livoe8H_A1WHDA4aoFShw/s640/kandadevi_one.jpg)
சிறுகுடி வெள்ளாளரின் செப்பு பட்டயம் கூறும் தொண்டைமான் கீர்த்திகள்:
"ஈழம் திறைகொண்ட இலங்காபுரிக் காவலன்" என்றும், " தாசப்படை வெட்டி இரட்டைச் சங்கு பிடித்தவன்" என்றும், "செட்டி தோள் மீது ஏறும் காட்டாரிராயன்" என்றும், "மதுரையை ஆளும் பாண்டியன், சேர அரசன், சோழனுக்கு வாள் தொழில் பயிற்றுவோன்" என்றும் குறிப்பிட்டுக் கொள்கின்றனர்.
இதில்
1"ஈழம் திறைகொண்ட இலங்காபுரிக் காவலன்":
இது அறந்தாங்கி தொண்டைமான் சேதுபதி மற்றும் ஆரியசக்கரவர்த்திகளுக்கு மட்டுமே உரியது
சேதுபதி செப்புபட்டயம்"
"ஈழமும் கொங்கும் யாழ்பாணமும் கஜவேட்டை கொண்டருளியவன்"
2." தாசப்படை வெட்டி இரட்டைச் சங்கு பிடித்தவன்"
மட்டகளப்பு மறவர் குடி:
சங்குபத்தன் குடி, கோப்பிகுடி,கச்சிலாகுடி,சட்டிகுடி,மாளவண்குடி,முண்டன் குடி,முறண்டன் குடி.
இது இலங்கை மன்னை வெட்டி சங்கனாக்கி இரட்டை சங்கு பிடித்தவன் என அத்னால் சங்குபயத்தன் குடி என பெயர் எடுத்தவர்கள்
3."செட்டி தோள் மீது ஏறும் காட்டாரிராயன்"
கட்டாரிராயன் என ஈழத்தில் கத்திரியன் என வாளரசு வென்ற மறவர்களான வாள்கோட்டைராயர்களை குறிக்கிறது.இது ஈழத்தில் ஐநூற்றுவர் படையில் உள்ள கொற்றவாளர்,கத்திரியர்,முனைவீரர்,எறிவீரர் இவர்களில் பங்கெடுத்து அதற்க்கு தலைமை தாங்கிய பெருமாளான "ஐநூற்றுவ பேரரையன்". செட்டிமார்களின் காவலன்.
காலம் 13 ஆம்நூற்றாண்டு(கி.பி.1266)
I.P.S.(346)
மேற்படி தாலுகா விரையாச்சிலை பில்லவனேசர் கோவில் சுவாமி கோவில் தென்புரம் சுவரில்
நம்பி ஐநூற்றுவ பெரியான்
ஸ்வஸ்தி ஸ்ரீ கோச்சடை பன்மரான திரியுவன சக்கரவர்த்தி ஸ்ரீ சுந்தரபாண்டியத்தேவர்......................குடுத்த பரிசாவது..... முன்னால் குலசேகர தேவருக்கு இவ்வூர் மறவன் நம்பியான் ஐநூற்றுவ பெரியான் உள்ளிட்டார் பக்கல் விலை கொண்டு உடையார்............... இவ்வூர் மறவரில் மாலையிட்டான் மக்கள் தற்குரியும்..............................
4."மதுரையை ஆளும் பாண்டியன், சேர அரசன், சோழனுக்கு வாள் தொழில் பயிற்றுவோன்"
தொண்டைமான் தமிழ் மன்னன் என்பதிலிருந்தே சேரனும்,பாண்டியனும் யாராக இருப்பர் என யோசிக்க தேவையில்லை.
சுல்த்தான் தாக்கியபின் சூரைக்குடி அரையர்கள் சென்று அமைத்த பாளையங்களே
சேத்தூர் - வணங்காமுடி பண்டாறர்
சிவகிரி -சங்கிலி வன்னியர்
கொல்லங்கொண்டான் -வாண்டாயத் தேவன்
அழகாபுரி - கட்டாரிராயன்
ஏழாயிரம்பன்னை - பொன்னம்பலநாதர்
த்லைவன்கோட்டை- இந்திரதலைவன்
என வணங்காமுடியர்,வாண்டாயத் தேவர்,கட்டாரிராயன்,பொன்னம்பலநாதர்,இந்திரதலைவன் என இவர்கள் அனைவரும் விஜயாலயத் தேவரின் வாரிசுகளே
எனவே சத்தியபுத்திரர் என்னும் அய்யனார் வழிபாடு மறவரில் 70% மக்களுக்கு அய்யனாரே குலதெய்வமாக உள்ளது. எனவே சத்திய புத்திரர் என்னும் தொண்டைமான் மன்னரின் வம்சம் மறவர்களிடமே உள்ளனர்.
சத்தியபுத்திரர் கலியுகமெய்யன் அய்யனாரே.
