புறநாநூறு மறவர் மன்னர்கள்
சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானை மறவர் பெருமான் என்று உறைக்கின்றனர்.பெருமான் என்றால் தலைவன் அல்லது குடியின் முதல்வன் என்று அர்த்தம்.
பிறப்பும் சிறப்பும்!
பாடியவர்: தாமப்பல் கண்ணனார்,
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்.
திணை : வாகை. துறை: அரசவாகை.
குறிப்பு : புலவரும் அரச குமரனும் வட்டுப் பொருவுழிக் கைகரப்ப, வெகுண்டு, வட்டுக் கொண்டு எறிந்தானைச் , 'சோழன் மகன்
அல்லை' என, நாணியுருந்தானை அவர் பாடியது.
நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்,
தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்,
கால்உண வாகச், சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவரும் மருளக், கொடுஞ்சிறைக்
கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித், தொரீஇத்,
தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி யஞ்சிச் சீரை புக்க
வரையா ஈகை உரவோன் மருக!
நேரார்க் கடந்த முரண்மிகு திருவின்
தேர்வண் கிள்ளி தம்பி! வார் கோல்,
கொடுமர மறவர் பெரும! கடுமான்
கைவண் தோன்றல்! ஐயம் உடையேன்:
‘ஆர்புனை தெரியல்நின் முன்னோர் எல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர்: மற்றுஇது
நீர்த்தோ நினக்கு?’ என வெறுப்பக் கூறி,
நின்யான் பிழைத்தது நோவாய் என்னினும்,
நீபிழைத் தாய்போல் நனிநா ணினையே;
‘தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்குஞ் செம்மல்!
இக்குடிப் பிறந்தோர்க் கெண்மை காணும்’ எனக்
காண்டகு மொய்ம்ப! காட்டினை; ஆகலின்,
யானே பிழைத்தனென் ! சிறக்கநின் ஆயுள்;
மிக்குவரும் இன்னீர்க் காவிரி
எக்கர் இட்ட மணலினும் பலவே!
பாண்டியன் தளபதி-நாலை கிழவன் நாகன்
கிழவன் நாகன் என்பவர் பாண்டியன் படைத்தலைவன்.இவர் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு படைத்தளபதி.
179. பருந்து பசி தீர்ப்பான்!
பாடியவர்: வடநெடுந்தத்தனார்; வடம நெடுந்தத்தனார் எனவும், வடம நெடுந்தச்சனார் எனவும் பாடம்.
பாடப்பட்டோன்: நாலை கிழவன் நாகன்
திணை: வாகை துறை: வல்லாண் முல்லை
ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந் தென,
ஏலாது கவிழ்ந்தஎன் இரவல் மண்டை
மலர்ப்போர் யார்?’ என வினவலின் மலைந்தோர்
விசிபிணி முரசமொடு மண்பல தந்த
திருவீழ் நுண்பூண் பாண்டியன் மறவன்,
படை வேண்டுவழி வாள் உதவியும்,
வினை வேண்டுவழி அறிவு உதவியும்,
வேண்டுப வேண்டுப வேந்தன் தேஎத்து
அசைநுகம் படாஅ ஆண்தகை உள்ளத்துத்,
தோலா நல்லிசை, நாலை கிழவன்,
பருந்துபசி தீர்க்கும் நற்போர்த்
திருந்துவேல் நாகற் கூறினர், பலரே.
சேரன் தளபதி-பிட்டங்க்கொற்றன்
இவர் சேரனின் படைத்தலைவனாக "வயமிகு பிட்டன் வானவன் மறவன்.
172. பகைவரும் வாழ்க!
பாடியவர்: வடமண்ணக்கன் தாமோதரனார்.
பாடப்பட்டோன் : பிட்டங்கொற்றன்.
திணை: பாடாண். துறை: இயன்மொழி.
ஏற்றுக உலையே; ஆக்குக சோறே;
கள்ளும் குறைபடல் ஓம்புக; ஒள்ளிழைப்
பாடுவல் விறலியர் கோதையும் புனைக;
அன்னவை பலவும் செய்க ; என்னதூஉம்
பரியல் வெண்டா வருபதம் நாடி,
ஐவனங் காவல் பெய்தீ நந்தின்.
ஒளிதிகழ் திருந்துமணி நளியிருள் அகற்றும்
வன்புல நாடன், வயமான் பிட்டன்;
ஆரமர் கடக்கும் வேலும், அவனிறை
மாவள் ஈகைக் கோதையும்.
மாறுகொள் மன்னரும், வாழியர் நெடிதே!
அகத்தா மறவர்தலைவன் அகுதை
வேர் துளங்கின மரனே!
