Friday, April 22, 2016

புறப்பொருள் வென்பாமாலை பாடிய சேர மன்னன்




மறவர்குடியே முதுகுடி என புகழ்ந்த சேர மன்னன்


தொல்காப்பியர், அன்பினால் நிகழும் அகத்திணை ஒழுகலாற்றை ஏழு திணையாகப் பகுத்தாற் போன்று, அன்பின் வழியதாய் அறமும் மறமும் பற்றிப் புறத்தே நிகழும் செயல்முறைகளையும் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்னும் ஏழு திணைகளாகப் பகுத்து இலக்கணம் செய்தார். இதனை உரையாசிரியர்கள் “அகங்கை இரண்டென்றால் புறங்கையும் இரண்டே என்றாற் போல, அகத்திணை ஏழனுக்குப் புறத்திணை ஏழென்றலே பொருத்தமுடையது” என்று தருக்க முறையால் நிறுவினார்கள். (அகங்கை = உள்ளங்கை)

இந்த புறப்பொருள் வென்பாமாலை என்ற நூலை எழுதியவர் யார் என்றால் சேரர் குலத்தினில் தோன்றிய அய்யனாரிதனார் என்பவராவார். பொதுவாக இனத்தை பாடுபவர்களாக கம்பர் ஒட்டக்கூத்தர் போன்றார் இருப்பர். அதுக்கும் ஆதாரமிருக்குமென்றால் அதுவும் கிடையாது ஆனால் இங்கு மறவரின் பெருமைகளே உறைப்பதே சேர மன்னன்.

இன்னோர் சேரன் தன் பாடலில்

"அரிமான் இடித்தன்ன, அஞ்சிலை வல்வில் புரிநான், புடையி
புறங்கண்டல் அல்லால் இனைபடை தானை
அரசரோடு உறினும் கனைதொடை நாணும்,
கடுந்தொடி ஆர்ப்பின் எருத்து வலிய எறுழ்
நோக்கு இரலை மருப்பின் திருந்து
மறிந்துவீழ் தாடி உருத்த கடுஞ்சினத்து
ஓடா மறவர் பொருள் கொண்டு
புன்செயின் அல்லதை அன்போடு அருள்
புறம் மாறிய ஆரிடை அத்தம்.--"கடுங்கோ சேரமான்".(கலித்தொகை)
பொருள்:

சேனையணிகள் சூழ,அரசனே பெரும்படையுடன் வந்தாலும் அஞ்ச மாட்டர்கள்.சிலை மரத்தால் செய்த வலிமை மிகுந்த வில்லை வளைந்து அதிலே முறுக்கமைந்த நாண் கயிற்றைப் பூட்டுவர், அவர் மீது கணைதொடுப்பது தம் வீரத்துக்கு தகுதியற்றது என்று வெட்கம் கொண்டு நாணை தெறித்து ஒலி எழுப்புவர். சிங்கக் குரலைக் கேட்டு விலங்கினம் சிதறி ஓடுவதுபோல் அவ்வொலிகேட்டே அரசரோடு வந்த பெரும் படையினரும் பின் முதுகுகாட்டி ஓடுவர். அத்தகைய கொடிய ஆற்றல்கொண்டவர்,பாலை நில காட்டிலே வாழும் மறவர்கள். அவர்கள் ஆராவாரமாக வருவது கடிய துடியின் ஒலியோடு கேட்கும். வன்மைகொண்ட பார்வையும் வலி மிகுந்த கழுத்தும் உடைய கலைமானின் கொம்புகலைப் போல,அவர்களது மீசை முறுக்கொண்டு திருகித் தாழ்ந்து தொங்கும். வெம்மையான கொடுஞ்சினம் உடைய அவர்கள் செய்யும் தொழிலே தனி வகையானது. வழியில் வருபவர்களை தாக்கி அவர்களுக்கு புண்களை பரிசாக தரும் வெம்மையுடைய பாலை நிலத்தவரின் கொடிய காட்டு வழி இது. இதில் சென்று பொருள் தேடி மீள என்னுகின்றாய்.

இமயத்தில் வில்லை பொரித்து கனக விஜயரின் தலையில் கங்கையை சுமக்க வைத்த மாவீரர் பரம்பரையினர் பாடியது தான் புறப்பொருள் வென்பாமாலை.

சேரர்கள் மறக்குடியினர் என்பதற்க்கு சான்றாக இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம்,கலித்தொகை,பாலைபாடிய பெருங்கடுங்கோ வாழியாதன் மற்றும் புறப்பொருள் வென்பாமாலை பாடிய அய்யனாரிதனார் போன்றோர் உறைக்கின்றனர்.

பிற்காலத்தில் மலையாளம் கலந்து இன்று சுவடுகள் மறைந்திருப்பினும் ஒருநாள் வெளிப்பட்டே தீரும் என்பது தின்னம்.
மறவர்குல மக்கள் தம் மூதாதயர் யாரென கேட்டால் பாண்டியன் என மட்டும் கூறாது சேரர்,சோழர்,பாண்டியர் இன்னும் என்னற்ற குறுநில மக்களின் வழியினர்கள் என கூறுவதே சாலச்சிறந்தது.

இப்படி மலையாள ஆக்கிரமிப்பினால் தமிழ் மறைந்து போனதை பயன்படுத்திகொண்ட ஈழத்து பரதேசிகள் சேரரை கோரி அவமானபடுத்துகின்றனர். அதற்க்கு காலம் பதில் சொல்லும்.

மறவர்களுக்கு அய்யனாரே அதிகமாக குல தெய்வமாக இருப்பதால் சேரநாடு ஆதியிலிருந்து சாஸ்தா என்னும் அய்யன் வழிபாடு கொண்ட கொற்றவை மைந்தர் வழிபாடு நிலவியதிலிருந்து மறவர்கள் சேர,சோழ,பாண்டியர் நாட்டில் காலம் காலமாக வாழ்ந்து வருகின்றனர்  என்பது தெளிவு.

இதன் ஆசிரியர் சேரர் வழிவந்த அய்யநாரிதனார்.சேரவேந்தர் பரம்பரையில் தோன்றிய ஐயனாரிதனார் என்னும் இயற்பெயரினர் ஆவார். ஆர் - சிறப்புப் பெயர் விகுதி; புலமை நலம் கருதி வழங்கப்பட்டுள்ளது. இவர், சேரர் மரபினர் என்பதை,

ஓங்கிய சிறப்பின் உலகமுழு தாண்ட
வாங்குவில் தடக்கை வானவர் மருமான்
ஐயனா ரிதன் அகலிடத் தவர்க்கு
மையறு புறப்பொருள் வழாஅலின்று விளங்க
வெண்பா மாலை எனப் பெயர் நிறீஇப்
பண்புற மொழிந்தனன்
என வரும் சிறப்புப் பாயிரப் பகுதி தெரிவிக்கின்றது.
ஆசிரியரின் சமயம்
ஐயனாரிதனார் சைவ சமயத்தைச் சார்ந்தவர் ஆவார். புறப்பொருள் வெண்பாமாலைக்கு இவர் எழுதியுள்ள கடவுள் வாழ்த்துப் பாடல்கள் இரண்டு. இவற்றுள் ஒன்று விநாயகப் பெருமானைப் பற்றியது; மற்றொன்று சிவபெருமானைப் பற்றியது. எனவே இவரது சமயம் சைவ சமயம் என்பது புலனாகும்.

ஐயனாரிதனார் வாழ்ந்த காலம் கி.பி.7ஆம் நூற்றாண்டிற்கும் கி.பி.12ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டதாகலாம். திரு.கா.சு.பிள்ளையவர்கள் கி.பி.8ஆம் நூற்றாண்டு என்கின்றார். நூற்றாண்டு வரிசையில் இலக்கிய வரலாற்றை எழுதிய அறிஞர் மு.அருணாசலம் அவர்கள் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு என்கின்றார்கள். கி.பி.12ஆம் நூற்றாண்டின் முற்பகுதியினரான இளம்பூரணர் புறப்பொருள் வெண்பாமாலைச் செய்யுள்களைத் தமது உரையிடை ஆளுதலான், இளம்பூரணர்க்கு முன்னவர் இவர் என்பது வெளிப்படை.

இந்து மதத்துக்கு ஒரு கீதை கிரித்துவத்துக்கு பைபில் இசுலாத்துக்கு ஒரு குரான் போல் வீரம் என்னும் பன்புக்கு புறப்பொருள் வென்பாமாலை என்றே கூறலாம். இதில் கூறாத வீரமே கிடையாது. அந்த அளவு மறக்குல மக்களை புகழ்ந்துள்ளார் சேர மன்னர்.

இதில் மறவரை தவிர யாரையும் குறிப்பிடவில்லை எனலாம். இதில் குறிப்பிடும் வீரத்தில் காலையில் ஏறுக்குபோய் மதியம் வைக்கப்போருக்கு போவதுபோல் ஒரு காட்சியை குறிப்பிடவில்லை எவரும்.

சேரமான் தன் குடியான மறக்குடியை தொல்குடி,முதுகுடி,தொன்மரபின் வாள்குடி என மறவரின் குடியை போற்றுகின்றார்.
தமிழர்கள் கூறிக்கொள்ளும் "கல்தோன்றி மன் தோன்றாக்காலத்தில் வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி" எனகூறும் வரி இந்த நூலில் தான் உள்ளது ஆனால் இங்கு குறிப்பிடுவது தொல்முதுகுடியான மறக்குடியையே.
சில ஈனர்கள் கூறுவது போ சிறுகுடி  அல்ல முதுகுடி.


இதில் சேரர் மட்டுமல்ல சோழர் பாண்டியர் என்னும் மூவேந்தரும் மறவர்குடியான முதுகுடியில் பிறந்த வாட்குடி மறவேந்தர்கள் என கூறியுள்ளார் அய்யனார்.


புறப்பொருள் வென்பாமாலை மறவரைத்தான் குறிப்பிட்டுள்ளன என கல்வெட்டுகளும் செப்பேடுகளும் கூட தெரிவிக்கின்றன. மதஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொழுத்திய மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டில் தன் மறவரை பாடிய பெருவஞ்சி வந்துள்ளது. அதேபோல் சேதுபதிகளூக்கு வீரவென்பாமாலை(புறப்பொருள்வென்பாமாலை),முல்லையந்தாரை மாளிகையோன்(முல்லையன் மாளிகையன்),கரந்தையர்கோன் போன்ற விருதுகள் வந்துள்ளது. குறிப்பிட தக்கது.



கொற்றவையை அரசுனும் வனங்கினான் மறவரும் வணங்கினர். கொற்றவை சிறுவன் என முருகனை குறிக்கும் புறப்பொருள் வென்பாமாலை. கொற்றவை நாடு ஆளும் கொற்றவர்களை உருவாக்கினால் என வீரர்குடியினரின் தெய்வம் என போற்றப்படுக்ன்றால்.கொற்றவை மறவர்களின் தாயகாவும் போருக்கு செல்லும் போது உடன் வந்து வெற்றியை நல்குகிறாள்.

கேரளநாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைகளின் பழங்குடிகளின் பாடலில் "மறவர் குலத்தில் உதித்த வேலவனே" எனும் பாடல் பாடப்படுகின்றனர் என கப.அறவாணனின் பாடல் தொகுப்பு நமக்கு தெரிவிக்கிறது. கொற்றவை வெறி ஆடும் வேலவன் கூத்து எனும் நிகழ்வு குறிப்பிடப்படுகின்றனர். இங்கு கொற்றவை சிறுவன் என முருகனையும் மறவனையும் குறிக்கின்றனர்.

தூசுப்படையை அறுக்கும் படை தொல் மறவர் படையே என அய்யனாரிதனார் கூறுகின்றார். சில லூசுகள் தூசுப்படை வலங்கை படை என எழுதுகிறார்கள் அந்த லூசுப்படையிடம் சொல்வோம். தொல்குடியே மூலப்படை வலஙகநக்கி படைகள்ளே கிடையாது நீங்கள் தூசுப்படையாக கூட இருந்தீர்களா என்பதே கேள்வி.

ஆசிரியர் அகத்தியனாரின் மாணாக்கர்கள் தொல்காப்பியனார் உள்ளிட்ட பன்னிருவர் இருந்தார்கள். அவர்கள் ஆளுக்கொரு படலமாகப் புறப்பொருள் திணைகள், அவற்றின் துறைகள் பற்றிய இலக்கணங்களை இயற்றினார்கள். இயற்றிய அவற்றைத் தொகுத்தார்கள். தொகுத்து, பன்னிரு படலம் என்ற பெயரை அந்த நூலுக்குச் சூட்டினார்கள். இந்த இலக்கண நூல் நமக்குக் கிடைக்கவில்லை. என்றாலும், சில நூற்பாக்கள் மட்டும் காணக்கிடக்கின்றன. இவற்றை, உரையாசிரியப் பெருமக்களின் நன்கொடைகள் எனலாம்.

முன்னோர் ஒழியப் பின்னோர் பலரினுள்
நன்னூலார் தமக்கு எந்நூ லாரும்
இணையோ என்னும் துணிவே மன்னுக
என்ற வகையில் ஏத்துவார். இவ்வகையில் புறப்பொருள் வெண்பா மாலையையும் அதன் ஆசிரியரையும் போற்றலாம். ஏனெனில், அகப்பொருளில், நாற்கவிராச நம்பியின் அகப்பொருள் விளக்கம் என்ற நூலுக்குப் பின்னரும் மாறனகப் பொருள், இலக்கண விளக்கம், களவியற் காரிகை போன்றன தோன்ற, புறப்பொருள் வெண்பா மாலைக்குப் பின் புறப்பொருள் இலக்கணத்தைக் கூறும் தனி இலக்கண நூல்கள் எவையும் தோன்றவில்லை என்பது ஒரு காரணம்; ஐந்திலக்கணம் கூறவந்த பின்னாளைய நூல்களும் இத்தகைய விரிவையும் சிறப்பையும் கொண்டிருக்கவில்லை என்பது மற்றொரு காரணம். இவற்றால், இதனது சிறப்புப் புலப்படுவதை அறியலாம்.












எல்லாக் காலங்களிலும் உலகின் எங்கேயோ ஒரு மூலையில் போர் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. போரில்லாத உலகம் இல்லை. போர்ப் பண்பு உயிரிகளின் குணமாக உள்ளது. போராட்டம் என்பது உயிரிகளின் இயற்கையான ஒரு பகுதி. ‘பிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிறத்தலும் புதுவது அன்று தொன்றியல் வாழ்க்கை’ என்றாற்போலவே போர் புரிவதையும் உலகத்தின் இயற்கையாகவே நம்முடைய சங்கப் புலவர்களும் கருதியுள்ளனர். இதனை, இடைக்குன்றூர்கிழாரின் புறநானூற்று அடிகள் மொழிகின்றன/ மெய்ப்பிக்கின்றன.
ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவது அன்று;இவ் வுலகத்து இயற்கை (76)
போர் உணர்வை - வீரரின் மறப்பண்பைச் சங்கப் புலவர்கள் பலரும் பாராட்டியுள்ளமைக்குச் சான்றுகள் தொகைநூல்களுள் பலவாகக் காணப்படுகின்றன. ஏன்? இசைப் பாணர்கள் போர்க்களத்திற்கே சென்று பாராட்டிப் பாடியிருப்பதும் நாம் அறிவது தானே!
போர், சமுதாயத்தின் ஒரு பகுதியாகவே கருதப்பட்டுள்ளது. கருதவில்லையென்றால், அகவாழ்க்கையுள் கற்புக்காலப் பிரிவுகளுள் பகைவயின் பிரிவு, துணைவயின் பிரிவு ஆகியன இடம் பெற்றிருக்குமோ?
மழையின்மை, பெருமழை, கடல் சீற்றம் போலும் இயற்கை நிகழ்வுகளால் மன்னனின் கருவூலம் காலியாகும் போது மன்னனுக்குக் கைகொடுப்பது ‘தெறுபொருள்’ (திறைப் பொருள்) ஒன்றே. அறம் கூற வந்த வள்ளுவரே மன்னர்க்குத் தெறுபொருள் வேண்டும் என்பதன் வாயிலாகப் போருக்குப் பச்சைக் கொடி அசைத்து விடுகின்றார்.
உறுபொருளும் உல்கு பொருளும் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள் - (756)
தெறுபொருள் பொன்னாசையைக் குறிப்பது. ஏனைய மண்ணாசை பெண்ணாசைகள் கூடப் போர்க்குரிய காரணங்களாகி விடுகின்றன. பெரும்பான்மையும் இந்த மூன்று காரணங்களாலேயே போர் நடந்திருப்பதைத் தமிழிலக்கியங்கள் குறிக்கின்றன.
போர்க்கான சிறப்புக் காரணங்கள்
தமிழகத்துப் போர்களுக்குரிய பொதுக் காரணங்களாக, தமிழ்நூல்களின் துணைகொண்டு கீழ்க்காணும் வகையில் பட்டியலிடுகிறார் முனைவர் ந.சுப்பிரமணியன் அவர்கள்.