சிறப்பு நன்றி:
அறந்தாங்கி தொண்டைமான் செப்பேடுகள்: புலவர் செ.இராசு
புதுக்கோட்டை வரலாறு: உயர்.திரு.ஐயா.வீ.மாணிக்கம் அவர்கள்
குறிப்புகள் 27. கே. வி. செளந்தரராஜன், மு. கு. நூல், ப. 103; பெரும்பிடுகுப் பெருந்தேவி, கோயிலைப் புதுப்பித்துக் கொடையளித்த செய்திகளைக் குறிப்பிடும் கல்வெட்டு, என்று எழுதும் ஜெ. ராஜாமுகமது, அக்கல்வெட்டின் அடிப்படையில், 'குகை இக்காலத்திற்கு முன்பே இருந்திருக்கவேண்டும்' என்றும் எழுதியுள்ளார். மு. கு. நூல், ப. 240. சு. இராசவேல், அ. கி. சேஷாத்திரி இவர்கள் இக்கல்வெட்டு குடைவரைக் கோயிலிலேயே இருப்பதாகவும் பெருந்தேவியே குடைவரையைக் குடைந்து அமைத்ததாகவும் எழுதியுள்ளனர். மு. கு. நூல், ப. 186. 28. New Indian Eகpress, 30. 5. 2006. 29. IPS: 439; என். சேதுராமன், பாண்டியர் வரலாறு, ப. 154. 30. The Hindu, 17. 8. 2003. 31. IPS: 735. 32. IPS: 459; என். சேதுராமன், மு. கு. நூல், ப. 194. 33. IPS: 460. 34. IPS: 685. 35. IPS: 792. 36. IPS: 872. 37. IPS: 873. 38. IPS: 967. 39. IPS: 687. 40. IPS: 692. 41. IPS: 764. 42. தினமணி, 5. 8. 2003. 43. IPS: 764. 44. IPS: 800. 45. IPS: 893. 46. IPS: 923. 47. தினமணி, 5. 8. 2003. 48. The Hindu, 17. 8. 2003. 49. தினமணி, 5. 8. 2003. 50. மேற்படி. 51. இது திருமங்கையாழ்வாரின் பாடல் பெற்ற தலம் என்று குறிப்பிடும் ஜெ. ராஜாமுகமது, அடைப்புக்குறிகளுக்குள் பெரிய திருமொழி என்று வேறு எழுதியுள்ளார். மு. கு. நூல், ப. 240. திருமங்கையாழ்வார் தம் பெரிய திருமடலிலும் ஓரிடத்தில் இத்தலத்தைக் குறிப்பிடுவது இங்குக் கருதத்தக்கது. சு. இராசவேல், அ. கி. சேஷாத்திரி, ஆகியோர், 'இ ச்சிற்பக் காட்சி இக்குடைவரையைப் பெரிதும் அழகு செய்கின்றது. இதனைத் திருமங்கை ஆழ்வார் பாடியுள்ளார். இவ்விறைவனைத் 'திருமேய மலையாளன் எனக் குறிக்கிறார்' என்றெல்லாம் எழுதியுள்ளனர். மு. கு. நூல். ப. 240. 52. திருமங்கையாழ்வார் 1206, 1524, 1660, 1760, 1852, 2016, 2674 (126) நாலாயிர திவ்யப் பிரபந்தம், ப
கொற்றவை மலை ஐயன்
எஸ். இராமச்சந்திரன்
கேரள மாநிலத்தில் பிரபலமான ஐயப்பன் கோயில் அமைந்துள்ள மலை சபரிமலை என வழங்கப்படுகிறது. சபரி என்ற பெயர் கொற்றவையின் பெயர்களுள் ஒன்றாகும். இவள், ‘சபரர்’ எனப்பட்ட பாலை நில எயினர்களின்1 தெய்வமாவாள். இவளை நக்ன சபரி, கொட்டவி, கொட்டாரா என்ற பெயர்களை உடைய துர்க்கையாகவும், மகாபலியின் தாயாகவும் வடமொழிப் புராணங்கள் சித்திரிக்கின்றன.2 மகாபலியைத் துளுமொழி வழங்கிய கன்னட – கேரளப் பகுதி மக்களின் மூதாதையாகக் கருதும் வழக்கமுள்ளது. எனவே, கேரள மாநிலத்திலுள்ள சபரி மலையைக் கொற்றவை மலை எனக் குறிப்பிடுவதில் தவறில்லை எனக் கருதுகிறேன். சபரிமலை ஐயப்பன் வழிபாட்டின் வெகுஜனத் தன்மை பற்றியும் அதன் பெளத்த மூலம் பற்றியும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, பள்ளிக்கட்டு, தர்மசாஸ்தா போன்ற வழக்குகளும், “புத்தம் சரணம் கச்சாமி” என்பதையொத்த “சாமியே சரணம் ஐயப்பா” முதலிய சரண கோஷங்களும் சாதி அந்தஸ்து ஏற்றத்தாழ்வுகளைப் பாராட்டாமல் பயண அனுபவ மூப்பு அடிப்படையில் ஒருவரைக் குருசாமியாக ஏற்கும் மரபும் பெளத்தத் தொடர்புகளை வலியுறுத்தும் கூறுகளாக அமைந்துள்ளன என்பதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். வழிபாட்டு நெறிகளிலும் வாழ்வியல் முறைகளிலும் வெகுஜனங்களின் பங்கேற்பு மூலமாகவே முடிவுகள் எடுக்கப்படும் பழங்குடிச் சமூகக் குடியரசு நெறிமுறைகளின் அடிப்படையில் தோன்றிய பெளத்த சங்கத்தின் தன்மைகளை ஜீரணித்து வளர்ந்ததே சபரிமலை ஐயப்பன் வழிபாட்டு மரபு என்பதை இவ்வழக்கங்கள் உணர்த்துகின்றன. கேரள மாநிலத்தைப் பொருத்தவரை, பெளத்த சமய மரபுகள் வைதிக இந்து சமய வழிபாட்டு நெறிகளுக்குள் ஈர்த்துத் தன்மயமாக்கிக் கொள்ளப்பட்ட நடைமுறை கி.