பாடியவர்: கபிலர்
திணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சி
உண்போன் தான்நறுங் கள்ளின் இடச்சில
நாஇடைப் ப·றேர் கோலச் சிவந்த
ஒளிறுஒள் வாடக் குழைந்தபைந் தும்பை,
எறிந்துஇலை முறிந்த கதுவாய் வேலின்.
மணநாறு மார்பின், மறப்போர் அகுதை
குண்டுநீர் வரைப்பின், கூடல் அன்ன
குவைஇருங் கூந்தல் வருமுலை செப்ப,
. . . . . . . . . . . . . .
என்னா வதுகொல் தானே? . .. . .
விளங்குறு பராரைய வாயினும், வேந்தர்
வினைநவில் யானை பிணிப்ப,
வேர்துளங் கினநம் ஊருள் மரனே.
சங்க காலம் என்று கருதப்படுகின்ற கி.மு. 3ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. 5ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த நடுகற்கள் எவையும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே இக்கண்டுபிடிப்பின் மூலம் சங்க இலக்கியங்களில் நடுகற்கள் பற்றிக் குறிப்பிடப்படும் செய்திகள் சமகாலத்தில் நடைமுறையில் இருந்தவையே என்பது நிரூபணமாகிறது. இது மட்டுமன்றித் தமிழ் எழுத்துகளின் அரசு சார்ந்த, நிறுவனமயமாக்கப்பட்ட வளர்ச்சி என்ற பொருண்மைக்கும் நடுகல் வழிபாட்டை அரசு என்ற நிறுவனம் சுவீகரித்துத் தனக்குச் சாதகமாக எவ்வாறு பயன்படுத்திக் கொண்டது என்பது போன்ற சமூக அரசியல் வரலாறு குறித்த ஆய்வுப் பொருண்மைகளுக்கும் இக் கல்வெட்டுக் கண்டுபிடிப்பு துணை செய்கின்றது. இந்நடுகற்களுள் முதலாவது நடுகல்லில் "வேள் ஊர் அவ்வன் பதவன்" என்றும், அடுத்த நடுகல்லில் "அன் ஊர் அதன்.. அன் கல்" என்றும், மூன்றாவது நடுகல்லில் "கல் பேடு தீயன் அந்தவன் கூடல் ஊர் ஆகோள்" என்றும் பொறிக்கப்பட்டுள்ளன. இம்மூன்று நடுகற்களும் இறந்து போன வீரர்களின் நினைவுச் சின்னங்களாக எழுப்பப்பட்ட கற்கள் ஆகும். இவற்றில் உருவம் எதுவும் பொறிக்கப்படவில்லை. ஆயினும் வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
மூன்றாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நடுகல் கல்வெட்டில் கூடலூர் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள், மாட்டு மந்தைகளை (ஆனிரையை)க் கவர்ந்து செல்ல முயன்ற போது தீயன் அந்தவன் என்பவன் ஆனிரையை மீட்டு அந்தப் பூசலில் இறந்து போன செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. வைகை அணைக்கட்டுக்கு அருகிலுள்ள கூடலூர்ப் பகுதியில் ஆனிரை கவரும் கள்வர், மறவர் போன்ற குலத்தவர்கள் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வந்துள்ளனர். சங்க இலக்கியமாகிய புறநானூறு 347ஆம் பாடலில் 'மணம் நாறு மார்பின் மறப்போர் அகுதை குண்டு நீர் வரைப்பின் கூடல்' என்ற ஒரு குறிப்பு உள்ளது. இப்பாடலில் குறிப்பிடப்படும் கூடல் மேற்குறித்த கூடலூராக இருக்கலாம். மறவருள் ஒரு பிரிவினராகிய அகத மறவர் பிரிவினரின் மூதாதையாக இந்த அகுதையைக் கருதுவதில் தவறில்லை. அகுதை என்ற குறுநிலத் தலைவன் ஒருவன் 'பொன்புனை திகிரி' (உலோகத்தாலான சக்ராயுதம்) என்ற ஆயுதத்தைக் கண நேரத்துக்குள், கண்டது உண்மையோ பொய்யோ என்று மருளும் வண்ணம், கண் பார்வைக்குத் தோன்றி மறைந்து விடக்கூடிய வகையில் விரைந்து செலுத்தவல்ல ஒரு வீரன் என்று புறநானூறு 233-ஆம் பாடலில் ('அகுதைக் கண் தோன்றிய பொன்புனை திகிரியிற் பொய்யாகியரோ') கூறப்பட்டுள்ளது. மறவர்களின் முதன்மையான போர்க்கருவி என்று இலக்கியங்களும் பிற குறிப்புகளும் தெரிவிக்கின்ற வளைதடி (வளரி)யே திகிரி என்று இப்பாடலில் குறிப்பிடப்படுகிறது. இத்தகைய ஆனிரை கவரும் மறவர்களின் ஆகோள் மரபினைப் பற்றிச் சிலப்பதிகாரம் வேட்டுவ வரியில் தெளிவான குறிப்புகள் உள்ளன. இத்தகைய கள்வர்-மறவர் மரபினரால் கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரைகளைக் காத்து மடிந்த வீரனைப் பற்றியதே இந்த நடுகல் என்பது புலனாகிறது. இந்நடுகல் எந்த அரசரின் ஆதரவுடன் எழுப்பப்பட்டது என்ற விவரம் கல்வெட்டில் குறிப்பிடப்படவில்லை. ஆயினும் பெருவேந்தர்களின் ஆதரவுடன்தான் இந்த நடுகல் எழுப்பப்பட்டிருக்க வேண்டும் என்று நாம் ஊகிப்பது எளிது.