(1) போர் மாந்தனுடைய இயற்கைச் செயல்.

(2) அரச குலப் பகைமைகள்

(3) வெற்றியையும் நாடு பிடித்தலையும் பெரிதும் விரும்புதல்

(4) பிறரிடத்து அதிகாரம், பெருமை, செல்வம், புகழ் என்பவை இருத்தலைப் பொறுக்கமுடியாத மனநிலை.

(5) மறக்குலத்தால் உந்தப் பெற்ற மறவுணர்ச்சி.

(6) போர்க்களத்தில் இறந்துபட்டோர் துறக்கம் அடைவர் என்ற நம்பிக்கை.

(7) மகட்கொடை (பெண் கொடுக்க) மறுத்தலால் ஏற்படும் மனத்தாங்கல்.

(8) படையும் போர் மரபுகளும் மன்னனுடைய புகழை மிகுவிக்கும் என்னும் எண்ணம்.

(9) நடுகல்லில் நிற்றல் வேண்டும் என்னும் அவா. (நடுகல் = போரில் இறந்தவரின் நினைவாக நடப்படும் கல். அதில் அவர் பெயரும் பெருமையும் பொறிக்கப்பட்டிருக்கும்.)

(10) கடிமரம் (காவல் மரம்) புனிதமானது என்ற எண்ணம்

(11) எல்லைகள் நிர்ணயிக்கப்படாத சிறுநாடுகள் இருந்தமை; சிற்றரசர்கள் முடியுடைய வேந்தர்களுக்குக் கீழ்ப்படிந்தவர்கள் என்ற மனப்பான்மை. திறை செலுத்தும்படி வற்புறுத்தல், நிர்ணயிக்கப்படாத திறைப்பொருள் அளவு முதலியன.

(12) ஆதிக்க மனப்பான்மை முடிமன்னர்களிடம் இருந்தமை.

(13) போர், போரை விளைவித்தல்

போர் அறம்
திடுதிப்பென்று தாக்குவதற்கு இன்றுபோல் அன்று குண்டு பொழியும் பீரங்கிகள் இல்லை; அணுகுண்டுகள் இல்லை; ஏவுகணைகளும் இல்லை. அவர்களிடம் முன்னர்க் கூறியதுபோல அறத்திற்கும் ஏனை மறத்திற்கும் துணையாக நிற்கும் அன்புதான் இருந்தது. அவ்வன்பு அறவழியில் போரியற்ற அவர்களைச் செலுத்தியது. அறவழியிலேயே போரிட்டனர். பொதுமக்கட்கு ஏதம் வரலாகாது என்பது அவர்களின் கொள்கை. ஆதலால், தங்கள் இகலை வெளிப்படுத்த ஆநிரையைக் கவர்ந்தனர். முற்றுகைப் போரில் காவல் மரங்களை வெட்டினர்; சிலசமயம், பகை மன்னனின் மகளை மணத்தில் பெற வற்புறுத்தினர் அவ்வளவே.
ஆநிரை கவர்தல்
‘இன்ன நாளில் இன்ன போர்க்களத்தில் அரசர் இருவரும் போர் புரிய இருக்கின்றோம். இன்ன இன்னவர்கள் போர்க்களத்தினின்றும் விலகிச் சில காத தூரம் சென்று இருங்கள்’ என்று சொல்லிக் கொட்டும் முரசொலியைக் கேட்டு மக்கள் விலகுவர்; சில காதம் ஏகுவர். ஆநிரைகளால் ஏகல் இயலுமா? அவை நாட்டிற்காகப் பால் சுரப்பன; மன்னனது அரண்மனைக்கும் அவனுடைய பரிசனங்களின் (ஏவல் செய்வோர்) மனைக்கும் வளம் பயப்பன; திருக்கோயில் பூசனைக்கான ஐந்து பொருள்களை நல்குவன; தொழத்தக்கனவாகக் கருதப்படுவன; செல்வமென (மாடென)க் கருதப்படுவன; யாவற்றுக்கும் மேலாகப் ‘பொதுத்தாய்’ எனக் கருதப்பட்டு வருவன. ஆம். பால்நினைந்து ஊட்டுகின்ற ஈன்ற தாய், நமக்குச் சிறப்புத் தாய்; உலகக் குழந்தைகள் அனைத்துக்கும் தமது பாலைச் சுரத்தலால் ஆன் பொதுத்தாய் தானே. ஆன் இனம் பால் சுரக்க ஆன்ஏறு வேண்டுமல்லவா?
ஆவினத்தின் பயன்பாட்டைக் கருதியதால்தான் ஆநிரை கவர்தல் மேற்கொள்ளப்பட்டது என்று எண்ணுவதில் தவறில்லை. கொள்ளப்பட்டமை, அவற்றைத் துன்புறுத்தவோ, இந்நாள் போல வெட்டிச் சமைக்கவோ அல்ல. கவர்ந்த வீரர் அவற்றைக் காத்தனர்; வரும்வழியில் துன்புறுத்தாது செலுத்தினர். இதனைத் தொல்காப்பியரின் ‘நோயின்றுய்த்தல்’ என்னும் வெட்சித் துறையும், வெண்பா மாலையின் ‘சுரத்து உய்த்தல்’ என்னும் வெட்சித்துறையும் வெளிப்படுத்துகின்றன. மொத்தத்தில் ‘நிரை கவர்தல்’ என்பது பழங்காலத்தில் ஒரு பயனுடைய இராணுவ முன்னிகழ்ச்சி எனலாம்.

காக்கப்பட வேண்டியவர்கள்

போர் ‘மறம்’ என்றாலும் அதனை நிகழ்த்துவதில் அறம் மேற்கொள்ளப்பட்டது. போர் அறத்தை,

ஆவும் ஆனியல் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் மக்கட்
பெறாதோ ரும்எம் அம்புகடி விடுதும்
நும்அரண் சேர்மின்
என்ற எச்சரிக்கை மொழிகளில் காண்கின்றோம். இவ்வெச்சரிக்கை ஆவொழிந்த பார்ப்பனர் - பெண்டிர் - பிணியுடையார் - மக்கட் பெறாதார் ஆகியோருக்குப் பொருந்தும். ஆவுக்குப் பொருந்துமா? பொருந்தாது. அவற்றை உடையவனுக்கு இட்ட எச்சரிக்கையாகவே கொள்ளல் வேண்டும்.
இப்பாதுகாப்பு, போரின் முன்நிகழ்வு. இவ்வாறே, போர்க்களத்தின்கண் மேற்கொள்ள வேண்டிய அறநெறியும் உண்டு. இவ்வற நெறியான் காக்கப்பட வேண்டியவர்களைச் சிலம்பு அறிவிக்கின்றது.
சடையினர், உடையினர், சாம்பல் பூச்சினர்,
பீடிகைப் பீலிப் பெருநோன் பாளர்,
பாடு பாணியர், பல்இயத் தோளினர்,
ஆடு கூத்தர் ஆகி எங்கணும்
ஏந்துவாள் ஒழியத் தாந்துறை போகி
விச்சைக் கோலத்து வேண்டுவயின் படர்தர
- (சிலம்பு-26 ; 225-230)
என்ற சிலம்பின் அடிகளும், மேலும்,
பார்ப்பார் அறவோர் பசுபத் தினிப்பெண்டிர்
மூத்தோர் குழவி
(மதுரைக்காண்டம், வஞ்சினமாலை, அடி, 52-54)
என்னும் இவரைத் தவிர்ந்த தீயவர்கள் மேல் தீ செல்லட்டும் என்ற கண்ணகியாரின் ஆணையும் காட்டும்.