பி. 12-13ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்ததாகத் தெரிகிறது. தென்கேரளப் பகுதியைச் சேர்ந்த வேணாட்டு ஆய் மன்னர்களின் 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையத்துச் சாசனம் பெளத்த சமயத் தொடர்புடையதாகும்.3 இச்செப்பேடு, “சுத்தோதனன் மகனான புத்த பகவான் மூன்று உலகங்களையும் குறைவின்றிக் காப்பாற்றுவாராக” என்றும், “பெளத்த தர்மம், பெளத்த சங்கம் என்பவை பூமிதேவியின் கண்களாகத் திகழ்க” என்றும், “அமுதைப் பொழியும் நிலவொளிக்கு ஒப்பான அவலோகித போதிசத்வரின் கருணைப் பார்வை குறைவற்ற செல்வத்தை அருளட்டும்” என்றும் துதிக்கிறது. இச்செப்பேடு திருமூலபாதத்து படாரர் எனப்பட்ட இறைவனுக்கு வழங்கப்பட்ட நிலக்கொடையைப் பதிவுசெய்துள்ளது. திருமூல பாதத்து படாரர் என்பது ஸ்ரீமூலவாஸம் என்ற தலத்தில் எழுந்தருளியிருந்த, லோகநாதர் என அழைக்கப்பட்ட போதிசத்வ அவலோகிதேஸ்வரரைக் குறிக்கும். சுத்தோதனனுக்கும் மாயாதேவிக்கும் பிறந்த கெளதம சித்தார்த்தர் என்பவர் மானுஷி புத்தர் (புத்தரின் மனித வடிவம்) ஆவார் என்றும், அவலோகிதர் என்பது அவருடைய போதிசத்வ வடிவம் ஆகுமென்றும் அமிதாபர் என்பது அவருடைய தியானி புத்தர் வடிவம் ஆகுமென்றும் புத்த சமயத்தவர் கருதுகின்றனர். கி.பி. 10-11ஆம் நூற்றாண்டுகளில் சோழப் பேரரசின் விரிவாக்கம் நிகழ்ந்தது. பாண்டிய நாடு சோழ அரசின் அங்கமாக ஆக்கப்பட்டது. குறுகிய காலத்திற்குச் சேரநாடும் சோழர்களின் ஆளுகையின்கீழ் வந்தது. சோழர்கள், சேர, சோழ, பாண்டிய நாடுகளின் அதிபதி என்று பொருள்படும் வகையில் ‘மும்முடிச் சோழன்’ எனப் பட்டம் சூடினர். ஆயினும், சேரநாட்டுப் பெருமாக்கோதை மன்னர்கள் ஆட்சிதான் வீழ்ச்சியடைந்ததே தவிரச் சேர நாடு முழுமையாகச் சோழப் பேரரசுக்குள் அடங்கிவிடவில்லை. இக்காலகட்டத்தை “நூறாண்டு போர்க் காலம்” எனக் கேரள வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுவர். இப்போரின் விளைவாகச் சேர நாட்டின் ஆட்சியமைப்பிலும் சமூக அமைப்பிலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. கி.பி. 12-13ஆம் நூற்றாண்டுகளில் பெருமாக்கோதை மன்னர்களின் ஆட்சி முழுமையாக வீழ்ச்சியடைந்தது. அவ்வீழ்ச்சி கி.பி. 14ஆம் நூற்றாண்டில் கண்ணனூர்க் கோலாதிரி (கோலத் திருப்பாதம்), பெருந்தலமன்ற வள்ளுவக் கோனாத்திரி (வள்ளுவக் கோன் திருப்பாதம்), கோழிக்கோடு சாமூதிரி (சாமிதிருப்பாதம்), ஆற்றிங்கல் வேணாட்டுத் திருவடி போன்ற சிற்றரசர்களின் எழுச்சிக்கு வழிவகுத்தது. இச்சிற்றரசர்களின் பட்டப் பெயர்கள் திருப்பாதம் அல்லது திருவடி என்று அமைந்திருப்பது பெளத்த மரபின் தொடர்ச்சியையே காட்டும். மிகப் பழமையான ஹீனயான பெளத்தத்தில் புத்தருடைய திருவடிகளைக் குறிக்கின்ற பாத பீடிகையே வழிபடப்பெற்றது. இந்து சமயத்தில் நிலவுகிற ஸ்ரீபாத வழிபாடு என்பது ஹீனயான பெளத்த மரபினை மூலமாகக் கொண்டதே ஆகும். கடவுளையும் கடவுளர் என அழைக்கப்பட்ட முனிவர்களையும் அடிகள் எனக் குறிப்பிடும் வழக்கம் இம்மரபின் தொடர்ச்சியே. சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள் என்று குறிப்பிடப்படுவது நாம் அறிந்ததே. இன்றும் வடகேரளப் பகுதியில் துளு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பிராம்மணர்களிடையே இப்பொருளுடைய அடிகா என்ற குடும்பப்பெயர் வழக்கிலுள்ளது. இதுபோன்றே நம்பிதிருப்பாதம் (இன்றைய வழக்கில் நம்பூதிரிபாத்) என்ற பட்டப் பெயர் கொண்ட பிராம்மணர்கள் கேரளச் சமூக அமைப்பில் முதன்மையான ஆதிக்க சக்தியாக உருவெடுத்தனர். இத்தகைய நிகழ்வுகளின் விளைவாகச் சேரநாடு கேரள ராஜ்ஜியமாகவும், பரசுராம க்ஷேத்திரமாகவும் மாறுகிற சூழல் உருவாயிற்று. பெளத்த சமயத்தின் நிர்வாக அமைப்பு, வெறும் கூடாக மட்டுமே நீடித்தது. இதனையடுத்து, கி.