இக் கல்வெட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள பிராமி எழுத்து முறை கி.மு. 3ஆம் நூற்றாண்டில் அசோகப் பெருவேந்தனால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டதாகும்.
பிண்குறிப்பு:
அகத்தா மறவர்களின் மண்டபம் திருப்பரங்குன்றம் கோயில் அருகில் உள்ளது.அகத்தா மறவர்கள் திருப்பரங்க்குன்றம்,திருச்சுழி,வருசநாடு,வத்திரயிருப்பு,அருப்புக்கோட்டை பகுதியில் கானப்படுகின்றனர்.
காளையார்கோயில் வேங்கை மார்பன் 21. புகழ்சால் தோன்றல்!
பாடியவர்: ஐயூர் மூலங்கிழார்.
பாடப்பட்டோன்: கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி.
திணை: வாகை. துறை:அரசவாகை.
புலவரை இறந்த புகழ்சால் தோன்றல்!
நிலவரை இறந்த குண்டுகண் அகழி,
வான்தோய் வன்ன புரிசை, விசும்பின்
மீன்பூத் தன்ன உருவ ஞாயில்,
கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை,
அருங் குறும்பு உடுத்த கானப்பேர் எயில்,
கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய
இரும்புஉண் நீரினும், மீட்டற்கு அரிதுஎன,
வேங்கை மார்பின் இரங்க வைகலும்
ஆடுகொளக் குழைந்த தும்பைப், புலவர்
பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே!
இகழுநர் இசையடு மாயப்,
புகழொடு விளங்கிப் பூக்க, நின் வேலே!
வேங்கை மார்பன் இன்றைய காளையார்கோயில் பகுதியை ஆண்டவன்.இவன் உக்கிரபெருவழுதியை எதிர்த்து மாண்டா.இன்றைய காளையார் கோயில் அருகே சக்கந்தி தலைவர் வேங்கை பெரிய உடையணத் தேவர் இருக்கிறார். சக்கந்தி வேங்கை பெரிய உடையணத் தேவர் சிவகங்கைக்கருகிலுள்ள சக்கந்தி நிலக்கிழாரில் ஒருவரான சக்கந்தித் தேவரின் மகனென்றும் வேங்கை மார்பன் கிளையைச் சேர்ந்த மறவர்.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இவரை பசும்பொன் பாண்டியன் என்று அழைக்கின்றனர்.இவரது ஊர் பசும்பொன்.
72. இனியோனின் வஞ்சினம்!
பாடியவர்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
திணை: காஞ்சி துறை: வஞ்சினக் காஞ்சி
நகுதத் கனரே, நாடு மீக் கூறுநர்;
இளையன் இவன் என உளையக் கூறிப்
படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள்
நெடுநல் யானையும், தேரும், மாவும்,
படைஅமை மறவரும், உடையும் யாம் என்று
உறுதுப்பு அஞ்சாது, உடல்சினம் செருக்கிச்
சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமஞ் சிதையத் தாக்கி, முரசமொடு
ஒருங்கு அகப் படேஎன் ஆயின்; பொருந்திய
என் நிழல் வாழ்நர் சென்னிழல் காணாது,
கொடியன்எம் இறை எனக் கண்ணீர் பரப்பிக்,
குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக!
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக,
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக
மறவரின் தோற்றமும் உடையும்.
"வருகுதய்யா மறவர் படை வானவில் சேனைகளும்
மறவரோட எதிராளி மாண்டவர் கோடி லட்சம்
கையிலே வீச்சருவாகாளிலே நீள தண்டை
நெற்றியில் பொட்டு வைத்து நீல வன்ன பட்டு
உடுத்தி தோளே வாளான துடியான் வீரனடா
274. நீலக் கச்சை!