கடவுள் வாழ்த்து) 
(யானைமுகன்)
நடையூறு சொல் மடந்தை நல்குவது நம்மேல்
இடையூறு நீங்குவது எல்லாம் - புடையூறும்
சேனை முகத்தாள் இரியச் சீறுமுகத்து ஊறுமதத்து
யானை முகத்தானை நினைத்தால் 1எண்ணிய எண்ணியாங்கு எய்துப கண்ணுதல்
பவள மால் வரை பயந்த
கவள யானையின் கழல் பணிவோரே 2
(நீலகண்டன்)
கண் அவனைக் காண்க இரு காது அவனைக் கேட்க வாய்ப்
பண் அவனைப் பாடப் பதம் சூழ்க - எண் இறந்த
நெய் ஒத்து நின்றானை நீல மிடற்றானை என்
கை ஒத்து நேர் கூப்புக 3
(வெண்தாமரையாள்)
தவளத் தாமரைத் தாதார் கோயில்
அவளைப் பேற்றுதும் அருந்தமிழ் குறித்தே 4
(சிறப்புப் பாயிரம்)
மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத்
தென்மலை இருந்த சீர்சால் முனிவரன்
தன்பால் தண்தமிழ் தாவின்று உணர்ந்த
துன்அரும் சீர்த்தித் தொல்காப் பியன்முதல்
பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த
பன்னிரு படலமும் பழிப்பின்று உணர்ந்தோன்
ஓங்கிய சிறப்பின் உலகம் முழுதாண்ட
வாங்குவில் தடக்கை வானவர் மருமான்
ஐயனா ரிதன் அகலிடத் தவர்க்கு
மையறு புறப்பொருள் வழால்இன்று விளங்க
வெண்பா மாலை எனப்பெயர் நிறீஇப்
பண்புற மொழிந்தனன் பான்மையின் தெரிந்தே 5 
நூல்
1 வெட்சிப் படலம்
(இதனுள் வருவன)
1.1
வெட்சி, வெட்சிஅரவம், விரிச்சி, செலவு,
வேயே, புறத்திறை, ஊர்கொலை, ஆகோள்,
பூசலன்மாற்றே, புகழ்-சுரத்துஉய்த்தல்,
தலைத்தோறம்மே, தந்துநிறை, பாதீடு,
உண்டாட்டு, உயர்-கொடை, புலன்அறிசிறப்பு,
பிள்ளைவழக்கே, பெரும்-துடிநிலையே,
கொற்றவைநிலையே, வெறியாட்டு, உளப்பட
எட்டிரண்டு ஏனை நான்கொடு தொகைஇ
வெட்சியும் வெட்சித்துறையும் ஆகும் (1)
(இதன் வகை)
1.2
வெட்சி என்பது இருவகைத்து மன்னுறு
தொழிலும் தன்னுறு தொழிலும் என
(ஓர் உள்வகை)
1.3
வென்றி வேந்தன் பணிப்பவும் பணிப்பின்றியும்
சென்றி கல்முனை ஆ தந்தற்றுஅவற்றுள்
மன்உறு தொழில் வருமாறு
1.4
மண்டும் எரியுண் மரம் தடிந்து இட்டற்றான்
கொண்ட கொடும் சிலையன் கோல் தெரியக் - கண்டே
அடையார் முனை அலற ஐ இலை வேல் காளை
விடை ஆயம் கொள்க என்றான் வேந்து 1
இனித்
தன்உறு தொழில் வருமாறு
1.5
அறாஅ நிலைச்சாடி ஆடுறு தேறல்
மறாஅன் மழைத் தடங்கண்ணி - பொறாஅன்
கடுங்கண் மறவன் கழல் புனைந்தான் காலை
நெடும் கடைய நேரார் நிரை 2
(வெட்சித் துறைகள்)
(வெட்சி அரவம் இன்னது)கலவார் முனைமேல் செலவு அமர்ந்தன்று
1.6
நெடிபடு கானத்து நீள்வேல் மறவர்
அடிபடுத்தார் அதர் செல்வான் - துடி படுத்து
வெட்சி மலைய விரவார் மணிநிரைக்
கட்சியுள் காரி கலுழ்ம் 3
(விரிச்சி இன்னது)வெண்டிய பொருளின் விளைவு நன்கு அறிதற்கு
ஈண்டு இருள் மாலைச் சொல் ஓர்த்தன்று
1.7
எழுவணி சீறூர் இருள் மாலை முன்றில்
குழுவினம் கைகூப்பி நிற்பத் - தொழுவில்
குடக்கண் ஆக் கொண்டுவா என்றான் குனி வில்
தடக்கையாய் வென்றி தரும் 4
(செலவு இன்னது)வில் ஏர் உழவர் வேற்றுப் புலம் உன்னிக்
கல் ஏர் கானம் கடந்து சென்றன்று
1.8
கூற்று இனைத்து அன்னார் கொடுவில் வலன் ஏந்திப்
பாற்று இனம் பின் படர முன்படர்ந்து - ஏற்றினம்
நின்ற நிலை கருதி ஏகினார் நீள் கழைய
குன்றம் கொடு வில்லவர் 5
(வேய் இன்னது)பற்றார் தம்முனைப் படுமணி ஆயத்து
ஒற்று ஆராய்ந்த வகை உரைத்தன்று
1.9
நிலையும் நிரையும் நிரைப் புறத்து நின்ற
சிலையும் செரு முனையுள் வைகி - இலை புனைந்த
கள் அவிழ் கண்ணிக் கழல் வெய்யோய் சென்றறிந்து
நள்ளிருள் வந்தார் நமர் 6
(புறத்திறை இன்னது)நோக்க அரும் குறும்பின் நுழையும் வாயிலும்
போக்கு அற வளைஇப் புறத்து இறுத்தன்று
1.10
உய்த்து ஒழிவார் ஈங்கு இல்லை ஊழிக்கண் தீயே போல்
முந்து அமருள் ஏற்றார் முரண் முருங்கத் - தம் தமரின்
ஒற்றினால் ஆய்ந்து ஆய்ந்து உரவோர் குறும்பினைச்
சுற்றினார் போகாமல் சூழ்ந்து 7
(ஊர்க்கொலை இன்னது)விரை பரி கடவி வில் உடை மறவர்
குறை அழல் நடப்பக் குறும்பு எறிந்தன்று
1.11
இகலே துணையா எரி தவழச் சீறிப்
புகலே அரிது என்னார் புக்குப் - பகலே
தொலைவிலார் வீழத் தொடுகழல் ஆர்ப்பக்
கொலை விலார் கொண்டார் குறும்பு 8
(ஆகோள் இன்னது)வென்று ஆர்த்து விரல் மறவர்
கன்றொடும் ஆ தழீஇயன்று
1.12
கொடுவரி சூடிக் குழுஉக் கொண்டு அனைத்தால்
நெடுவரை நீள் வேய் நரலும் - நடுவூர்க்
கணநிரை கைக்கொண்டு கை அகலார் நின்ற
நிணநிரை வேலார் நிலை 9
(பூசல்மாற்று இன்னது)கணம் பிறங்கக் கைக் கொண்டார்
பிணம் பிறங்கப் பெயர்த்திட்டன்று
1.13
சூழ்ந்த நிரை பெயரச் சுற்றித் தலைக் கொண்டார்
வீழ்ந்தனர் வீழ்ந்தார் விடக்குணியத் - தாழ்ந்த
குலவுக் கொடும் சிலைக் கைக்கூற்று அனையார் எய்த
புலவுக் கணைவழிப் போய்ப் புள் 10
(சுரத்துய்த்தல் இன்னது)அரும் சுரத்தும் அகல் கானத்தும்
வருந்தாமல் நிரை உய்த்தன்று
1.14
புல் மேய்ந்து அசைஇப் புணர்ந்து உடன் செல்க என்னும்
வில் மேல் அசைஇய கை வெல்கழலான் - தன்மேல்
கடுவரை நீரில் கடுத்து வரக் கண்டும்
நெடுவரை நீழல் நிரை 11
(தலைத்தோற்றம் இன்னது)உர வெய்யோன் இனம் தழீஇக்
வரவு உணர்ந்து கிளை மகிழ்ந்தன்று
1.15
மொய் அணல் ஆன்நிரை முன்செல்லப் பின்செல்லும்
மைஅணல் காளை மகிழ்ந்துடி - கைஅணல்
வைத்த எயிற்றியர் வாள்கண் இடன் ஆட
உய்த்தன்று உவகை ஒருங்கு 12
(தந்துநிறை இன்னது)வார் வலந்த துடி விம்ம
ஊர் புகல நிரை உய்ந்தன்று
1.16
தண்டா விருப்பினள் தன்னைத் தலைமலைந்த
வண்டார் கமழ்கண்ணி வாழ்க என்று - கண்டாள்
அணிநிரை வால் முறுவல் அம்மா எயிற்றி
மணிநிரை மல்கிய மன்று 13
(பாதீடு இன்னது)கவர்கணைச் சுற்றம் கவர்ந்த கணநிரை
அவர்அவர் வினைவயின் அறிந்து ஈந்தன்று
1.17
ஒள்வாள் மலைந்தார்க்கும் ஒற்று ஆய்ந்து உரைத்தாற்கும்
புள்வாய்ப்பச் சொன்ன புலவர்க்கும் - விள்வாரை
ம¨று அட்ட வென்றி மறவர்தம் சீறூரில்
கூறிட்டார் கொண்ட நிரை 14
(உண்டாட்டு இன்னது)தொட்டு இமிழும் கழல் மறவர்
மட்டு உண்டு மகிழ்ந்தூங்கின்று
1.18
இளி கொண்ட தீம்சொல் இளமா எயிற்றி
களி கொண்ட நோக்கம் கவற்றத் - தெளி கொண்ட
வெங்கண் மலிய விளிவதுகொல் வேற்றார்மேல்
செங்கண் மறவர் சினம் 15
(கொடை இன்னது)ஈண்டிய நிரை ஒழிவின்றி
வேண்டியோர்க்கு விரும்பி வீசின்று
1.19
அங்கட்கு இணையன் துடியன் விறலி பாண்
வெங்கட்கு வீசும் விலையாகும் - செங்கட்
செருச் சிலையா மன்னர் செரு முனையில் சீறி
வரிச் சிலையால் தந்த வளம் 16
(புலன்அறிசிறப்பு இன்னது)வெம்முனை நிலை உணர்த்தியோர்க்குத்
தம்மினு மிகச் சிறப்பு ஈந்தன்று
1.20
இறுமுறை எண்ணாது இரவும் பகலும்
செறுமுனையுள் சென்றறிந்து வந்தார் - பெறுமுனையின்
அட்டுக் கனலும் அயில் வேலோய் ஒன்றிரண்டு
இட்டுக் கொடுத்தல் இயல்பு 17
(பிள்ளைவழக்கு இன்னது)பொய்யாது புள் மொழிந்தார்க்கு
வையாது வழக்கு உரைத்தன்று
1.21
புல்லார் நிறை கருதியாம் செல்லப் புள்நலம்
பல்லார் அறியப் பகர்ந்தார்க்குச் - சொல்லால்
கடம் சுட்ட வேண்டா கடும் சுரையால் நான்கு
குடம் சுட்டு இனத்தால் கொடு 18
(துடிநிலை இன்னது)தொடுகழல் மறவர் தொல்குடி மரபில்
படுகழல் இமிழ்ந்துடிப் பண்பு உரைத்தன்று
1.22
முந்தை முதல்வர் துடியர் இவன் முதல்வர்
எந்தைக்கும் தந்தை இவன் எனக்கு - வந்த
குடியொடு கோடா மரபினாற்கு இன்னும்
வடியுறு தீம் தேறல் வா(ர்)க்கு 19
(கொற்றவைநிலை இன்னது)ஒளியின் நீங்கா விறல் படையோள்
அளியின் நீங்கா அருள் உரைத்தன்று
1.23
ஆளி மணிக்கொடிப் பைங்கிளிப் பாய்கலைக்
கூளிமலிப் படைக் கொற்றவை - மீளி
அரண் முருங்க ஆ கோள் கருதின் அடையார்
முரண் முருங்கத் தான் முந்துறும் 20
(வெறியாட்டு இன்னது)வாலிழையோர் வினை முடிய
வேலனொடு வெறியாடின்று
1.24
காணில் அரனும் களிக்கும் கழல் மறவன்
பூண்இலங்கு மென்முலைப் போது அரிக்கண் - வாள்நுதல்
தான் முருகு மெய்ந்நிறீஇத் தாமம் புறம் திளைப்ப
வேல்முருகற்கு ஆடும் வெறி 21 
2 கரந்தைப் படலம்
(இதனுள் வருவன)
2.1
கதமலி-கரந்தை, கரந்தைஅரவம்,
அதரிடைச்செலவே, அரும்போர்மலைதல்,
புண்ணொடுவருதல், போர்களத்துஒழிதல்,
ஆள்எறிபிள்ளை, பிள்ளைத்தெளிவே,
பிள்ளைஆட்டொடு, கையறுநிலையே,
நெடுமொழிகூறல், பிள்ளைப்பெயர்ச்சி,
வேத்தியன்மலிபே, மிகு-குடிநிலை, என
அரும்கலை உணர்ந்தோர் அவை பதினான்கும்
கரந்தையும் கரந்தைத் துறையும் என்ப (2)
(கரந்தைத்திணை இன்னது)
மலைத்து எழுந்தோர் மறம் சாயத்
தலைக் கொண்ட நிரை பெயர்த்தன்று
2.2
அழுங்கல் நீர் வையகத்து ஆருயிரைக் கூற்றம்
விழுங்கியபின் வீடுகொண்டற்றால் - செழுங்குடிகள்
தார் ஆர் கரந்தை தலை மலிந்து தாம் கோடல்
நேரார் கைக்கொண்ட நிரை 22
(கரந்தைத்துறைகள்)
(கரந்தை அரவம் இன்னது)நிரைகோள் கோட்டுச் செய்தொழில் ஒழிய
விரைவனர் குழுவும் வகை உரைத்தன்று
2.3
காலார் கழலார் கடுஞ்சிலையார் கைக்கொண்ட
வேலார் வெருவந்த தோற்றத்தார் - காலன்
கிளர்ந்தாலும் போல்வார் கிணைப் பூசல் கேட்டே
உளர்ந்தார் நிரைப் பெயர்வும் உண்டு 23
(அதர்இடைச்செலவு இன்னது)ஆற்றார் ஓழியக் கூற்றெனச் சினைஇப்
போற்றார் போகிய நெறியிடை ஏகின்று
2.4
சங்கும் கருங்கோடும் தாழ்பீலிப் பல்லியமும்
எங்கும் பறையோடு எழுந்தார்ப்ப - வெங்கல்
அழற்சுரம் தாம் படர்ந்தார் ஆன்சுவட்டின் மேலே
நிழல் கதிர் வேல் மின்ன நிரைத்து 24
(போர் மலைதல் இன்னது)வெட்சியாரைக் கண்ணுற்று வளைஇ
உட்கு வரத் தாக்கி உளர் செருப் புரிந்தன்று
2.5
புலிக் கணமும் சீயமும் போர்க் களிறும் போல்வார்
வலிச்சினமும் மானமும் தேசும் - ஒலிக்கும்
அருமுனை வெம்சுரத்து ஆன்பூசற்கு ஓடிச்
செரு மலைந்தார் சீற்றம் சிறந்து 25
(புண்ணொடு வருதல் இன்னது)மண்ணொடு புகழ் நிறீஇப்
புண்ணொடு தான் வந்தன்று
2.6
வெம் குருதி மல்க விழுப்புண் உகுத்தொறூஉம்
இங்குலிகம் சேரும் வரை ஏய்க்கும் - பைங்கண்
இனம் போக்கி நின்றார் இகல் வாட்டி வேந்தன்
மகன் போல வந்த மகன் 26
(போர்களத்து ஒழிதல் இன்னது)படைக்கு ஓடா விறல் மறவரைக்
கடைக் கொண்டு களத்து ஒழிந்தன்று
2.7
உரைப்பின் அது வியப்போ ஒன்னார் கைக் கொண்ட
நிரைப்பின் நெடிந்தகை சென்றான் - புரைப்பின்றி
உளப்பட்ட வாய் எல்லாம் ஒள்வாள் கவரக்
களப்பட்டான் தோன்றான் கரந்து 27
(ஆள்எறிபிள்ளை இன்னது)வருவாரை எதிர் விலக்கி
ஒருதான் ஆகித் ஆள் எறிந்தன்று
2.8
பிள்ளைக் கடுப்பப் பிணம் கறங்க ஆள்எறிந்து
கொள்ளைகொள ஆயம் தலைக் கொண்டார் - எள்ளிப்
பொருது அழிந்து மீளவும் பூங்கழலான் மீளான்
ஒருதனியே நின்றான் உளன் 28
(பிள்ளைத் தெளிவு இன்னது)கண்மகிழ்ந்து துடிவிம்மப்
புண் மகிழ்ந்து புகன்றாடின்று
2.9
மேவார் உயிர் அணங்க மெல் முடித்த பிள்ளையன்
பூவாள் உடை கழியாப் போர்களத்து - ஓவான்
துடிஇரட்டி விம்ம தொடு கழலார் முன்நின்று
அடி இரட்டித்து இட்டாடும் ஆட்டு 29
(பிள்ளை ஆட்டு இன்னது)கூடலர் குடர்மாலை சூட்டி
வேல் திரிந்து விரும்பி ஆடின்று
2.10
மாட்டிய பிள்ளை மறவர் நிறம் திறந்து
கூட்டிய எ·கம் குடர் மாலை - சூட்டிய பின்
மாறிரியச் சீறி நுடங்குவான் கைக்கொண்ட
வேல் திரிய விம்மும் துடி 30
(கையறுநிலை இன்னது)வெருவரும் வாள்அமர் விளிந்தோன் கண்டு
கருவி மாக்கள் கையறவு உரைத்தன்று
2.11
நாப்புலவர் சொன்மாலை நன்னார் படை உழக்கித்
தாப்புலி ஒப்பத் தலைக் கொண்டான் - பூப்புனையும்
நற்குலத்துள் தோனறிய நல் இசை யாழ்த் தொல் புலவீர்
கல்கொலோ சேர்ந்தில எம்கண் 31
(நெடுமொழி கூறல் இன்னது)மன்மேல்பட்ட மதிக்குடையோற்குத்
தன் மேம்பாடு தான் எடுத்துரைத்தற்று
2.12
ஆள்அமர் வெள்ளம் பெருகின் அது விலக்கி
வாளொடு வைகுவேன் ஆக - நாளும்
கழி மகிழ் வென்றிக் கழல் வெய்யோய் ஈயப்
பிழி மகிழ் உண்பார் பிறர் 32
(பிள்ளைப் பெயர்ச்சி இன்னது)போர் தாங்கிப் புள் விலங்கினோனைத்
தார் வேந்தன் தலை அளித்தன்று
2.13
பிணங்கு அமர் உள் பிள்ளைப் பெயர்ப்புப் யெராது
அணங்கு அஞர் செய் தாள் எறிதல் நோக்கி - வணங்காச்
சிலை அளித்த தோளான் சின விடலைக்கு அன்றே
தலை அளித்தான் தண்ணடையும் தந்து 33
(வேத்தியல் மலிவு இன்னது)தோள்வலிய வய வேந்தனை
வாள்வலி மறவர் சிறப்புரைத்தன்று
2.14
அங்கையுள் நெல்லி அதன்பயம் ஆதலால்
கொங்கு அலர் தாரான் குடைநிழல் கீழ்த் - தங்கிச்
செயிர் வழங்கும் வாள் அமருள் சென்றடையார் வேல்வாய்
உயிர் வழங்கும் வாழ்க்கை உறும் 34
(குடிநிலை இன்னது)மண்திணி ஞாலத்துத் தொன்மையும் மறனும்
கொண்டு பிறர் அறியும் குடி உரைத்தன்று
2.15
பொய் அகல நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கு ஒலி நீர் - கைஅகலக்
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு
முன் தோன்றி மூத்த குடி 35 
3 வஞ்சிப் படலம்
(இதனுள் வருவன)வாடா-வஞ்சி, வஞ்சிஅரவம்,
கூடார்ப் பிணிக்கும்-குடைநிலை, வாள்நிலை,
கொற்றவைநிலையே, கொற்றவஞ்சி,
குற்றம்இல் சிறப்பின்-கொற்றவள்ளை,
பேராண்வஞ்சி, முதுமொழிவஞ்சி,
கொடையின்வஞ்சி, குறுவஞ்சிய்யே,
ஒருதனிநிலையொடு, அழிஞ்சிப்பாசறை,
பெருவஞ்சிய்யே, பெரும்சோற்றுநிலையொடு,
நல்இசைவஞ்சி, என நாட்டினர் தொகுத்த
எஞ்சாச் சீர்த்தி இருபத்து ஒன்றும்
வஞ்சியும், வஞ்சித் துறையும், ஆம் (3)
(வஞ்சித் திணை இன்னது)வாடா வஞ்சி தலை மலைந்து
கூடார் மண் கொளல் குறித்தன்று
3.1
செங்கண் மழவிடையின் கெண்டிச் சிலை மழவர்
வெங்கள் மகிழ்ந்து விழவு அயர - அங்குழைய
வஞ்சி வணங்கார் வணக்கிய வண்டு ஆர்ப்பக்
குஞ்சி மலைத்தான் எம் கோ 36
(வஞ்சித் துறைகள்)
(வஞ்சி அரவம் இன்னது)வள் வார் முரசமொடு வயக் களிறு முழங்க
ஒள் வாள் தானை உருத்து எழுந்தன்று
3.2
பௌவம் பணை முழங்கப் பற்றார் மண் பாழ் ஆக
வௌவிய வஞ்சி வலம் புனையச் - செவ்வேல்
ஒளிரும் படை நடுவண் ஊழித்தீ அன்ன
களிறும் களித்து இரும் கார் 37
(குடைநிலை இன்னது)பெய் தாமம் சுரும்பு இமிரப் பெரும் புலவர் புகழ் பாடக்
கொய் தார் மன்னவன் குடைநாள் கொண்டன்று
3.3
முன்னர் முரசு இரங்க மூரிக் கடல் தானைத்
துன்னரும் துப்பில் தொழுது எழா - மன்னர்
உடைநாள் உவந்தனவால் ஓதநீர் வேலிக்
குடைநாள் இறைவன் கொள 38
(வாள் நிலை இன்னது)செற்றார் மேல் செலவு அமர்ந்து
கொற்ற வாள் நாள் கொண்டனறு
3.4
அறிந்தவர் ஆய்ந்த நாள் ஆழித்தேர் மன்னன்
எறிந்து இலகு ஒள் வாள் இயக்கம் - அறிந்து இகலிப்
பின் பகலே அன்றியும் பேணார் அகநாட்டு
நன் பகலும் கூகை நகும் 39
(கொற்றவை நிலை-1 இன்னது)நீள் தோளான் வென்றி கொள்க என
நிறை மண்டை வலன் உயரிக்
கூடாரைப் புறம் காணும்
கொற்றவை நிலை உரைத்தன்று
3.5
அணங்குடை நோலை பொரி புழுக்கல் பிண்டி
நிணம் குடர் நெய்த்தோர் நிறைத்துக் - கணம் புகலக்
கை இரிய மண்டைக் கணமோடி காவலர்க்கு
மொய் பிரியத் தான் முந்துறும் 40
(கொற்றவை நிலை-2 இன்னது)மைந்துடை ஆடவர் செய் தொழில் கூறலும்
அந்தம்இல் புலவர் அது என மொழிப
3.6
தமருள் தலையாதல் தார் தாங்கி நிற்றல்
எமருள் யாம் இன்னம் என்று எண்ணல் - அமருள்
முடுகழலின் முந்துறுதல் முல்¨த்தார் வேந்தன்
தொடு கழல் மேந்தர் தொழில் 41
(கொற்ற வஞ்சி இன்னது)வையகம் வணங்க வாள் ஓச்சினன் எனச்
செய்கழல் வேந்தன் சீர் மிகுத்தன்று
3.7
அழல் அடைந்த மன்றத்து அலந்து அயராநின்றார்
நிழல் அடைந்தேன் நின்னை என்று ஏத்தி - கழல் அடையச்