பி. 14ஆம் நூற்றாண்டில் மதுரைப் பாண்டிய அரசினை வீழ்த்தி உருவான மதுரை சுல்தானிய அரசாட்சி, கர்நாடக மாநிலம் வரை வியாபித்த டில்லி, பாமினி சுல்தான்களின் ஆட்சி ஆகியவற்றின் தாக்கத்தால் கேரளக் கடற்கரை இஸ்லாமிய மரக்கல நாயர்களின் ஆதிக்கத்தின்கீழ் வந்தது. இவற்றின் ஒட்டுமொத்த விளைவாகக் கேரளக் கடற்கரையிலும், தமிழகத்தின் நாகப்பட்டினம், இராமேஸ்வரம் போன்ற சில கடற்கரை நகரங்களிலும் ஓரளவு உயிர்ப்புடன் இருந்த பெளத்த சமயத்தின் இறுதிமூச்சும் நின்றுபோனது. பெளத்த சமயம் அது தோன்றிய இடமாகிய இந்திய நாட்டிலேயே பின்பற்றுவாரின்றி மறைந்துபோனது. இந்நிகழ்வுப் போக்கின் விளைவாகவே சபரிமலை ஐயப்பன் முற்றிலும் இந்து சமய வழிபாட்டு முறையில் வழிபடப்பெறும் தெய்வமாக மாறிப்போனார். இஸ்லாமியர்களுடனான இணக்கத்தை வெளிப்படுத்தும் வண்ணம் சபரிமலை ஐயப்பன் வழிபாட்டில் வாவர் (பாபர்) சமாதி வழிபாட்டுக்கும் இடமளிக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பனைப் பற்றிய இத்தகைய ஆய்வு முடிவுகள் அறிஞர்களால் பரவலாக விவாதிக்கப்பட்டுள்ளன.4 ஆனால், சபரிமலை ஐயப்பனின் பழங்குடி மூலத்தைப்பற்றி ஆழமான ஆய்வு ஏதும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. ஐயப்பன் வன்புலி வாகனனாக இன்றுவரை வழிபடப்படுவது, ராமாயணத்தில் இடம்பெறும் சபரி என்ற வேடர் குலப் பெண் அப்பகுதியில் வாழ்ந்ததாகவும் வன வாசத்தின்போது ராமன் அவளைச் சந்தித்ததாகவும் பம்பை திரிவேணி சங்கமத்தில் ராமன் தன் தந்தை தசரதனுக்குரிய சிராத்தச் சடங்குகளைச் செய்ததாகவும் நிலவுகின்ற நம்பிக்கை, போன்றவற்றின் அடிப்படையில் இம்மலை சபரர் என அழைக்கப்பட்ட எயினர்களின் வாழ்விடமாகவே முற்காலத்தில் இருந்துள்ளது என்று முடிவு செய்வது எளிது. ஆயினும், இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. சபரர் என்ற பழங்குடிகள் பற்றி இந்தியப் புராணங்களில் இடம்பெற்றுள்ள விவரங்களை ஆராய்ந்தால் அவர்களுடைய வாழ்க்கை முறை குறிஞ்சி நிலப் பூர்வகுடிகளான குறவர்களைப் போன்று தினை முதலான மலைப்பயிர் விவசாயம் சார்ந்ததன்று எனத் தெரியவருகிறது. குன்றக் குறவர்கள் வடமொழிப் புராணங்களில் கிராதர் எனக் குறிப்பிடப்படுகின்றனர்.5 முற்றிலும் வேட்டையும் ஆனிரை கவர்தலுமே சபரர்களுடைய வாழ்க்கை முறை. காட்டு எருமைகள், மலை ஆடுகள் போன்றவற்றை வேட்டையாடி உண்டு வாழ்ந்தவர்கள் சபரர் ஆவர். பிற்காலத் தமிழிலக்கியங்கள் கள்ளர் - மறவர் குலத்தவரைச் சபரர் என்றே குறிப்பிடுகின்றன. கள்ளர் - மறவர்களுடைய வழிபடு கடவுளான கொற்றவை ஆனிரை கவரும் வெட்சிப் போர்த் தெய்வமாகும். சபரர் குலத்தவர்களின் வழிபாட்டு எச்சங்களாகச் சபரிமலைப் பெருவழிப் பாதையில் அமைந்துள்ள எருமைகொல்லி (எருமேலி), காளைகட்டி போன்ற ஊர்ப் பெயர்களையும், மஹிஷி என்ற எருமை வடிவப் பெண் தெய்வத்தை ஐயப்பன் கொல்வது, மஹிஷியைப் புதைத்த இடமாகிய கல்லிடு குன்றில் பக்தர்கள் இன்றும் கற்களை இடுவது போன்ற வழக்கங்களையும் குறிப்பிடலாம். ‘உவலிடுபதுக்கை’ என்றும் “மறவர்களின் அம்புபட்டு வீழ்ந்தோரின் வம்பப்பதுக்கை” என்றும் சங்க இலக்கியங்கள் இவ்வழக்கத்தைக் குறிப்பிடுகின்றன. சபரர்களைப் பழங்கற்காலத்தின் இறுதிப் பகுதியைச் சார்ந்த குடியினராகவே தொல்லியலாளர்கள் அடையாளம் காண்பர்.