பாடியவர்: உலோச்சனார்
திணை: தும்பை துறை: எருமை மறம்
நீலக் கச்சைப் பூவார் ஆடைப்,
பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்
மேல்வரும் களிற்றொடு வேல்துரந்து ; இனியே,
தன்னும் துரக்குவன் போலும்-ஒன்னலர்
எ·குடை வலத்தர் மாவொடு பரத்தரக்,
கையின் வாங்கித் தழீஇ,
மொய்ம்பின் ஊக்கி, மெய்க்கொண் டனனே;
336. பண்பில் தாயே!
மறவர் செம்மல் தருமபுத்திரன்
366. மாயமோ அன்றே!
பாடியவர்: கோதமனார்.
பாடப்பட்டோன்: தருமபுத்திரன்.
திணை : பொதுவியல். துறை: பெருங்காஞ்சி.
விழுக்கடிப்பு அறைந்த முழுக்குரல் முரசம்
ஒழுக்குடை மருங்கின் ஒருமொழித் தாக,
அரவுஎறி உருமின் உரறுபு சிலைப்ப,
ஒருதா மாகிய பெருமை யோரும்,
தம்புகழ் நிறீஇச் சென்றுமாய்ந் தனரே;
அதனால், அறிவோன் மகனே! மறவோர் செம்மால்!
. . . . . . . . . . உரைப்பக் கேண்மதி;
நின் ஊற்றம் பிறர் அறியாது,
பிறர் கூறிய மொழி தெரியா,
ஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவி,
இரவின் எல்லை வருவது நாடி,
உரை . . . . . . . . . . .
உழவொழி பெரும்பகடு அழிதின் றாங்குச்,
செங்கண் மகளிரொடு சிறுதுளி அளைஇ,
அங்கள் தேறல் ஆங்கலத்து உகுப்ப,
கெடல் அருந் திருவ . . . . . . .
மடை வேண்டுநர்க்கு இடை அருகாது,
அவிழ் வேண்டுநர்க்கு இடை அருளி
விடை வீழ்த்துச் சூடு கிழிப்ப,
நீர்நீலை பெருத்த வார்மணல் அடைகரைக்,
காவு தோறும் . . . . . . . .
மடங்கல் உண்மை மாயமோ அன்றே.
68. மறவரும் மறக்களிரும்!
பாடியவர்: கோவூர் கிழார். பாடப்பட்டோன்; சோழன் நலங்கிள்ளி.
திணை: பாடாண். துறை: பாணாற்றுப்படை.
உடும்பு உரித்து அன்ன என்பு எழு மருங்கின்
கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது,
சில்செவித்து ஆகிய கேள்வி நொந்து நொந்து,
ஈங்குஎவன் செய்தியோ? பாண ! பூண்சுமந்து,
அம் பகட்டு எழிலிய செம் பொறி ஆகத்து
மென்மையின் மகளிர்க்கு வணங்கி,வன்மையின்
ஆடவர்ப் பிணிக்கும் பீடுகெழு நெடுந்தகை,
புனிறு தீர் குழவிக்கு இலிற்றுமுலை போலச்
சுரந்த காவிரி மரங்கொல் மலிநீர்
மன்பதை புரக்கும் நன்னாட்டுப் பொருநன்,
உட்பகை ஒருதிறம் பட்டெனப், புட்பகைக்கு
ஏவான் ஆகலின், சாவோம் யாம் என,
நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்பத்,
தணிபறை அறையும் அணிகொள் தேர்வழிக்
கடுங்கண் பருகுநர் நடுங்குகை உகத்த
நறுஞ்சேறு ஆடிய வறுந்தலை யானை
நெடுனகர் வரைப்பின் படுமுழா ஓர்க்கும்
உறந்தை யோனே குருசில்;
பிறன்கடை மறப்ப நல்குவன், செலினே!
49. எங்ஙனம் மொழிவேன்?
பாடியவர்: பொய்கையார்.
பாடப்பட்டோன்: சேரமான் கோக்கோதை மார்பன்.
திணை: பாடாண். துறை: புலவராற்றுப் படை.
நாடன் என்கோ? ஊரன் என்கோ?
பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்பன் என்கோ?
யாங்கனம் மொழிகோ, ஓங்குவாள் கோதையை?
புனவர் தட்டை புடைப்பின், அயலது
இறங்குகதிர் அலமரு கழனியும்,
பிறங்குநீர்ச் சேர்ப்பினும் , புள் ஒருங்கு எழுமே!
260. கேண்மதி பாண!