செற்றம் கொண்டாடிச் சிலைத்து எழுந்தார் வீந்து அவியக்
கொற்றம் கொண்டு எ·கு உயர்த்தான் கோ 42
(கொற்ற வள்ளை இன்னது)மன்னவன் புகழ் கிளந்து
ஒன்னார் நாடு அழி பிறங்கின்று
3.8
தாழ் ஆர மார்பினான் தாமரைக்கண் சேர்ந்தனவால்
பாழாய்ப் பரிய விளிவது கொல் - யாழாய்ப்
புடைத்தேன் இமிர் கண்ணிப் பூங்கண் புதல்வர்
நடைத்தேர் ஒலி கறங்கும் நாடு 43
(பேராண் வஞ்சி-1 இன்னது)கேள் அல்லார் முனை கெடுத்த
மீளியாளர்க்கு மிக உயர்த்தன்று
3.9
பலிபெறு நல்நகரும் பள்ளி இடனும்
ஒலிகெழு நான்மறையோர் இல்லும் - நலி ஒரீஇப்
புல்லார் இரியப் பெருதார் முனை கெடுத்த
வில்லார்க்கு அருள் சுரந்தான் வேந்து 44
(பேராண் வஞ்சி-2 இன்னது)அரும் திறை அளப்ப ஆறிய சினத்தொடு
பெரும்பூண் மன்னன் பெயர்தலும் அதுவே
3.10
கூடி முரசு இயம்பக் கொய் உளைமா முன் உகள
பாடி பெயர்ந்திட்டான் பல்வேலான் - கோடி
நிதியத் திறை அளந்தார் நேராரும் தன் கீழ்
முதியம் என்றாறி முரண் 45
(மாராய வஞ்சி இன்னது)மறவேந்தனில் சிறப்பு எய்திய
விறல் வேலோர் நிலை உரைத்தன்று
3.11
நேர் ஆரம் பூண்ட நெடுந்தகை நேர் கழலான்
சேரார் முனை நோக்கிக் கண் சிவப்பப் - போரார்
நறவேய் கமழ் தெரியல் நண்ணார் எறிந்த
மறவேல் இலை முகந்த மார்பு 46
(நெடுமொழி வஞ்சி இன்னது)ஒன்னாதார் படைகெழுமித்
தன்ஆண்மை எடுத்துஉரைத்தன்று
3.12
இன்னர் என வேண்டா என்னோடு எதிர் சீறி
முன்னர் வருக முரண் அகலும் - மன்னர்
பருந்தார் படை அமருள் பல்லார் புகழ
விருந்தாய் அடை குறுகுவர் விண் 47
(முதுமொழி வஞ்சி இன்னது)தொல் மரபில் வாள் குடியில்
முன்னோனது நிலை கிளந்தன்று
3.13
குளிறு முரசம் குணில் பாயக் கூடார்
ஒளிறு வாள் வெள்ளம் உழக்கிக் - களிறு எறிந்து
புண்ணொடு வந்தான் புதல்வர்க்குப் பூங்குழலோய்
தண்ணடை நல்கல் தகும் 48
(உழபுல வஞ்சி இன்னது)நேராதார் வள நாட்டைக்
கூர் எரி கொளீஇயன்று
3.14
அயில் அன்ன கண் புதைத்து அஞ்சி அலறி
மயில் அன்னார் மன்றம் படரக் - குயில் அகவ
ஆடு இரிய வண்டு இமிரும் செம்மல் அடையார் நாட்டு
ஓடு எரியுள் வைகின ஊர் 49
(மழபுல வஞ்சி இன்னது)கூடார் முனை கொள்ளை சாற்றி
வீடுஅறக் கவர்ந்த வினை மொழிந்தன்று
3.15
களமர் கதிர்மணி காலேகம் செம்பொன்
வளமனை பாழாக வாரிக் - கொளல் மலிந்து
கண்ணார் சிலையார் கவர்ந்தார் கழல் வேந்தன்
நண்ணார் கிளை அலற நாடு 50
(கொடை வஞ்சி இன்னது)நீடவும் குறுகவும் நிவப்பவும் தூக்கிப்
பாடிய புலவர்க்குப் பரிசில் நீட்டின்று
3.16
சுற்றிய சுற்றம் உடன் மயங்கித் தம் வியிறு
எற்றி மடவார் இரிந்து ஓட - முற்றிக்
குரிசில் அடையாரைக் கொண்ட கூட்டு எல்லாம்
பரிசில் முகந்தன பாண் 51
(குறுவஞ்சி-1 இன்னது)மடுத்து எழுந்த மறவேந்தர்க்குக்
கொடுத்து அளித்து குடி ஓம்பின்று
3.17
தாள்தாழ் தடக்கை தனிமதி வெண்குடையான்
வாள் தானை வெள்ளம் வர வஞ்சி - மீட்டான்
மலையா மற மன்னன் மால் வரையே போலும்
கொலை யானை பாய்மாக் கொடுத்து 52
(குறுவஞ்சி-2 இன்னது)கட்டூர் அது வகை கூறினும்
அத்துறைக்கு உரித்தாகும்
3.18
அவிழ் மலர் கோதையர் ஆட ஒருபால்
இமிழ் முழவம் யாழோடு இயம்பப் - கவிழ் மணியே
காய் கடா யானை ஒருபால் களித்து அதிரும்
ஆய் கழலான் கட்டூர் அகத்து 53
(ஒருதனிநிலை இன்னது)பொரு படையுள் கல்சிறை போன்று
ஒருவன் தாங்கிய நிலை உரைத்தன்று
3.19
வீடு உணர்ந்தேர்க்கும் வியப்பாமல் இல்நின்ற
வாடல் முதியாள் வயிற்றிடம் - கூடார்
பெரும் படை வெள்ளம் நெரி தரவும் பேரா
இரும்புலி சேர்ந்த இடம் 54
(தழிஞ்சி இன்னது)அழிகுநர் புறக்கொடை அயில வாள் ஓச்சாக்
கழிதறு கண்மைக் காதலித்து உரைத்தன்று
3.20
கான்படு தீயில் கலவார்தன் மேல் வரினும்
தான் படை தீண்டா தறுகண்ணான் - வான் படர்தல்
கண்ணிய பின் அன்றிக் கறுத்தார் மறம் தொலைதல்
எண்ணிய பின் போக்குமோ எ·கு 55
(பாசறை நிலை இன்னது)மதிக் குடைக்கீழ் வழிமொழிந்து
மன்னர் எல்லாம் மறம் துறப்பவும்
பதிப் பெயரான் மறவேந்தன் பாசறை இருந்தன்று
3.21
கரும்பொடு காய் நெல் கனை எரி ஊட்டிப்
பெரும் புனல் வாய் திறந்த பின்னும் - கரும்பின்
தொகை மலிந்த தண் குவளைத் தூமலர்த் தாரான்
பகை மெலியப் பாசறை உளான் 56
(பெருவஞ்சி இன்னது)முன் அடையார் வளநாட்டைப்
பின்னரும் உடன்று எரி கொளீஇயன்று
3.22
பீடுலா மன்னர் நடுங்கப் பெரும்புகை
ஊடுலாய் வானத்து ஒளி மறைப்ப - நாடெல்லாம்
பின்னும் பிறங்கு அழல் வேய்ந்தன பெய் கழல்கால்
மன்னன் கனல மறம் 57
(பெறும்சோற்றுநிலை இன்னது)திருந்தார் தெம்முனை நெருங்குவர் இவர் எனப்
பெரும் சோறு ஆடவர் பெறுமுறை வகுத்தன்று
3.23
இயவர் புகழ எறிமுரசு ஆர்ப்பக்
குயவரி வேங்கை அனைய - வயவர்
பெறுமுறையால் பிண்டம் கோள் ஏவினான் பேணார்
இறுமுறையால் எண்ணி இறை 58
(நல்இசை வஞ்சி-1 இன்னது)ஒன்னாதார் முனைகெட இறுத்த
வென்வேல் ஆடவன் விறல் மிகுத்தன்று
3.24
மடங்கலில் சீறி மலைத்து எழுந்தார் மண்மேல்
இடம் கெடச் சென்றிருத்த பின்னும் - நுடங்கு எரிபோல்
வெல்லப் பெருகும் படையார்க்கும் வேந்தர்மேல்
செல்லப் பெருகும் சினம் 59
(நல்இசை வஞ்சி-2 இன்னது)இறுத்த பின் அழிபு இரங்கல்
மறுத்து உரையினும் அத்துறை ஆகும்
3.25
குரை அழல் மண்டிய கோடுயர் மாடம்
சுரையொடு பீரம் சுமந்த - நிரை திண் தேர்ப்
பல்இசை வென்றிப் படைக்கடலான் சென்றிறுப்பக்
நல்இசை கொண்டு உடயார் நாடு 60 
4 காஞ்சிப் படலம்
(இதனுள் வருவன)காஞ்சி காஞ்சி, அதிர்வே, தழிஞ்சி,
பெரும்படை வழக்கொடு, பெரும் காஞ்சிய்யே,
வாள்செலவு, என்றா குடையது செலவே,
வஞ்சினக் காஞ்சி, பூக்கோள் நிலையே,
புகழ் தலைக் காஞ்சி, தலை மாராயம்,
தலையொடு முடித்தல், மறப்பெயர்க் காஞ்சி,
மாற்றரும் பேய்நிலை, பேய்க் காஞ்சிய்யே,
தொட்ட காஞ்சி, தொடாக் காஞ்சிய்யே,
மன்னைக் காஞ்சி, கள்காஞ்சிய்யே,
ஆஞ்சிக் காஞ்சி, மகள்பால் காஞ்சி,
முனைகடி முன்னிருப்பு, உளப்படத் தெகைஇ
எண்ணிய வகையான் இருபத்திரண்டும்
கண்ணிய காஞ்சித் துறை என மொழிப (4)
(காஞ்சித் திணை இன்னது)வேஞ்சின மாற்றான் விடுதர வேந்தன்
காஞ்சி சூடி கடிமனை கடிந்தின்று
4.1
அருவரை பாய்ந்து இறுதும் என்பார் பண்டின்றிப்
பெருவரை சீறுர் கருதிச் - செருவெய்யோன்
காஞ்சி மலையக் கடைக்கணிந்து நிற்பதோ
தோம் செய் மறவர் தொழில் 61
(காஞ்சித் துறைகள்)
(காஞ்சி அதிர்வு இன்னது)மேல்வரும் படைவரல் மிகவும் ஆற்றா
வேல்வல் ஆடவன் விறல் மிகுத்தன்று
4.2
மன்மேல் வரும் என நோக்கான் மலர் மார்பின்
வென்வேல் முகந்த புண் வெய்து உயிர்ப்பக் - தன்வேல்
பிடிக்கலும் ஆற்றாப் பெருந்தகை ஏவத்
துடிக்கண் புலையன் தொடும் 62
(தழிஞ்சி இன்னது)பரந்து எழுதரு படைத் தானை
வரம்பு இகவாமை சுரம் காத்தன்று
4.3
குலாவும் சிலையார் குறும்பு கொள வெ·கி
உலாவும் உழப்பொழிக வேந்தன் - கலாவும்
இனவேங்கை அன்ன இகல் வெய்யோர் காவல்
புனவேய் நரலும் புழை 63
(படைவழக்கு-1 இன்னது)முத்து அவிர் பூண் மறவேந்தன்
ஒத்தவர்க்குப் படை வழங்கின்று
4.4
ஐயம் களைந்திட்டு அடல் வெம் கூற்று ஆலிப்ப
ஐயிலை எ·கம் அவைபலவும் - மெய்யிடை
ஆள்கடி வெல் களிற்று அண்ணல் கொடுத்தளித்தான்
வாள்குடி வன்கணவர்க்கு 64
(படைவழக்கு-2 இன்னது)கொடுத்த பின்னர்க் கழல் மறவர்
எடுத்துரைப்பினும் அத்துறை ஆகும்
4.5
துன்னரும் துப்பின் தொடுகழலார் சூழ்ந்திருப்பத்
தன்னமரும் ஒள்வாள் என் கைதந்தான் - மன்னற்கு
மண்ணகமோ வைகின்று மாலை நெடும் குடைக்கீழ்
விண்ணகமும் வேண்டும்கொல் வேந்து 65
(பெரும் காஞ்சி இன்னது)தாங்கு திறல் மறவர் தத்தம் ஆற்றல்
வீங்கு பெரும் படையின் வெளிப்படுத்தன்று
4.6
வில்லார் குறும்பிடை வேறு வேறு ஆர்த்து எழுந்த
கல்லா மறவர் கணைமாரி - ஒல்லா
வெருவி மறவேந்தர் வெல் களிறு எல்லாம்
இருவி வரை போன்ற இன்று 66
(வாள்செலவு இன்னது)அருமுனையான் அறை கூவினபின்
செருமுனைமேல் வாள் சென்றன்று
4.7
உணங்கு புலவறா ஒன்னார் குரம்பை
நுணங்கரில் வெம்முனை நோக்கி - அணங்கிய
குந்தமலியும் புரவியான் கூடாதார்
வந்தபின் செல்க என்றான் வாள் 67
(குடை செலவு இன்னது)முதுகுடி மறவர் முன்னுறச் சூழக்
கொதி அழல் வேலோன் குடை சென்றன்று
4.8
தெம்முனை தேயத் திறல் விளங்கு தேர்த் தானை
வெம்முனை வென்றி விறல் வெய்யோன் - தம்முனை
நாட்டிப் பொறி செறிந்து நண்ணார் மேல் செல்க என்றான்
கூட்டிநாள் கொண்டான் குடை 68
(வஞ்சினக் காஞ்சி இன்னது)வெஞ்சின வேந்தன் வேற்றவர் பணிப்ப
வஞ்சினம் கூறிய வகை மொழிந்தன்று
4.9
இன்று பகலோன் இறவாமுன் ஒன்னாரை
வென்று களம் கொள்ளாது வேலுயர்ப்பின் - என்றும்
அரண் அழியப் பாயும் அடையார் முன் நிற்போன்
முரண் அழிய முன்முன் நின்று 69
(பூக்கோள் நிலை இன்னது)கார் எதிரிய கடல் தானை
போர் எதிரிய பூக்கொண்டன்று
4.10
பருதிசெல் வானம் பரந்துருகி அன்ன
குருதி ஆறாவதுகொல் குன்றூர் - கருதி
மறத்தின் மாறா மறவரும் கொண்டார்
புறத்திறுத்த வேந்து இரிய பூ 70
(தலைக்காஞ்சி இன்னது)மைந்துயர மறம் கடந்தான்
பைந்தலை சிறப்புரைத்தன்று
4.11
விட்டிடின் என் வேந்தன் விலையிடின் என் இவ்வுலகின்
இட்டுரையின் எய்துவ எய்திற்றால் - ஒட்டாதார்
போர் தாங்கி மின்னும் புலவாள் உறைகழியா
தார் தாங்கி வீழ்ந்தான் தலை 71
(தலை மாராயம் இன்னது)தலைகொடு வந்தான் ஊண் மலியச்
சிலை உடை வேந்தன் சிறப்பு ஈந்தன்று
4.12
உவன்தலை என்னும் உறழ்வின்றி ஒன்னார்
இவன்தலை என்று ஏத்த இயலும் - அவன்தலை
தந்தாற்கு நல்கல் வியப்போ கிளந்தேத்தி
வந்தார்க்கு வந்து ஈயும் வாழ்வு 72
(தலையொடு முடிதல் - இன்னது)கண்டமருள் மாறா மைந்தின்
கொண்டான் தலையோடு கோல்வளை முடிந்தன்று
4.13
கொலையானாக் கூற்றம் கொடிதே கொழுநன்
தலையானான் தையலாள் கண்டே - முலையால்
முயங்கினான் வாள்முகம் சேர்த்தினான் ஆங்கே
உயங்கினான் ஓங்கிற்று உயர் 73
(மறக் காஞ்சி 1 - இன்னது)இலைப்¦¡பலிதார் இகல்வேந்தன்
மலைப்பு ஒழிய மறம் கடை இயன்று
4.14
கருந்தலையும் வெண் நிணமும் செந்தடியும் ஈராப்
பருந்தோடு எருவை படா - அரும்திறல்
வேறாய மன்னர் வியப்பக் கடாயினான்
மாறா மறவன் மறம் 74
(மறக் காஞ்சி 2 - இன்னது)மண்கெழு மறவன் மாறுநிலை நோனான்
புண்கிழித்து முடியினும் அத்துறை ஆகும்
4.15
நகையமர் ஆயம் நடுங்க நடுங்கான்
தொகையமர் ஓட்டிய துப்பில் - பகைவர் முன்
நுங்கிச் சினவுதல் நோனான் நுதி வேலால்
பொங்கிப் பரிந்திட்டான் புண் 75
(பேய்நிலை- இன்னது)செருவேலான் திறம் நோக்கி
பிரிவின்றி பேய ஓம்பின்று
4.16
ஆயும் அடுதிறலாற்கு அன்பிலார்இல் போலும்
தோயும் தழல்குருதி தோள்படைப்ப - பேயும்
களம் புகலச் சீறிக் கதிர்வேல்வாய் வீழ்ந்தான்
உளம் புகல ஓம்பல் உறும் 76
(பேய்காஞ்சி - இன்னது)பிணம் பிறங்கிய களத்து வீழ்ந்தார்க்கு
அணங்கு ஆற்ற அச்சுறீஇயன்று
4.17
கொட்கு நிமிரும் குறுகும் குடல் சூடிப்
பெட்ப நகும் பெயரும் பேய்மகள் - உட்கப்
புனலங்குருதிப் புலால்வாய் கிடந்து
கனல விழிப்பவன் கண்டு 77
(தொட்ட காஞ்சி - இன்னது)வியன் மனை விடலைப்புண் காப்பத்
துயன் முலைப் பேழ்வாய் பேய் தொட்டன்று
4.18
கொன்றுருத்த கூர்வேலவன் குறுகிக் கூரிருள்வாய்
நின்றுருத்து நோக்கி நெருப்பு உமிழாச் சென்றொருத்தி
ஒட்டார் படை இடந்த ஆறாப்புண் ஏந்து அகலம்
தொட்டாள் பெருகத் துயில் 78
(தொடாக் காஞ்சி - இன்னது)அடல் அஞ்சா நெடுந்தகை புண்
தொடல் அஞ்சித் துடிதது நீங்கின்று
4.19
ஐயவி சிந்தி நறைபுகைத்தாய் மலர்த்தூய்க்
கொய்யாக் குறிஞ்சி பல பாடி - மொய்யிணர்ப்
பூப்பெண் தெரியல் நெடுந்தகைப்புண் யாம்காப்பப்
பேய்ப் பெண் பெயரும் வரும் 79
(மன்னைக் காஞ்சி - இன்னது)வியலிடம் மருள விண் படர்ந்தோன்
இயல்பு ஈத்த அழி பிரங்கின்று
4.20
போர்க்குப் புனைமன் புரையோர்க்குத் தானுமன்
ஊர்க்கும் உலகிற்கும் ஓருயிர்மன் - யார்க்கும்
அறம்திறந்த வாயில் அடைத்ததால் அண்ணல்
நி¨ம் திருந்த நீள் இலைய வேல் 80
(கள் காஞ்சி இன்னது)நறமவியும் நறுந்தாரோன்
மறமைந்தற்கு மட்டு ஈந்தன்று
4.21
ஒன்னா முனையோர்க்கு ஒழிக இனித்துயில்
மன்னன் மறவர் மகிழ்ந்தூங்கா - முன்னே
படலைக்குரம்பைப் பழங்கண் முதியாள்
விடலைக்கு வெங்கள் விடும் 81
(ஆஞ்சிக் காஞ்சி 1 - இன்னது)காதல் கணவணொடு கனைஎரி மூழ்கும்
மாதர் மெல்லியலின் மலிபு உரைத்தன்று
4.22
தாங்கிய கேளோடு தானும் எரிபுகப்
பூங்குழை ஆயம் புலர்க என்னும் - நீங்கா
விலாழிப் பரித்தானை வெந்திறலார் சீறூர்ப்
புலாழித் தலைக் கொண்ட புண் 82
(ஆஞ்சிக் காஞ்சி 2 - இன்னது)மன்னுயிர் நீத்த வேலின் மனையோள்
இன்னுயிர் நீப்பினும் அத்துறை ஆகும்
4.23
கவ்வைநீர் வேலிக் கடிதேகாண் கற்புடைமை
வெவ்வேல்வாய் வீழ்ந்தான் விறல் வெய்யோன் - அவ்வேலே
அம்பில் பிறழும் தடம்கணவன் காதல்
கொம்பிற்கும் ஆயிற்றே கூற்று 83
(மகள்பால் காஞ்சி - இன்னது)ஏந்திழையாள் தருக என்னும்
வேந்தனொடு வேறு நின்றன்று
4.24
அளியர் கழல் வேந்தர் அம்மா அரிவை
எளிய என்று எள்ளி உரைப்பின் - குளியாவோ
பண்போல் கிளவிப் பல்வளையாள் வாண்முகத்த
கண்போல் பகழி கடிது 84
(முனைகடி முன்னிருப்பு - இன்னது)மன்னர் யாரையும் மறங்காற்றி
முன்னிருந்த முனை கடுந்தன்று
4.25
கடிகமழ்வேரிக் கடைதொறும் செல்லக்
கொடிமலி கொல் களிறு ஏவித் - துடிமகிழ
ஆர்த்திட்டு அமருள் அடையாரை அம்முனையில்
பேர்த்திட்டான் பெய் கழலினான் 85 
5 நொச்சிப் படலம்
(இதனுள் வருவன)நுவலரும் காப்பின் நொச்சி ஏனை
மறனுடை பாசி, ஊர்ச்செரு, என்றா
செருவிடை வீழ்தல், திண்பரி மறனே,
எயிலது போரே, எயில்தனை அழித்தல்,
அழிபடை தாங்கல், மகள் மறுத்து மொழிதல், என
எச்சம் இன்றி எண்ணிய ஒன்பதும்
நொச்சித் திணையும் துறையும் ஆகும் (5)
(நொச்சித் திணை இன்னது)எப்புழை ஞாயில் ஏந்துநிலை அரணம்
காப்போர் சூடிய பூப்புகழ்தன்று
5.1
ஆடரவம் பூண்டான் அழலுணச் சீறிய
கூடரணம் காப்போர் குழாம் புரையச் - சூடினார்
உச்சி மதி வழங்கும் ஓங்கு மதில் காப்பான்
நொச்சி நுதி வேலவர் 86
(நொச்சித் துறைகள்)
(மறனுடைபாசி இன்னது)மறப்படை மழவேந்தர்
துறக்கத்துச் செலவு உரைத்தன்று
5.2
பாயினார் மாயும் வகையால் பலகாப்பும்
ஏயினார் ஏய இகல் மறவர் - ஆயினார்
ஒன்றி அவர் அலற ஊர்ப்புலத்துத் தார் தாங்கி
வென்றி ஆமரர் விருந்து 87
(ஊர்ச்செரு இன்னது)அரும் இளையொடு கிடங்கு அழியாமைச்
செருமலைந்த சிறப்பு உரைத்தன்று
5.3
வளையும் அயிரும் ஒலிப்ப வாள்வீசி
இளையும் கிடங்கும் சிதையத் - தளைபரிந்த
நோனார் படை இரிய நொச்சி விறல் மறவர்
ஆனார் அமர் விலக்கி ஆர்ப்பு 88
(செருபடை வீழ்தல் இன்னது)ஆழ்ந்து படு கிடங்கோடு அரும் இளை காத்து
வீழ்ந்த வேலோர் விறல் மிகுந்தன்று
5.4
ஈண்டரில் சூழ்ந்த இளையும் எரிமலர்க்
காண்தகு நீள் கிடங்கும் காப்பபராய் - வேண்டார்
மடங்கல் அனைய மறவேலோர் தத்தம்
உடம்பொடு காவல் உயிர் 89
(குதிரை மறம் இன்னது)ஏமாண்ட நெடும் புரிசை
வாமானது வகை உரைத்தன்று
5.5
தாங்கன்மின் தாங்கன்மின் தானை விறல் மறவர்
ஓங்கல் மதிலுள் ஒருதனிமா - ஞாங்கர்
மயிரணியப் பாங்கி மழைபோன்று மாற்றார்
உயிருணிய ஓடிவரும் 90
(எயில் போர் இன்னது)அயில் படையின் அரண் காக்கும்
எயில் படைஞர் இகல் மிகுந்தன்று