கொற்றவையின் ஆயுதமாகப் பிற்காலச் சிற்பங்களில் சித்திரிக்கப்படும் சக்கரத்தின் பூர்வ வடிவம் பழங்கற்கால வேட்டைக் கருவியாகிய வட்டு (disc) ஆகும். பழங்கற்காலப் பண்பாட்டு நிலைச் சமூகத்தவர் ஆப்பிரிக்க நிக்ராய்டு இனக் கூறுகளைக் கொண்டவர்களாவர். இவர்கள், தொல்பழங்காலத்திலேயே குன்றக் குறவர் போன்ற பிற பழங்குடிகளைச் சேர்ந்த மகளிரைச் சிறையெடுத்து மணம்புரிந்ததன் மூலம் குறவர் குலத்தவரின் மானிடவியல் பண்பாட்டுக் கூறுகள் சிலவற்றை உள்வாங்கியிருக்கக்கூடும். கொற்றவை வழிபாட்டுச் சமூகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி நிலையைப் பிரதிநிதித்துவம் செய்தவர்கள் இடப்பெயர்வு விவசாய வாழ்நிலையைச் சார்ந்தவர்கள் ஆவர்.
இச்சமூகத்தவரைப் புதிய கற்காலக் குடியினர் என நாம் அடையாளம் காணமுடியும். புதிய கற்காலக் குடியினரின் வழிபடு தெய்வமாக அல்லது வேட்டையின்போதும் போர்களின்போதும் வழிநடத்துகிற தளபதியாகச் சங்க காலக் கூற்றுத் தெய்வத்தை நாம் அடையாளம் காணமுடியும். கூற்று என்ற சொல் பொதுப்பாலில் அமைந்திருப்பினும் இத்தெய்வத்தைக் கொற்றவையின் ஆண் வடிவமாகவே அடையாளம் காணமுடிகிறது. இத்தெய்வம் விரும்பிச் சூடும் மலர் கொன்றை ஆகும். கூற்று என்ற இத்தெய்வம் புலித்தோலை ஆடையாக உடுத்த தெய்வம் என்று கலித்தொகைக் கடவுள் வாழ்த்துப்பாடல் (“கொலையுழுவைத் தோலசைஇக் கொன்றைத்தார் சுவல் புரள”) கூறுகின்றது. சைவ சமயம் பல்வேறு சமூகங்களின் வழிபாட்டு அம்சங்களையும் பொருத்தமாக உள்ளடக்கிச் சிவனென்ற பெருந்தெய்வமாக வடிவமைத்தபோது கூற்று என்ற இத்தெய்வம் காரி என்ற பெயரிலும், பைரவர் என்ற பெயரிலும் போற்றப்படும் சிவமூர்த்தமாகச் சித்திரிக்கப்பட்டது. கன்னட வீரசைவ நெறியின் தலைமைத் தெய்வமாகிய வீரபத்திரர் பைரவக் கடவுளின் வடிவமே ஆவார். அடிப்படையில் இத்தெய்வம் முல்லை நில வேட்டுவர்களின் தெய்வமாகும்.
முல்லை நிற வேட்டுவர்கள் கருத்த நிறமுடைய முன்னிலை ஆஸ்திரலாய்டுப் பழங்குடிகள் என அடையாளம் காண இயலும். சபரிமலையில் வன்புலி வாகனனாகக் காட்சியளிக்கும் ஐயன், பெளத்த சமயத்தவரின் தர்மசாஸ்தாவாக உருவெடுக்கும் முன்னர், கூற்றுத் தெய்வத்தின் தன்மைகள் கொண்ட காரியாகவே இருந்திருக்க வேண்டும் என நாம் முடிவு செய்யலாம். காரி என்ற பெயர் சாத்தனுக்கும் உரியதென்றும் தமிழ் நிகண்டுகள் குறிப்பிடுகின்றன. பைரவரைச் சிவபெருமானின் பிள்ளை எனப் பெரியபுராணம் குறிப்பிடுவது போன்றே சிவபிரான், “சாத்தனை மகனா வைத்தார்” என அப்பர் பெருமான் தமது தேவாரத்தில் குறிப்பிடுகிறார். இத்தகைய ஒப்புமைகள் காணப்பட்டாலும், ஐயனார் அல்லது ஐயப்பன் என்ற பெயர் தகப்பனைக் குறிக்குமே தவிரப் பிள்ளையைக் குறிக்காது. கூற்று வழிபாடு என்பது பைரவ வடிவம், யமன் என்ற தென்புலக் காவல்காரன் வடிவம் ஆகியவற்றோடுதான் நெருக்கமுடையதாகும். யமன் என்பது இறந்து, மீண்டும் பிறக்கும் தன்மையின் உருவகமே. ஆனால், ஐயன் (பித்ரு) என்பதோ சிவபதம் என்றும், சாயுஜ்யம் என்றும் பிற்காலச் சைவ சித்தாந்தத்தில் குறிப்பிடப்படுவது போன்று, மீண்டும் பிறவாத உலகுக்குச் சென்றுவிட்ட தென்புலத் தலைவன் வடிவமாகும். தென்புலத் தெய்வம் என்பது netherworld எனக்குறிப்பிடப்பட்ட நெய்தல் உலகின் தலைவனாகிய வருணனையே குறிக்கும்.