பாடியவர்: வடமோதங்கிழார்
திணை: கரந்தை (பாடாண் திணையுமாம்) துறை: கையறுநிலை செருவிடை வீழ்தல்;
கையறு நிலையுமாம்; பாண்பாட்டுமாம்; பாடாண் பாட்டுமாம்.
வளரத் தொடினும், வெளவுபு திரிந்து,
விளரி உறுதரும் தீந்தொடை நினையாத்
தளரும் நெஞ்சம் தலைஇ; மனையோள்
உளரும் கூந்தல் நோக்கி, களர
கள்ளி நீழற் கடவுள் வாழ்த்திப்
பசிபடு மருங்குலை, கசிபு, கைதொழாஅக்,
‘காணலென் கொல் ?’ என வினவினை வரூஉம்
பாண ! கேண்மதி, யாணரது நிலையே;
புரவுத்தொடுத்து உண்குவை ஆயினும், இரவுஎழுந்து,
எவ்வம் கொள்வை ஆயினும், இரண்டும்,
கையுள போலும் கடிதுஅண் மையவே;
முன்ஊர்ப் பூசலின் தோன்றித் தன்னூர்
நெடுநிரை தழீஇய மீளி யாளர்
விடுகணை நீத்தம் துடிபுணை யாக,
வென்றி தந்து, கொன்றுகோள் விடுத்து,
வையகம் புலம்ப வளைஇய பாம்பின்
வைஎயிற்று உய்ந்த மதியின், மறவர்
கையகத்து உய்ந்த கன்றுடைப் பல்லான்
நிரையடு வந்த உரைய னாகி,
உரிகளை அரவ மானத், தானே
அரிதுசெல் உலகில் சென்றனன் ; உடம்பே,
கானச் சிற்றியாற்று அருங்கரைக் கால்உற்றுக்,
கம்பமொடு துளங்கிய இலக்கம் போல,
அம்பொடு துளங்க ஆண்டுஒழிந் தன்றே;
உயர்இசை வெறுப்பத் தோன்றிய பெயரே,
மடஞ்சால் மஞ்ஞை அணிமயிர் சூட்டி,
இடம்பிறர் கொள்ளாச் சிறுவழிப்,
படஞ்செய் பந்தர்க் கல்மிசை யதுவே.
270. ஆண்மையோன் திறன்!
பாடியவர்: கழாத்தலையார்
திணை: கரந்தை துறை: கையறுநிலை
பன்மீன் இமைக்கும் மாக விசும்பின்
இரங்கு முரசின், இனம்சால் யானை,
நிலந்தவ உருட்டிய நேமி யோரும்
சமங்கண் கூடித் தாம்வேட் பவ்வே-
நறுவிரை துறந்த நாறா நரைத்தலைச்
சிறுவர் தாயே! பேரிற் பெண்டே!
நோகோ யானே ; நோக்குமதி நீயே;
மறப்படை நுவலும் அரிக்குரல் தண்ணுமை
இன்னிசை கேட்ட துன்னரும் மறவர்
வென்றிதரு வேட்கையர், மன்றம் கொண்மார்,
பேரமர் உழந்த வெருவரு பறந்தலை.
விழுநவி பாய்ந்த மரத்தின்,
வாண்மிசைக் கிடந்த ஆண்மையோன் திறத்தே.
<
பாடியவர்: பரணர்
திணை: காஞ்சி துறை: பாற் பாற் காஞ்சி
வேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே;
கடவன கழிப்புஇவள் தந்தையும் செய்யான்;
ஒளிறுமுகத்து ஏந்திய வீங்குதொடி மருப்பின்
களிறும் கடிமரம் சேரா; சேர்ந்த
ஒளிறுவேல் மறவரும் வாய்மூழ்த் தனரே;
இயவரும் அறியாப் பல்லியம் கறங்க,
அன்னோ, பெரும்பே துற்றன்று, இவ் வருங்கடி மூதூர்;
அறன்இலன் மன்ற தானே-விறன்மலை
வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின்
முகைவனப்பு ஏந்திய முற்றா இளமுலைத்
தகைவளர்த்து எடுத்த நகையடு,
பகைவளர்த்து இருந்த இப் பண்புஇல் தாயே.
399. கடவுட்கும் தொடேன்!
பாடியவர்: ஐயூற் முடவனார்
பாடப்பட்டோன்: தாமான் தோன்றிக்கோன்
திணை: பாடாண் துறை: பரிசில் விடை
அடுமகள் முகந்த அளவா வெண்ணெல்
தொடிமாண் உலக்கைப் பருஉக்குற் றரிசி
காடி வெள்ளுலைக் கொளீஇ நீழல்
ஓங்குசினை மாவின் தீங்கனி நறும்புளி,
மோட்டிவரு வராஅல் கோட்டுமீன் கொழுங்குறை,
செறுவின் வள்ளை, சிறுகொடிப் பாகல்,
பாதிரி யூழ்முகை அவிழ்விடுத் தன்ன,
மெய்களைந்து, இன்னொடு விரைஇ. . .