சிலப்பதிகாரம் கூறும் மறவர்கள்

இலக்கியவாதிகளும் சரி வரலாற்று ஆசிரியர்களும் சரி நடுநிலைமை என்றால் என்ன விலை என்றே கேட்பார்கள் போல. சிலப்பதிகாரத்துக்கு ஆளுக்கு ஆள் உறை எழுதி தள்ளுபவர்கள் இதில் மறவர்கள் எந்த பகுதியில் குறிப்பிடபடுகிறார்கள் என்றால் வேட்டுவ வரியாம். அந்த வேட்டுவ வரியில் விளிம்பு நிலை மக்களாக மறவர்களும் எயினர்களும் குறிப்பிடபடுகிரார்களாம். விளிம்பு நிலை மக்கள் கொலை,கொள்ளையில் ஈடுபடுகின்றனராம். அப்போது வேறு எந்த இடத்திலும் மறவர்களை பற்றி குறிப்பிடபடவில்லை அப்படித்தானே.

இதன் பின்பு வலைதள இலக்கியவாதிகளும் ஒருவர் எடுத்த வா… யை போலவே மற்றவர்களும் கொட்டதொடங்கி வேட்டுவரி என  எழுதினர். இதைப்பார்த்து ஆர்வம் முற்றிய எலிவேட்டை  புலையனும் தன்னை தான் குறிப்பிடுகின்றது என எழுதி கொண்டு திரிகின்றனர் வலை தலம் தோறும்.திரிகின்றனர். அந்த மக்களை பற்றி வேறு இடத்தில் குறிப்பிடுவதையும் இங்கு சுட்டப்போகின்றோம்.
உண்மையில் சிலப்பதிகாரம் கூறும் மறவர்கள் யார் அவர்கள் வேட்டுவ வரியில் மட்டும் தான் குறிப்பிடுகின்றனரா அல்லது மூவேந்தருடன் தொடர்பு படுத்தி குறிப்பிடுகின்றதா என பார்ப்போம் சிலப்பதிகாரமும் விளக்கங்களுடன்.
சிலப்பதிகாரத்தில் கரந்தை மறவர் வெட்சி மறவர் என இருவரை குறிப்பிடுகின்றனர். அதில் கரந்தை மறவர்கள் சேர,சோழ,பாண்டியர் படையில் இருப்பதாகவும் ஒரு சில வெட்சி மறவர்கள் காணகத்தில் இருப்பதாகவும். அக்காணகமும் புகாரிலிருந்து மதுரை செல்லும் பாதையில் இருப்பதாகவும். அது இன்றைய புதுக்கோட்டை பகுதியாகும். இன்றும் மறவர்கள் கொற்றவைக்கு எருமைபலி கொடுப்பதாகவும் சில ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
மறவர் என்றால் வீரரா இல்லை இனமா?
வீரர் என்னும் வார்த்தை சங்க இலக்கியத்தில் இல்லை அதற்க்கு பதிலாக மறவர் என குறிப்பிடுகின்றனர் என கூறும் அறிவிலிகள் மறவர் என்பது வீரர் என்பது மட்டுமல்ல அது ஒரு இனக்குழு. மறவர் அல்லாத வீரர்களும் பல இடத்தி ஏன் சிலப்பதிகாரத்திலே வருகின்றன அதை கோடிட்டு காட்டி வீரர்கள் பலவகை.
ஆணால் மறவர்கள் என்போர் போரை மட்டுமே குலத்தொழிலாக கொண்ட அடலேறுகள் என தெரியவரும்
(எ-டு):1
கடலோடு காதையில் விஞ்சை வீரன் என்பவன் குறிப்பிடபடுகின்றான் இவனை விஞ்சை மறவன் என குறிப்பிட படவில்லை விஞ்சை வீரன் என குறிப்பிடபடுகின்றான்.
கடலாடு காதை
விருந்தாட்டு அயரும்ஓர் விஞ்சை வீரன் 
தென்திசை மருங்கின்ஓர் செழும்பதி தன்னுள்
5
(எ-டு):2
கடலோடு காதையில் 170 இல் வீரான் ஆகலின் விழுமம் என ஒரு வீரனை பற்றி கவுந்தி அடிகள் குறிப்பிடுகிறார்.
சிந்தை விளக்கில் தெரிந்தோன் ஆயினும்
ஆர்வமும் செற்றமும் அகல நீக்கிய
வீரன் ஆகலின் விழுமம் கொள்ளான்,
கழிப்பெருஞ் சிறப்பின் கவுந்தி காணாய்:170
(எ-டு):3
அதே கால்கோட்டு காதையில் வீரரை பற்றியும் வாள் மறவரையும் பற்றி குறிப்பிடுகின்றனர். எனவே வீரன் வேறும் வாள்வரி மறவன் வேறு.
கால்கோட் காதை
யானை வீரரும் இவுளித் தலைவரும்
வாய்வாள் மறவரும் வாள்வல னேத்தத்
தானவர் தம்மேற் றம்பதி நீங்கும்
வானவன் போல வஞ்சி நீங்கித்
தண்டத் தலைவருந் தலைத்தார்ச் சேனையும்
12. அழற்படு காதை
ஆரஞ ருற்ற வீரபத் தினிமுன்
கொந்தழல் வெம்மைக் கூரெரி பொறாஅள்
வந்து தோன்றினள் மதுரா பதியென்.
வீரம் கொண்ட பத்தினியால் மதுராபதியை எரிக்க தோன்றினால்.
மேலே குறிப்பிட்ட மூன்று ஆதாரத்திலும் றவர் வேறு வீரர் வேறு என நிருபணம் ஆகின்றது. எனவே மறவர் என்பது இனக்குழுவே அன்றி பன்பு பெயர் கிடையாது. இனி எந்த முட்டாளும்  பேசுவதற்கு அருகதை யில்லை.
சிலப்பதிகாரம் முழுவதும் வரும் கரந்தை மறவர்கள்.
சிலப்பதிகாரத்தில் மறவர்களை வேட்டுவரியை காட்டிலும் வேந்தர் சூழ் படைகளிலே அதிகமாக விளக்கியுள்ளனர்.
மறவர்களை பற்றி புகார் நகரில் கரிகால் வளவனுடன் இந்திரவிழா தொடங்கி கொற்றவை பலியில் கடந்து மதுரை பாண்டியன் இறந்து மதுரை காவலை விட்டு மறவர்கள் நீங்கியது வரை அதன் பின்பு சேரன் செங்குட்டுவனுடன் சென்று ஆரியவேந்தரை வென்று  கண்ணகிக்கு சிலை எடுத்து இமயத்தில் வில் பொறித்தது வரை மறவரின் குறிப்புகளை வெளியிடுகின்றோம்.
கல்வெட்டுகளிலும் பிற்கால சரித்திர குறிப்புகளிலும் மறவர்கள் வேட்டையை குலதொழிலாக செய்ததில்லை.
வளரி என்னும் ஆயுதம் மறவர்,கள்ளர் மட்டுமே பயன்படுத்தும் ஆயுதம் .இது வேட்டைக்கும் போருக்கும் பயன்பட்டதே தவிர மறவர்கள் போரையும் காவலையும் தவிர வேறு தொழில் செய்ததில்லை 
கரந்தை மறவர் பற்றிய குறிப்புகள்:
கரிகால் சோழனுடன் இந்திரவிழா கொண்டாடிய மறவர்:
5. இந்திர விழவு ஊர் எடுத்த காதை
பூவிலை மடந்தையர் ஏவல் சிலதியர்
பயில்தொழில் குயிலுவர் பன்முறைக் கருவியர்
நகைவே ழம்பரொடு வகைதெரி இருக்கையும்,
கடும்பரி கடவுநர் களிற்றின் பாகர்
நெடுந்தேர் ஊருநர் கடுங்கண் மறவர்
ருவூர் மருங்கின் மறம்கொள் வீரரும்
பட்டின மருங்கின் படைகெழு மாக்களும்
முந்தச் சென்று முழுப்பலி பீடிகை
வெந்திறல் மன்னற்கு உற்றதை ஒழிக்கவெனப்
பலிக்கொடை புரிந்தோர் வலிக்குவரம்பு ஆகவெனக்80
யானைவீரரும்  தேர்வீரரும் மறவரும் சூழ்ந்தனர் பட்டின விழாவான இந்திரவிழாவுக்கு.
25. காட்சிக் காதை
தரும வினைஞருந் தந்திர வினைஞரும்
மண்டிணி ஞாலம் ஆள்வோன் வாழ்கெனப்
பிண்ட முண்ணும் பெருங்களிற் றெருத்தின்
மறமிகு வாளும் மாலைவெண் குடையும்
புறநிலைக் கோட்டப் புரிசையிற் புகுத்திப்
வாள் ஏந்திய மறவர்கள் காக்கும் பாண்டியன் அரண்மனை.