இன்றைய நிலையில் சபரிமலைப் பயணத்திலோ, ஐயப்பன் வழிபாட்டிலோ பருவ வயதடைந்த பெண்டிர் அனுமதிக்கப்படாமல் இருப்பது ஆராயத்தக்கதாகும். இது ஒரு பழங்குடி நம்பிக்கையாகவே தோன்றுகிறது. குஹ்யகர்கள் எனப்படும் குள்ள வடிவக் குலக்குழுவினர் குருதியின் மணத்தை விரும்பி வருவரென்றும், அவர்களின் தலைவனாகிய குகன் (முருகன்) மாதவிடாய்க் காலத்துப் பெண்டிரை ஈர்த்து அவர்களை மனநோய்க்கு ஆளாக்கிவிடுவான் என்றும் பழங்குடி மக்கள் அஞ்சினர். புறநானூற்றில் (பா. 299) அணங்குடை முருகன் கோட்டத்தில் கலம்தொடா மகளிர் (உணவு சமைக்கும் கலங்களைத் தொடுவதற்கு அனுமதிக்கப்படாத மாதவிடாய்க் காலப் பெண்டிர்) புகுந்தால் சுருண்டு விழுந்துவிடுவர் என்ற குறிப்பு காணப்படுகிறது. இது மேற்குறித்த குஹ்யகர்கள் தொடர்பான நம்பிக்கையின் பதிவே எனலாம். குறிஞ்சி நிலத்தில் அமைந்துள்ள சபரிமலைச் சாத்தன் கோயிலுக்கு நீண்ட நெடும் மலைப்பாதை வழியாக மகளிர் பயணம் செய்கின்ற அவசியம் நேரும்பட்சத்தில் அவர்களுக்கு மாதவிடாய்க் காலம் வந்துவிட்டால் ஐயப்பனின் வாகனமான புலியினாலேயே ஊறு நேர்ந்துவிடலாம் என்ற அச்சமும் இத்தடைக்குக் காரணமாக இருந்திருக்கலாம். எவ்வாறாயினும், இந்நம்பிக்கை சபரர்களிடையே நிலவிய நம்பிக்கை எனக் கொள்வதைவிட, குறிஞ்சி நிலக் குடிகளான குறவர்களிடையிலும், முல்லை நில வேட்டுவர்களிடையிலும் நிலவிய நம்பிக்கையாகவே நாம் கருதலாம்.6 மலபார்ப் பகுதியிலுள்ள வயநாடு வட்டத்தில் அமைந்துள்ள எடக்கல் மலையில் கி.பி. 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமிக் கல்வெட்டு ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. அக்கல்வெட்டில் ”பல்புலி தாத்தகாரி” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.7 இக்கல்வெட்டு உள்ள குகையினை அப்பகுதிப் பழங்குடியினர் மிகவும் புனிதமாகக் கருதி வழிபட்டு வருகின்றனர் என்ற செய்தியும் அறிஞர்களால் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் இடம்பெறுகிற தாத்தகாரி என்பதற்கு மூதாதையாகிய ஐயனார் என்று பொருள்கொள்ள வாய்ப்புள்ளது. பல்புலி என்பது பல புலிகளை வசப்படுத்தியவன் என்ற நேர்ப்பொருளும் புலிவாகனன் என்ற குறிப்புப் பொருளும் கொண்ட அடைமொழியாக இருக்கலாம்.