மூழ்ப்பப் பெய்த முழுஅவிழ்ப் புழுக்கல்,
அழிகளிற் படுநர் களியட வைகின்,
பழஞ்சோறு அயிலும் முழங்குநீர்ப் படப்பைக்
காவிரிக் கிழவன், மாயா நல்லிசைக்
கிள்ளி வளவன் உள்ளி, அவன்படர்தும்;
செல்லேன் செல்லேன், பிறர்முகம் நோக்கேன்;
நெடுங்கழைத் தூண்டில் விடுமீன் நொடுத்துக்,
கிணைமகள் அட்ட பாவற் புளிங்கூழ்
பொழுதுமறுத் துண்ணும் உண்டியேன், அழிவுகொண்டு,
ஒருசிறை இருந்தேன்; என்னே! இனியே,
‘அறவர் அறவன், மறவர் மறவன்,
மள்ளர் மள்ளன்,தொல்லோர் மருகன்,
இசையிற் கொண்டான், நசையமுது உண்க’ என,
மீப்படர்ந்து இறந்து, வன்கோல் மண்ணி,
வள்பரிந்து கிடந்தஎன் தெண்கண் மாக்கிணை
விசிப்புறுத்து அமைந்த புதுக்காழ்ப் போர்வை,
அலகின் மாலை ஆர்ப்ப வட்டித்துக்,
கடியும் உணவென்ன கடவுட்கும் தொடேன்;
‘கடுந்தேர் அள்ளற்கு அசாவா நோன்சுவல்
பகடே அத்தை யான் வேண்டிவந் தது’ என,
ஒன்றியான் பெட்டா அளவை, அன்றே
ஆன்று விட்டனன் அத்தை; விசும்பின்
மீன்பூத் தன்ன உருவப் பன்னிரை
ஊர்தியடு நல்கி யோனே; சீர்கொள
இழுமென இழிதரும் அருவி,
வான்தோய் உயர்சிமைத் தோன்றிக் கோவே.
ராமப்பையன் அம்மானையும் சேதுகரை யுத்தமும்
தாயகத்தையும் அதன் உயரிய மான்புகளையும் காக்க போரிட்ட மறக்குல மக்களையும் இந்த யுத்தத்தில் பங்கெடுத்த மறவர் நாட்டின் மாபெரும் படைத்தலைவர்களான வன்னிய தேவன்,மதியழகன்,குமாரத்தேவன்,மத்ததேவன்,வீசுகொண்ட தேவன்,கருத்துடையான் ஆகியோர்களை என்றென்றும் நினைவு கூறுவோம்.உங்களின் வீரத்தையும் தாய்நாட்டிற்கு போரிட்ட கதைகளை எங்களின் சந்ததிக்களுக்கு கூறுவோம். என்றென்றும் உங்கள் நினைவுகளுடன்.
"போரெனில் புகலும் புனை கழல் மறவர்"(கலித்தொகை)
"பகையெனில் கூற்றம் வரினும் தொலையான் மறவனே"
மதுரை கைப்பற்றி,ஆண்டு கொண்டிருந்த விஜயநகரின் படைப்பிரிவின் தலைவனான விசுவநாத நாயக்கனின் வம்சத்தை சார்ந்த திருமலை நாயக்கரின் காலம். இவரது படைத்தலைவனான ராமப்பைய்யர் என்பவர் தலைமையிலான தெலுங்கு மற்றும் கன்னட கூட்டமைப்பு படைகளுட அவர்களின் துனைபடைகளாக சென்ற சில கூலிப்படைகளும் மறுபுரம் தமிழை தாய்மொழியாக கொண்ட மதுரையின் கிழக்கு பகுதியில் அமைந்திருந்த தமிழை தாய்மொழியாக கொண்ட செம்பி நாடு மறவர்களின் இராமநாதபுரம் அரசுகளின் மறவர் படைகள் மறுபுறமும்.
இராமப்பையன்
அம்மானை(சரஸ்வதி மகால் சுவடி என்.405)
இராமப்பையன்
வரலாறு
சங்கையுள்ள வேதியர் குலத்தில் வந்தவன் கான்
துங்க வளனா துலங்க வந்த புத்திரன் காண்
சண்டைக்கு அனுப்புமாறு நாயக்கனை வேண்டியது
"மதுரை நகர் வாழும் மன்னவனே,நீ கேளாய்
நாலுதிக்கு மெட்டும் பதினாறு கோணமெல்லாம்
திக்கடங்க வெட்டித் திறை கொண்டே தானு மின்று வணங்காத
மன்ன்ர் தம்மை வணங்கு வித்தேன்.....