ஆடியல் யானையும் தேரும் மாவும்
பீடுகெழு மறவரும் பிறழாக் காப்பிற்
பாடி யிருக்கைப் பகல்வெய் யோன்றன்
இருநில மடந்தைக்குத் திருவடி யளித்தாங்கு
அருந்திறல் மாக்கள் அடியீ டேத்தப்90
யன்னைபடையும் பீடுகெழு மறவர்களும் ஒன்று சேர்ந்தனர்.
கச்சை யானைக் காவலர் நடுங்கக்
கோட்டுமாப் பூட்டி வாட்கோ லாக
ஆளழி வாங்கி அதரி திரித்த
வாளே ருழவன் மறக்களம் வாழ்த்தித்
தொடியுடை நெடுங்கை தூங்கத் தூக்கி
கச்சை யானைக் காவலர் நடுங்க – கழுத்திடு கயிற் றினையணிந்த யானைகளையுடைய அரசர்கள் நடுங்குமாறு, கோட்டுமாப் பூட்டி-கோட்டினையுடைய களிறுகளை எருதாகப் பூட்டி, வாள் கோலாக – வாளே கோலாக, ஆள் அழி வாங்கி அதரி திரித்த – ஆளாகிய போரை இரங்கவிட்டுக் கடாவிட்ட, வாள் ஏர் உழவன் மறக்களம் வாழ்த்தி – வாளாகிய ஏரினை யுடைய உழவனாகிய செங்குட்டுவனது போர்க்களத்தை வாழ்த்தி, தொடியுடை நெடுங்கை தூங்கத் தூக்கி – வீர வளை யணிந்த பெரிய கைகளை அசையுமாறு தூக்கி, முடியுடைக் கருந்தலை முந்துற ஏந்தி – முடியணிந்த கரிய தலையை முற்பட ஏந்திக்கொண்டு, கடல்வயிறு கலக்கிய ஞாட்பும் கடல் அகழ் இலங்கையில் எழுந்த சமரமும் கடல்வணன் தேர்ஊர் செருவும் பாடி – கடல் போலும் நீல நிறமுடைய கண்ணன் கடலின் வயிற்றைக் கலக்கிய போரும் கடலை அகழியாகவுடைய இலங்கையிற் புரிந்த போரும் பாண்டவர்பொருட்டுத் தேரூர்ந்த போரும் ஆகிய மூன்றையும் பாடி, பேரிசை முன்தேர்க் குரவை முதல்வனை வாழ்த்தி – பெரும் புகழுடைய முதல்வனை முன்றேர்க் குரவையிலே பாடி வாழ்த்தி, பின்தேர்க் குரவை பேய் ஆடு பறந்தலை – பின்றேர்க் குரவையிலே பேய் ஆடுகின்ற மறக்களத்தில்;

தரும வினைஞருந் தந்திர வினைஞரும்
மண்டிணி ஞாலம் ஆள்வோன் வாழ்கெனப்
பிண்ட முண்ணும் பெருங்களிற் றெருத்தின்
மறமிகு வாளும் மாலைவெண் குடையும்
புறநிலைக் கோட்டப் புரிசையிற் புகுத்திப்
றஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து
இறைஞ்சாக் சென்னி இறைஞ்சி வலங்கொண்டு
மறையோ ரேந்திய ஆவுதி நறும்புகை
நறைகெழு மாலையின் நல்லகம் வருத்தக்
கடக்களி யானைப் பிடர்த்தலை யேரினன்
யானை வீரரும் இவுளித் தலைவரும்
வாய்வாள் மறவரும் வாள்வல னேத்தத்
தானவர் தம்மேற் றம்பதி நீங்கும்
வானவன் போல வஞ்சி நீங்கித்
தண்டத் தலைவருந் தலைத்தார்ச் சேனையும்80
அழற்படு காதை
காழோர் வாதுவர் கடுந்தே ரூருநர்
வாய்வாள் மறவர் மயங்கினர் மலிந்து
கோமகன் கோயிற் கொற்ற வாயில்
தீமுகங் கண்டு தாமிடை கொள்ள
காழோர் வாதுவர் கடுந்தேர் ஊருநர் வாய் வாள் மறவர் மயங்கினர் மலிந்து – பரிக்கோலினராய யானைப்பாகரும் குதிரைப்பாகரும் விரையுந் தேர்ப்பாகரும் வினை வாய்த்த வாள் வீரரும் தம்முட் கலந்து மிக்கு,கோ மகன் கோயில் கொற்ற வாயில் – மன்னனது அரண்மனையின் வெற்றியினையுடைய வாயிலின்கண், தீ முகம் கண்டு தாம் மிடைகொள்ள – எரியின் திறத்தினை நோக்கி வந்து நெருங்க ;
மதுரை எரியும் போது மதுரையை விட்டு நீங்கி மறவர்கள்.

இமயத்தில் வெற்றிகொடி நாட்டின சேரன் செங்குட்டுவனும் மறவரும்:
சேரனே மறவர் மன்னன் தான் மறவர்களே சேரனோடு இமயத்தில் கன்னகிக்கு கல்லெடுத்து. மறவரோடு வஞ்சியை நீங்கி சென்றான் வானவன்.
நீர்ப்படைக் காதை
[இமயத்தினின்றும் கொண்ட பத்தினிக் கல்லைக் கனக விசயரு டைய முடியின் மீதேற்றிச் சென்று கங்கையாற்றில் முறைப்படி நீர்ப்படை செய்து அதன் தென்கரை சேர்ந்து, ஆரிய மன்னர்களால் ஆங்கண் அழகுற அமைக்கப்பெற்ற பாடியின்கண் செங்குட்டுவன் சேனையுடன் தங்கி, போரிலே வீரங்காட்டித் துறக்கமுற்றோரின் மைந்தர்களுக்கும், பகைஞர்களை வென்ற வீரர்களுக்கும் பொன்னாற் செய்த வாகைப் பூவினை யளித்துச் சிறப்பித்திருந்தனன். இருந்தவன் , கங்கையாடி அங்குப் போந்த மாடலனால் கோவலன் வரலாற்றையும், அவன் கொலையுண்டமை கேட்டுப் புகார் நகரிலிருந்த அவன் தந்தை யும் கண்ணகி தந்தையும் துறவுபூண்டதும், இருவர் தாயரும் உயிர் துறந்ததும் முதலியவற்றையும் நெடுஞ்செழியன் துஞ்சிய பின் கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன் பாண்டி நாட்டை ஆட்சி செய்து வருவதனையும் சோழனது செங்கோல் திரிபின்றி விளங்குவதனையும் கேள்வியுற்று, அவனுக்குச் தன் நிறையாகிய ஐம்பது துலாம் பொன் தானஞ்செய்து. தன்னாற் பற்றுக்கோட் பட்ட கனக விசயரைச் சோழ பாண்டியர்க்குக் காட்டி வருமாறு நீலன் முதலிய கஞ்சுக மாக்களை யேவித் தானையுடன் புறப்பட்டுச் சென்று , தன்னைப் பிரிந்து துயிலின்றி வருந்தியிருக்கும் கோப் பெருந் தேவியின் நெகிழ்ந்த வளை மகிழ்ச்சியாற் செறியும்படி வெண் கொற்றக் குடை நிழற்ற யானைமீ திவர்ந்து வஞ்சி நகரத்திற் புகுந்தனன்]
அழற்படு காதை
அரைச பூதத்து அருந்திறற் கடவுளும்
செந்நிறப் பசும்பொன் புரையும் மேனியன்
மன்னிய சிறப்பின் மறவேல் மன்னவர்
அரைசுமுடி யொழிய அமைத்த பூணினன்
மடிந்தோர் மைந்தரும் அணிந்தோரும் பொலிந்த மைந்தரும் கலங்கொண்டோரும் வாண் மறவரும் வருகவென அழைத்துக் கொடுத்தென்க. வாகைப் பொலந்தோடு அளித்தல் வீரர்களின் வீரச் செய்கையைப் பாராட்டியதற்கு அடையாளமாக அளிக்கும் சிறப்பாகும். கொடுக்குநாளைப் பெருநாளென்றார். அமயம் பிறக்கிட-பொழுது போதாதாம்படி. இனி, பிறந்த நாள்வயிற் கொடுக்கும் பொழுது பின்னாகும்படி யென்றுரைத்தலுமாம்.
செந்நிறப் பசும்பொன் புரையு மேனியன் – சிவந்த நிறமுடைய ஒட்டற்ற பொன்னையொத்த மேனியையுடையோ னாய், மன்னிய சிறப்பின் மறவேல் மன்னவர் அரைசு முடி ஒழிய அமைந்த பூணினன் – நிலை பெற்ற சிறப்பினையும் மறம் பொருந்திய வேலினையுமுடைய அரசர்க்குரிய தலைமை அமைந்த முடி தவிரப் பூண்ட கலன்களையுடையனாய், வாணிக மரபின் நீள் நிலம்

மறவேல் மன்னவன்(செங்குட்டுவன்) மறவரோடு போரிட்டு மாய்ந்த  மன்னர்கள் பலரை கடந்து இமயம் சென்றனர்.
நீர்ப்படைக் காதை

நிறஞ்சிதை கவயமொடு நிறப்புண் கூர்ந்து
புறம்பெற வந்த போர்வாண் மறவர்

நிறம் சிதை கவயமொடு நிறப்புண் கூர்ந்து – உருச் சிதைந்த கவசத்தோடே மார்பின்கண் புண் மிகப்பெற்று, புறம் பெற வந்த போர் வாண் மறவர் – பகைவர் புறத்தைக் கண்ட வளவிலே மீண்ட போரிற் சிறந்த வாள் வீரரும்.நிறம் இரண்டனுள் முன்னது வடிவு ; பின்னது மார்பு.
நீர்ப்படைக் காதை
நாள்விலைக் கிளையுள் நல்லம ரழுவத்து
வாள்வினை முடித்து மறத்தொடு முடிந்தோர்
நாள் விலைக் கிளையுள் – தம் வாழ்நாளை விலையாகத் தரும் மறவருள், நல்அமர் அழுவத்து – நல்ல பொரு களப் பரப்பிலே, வாள் வினைமுடித்து மறத்தொடு முடிந்தோர் – வாளாற் செய்யும் வினையனைத்தையும் செய்து முடித்து வீரத்தோடு பட்டோரும் ;

நாள்விலைக் கிளை – அரசனளித்த செஞ்சோற்றுக்கும் சிறப்புக்கும் விலையாகத் தம் வாழ்நாளைத் தரும் மறவர். கிளையுள் எனபதனை இடைநிலை விளக்காகக் கொண்டு முன்னும் பின்னுங் கூட்டுக.
கிளைகள் மறவரில் மட்டுமே கானப்படும் என்பது இங்கு நோக்குக
நீர்ப்படைக் காதை
10
செறிகழல் வேந்தன் றென்றமி ழாற்றல்(தமிழ் ஆற்றல்)

அறியாது மலைந்த ஆரிய மன்னரைச்
செயிர்த்தொழில் முதியோன் செய்தொழில் பெருக
உயிர்த்தொகை யுண்ட வொன்பதிற் றிரட்டியென்று
யாண்டும் மதியும் நாளுங் கடிகையும்

ஈண்டுநீர் ஞாலங் கூட்டி யெண்கொள
வருபெருந் தானை மறக்கள மருங்கின்
ஒருபக லெல்லை யுயிர்த்தொகை யுண்ட
செங்குட் டுவன்றன் சினவேற் றானையொடு
செறிகழல் வேந்தன் – செறிந்த வீரக் கழலையுடைய சேரவேந்தன், தென்றமிழ் ஆற்றல் அறியாது மலைந்த ஆரிய மன்னரை – தமிழன் ஆற்றலை அறியாது பொருத ஆரியவர சரை, செயிர்த் தொழில் முதியோன் செய்தொழில் பெருக உயிர்த்தொகை உண்ட – கொல்லுந் தொழிலையுடைய கூற்றுவனது தொழில் மிகுமாறு உயிர்க்கூட்டத்தை யுண்ட போர்கள், ஒன்பதிற்று இரட்டியென்று யாண்டும் மதியும் நாளும் கடிகையும் ஈண்டுநீர் ஞாலம் கூட்டி எண்கொள – பதினெட்டாகிய யாண்டிலும் திங்களிலும் நாளிலும் நாழிகையிலும் முடிந்தன வென்று கடல்சூழ்ந்த உலகத்தோர் கூட்டியெண்ண, வருபெருந்தானை மறக்கள மருங்கின் – பெரிய சேனைகளோ டெதிர்ந்த போர்க்களத்திலே, ஒரு பகல் எல்லை உயிர்த்தொகை உண்ட செங்குட்டுவன் – ஒரு பகற் பொழுதினுள்ளே உயிருண்ட செங் குட்டுவன் ;
வேந்தனாகிய செங்குட்டுவன் எனக் கூட்டுக. தமிழாற்றல் – தமிழ் வேந்தரின் ஆற்றல், தமிழ் மறவரின் ஆற்றல், தமிழ்நாட்டினரின் ஆற்றல். செயிர் செற்றம் ; துன்பமுமாம். செயிர்த்தொழில் – செயிரை விளக்குந் தொழில். உண்ட – உண்டனவாகிய போர்கள் ; வினைப்பெயர். ஞாலம் ஆண்டு முதலியவற்றுடன் ஒன்பதிற்றிரட்டியைக் கூட்டிப் போர்கள் அவற்றில் முடிந்தனவென் றெண்ண ; தேவாசுர யுத்தம் பதினெட்டாண்டிலும், இராம ராவண யுத்தம் பதினெட்டு மாதத்திலும், பாண்டவ துரியோதன யுத்தம் பதினெட்டு நாளிலும், செங்குட்டுவனும் கனகவிசயரும் செய்த யுத்தம் பதினெட்டு நாழிகையிலும் முடிந்தனவென் றெண்ண வென்க
அழற்படு காதை
மறவெங் களிறு மடப்பிடி நிரைகளும்
விரைபரிக் குதிரையும் புறமதிற் பெயர்ந்தன
மற வெங்களிறும் மடப்பிடி நிரைகளும் – வலி மிக்க கொடிய ஆண்யானைகளும் இளம் பெண்யானை வரிசைகளும், வினைபரிக் குதிரையும் புறமதிற் பெயர்ந்தன – விரையும் செல வினையுடைய குதிரைகளும் மதிற்புறத்தே சென்றன ;

கால்கோள் காதை5

முடித்தலை யடுப்பிற் பிடர்த்தலைத் தாழித்
தொடித்தோள் துடுப்பின் துழைஇய ஊன்சோறு
மறப்பேய் வாலுவன் வயினறிந் தூட்டச்
சிறப்பூண் கடியினஞ் செங்கோற் கொற்றத்து

அறக்களஞ் செய்தோன் ஊழி வாழ்கென
மறக்கள முடித்த வாய்வாட் குட்டுவன
முடித்தலை அடுப்பில் பிடர்த்தலைத் தாழி-முடி சூடிய தலையாகிய அடுப்பில் யானையின் தலையாகிய தாழியில் தொடித்தோள் துடுப்பில் துழைஇய ஊன்சோறு – தொடி யணிந்த தோளாகிய துடுப்பினால் துழாவி அடப்பட்ட ஊனாகிய சோற்றை, மறப்பேய் வாலுவன் வயின் அறிந்து ஊட்ட-மறம் பொருந்திய பேய் மடையன் பதமறிந்து உண்பிக்க, சிறப்பூண் கடியினம் செங்கோற் கொற்றத்து அறக்களம் செய்தோன் ஊழி வாழ்க என-சிறந்த உணவினையுண்ட பேயினங்கள் முறை வழுவா வென்றியினாலே அறக்களஞ் செய்தோன் ஊழிதோறும் வாழ்க என வாழ்த்த. மறக்களம் முடித்த வாய்வாட் குட்டுவன்- போர்க்களச் செய்கையை முடித்த தப்பாத வாளினையுடைய செங்குட்டுவன்;

கால்கோள் காதை

தாழ்தரு கோலத்துத் தமரொடு சிறந்து
வாள்வினை முடித்து மறவாள் வேந்தன்
ஊழி வாழியென் றோவர் தோன்றக்

சேரனாகி மறவாள் வேந்தன் போரை முடித்து கணக விஜயரை வென்ற செய்தி.