எனவே, தென் கன்னடத்தைச் சேர்ந்த, முல்லை நில வேட்டுவர்களின் தெய்வமாகிய வைரவர், யக்ஷர் குலக் கலப்பில் தோன்றிய, குறிஞ்சிக் கிழவனாகிய முருகன், யக்ஷர் தலைவனாகிய குபேரன் ஆகியோரின் தன்மைகளை உள்ளடக்கிய தாத்தகாரியைக் குறிக்கின்ற கல்வெட்டாக இதனைக் கருதலாம். ஐயப்பன் வழிபாட்டில் நீடித்து வருகின்ற மூதாதையர் வழிபாட்டுக்கூறுகளை இன்றும் நாம் எளிதில் அடையாளம் காணமுடியும். மழைக் காலத்தையடுத்து வருகிற சரத் காலம் (மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்கள்) மூதாதையர் வழிபாட்டிற்குரிய காலமாகும். குறிப்பாகப் பாரசிக ஜொராஸ்ட்ரிய சமயத்தில் மாசி மாதத்திற்குச் சமமாக வருகின்ற பிர்தெளஸ் மாதம் மூதாதையர் வழிபாட்டு மாதமாகக் கருதப்படுகிறது சைவ சமயத்தில் தை மாத அமாவாசையும், மாசி மாதத் தேய்பிறை சதுர்தசியும் (மகா சிவராத்திரி) முன்னோர் வழிபாட்டுக்குரிய நாள்களாகும். பாரசிக ஜொராஸ்ட்ரிய சமயம் சார்ந்த மரணச் சடங்குகளில் உறவினர்கள் கூடி சக்தித் என்ற பெயரில் விருந்துண்பது ஓர் அம்சமாக இடம்பெறும்.8 இறந்தவர் ஆவி வடிவில் வந்து உண்பதற்காக ஓர் இருக்கையும் உணவும் அவருக்கென்று ஒதுக்கிவைக்கப்படும். சபரிமலை யாத்திரையின்போது ஐயப்ப சத்யா என்ற பெயரில் பம்பை நதிக்கரையில் பித்ரு தர்ப்பணத்துடன் விருந்து படைப்பது ஐயப்ப பக்தர்களிடையே இன்றும் நடைமுறையில் உள்ளது. ஐயப்பனும் பக்தர்களுடன் சேர்ந்து உணவருந்துவதாகக் கருதப்படும். சத்யா என்பதும் சக்தித் என்ற பாரசிக மரபும் ஒன்றே என்பதில் ஐயமில்லை. முன்னோர் வழிபாட்டு மரபுகளோடு இத்தலத்துக்கு உள்ள தொடர்பினை உள்ளடக்கும் வகையிலும், இராமாயணக் கதையுடன் இந்திய நாட்டு வழிபாட்டுத் தலங்களைத் தொடர்புபடுத்தும் மனப்பாங்கின் வெளிப்பாடாகவும், ராமன் தசரதனுக்குரிய சிராத்தச் சடங்கினை இங்கு நிறைவேற்றியதாகக் கதை புனையப்பட்டிருக்க வேண்டும்.
பாரசிக ஜொராஸ்ட்ரிய மதத்தின் ஒரு பிரிவாகிய மாகி (magi) என்பது இன்றும் கேரள நாட்டில் மந்திரவாதிகளைக் குறிக்கின்ற பெயராக வழக்கில் உள்ளது மாகி என்ற சொல்லிலிருந்துதான் magic என்ற சொல் தோன்றியுள்ளது. முதன்முதலில் இறந்து, மரணம் என்பது இத்தகையது என மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் உணர்த்திய வழிகாட்டி யமன் ஆவான். (இது அமாவாசைப் பட்சத்து நிலவைக் குறிக்கும்.) யமன், பாரசீக சமய வழக்கில் ‘யிமா’ எனப்படுவான். மரணச் சடங்கைக் குறிப்பிடுவதற்குப் பயன்பட்ட சங்கத் தமிழ்ச் சொல்லாகிய ‘ஈமம்’ என்பது யிமா என்ற சொல்லுடன் நெருக்கம் உடையதாகத் தெரிகிறது. முதுமக்கள் தாழி என்பது ஈமத் தாழி எனப் புறநானூற்றில் (பா. 256:5) குறிப்பிடப்படுகிறது. தாழிகளில் உடலை அடக்கம் செய்யும் மரபு என்பது பாரசீகச் சமய மரபுகளுடன் ஒப்புமையுடையதாகும். ஐயனார் வழிபாடு என்பதே வேத கால வருணன் வழிபாட்டுடனும் ஜொராஸ்ட்ரிய சமய அஹுரமஸ்தா வழிபாட்டுடனும் மிக நெருங்கிய உறவுடைய வழிபாடாகும். அஹுரமஸ்தா என்ற சொல் அசுரர் தலைவன் எனப் பொருள்படும். அதாவது, சுரா பானம் அருந்தாத, பிரபஞ்ச ஒழுங்கைக் காக்கும் தலைவன் என பாரசீகத்தின் கிளை மொழியாகிய குஜராத்திப் பார்சி மொழியில் வருணன் குறிப்பிடப்பட்டான். ‘பாசண்டம்’ என்ற பெயருடையது. பாசண்டம் என்ற சொல், வைதிக மரபுக்கு மாறானது என்ற பொருளில் இந்திய மொழிகளில் வழங்கிற்று. ஐயனாரைத் தொண்ணூற்றறு வகைப் பாசண்டச் சாத்தன் எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. தொண்ணூற்று வகைப்பட்ட அவைதிகத் தத்துவ மரபுகளுக்கும் தலைவன் என்பது இதற்குப் பொருள். ஜொராஸ்ட்ரிய சமயத்தின் தலைமைத் தெய்வமாகிய அஹுரமஸ்தாவின் மகன் ஆதர் எனப்பட்ட நெறிப்பட்ட நெருப்புக் கடவுள் ஆவான். ஆதர் வழிபாட்டுப் பூசாரி ‘அத்ரவன்’ எனப்பட்டான். இது, அதர்வண வேதம் என்ற பெயரில் இடம்பெறும் ‘அதர்வண’ என்ற சொல்லுடன் தொடர்புடையதாகும். இச்சொல் பாசண்ட