எனக்கு விடை தாரு" மேங்க்கேட்டான்"
திருமலை மன்னர் தடுத்தல்
"வீண்புகழி ராம நீ வீரியங்கள் பேசாதே
பண்டு முன்னாள் நஞ்சேனை பாருலகில்
கோரைவாய்க் காலதனில் கொள்ளையிட்டோம்..
வேண்டாங்கான் ராமா நீ வீரியங்கள் பேசாதே
இராமப்பையன் இனியும் கேட்டல்
"பட்டவாய் மதங்கள் பேசி மறவன் நிருபத்தை கண்டால்
கிழித்தெறிவேன் கச்சி திருமலேந்திரன்
தாடான்மை யாக அவன் வைத்த தானையும் முன்னாள் நஞ்சேனை முனைசமரில் வென்றதுவும்
இன்றளவுங்க கப்பங்க கட்ட திருந்ததுவும்
திருமுகத்தைத் தான் கிழித்த திறமுஞ் சமர்தறிய
அதற்கு நாயக்கன் விடை
"வாள் வீர ராம மன்னவனே நீ கேளாய்
கடும் பரியானையும் கனத்த பெருங்க் குஞ்சரமும்
அங்காரி சொல்லும் அருனா திரிதனையும்
தாங்காமல் நின்று சதிர்மானஞ் செய்தவன் காண்
இராமன் சொல்
"ஆண்டவனே இப்போ தடியேன் சொல் விண்ணப்பம் கேள்
பாளையக்காரரெல்லாம் பயந்து வணங்குவர் கான்
வணங்காமல் தானிருக்கும் வண்டமறவனையும்
வளைத்துப்பிடித்து வந்து வணங்க வைப்பேன் ஆண்டவனே
எனக்கு விடைதாருமய்யா!"
நாயக்கர் சொல்
"வேண்டாமடா ராம வீரியங்கள் பேசாதே
பண்டுமுன்னாள் நம்சேனை பாருலகு தானறிய
குழல்வாய்க்(பீரங்கி) கிரையாக கொள்ளைக் கொடுத்தோம்
யின்று பகைத்தால் எதிர்த்த மன்னர் தான் நகைப்பார்
சேதுக்கரை தனிலே சென்றவர்கள் மீண்டதில்லை
வாளுக்கு இரையிட்ட மறவன் வலுக்காரன்
துப்பாக்கி மெத்த உண்டான் தோலா மறவனுக்கு
தன்னரசு நாடு தனிக்கோட்டை யாளுவனாம்
மதுரைப் படையென்றால் மதியான் மறவனுந்தான்
மறவர்கள் சற்று மதியார் வடுகன் என்றால்
உன்னுடைய வாள் திறத்தை ஒருக்காலு மென்னுகாண்
வேண்டாமட ராம வீரயங்கள் பேசாதே
இராமய்யன் சொல்
"அரசர் பெருமானே ஆண்டவனே சொன்னீரே
பண்டு வடுகரென்று ப் ஆராமல் நின்றுரைத்தீர்
எங்கீர்த்தி தன்னை யிளிக்கேளு மாண்டவனே
வஞ்சனைகள் பண்ணுகிற மறவர்களெல்லாரும்
தஞ்சம் என்று வந்து சரணம் சரணம் என்பர். மைசூர் கோட்டைதனை மதியாமல் நானிடிப்பேன்
வங்காளம் கொங்கு மலையாள முள்ள தெல்லாம்
தாங்காம் லுன்பாதம் சரணம் பனியவைப்பேன்
கட்டத கப்பமெல்லாம் கட்டவைத்தே உன் அருளால்
மதுரை திருவாசலிலே வந்து பணிய வைத்தேன்
வையத்துள்ள மன்னர் மனு ராசக்கள்
"சென்ற மறவனிட செய்தியெல்லாம் பார்த்துவர
பண்டைப் படைவெட்டும் பார்த்துவர
போய்வாரேனென்ற புகழ்ராமனிப்பார்த்து
நாயக்கர் சொல்
வணங்காமுடி வேந்தன் வாகாய் சிரித்துரைப்பான்
"எப்படியோ வென்று யெண்ணி நினையாமல்
இல்லாத செய்தியெல்லாம் ஏனுரைத்தாய் ராமா நீ
முன்னமே தானிறந்த முனைவடுகர் பற்றாதோ
மறவனுடைய பூமியிலே மாள்வையென்று கற்றிலையோ"
"பெற்றார் பிறந்தார் பெயர்போன் நங்குலத்தார்
உற்றாருறன்முறையோருள்ள வடுகரெல்லாம்
பாளையக்காரர் படைத்தலைவரெல்லாரும்