தாழ்தரு கோலத்துத் தமரொடு சிறந்து – பொருந்திய கோலத்தையுடைய தம் மகளிருடன் மகிழ்ச்சி மிக்கு வாள்வினை முடித்த மறவாள் வேந்தன் ஊழி வாழியர் என்று ஓவர் தோன்ற – போர்த் தொழிலினை முடித்து வென்றி வாளினை யுடைய மன்னவன் ஊழியூழி வாழ்வானாக என்று கூறிக் கொண்டு ஓவர்கள் தோன்ற

கால்கோள் காதை

75மாகதப் புலவரும் வைதா ளிகரும்
சூதரும் நல்வலந் தோன்ற வாழ்த்த

யானை வீரரும் இவுளித் தலைவரும்
வாய்வாண் மறவரும் வாள்வல னேத்தத்
தானவர் தம்மேற் றம்பதி நீங்கும்
வானவன் போல வஞ்சி நீங்கித

மாகதப் புலவரும் வைதாளிகரும் சூதரும் நல்வலம் தோன்ற வாழ்த்த – சூதரும் மாகதரும் வேதாளிகரும் நல்ல வெற்றி விளங்குமாறு வாழ்த்த, யானை வீரரும் இவுளித் தலை வரும் வாய்வாள் மறவரும் வாள் வலன் ஏத்த – யானை மறவரும் குதிரை வீரரும் கூரிய வாட் படையினையுடைய போர் வீரரும் வாளின் வென்றியை வாழ்த்த, தானவர் தம்மேல் தம்பதி நீங் கும் வானவன் போல வஞ்சி நீங்கி – அவுணர்மீது தம் பதியின் நீங்கிச் செல்லும் இந்திரனைப்போல வஞ்சிப் பதியினின்றும் நீங்கி;

3,கால்கோள் காதை

200
சிலைத்தோ ளாடவர் செருவேற் றடக்கையர்
கறைத்தோன் மறவர் கடுந்தே ரூருநர்
வெண்கோட் டியானையர் விரைபரிக் குதிரையர்
மண்கண் கெடுத்தவிம் மாநிலப் பெருந்துகள்

சிலைத்தோள் ஆடவர் செருவேல் தடக்கையர் – வில்லினைத் தோளிற்கொண்ட வீரர் போர்புரியும் வேலினைக் கையிற்கொண்ட வீரர், கறைத்தோல் மறவர்-கரிய கிடுகினைத் தாங்கிய வீரர், கடுந்தேர் ஊருநர் – கடிய செலவினையுடைய தேரினைச் செலுத்துவோர், வெண்கோட்டு யானையர் விரைபரிக் குதிரையர் – வெள்ளிய கொம்புகளையுடைய யானையைக் கடாவு வோர் விரைந்த செலவினையுடைய குதிரையைத் தூண்டுவோர்.

3,கால்கோள் காதை

205தோளுந் தலையுந் துணிந்துவே றாகிய

சிலைத்தோண் மறவர் உடற்பொறை யடுக்கத்து
எறிபிணம் இடறிய குறையுடற் கவந்தம்
பறைக்கட் பேய்மகள் பாணிக் காடப்
208

தோளும் தலையும் துணிந்து வேறாகிய – தோள்களும் தலையும் துணிபட்டு வெவ்வேறாகிய, சிலைத்தோள் மறவர் உடற் பொறை அடுக்கத்து – வில்லைத் தோளிற் கொண்ட வீரர்களின் உடற்பாரமாகிய குன்றுகளில், எறி பிணம் இடறிய குறை உடற் கவந்தம் – வெட்டுண்ட பிணத்தால் இடறப்பட்ட தலை யற்ற உடலினையுடைய கவந்தங்கள், பறைக்கண் பேய் மகள் பாணிக்கு ஆட – பறைபோன்ற பெரிய கண்களையுடைய பேய் மகளின் தாளத்திற்கிசைய ஆட

12. அழற்படு காதை
காழோர் வாதுவர் கடுந்தே ரூருநர்
வாய்வாள் மறவர் மயங்கினர் மலிந்து
கோமகன் கோயிற் கொற்ற வாயில்
தீமுகங் கண்டு தாமிடை கொள்ள

காழோர் வாதுவர் கடுந்தேர் ஊருநர் வாய் வாள் மறவர் மயங்கினர் மலிந்து – பரிக்கோலினராய யானைப்பாகரும் குதிரைப்பாகரும் விரையுந் தேர்ப்பாகரும் வினை வாய்த்த வாள் வீரரும் தம்முட் கலந்து மிக்கு,கோ மகன் கோயில் கொற்ற வாயில் – மன்னனது அரண்மனையின் வெற்றியினையுடைய வாயிலின்கண், தீ முகம் கண்டு தாம் மிடைகொள்ள – எரியின் திறத்தினை நோக்கி வந்து நெருங்க

காணகத்தில் கொற்றவைக்கு  பலியிட்ட வெட்சி மறவர்:

இந்த வேட்டுவ வரியில் குறிப்பிடும் இடம் புகார் பகுதியிலிருந்து மதுரை பகுதி செல்லும் இடம்  புதுக்கோட்டை மாவட்டம் என இந்நாளில்  கூறுகின்றனர். இன்று மறவர்கள் படைக்கும் கொற்றவை  விழா இன்னும் நடக்கிறது இதற்கான ஆதாரம் ஆவணம் இதழே தமிழக அரசு வெளியிட்டுள்ளது. புதுக்கோட்டை விராய்சிலையில் மதுஎடுப்பு திருவிழாவும் எருமைபலியும் நடக்கும் கொற்றவை திருவிழா.



வேட்டுவரியில் குறிப்பிடுவது வெட்சி மறவரை,

எயினர் என்போர் யார் என தெரியவில்லை 
எயினருடன் மறவரும் சேர்ந்து கொற்றவையை வணங்கியுள்ளனர். எயினர் சிலர் சில சமூகங்கள் கோறுகின்றனர் இன்னும் யார் என தெரியவில்லை.

இதில் வேட்டுவ மறவர் என பெயர் வரவில்லை எனவே கொங்க வேட்டை புலையனுக்கு இதில் சம்பந்தமில்லை.
வேட்டுவ வரி

10
தெய்வ முற்று மெய்ம்மயிர் நிறுத்துக்
கையெடுத் தோச்சிக் கானவர் வியப்ப
இடுமுள் வேலி எயினர்கூட் டுண்ணும்
நடுவூர் மன்றத் தடிபெயர்த் தாடிக்

தெய்வம் உற்று மெய்ம்மயிர் நிறுத்துக் கை யெடுத்து ஓச்சிக் கானவர் வியப்ப – மறவர் வியக்கும் வண்ணம் தெய்வத் தன்மையை அடைந்து மெய்ம்மயிர் சிலிர்த்துக் கைகளை எடுத்து உயர்த்தி, இடு முள் வேலி எயினர் கூட்டுண்ணும் நடுவூர் மன்றத்து அடிபெயர்த்து ஆடி – முள்வேலி இடப் பெற்ற மறவர் கூடி ஒருங்கு உண்ணுதலையுடைய ஊர் நடுவில் உள்ள மன்றத்திலே கால்களைப் பெயர்த்து ஆடி

வேட்டுவ வரி
கொற்றவை மதி(நிலவை) சூடியவள். வில்லை ஏந்தியவள் எப்படி இருப்பாள் என்றால்.

மதியின் வெண்தோடு சூடுஞ் சென்னி
நுதல்கிழித்து விழித்த இமையா நாட்டத்துப்
மதியின் வெண்தோடு சூடும் சென்னி – பிறையாகிய வெள்ளிய இதழைச் சூடும் சென்னியினையும், நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டத்து – நெற்றியினைத் திறந்து விழித்த இமையாத கண்ணினையுமுடைய ;


பவள வாய்ச்சி தவளவாள் நகைச்சி
நஞ்சுண்டு கறுத்த கண்டி வெஞ்சினத்து
பவள வாய்ச்சி – பவளம் போன்ற வாயினையுடையாள், தவள வாள் நகைச்சி – வெள்ளிய ஒளி பொருந்திய நகையினையுடையாள், நஞ்சு உண்டு கறுத்த கண்டி – நஞ்சினை உண்டதனாற் கறுத்த கண்டத்தினையுடையாள் ;
துளையெயிற் றுரகக் கச்சுடை முலைச்சி
துளை எயிற்று உரகக் கச்சு உடை முலைச்சி – நஞ்சு பொருந்தும் துளையுள்ள எயிற்றினையுடைய பாம்பாகிய கச்சணிந்த முலையினையுடையாள்
கரியின் உரிவை போர்த்தணங் காகிய
அரியின் உரிவை மேகலை யாட்டி
கரியின் உரிவை போர்த்து அணங்கு ஆகிய அரியின் உரிவை மேகலை யாட்டி – யானையின் தோலைப் போர்த்துப் வருத்துந் தன்மையுடைய சிங்கத்தின் தோலை மேகலையாக உடுத்தவள்
அணங்கு – வருத்தம்.
சிலம்புங் கழலும் புலம்புஞ் சீறடி
வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை
சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி இடப் பக்கத்துச்- சிலம்பும் வலப் பக்கத்து வீரக் கழலும் ஒலிக்கும் சிறிய அடிகளையும், வலம்படு கொற்றத்து வாய் வாட் கொற்றவை – மேலான வெற்றியையும் வினை வாய்க்கப் பெறும் வாளினையுமுடைய கொற்றவை .        இடப்பாகம் கொற்றவையும் வலப்பாகம் சிவபெருமானும் ஆய உருவமாகலான் ‘சிலம்புங் கழலும் புலம்புஞ் சீறடி’ என்றார். வலம்-மேன்மை.

வேட்டுவ வரி
மறக்குடித் தாயத்து வழிவளஞ் சுரவாது
அறக்குடி போலவிந் தடங்கின ரெயினரும்
       மறக் குடித் தாயத்து வழி வளஞ் சுரவாது அறக்குடி போல் அவிந்து அடங்கினர் எயினரும் – மறக்குடியிற் பிறந்த உரிமையை உடைய மறவரும் வழிக்கண் பறிக்கும் வளம் சுரக்கப் பெறாது அறவர் குடிப் பிறந்தோர் போலச் சினங் குறைந்து செருக்கு அடங்கி விட்டனர் ;
வேட்டுவ வரி
[மூவரும் ஐயை கோட்டத்தின் ஒருபுடை இளைப்பாறி இருந்தனராக, இப்பால், வேட்டுவக் குடியில் தெய்வத்திற்கு வழிபாடு செய்யும் உரிமையுடைய சாலினி யென்பாள் தெய்வ மேறப்பெற்று, 'எயினர் மன்றுகள் பாழ்பட்டன ; கடன் உண்ணின் அல்லது கொற்றவை வெற்றி கொடாள் ; ஆகலின் நீர் செலுத்தற்குரிய கடனைச் செலுத்துவீராக' என்றாள். என்றலும், எயினரனைவரும் கூடித் தங்கள் தொல்குடிப் பிறந்த குமரியைக் கொற்றவையாக ஒப்பனை செய்து பரவிக் கை தொழுது ஏத்தினர். அப்பொழுது சாலினி தெய்வமுற்றுக் கோயிலின் ஒரு சிறை கணவனோடிருந்த கண்ணகியை நோக்கி, 'இவள், கொங்கச் செல்வி குடமலை யாட்டி, தென்றமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து, .... ' என்று பின் நிகழ்வதறிந்து கூறக், கண்ணகி ' மூதறிவாட்டி பேதுறவு மொழிந்தனள்' என்று புன் முறுவலுடன் கணவன் புறத்தொடுங்கி நின்றனள். குமரிக் கோலத்துக் குமரியும் வரிக்கோலம் நன்கு வாய்த்ததென்று கண்டார் சொல்ல அருளினள். வேட்டுவர்கள் கொற்றவையின் பல புகழையும் கூறிப் பரவி, 'விறல் வெய்யோன் வெட்சி சூடுக' எனத் தம் அரசனை வாழ்த்தினர். (இதன்கண் வேட்டுவர் கொற்றவையை ஏத்துவனவாகவுள்ள பாட்டுக்கள் மிக்க சிறப்புடையன.)]
வழங்குவில் தடக்கை மறக்குடித் தாயத்துப்
பழங்கட னுற்ற முழங்குவாய்ச் சாலினி
7       வழங்கு வில் தடக்கை மறக் குடித் தாயத்து – அம்பினை வழங்கும் வில்லை யேந்திய பெரிய கையையுடைய மறவர் குடியிற் பிறந்த உரிமையை உடைய, பழங்கடன் உற்ற முழங்கு வாய்ச் சாலினி – முன்பு நேர்ந்த கடனைக் கொடுத்துப் போந்த ஒலிக்கும் வாயினையுடைய தேவராட்டி ;
மறங்கொள் வயப்புலி வாய்பிளந்து பெற்ற
மாலை வெண்பற் றாலிநிரை பூட்டி
வரியும் புள்ளியு மயங்கு வான்புறத்து
உரிவை மேகலை உடீஇப் பரிவொடு

மறங் கொள் வயப்புலி வாய் பிளந்து பெற்ற – தறு கண்மையை உடைய வலிய புலியினை வாயைப் பிளந்து கொண்ட, மாலை வெண்பல் தாலி நிரை பூட்டி – ஒழுங்காகக் கோத்த வெள்ளிய பல்லினாலாகிய தாலியை வரிசைப்படக் கட்டி, வரியும் புள்ளியும் மயங்கு வான் புறத்து உரிவை மேகலை உடீஇ – கோடுகளும் புள்ளிகளும் கலக்கப் பெற்ற தூய புறத்தினையுடைய தோலினை மேகலையாக உடுத்து ;