மொழியில் ‘அத்ரணன்’ என வழங்கிற்று. கர்நாடகக் கடற்கரைப் பகுதியாகிய துளு மொழி வழங்குகின்ற பகுதியில் அதர்வண வேதத்துடன் தொடர்புடைய அத்ருணோ என்ற சொல் பில்லி சூனியம் வைப்பவன், ஏமாற்றுக்காரன் என்ற பொருளில் வழங்குகிறது. அதர்வண வேத சடங்குகள் மாகி மந்திரவாத வழக்குகள் தோன்றுவதற்கு அடிப்படையாக அமைந்திருக்கவேண்டும் என்பதில் ஐயமில்லை. எனவே, துளு மொழி பேசிய மக்கள் தொகுதியின் குடியேற்றத்துடன் உடன் நிகழ்ச்சியாக இத்தகைய வழிபாட்டு நெறிகள் சபரிமலை ஐயப்ப வழிபாட்டில் ஊடுருவி இருக்கலாம். அடிக்குறிப்புகள் 1. சபரர், புளிந்தர், புளிஞர் என்ற சொற்கள் எயினர்களைக் குறிக்கும். (பெருங்கதை உஞ்சைக்காண்டம் : 55 ; மகாவம்சம் VII : 68.) திவாகர நிகண்டு இவர்களைப் பாலை நிலக் குடிகளாகக் குறிப்பிடுகிறது. (கம்ப ராமாயணம், வாலி வதைப்படலம், பா. 124.) 2. கிருஷ்ண – வாணாசுர யுத்தம் தொடர்பான கதைக் குறிப்புகளில் இவ்விவரங்கள் இடம்பெற்றுள்ளன. ஸ்ரீமத்பாகவதம் 10:63:20-21. p. 164, The Students Sanskrit English Dictionary, Vaman Shivram Apte, Motilal Banarsidass, New Delhi, 1969. 3. கோக்கருநந்தடக்கனின் பாலியத்துச் சாசனம், பக். அ24-அ34, பாண்டியர் செப்பேடுகள் பத்து, பதிப்பு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை-600113, 1999. 4. கண்ணகி கோயில் எனக் கருதப்படும் (சுருளிமலை) திருப்பூரணமலை படாரியார் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள கி.பி. 13ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் பூர்ணியாற்றுச் சாத்தன், பெரியாற்றுச் சாத்தன் என்ற இரு சாத்தன் கோயில்கள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றுள் ஒன்று, சபரிமலை பொன்னம்பலமேட்டிலிருந்து கி.பி. 14ஆம் நூற்றாண்டில் இஸ்லாமியர் ஆதிக்கத்தின்போது அழிந்துபோன கோயிலாக இருக்கலாம் என்றும், அதன் பின்னரே இப்போதைய இடத்தில் ஐயப்பன் கோயில் உருவாகியிருக்க வேண்டுமென்றும் கருதப்படுகின்றன. பார்க்க: திரு. கோவிந்தசாமி அவர்கள் கட்டுரை, கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பொன்விழா மலர், திருவனந்தபுரம். 5. வடமொழி இலக்கியங்களில் பல இடங்களில் சபரர், கிராதர், நிஷாதர் போன்ற சொற்கள் வேறுபாடின்றிப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது உண்மையே. எனினும், குன்றக் குறவர்களே கிராதர் என்ற பெயருக்கு உரியவர்களாவர். கிராதர் என்ற சொல் மலையெனப் பொருள்படும் கிரி என்ற சொல்லுடன் தொடர்புடையதாகும். கிராதர் என்ற சமஸ்கிருத வழக்கு, பிராகிருதத்தில் சிலாதர் என்றும் சங்கத் தமிழில் சிலதா என்றும் வழங்கிற்று. மலையைக் குறிக்கும் பிற சொற்களான சிலா, கிலா, சைலம், கைலம், கல் முதலான சொற்கள் சிலதருடன் தொடர்புடையவை. 6. வெகுஜன ஊடகங்களால் - குறிப்பாகத் தொலைக்காட்சி விவாதங்களில் - அறிவுஜீவிகளாக முன்னிறுத்தப்படும் சில ‘மாடம்பிகள்’, பழங்குடிகளின் இத்தகைய நம்பிக்கைகள் பற்றிய அடிப்படைப் புரிதல்கூட இல்லாமல், இந்நம்பிக்கையை வைதிக இந்து சமயத்துக்கு மட்டுமே உரியதாககச் சொல்லி, இவ்வழக்கத்தை வஹாபிய இஸ்லாம் போன்ற அரபு இனவாத - ஆபிரகாமிய அடிப்படைவாதங்கள் வலியுறுத்தும் பெண்ணடிமைத்தனத்தின் வெளிப்பாடுகளுடன் ஒப்பிட்டுப் பிரச்சாரம் செய்வது ஓர் அண்மைக் காலப் போக்காக உருவாகியுள்ளது. 7. ஐராவதம் மகாதேவன் தலைமையில் அமைந்த குழுவினரால் 1998ஆம் ஆண்டு இக்கல்வெட்டு கண்டறியப்பட்டு வாசிக்கப்பட்டது. ”பல்புலி தாத்தகாரி” என வாசிக்கப்பட்டுள்ளது. p. 476, Early Tamil Epigraphy, I. Mahadevan, Cre-A, Chennai, 2003. 8. The Zend-Avesta, F. Max Muller, Motilal Banarsidass, New Delhi. (நன்றி: தமிழினி, பிப்ரவரி 2009) sr@sishri.org

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.