வெட்சி மறவர்கள் கொண்டாடிய கொற்றவை திருவிழா. இது இன்னும் புதுக்கோட்டை பகுதியில் நடந்து வருகின்றது.
மறையோன்(பார்ப்பான்) என்பவன் தானம் பெரும் யாசகன்(பிச்சை பெறுபவன்) இவன் கோத்திரத்துக்கு அடித்து கொள்ளும் மூத்திர கும்பளுக்கு ரொம்ப பெருமை தான்.
மறையோன் உற்ற வான்துயர் நீங்க
உறைகவுள் வேழக் கையகம் புக்கு
வானோர் வடிவம் பெற்றவன் பெற்ற
காதலி தன்மேற் காதல ராதலின்
மேனிலை யுலகத் தவருடன் போகும்
மறையோன் உற்ற வான் துயர் நீங்க – தன்னிடத்துத் தானங்கொள்ள வந்த பார்ப்பனன் அடைந்த கொடிய துன்பம் ஒழிய, உறைகவுள் வேழக் கையகம் புக்கு வானோர் வடிவம் பெற்றவன் பெற்ற காதலிதன்மேல் காதலராதலின் – மதஞ்சொரியுங் கவுளினையுடைய யானையின் கையகத்தே நுழைந்து விண்ணோரது வடிவம் பெற்றோனாகிய கோவலன் கொண்ட கண்ணகியின்மீது அன்புடையா ராகலானும், மேல் நிலை உலகத்து அவருடன் போகும் தாவா நல் அறம் செய்திலர் அதனால் – துறக்கவுலகத்து அவருடன் சென்றடையும் கெடுதலற்ற நல்ல அறத்தினைச் செய்திலராதலானும்
ஆரியரை வென்ற  தமிழ் மறவேந்தன் சேரன் செங்குட்டுவன்:
சில மூதேவிகள் மூவேந்தர்களை வேளிர் என கதையழந்து வருகின்றனர். ஆதாவது
“வடபால் முனிவன் தடவி தோன்றிய” என எழுதுகின்றனர். அதாவது துவாரகா அழிந்தபோது ஓடிவந்த பேடிக்கூட்டம் என வேளிரை வர்னிக்கின்றனர். ஆணால் வேளிர்களை பற்றி இராகவ அய்யங்கார் இவர்களுக்கு முன்னாளில் முடி தரிக்கும் உரிமை இல்லை. இவர்கள் சொல்லி பெருமை பட்டு கொள்ளும் அளவுக்கு இவர்களது வரலாறு இல்லை என கூறுகிறார். நந்தகோபன் என்னும் வைஸ்யனுக்கும் வசுதேவன் என்னும் மன்னனுக்கு மகனாக தோன்றினான் பரமாத்மன் என கீழ் குலமென வர்ணிக்கிறார்.
அது என்ன லெட்சனமோ. இது வேளிர் பற்றி புனையபட்ட பிற்கால புராணம். ஆனால் வேளிர் என்போர் தமிழ் மன்னர்கள். இவர்கள் நாகர் குலத்தே சேர்ந்தவர்கள் என அனேக ஆதாரமுள்ளது. இது பொய்கதையே.
ஆணால் தமிழ் மூவேந்தர்கள் இந்த ஆரியவர்க்கம் அல்ல ஆரியர்களை வென்ற தமிழ் மன்னர்கள் சேர சோழ பாண்டியர் எனவே வந்தேரிய  கீழ்குலங்கள் இனி மூவேந்தரை ஆரியரோடு ஒப்புமை செய்வதை விட்டு தங்கள் முன்னொரோரான வடுக மன்னர்களை கூறி கொண்டு திரியுங்கள்.
மூவேந்தர்கள் தமிழர்களே. ஆரியனை வென்ற எம் முன்னோன் சேரன்செங்குட்டுவன். அதற்கான ஆதாரங்களை பார்ப்போம்.
முடியுடை வேந்தர் மூவ ருள்ளும்
குடதிசை யாளுங் கொற்றங் குன்றா
ஆர மார்பிற் சேரர்குலத் துதித்தோர்
அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம்
பழவிறல் மூதூர்ப் பண்பிமேம் படுதலும்
விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும்
ஒடியா இன்பத் தவருறை நாட்டுக்
குடியின் செல்வமுங் கூழின் பெருக்கமும்
வரியுங் குரவையும் விரவிய கொள்கையின்
புறத்துறை மருங்கின் அறத்தொடு பொருந்திய
மறத்துறை முடித்த வாய்வாள் தானையொடு
பொங்கிரும் பரப்பிற் கடல்பிறக் கோட்டிக்
கங்கைப் பேர்யாற் றுக்கரை போகிய
செங்குட் டுவனோ டொருபரிசு நோக்கிக்
கிடந்த வஞ்சிக் காண்டமுற் றிற்று.
முடியுடை வேந்தர் மூவருள்ளும் – முடியுடைய மன்னராகிய சோழர் பாண்டியர் சேரர் என்னும் மூவருள்ளும், குடதிசை ஆளும் கொற்றம் குன்றா ஆர மார்பிற் சேரர்குலத்து உதித்தோர் - மேற்றிசைக்கண்ணதாகிய மலைநாட்டினை யாளும் குன்றாத வென்றியையும் ஆரமணிந்த மார்பினையுமுடைய சேரர் குலத்துப் பிறந்தோருடைய, அறனும் மறனும் ஆற்றலும் – அறமும் ஆண்மையும் திறலும், அவர்தம் பழவிறல் மூதூர்ப் பண்புமேம்படுதலும் – அவரது பழைய பெருமையையுடைய தொன்னகராகிய வஞ்சியின் இயல்பு மேம்பட்டு விளங்குதலும், விழவுமலி சிறப்பும் – அந்நகரின்கண் விழாக்கள் நிறைந்த சிறப்பும், விண்ணவர் வரவும் – வானோர் வருகையும், ஒடியா இன்பத்து அவர் உறை நாட்டுக் குடியின் செல்வமும் கூழின் பெருக்கமும் – கெடாத இன்பத்தையுடைய அவரது நாட்டில் உறையும் குடிமகளின் செல்வமும் உணவின் பெருக்கமும், வரியும் குரவையும் விரவிய கொள்கையின் – தம்மிற் கலந்த தன்மையையுடைய வரியும் குரவையுமாகிய பாட்டும் கூத்தும், புறத்துறை மருங்கின் – புறத்திணைக்குரிய துறைகளிலே, அறத்தொடு பொருந்திய மறத்துறை முடித்த – அறத்துடன் கூடிய போர்த்துறைகளைச் செய்து முடித்த, வாய்வாள் தானையொடு பொங்கு இரும் பரப்பின் கடல்பிறக்கு ஓட்டி – தப்பாத வாளினையுடைய சேனையுடன் சென்று மிக்க பெரிய பரப்பினையுடைய கடலின் கண் வாழும் பகைஞரைப் பிறக்கிடுமாறு துரந்து, கங்கைப் பேர் யாற்றுக் கரை போகிய – கங்கையாகிய பெரிய யாற்றின் கரைக்கண் மேற்சென்ற, செங்குட்டுவனோடு – செங்குட்டுவன் என்னும் சீர்த்தி மிக்க வேந்தனோடு, ஒரு பரிசு நோக்கிக் கிடந்த வஞ்சிக்காண்டம் முற்றிற்று – ஒருவாறு நோக்கும்படி அமைந்த வஞ்சிக் காண்டமென்னும் இத் தொடர்நிலைச் செய்யுளின் முன்றாம் பகுதி முற்றிற்று என்க.
சேரர் குலத்தோரின் அறன் முதலாக ஈண்டுத் தொகுத்துரைத்தவற்றை இக்காண்டத்தில் ஆண்டாண்டுக் கண்டுணர்க. மறத்துறை முடித்த குட்டுவன், தானையொடு கடல்பிறக் கோட்டிக் கரைபோகிய குட்டுவன் எனத் தனித்தனி முடிக்க. கடல்பிறக் கோட்டியதும் கரைபோகியதும் 1முன்னர்ப் போந்தமை காண்க. அறன்முதலாகக் குரவையீறாகக் கூறியன் பலவும் செங்குட்டுவனோடு ஒரு பரிசு நோக்கிக் கிடந்த வஞ்சிக் காண்ட மென்க.
ருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும்
பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும்
குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும்
கடல்சூ ழிலங்கைக் கயவாகு வேந்தனும்
எந்நாட் டாங்கண் இமய வரம்பனின்
நன்னாட் செய்த நாளணி வேள்வியில்
வந்தீ கென்றே வணங்கினர் வேண்டத்
தந்தேன் வரமென் றெழுந்த தொருகுரல்
ருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும்-அப்பொழுது நீங்குதற்கரிய சிறைக் கோட்டத்தினின்றும் நீங்கிப்போந்த ஆரிய நாட்டரசரும், பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும் – பெரிய காவற்கூடத்தை நீங்கிய மற்றைய வேந்தரும், குடகக் கொங்கரும் – குடக நாட்டுக் கொங்கரும், மாளுவ வேந்தரும் – மாளுவ தேயத்து மன்னரும், கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும் – கடல் சூழ்ந்த இலங்கை மன்னனாய கயவாகுவும், எம்நாட்டு ஆங்கண் இமயவரம்பனின் நல்நாட் செய்த நாள் அணி வேள்வியில் வந்தீகென்றே வணங்கினர் வேண்ட – எமது நாட்டிடத்தே இமயவரம்பனது வெள்ளணி நாளில் யாம் செய்யும் அழகிய நாள் வேள்வியில் வந்தருள் புரிவாயாகவெனப் பணிந்து வேண்டிய அளவிலே, தந்தேன் வரம் என்று எழுந்தது ஒரு குரல் – அங்ஙனமே வரந் தந்தேன் என வானிடத்து ஓர் குரல் தோன்றிற்று ;


குறவனையும் வேட்டுவனையும் குறிப்பிடும் வஞ்சி காண்டம்
குருவிபிடிச்சவனும் எலிபிடிச்சவனும் வரும் இடம் சேரன் செங்குட்டுவனுக்கு மாண்கறிபடைத்த குறவரும் வேட்டுவரும். குறிஞ்சி தலைவன் வேட்டுவன் இல்லை குறவன் தான் எனவே கொங்க புலையன் வரும் சிலப்பதிகார குறிப்பு இது தான்.
வஞ்சிக் காண்டம்
1. குன்றக் குரவை
[இவ்வாறு கண்ணகி கணவனுடன் விமானமேறிச் செல்லக் கண்ட மலைவாணராகிய வேட்டுவரும் வேட்டுவித்தியரும் மிகுந்த வியப்புற்றுக் கண்ணகியைத் தம் குலதெய்வமாகக் கருதி அவள் பொருட்டுக் குரவைக்கூத்து நிகழ்த்தினர். (இதன்கண் குன்றவர் தெய்வ வழிபாட்டு முறைமையும், அகப்பொருட் சுவையமைந்தனவும் செவ்வேளின் துதியாவனவுமாகிய குரவைப் பாட்டுக்களும் காணக்கிடக்கின்றன.)]
குன்றக் குரவை
15
சிறுகுடி யீரே சிறுகுடி யீரே
தெய்வங் கொள்ளுமின் சிறுகுடி யீரே
நிறங்கிளர் அருவிப் பறம்பின் தாழ்வரை
நறுஞ்சினை வேங்கை நன்னிழற் கீழோர்
தெய்வங் கொள்ளுமின் சிறுகுடி யீரே

சிறு குடியீரே சிறு குடியீரே தெய்வம் கொள்ளுமின் சிறு குடியீரே – சிறு குடியிலுள்ளீர் இவளைத் தெய்வமாகக் கொள்ளுமின், நிறம் கிளர் அருவிப் பறம்பின் தாழ்வரை – வெள்ளிய நிறம் விளங்குகின்ற அருவியினையுடைய நெடுவேள் குன்றமாகிய பறம்பினுடைய தாழ்வரையிடத்து, நறுஞ்சினை வேங்கை நல் நிழற்கீழ் ஓர் தெய்வங் கொள்ளுமின் சிறு குடியீரே-மணம் பொருந்தும் கிளைகளையுடைய வேங்கை மரத்து நல்ல நிழலின் கண்ணே ஒப்பற்ற தெய்வமாகப் பண்ணிக் கொள்ளுமின் ;சிறுகுடி – வேட்டுவரூர். சிறுகுடியீரே எனப் பலகாற் கூறியது உவகையும் விரையும் பற்றி. பறம்பு – மலையென்னும் பொருட்டு தெய்வமாகவென விரிக்க.
மலைமகள் மகனைநின் மதிநுதல் மடவரல்
குலமலை உறைதரு குறவர்தம் மகளார்
நிலையுயர் கடவுள்நின் இணையடி தொழுதேம்
பலரறி மணமவர் படுகுவ ரெனவே ;       (16)

மலை மகள் மகனை – மலையரசன் மகளாகிய உமையின் புதல்வனே, நின் மதிநுதல் மடவரல் குலமலை உறைதரு குறவர்தம் மகளார் – நின்னுடைய மதி போன்ற நெற்றியினையும் இளமையையும் உடைய சிறந்த மலையின்கண் வாழும் குறவர் மகளாருடைய, நிலை உயர் கடவுள் – யாவரினும் மேலாந் தன்மையையுடைய முருகனே, நின் இணையடி தொழுதேம் – நின்னுடைய இரண்டு திருவடிகளையும் வணங்கினேம், பலர் அறி மணம் அவர் படுகுவர் எனவே – பலரும் அறியத்தக்க மணத்தினை அத்தலைவர் உடன்படுவாராகவென்று
குருவியோப்பியும் கிளிகடிந்தும் குன்றத்துச் சென்றுவைகி
அருவியாடியும் சுனைகுடைந்தும் அலவுற்று வருவேம்முன்
மலைவேங்கை நறுநிழலின் வள்ளிபோல்வீர் மனநடுங்க
முலையிழந்து வந்துநின்றீர் யாவிரோவென முனியாதே
       குருவி ஓப்பியும் கிளி கடிந்தும் குன்றத்துச் சென்று வைகி அருவி ஆடியும் சுனை குடைந்தும் அலவுற்று வருவேம் முன் – மலைக்கண் சென்று தங்கிக் குருவிகளை ஓட்டியும் கிளிகளைத் துரந்தும் அருவியின்கண் நீராடியும் சுனையில் மூழ்கியும் இவ்வாறு சுழன்று வரும் எம் முன்னர், மலை வேங்கை நறு நிழலின் வள்ளி போல்வீர் மனம் நடுங்க முலை இழந்து வந்து நின்றீர் யாவிரோ என – குன்றத்து வேங்கையின் நல்ல நீழற்கண்ணே எம் முள்ளம் நடுங்கும் வண்ணம் ஒரு முலையினை இழந்து வந்து நின்றீர் வள்ளியினை ஒப்பீர் நீவிர் யாவிர் என்று யாம் வினவ ;
இமயத்தில் கல் எடுத்த சேரன் செங்குட்டுவனோடு சென்ற மறப்படை கொண்டையங்கோட்டை மறவர்களாகவே இருக்க கூடும் ஏனெனில் ஆப்ப நாட்டு முளைப்பாரி பாடலில் 
“சேரர் சீமையிலே கிளுவை நாட்டிலே நாங்கள் திக்கு விசயமாய் வாழையிலே 
……
அரிய நாச்சி அழைத்து வர இங்கு வந்தோம்”
என தொடங்குகிறது. ரவி கொண்டா என சேர மன்னன் ஒருவன் வருவது குறிப்பிடதக்கது.கொண்டியங் கோட்டை மறவர் தங்களை “ரவி குல” கொண்டையங்கோட்டை என கோருகிறார்கள்.


கொண்டையன்கோட்டை  மறவரில் மிளகு கொத்து  கமுகு கொத்து தமிழக பயிர்கள் இல்லை அது கேரள பயிர்களாகும். எனவே பிற்கால திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும் கொண்டையன்கோட்டை மறவர் படையை சார்ந்த பொன் பாண்டித் தேவர் தலைமையிலே டச்சு படையை முறியடித்து திருவிதாங்கூரை காத்தது என்பது குறிப்பிட தக்கது.
இது சிலப்பத்கார கரந்தையர்கள் மட்டுமே இன்னும் ஒவ்வொரு இலக்கியத்திலும் இருப்பது எண்ணிலடங்காதவை


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.