வேளையதில் வென்றுவரும் வீரப் பரிவாரங்களும்
தொட்டியர் கம்பளத்தார் தோறாத சேவகரும்
சூரப்பையனை வெட்டிச் சூறையிட்டான் கண்டாயே
ஆங்காரியஞ் சொல்லும் அருணாத்திரிதனியும் பண்டு
வடுகர் படைத்தலைவரத்தனையும்
சதுரேறி வெட்டி சதிமானம் செய்தவன் காண்
சேதுக் கரை தன்னில் சேர யிறந்து விட்டார்
காட்டிலே வெட்டி கழுகுபசி தீர வைத்தான்
வெற்றி சங்கூதி விருது பறித்தவன் காண்
முன்னமே வெட்டி முணைகண்டான் மறவனுந்தான்
இந்நாளிலேதான் என்னேம் வடுகரென்றால்
வேண்டாங்கான் ராமய்யனே வீரியத்தை விட்டுவிடும்"
இராமய்யன் சொல்
தென்னவரே முன்னமே நம்சேனை முடிந்தார்களென் றுரைத்தீர்
மன்னவர்கள் மெத்த மடிந்தார்களென்றுரைத்தீர்
' அந்த மறவன் படும்பாடு கேளுமய்யா
"அரக்கர் குலத்தை அனுமாரறுத்தது போல்
மறக்குலத்தை நானும் மாய்த்து கருவருப்பேன்"
"வெட்டி சிறைபிடித்து வேந்தன் சடைக்கனையும்
கட்டிக் கொண்டுவருவேன் கர்த்தனே உன்பாதம்
போய்வாரேனய்ய பொருந்த விடை தாரு" மென்றான்
திருமலை மன்னர் விடை தந்து அனுப்புதல்
வணங்கா முடிவேந்தன் மனமகிழ்ந்து தான் சிரித்து
பல ஆபரனங்கள் தந்து மரியாதைகள் பல செய்து
சொக்கர் மீனாட்சி அருளாலே நல்லது நிறைவேற என அனுப்பி வைத்தான்.
முதலாவதாக தெலுங்கு படைகளை பொருத்தவரை அது தமிழ் மன்னை ஆக்கிரமித்து நிலைகொண்ட படை அந்நிய ஆக்கிரமிப்பு படை. மறவர் படையை பெருத்தளவில் தமிழ் மக்களின் காவல் உரிமையையை தங்களின் பிறப்புரிமையாக கொண்டவர்கள் மறவர்நாடு தங்களின் தாயகம் என்றும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மறவர்களின் புனிதமிக்க மன். போருக்கான காரணம் மறவர்களின் வாரிசுரிமை பிரச்சனையில் மதுரை தெலுங்கரான நாயக்க மன்னரை அனுகி உதவி கேட்ட ஒருவருக்காக உதவி செய்ய காரணம் காட்டப்படுகின்றது. அன்றை கிரித்துவ மிஷினரி பாதிரியார்களின் கடிதங்கள் தான் கிழக்கில் இருந்த மறவர் அரசு தெலுங்கு கூட்டமைப்பு முன் பனியாமல் இருந்ததாக தெளிவாக கூறுகின்றனர். போருக்கு அனுமதி கேட்கிறார் மதுரைப்படைத் தலைவரான ராமப்பைய்யன். திருமலை நாயக்கரோ "வேண்டாம் ராமா வடுகன் என்றால் மறவர்கள் மதிக்க மாட்டார்கள் மதுரை நாயக்க படை என்றால் மறவர்கள் மதிக்க மாட்டார்கள். அவர்களுக்கென்ற என்று தனிநாடு,கோட்டைகள் உண்டு மறவர்கள் தன்னரசு நாடு உடையவர்கள். மறவர்களுடன் போரிட்டு ஜெயித்தவர் யாரும் இல்லை சேதுக்கரைக்கு சென்றவர் மீண்டதில்லை வாளுக்கு இரையிட்ட வழுக்காரன் மறவன்" வீன் வசனங்கள் பேசாதே வேண்டாம் என மறுக்கிறார்.
மேலும் ஏற்கனவே நாம் மறவர்களோடு நடத்திய போர்களில் மறவர்களின் பீரங்கிகளுக்கும் வாளுக்கும் ஆயிரம் நமது படை வீரர்களை பலியாக கொடுத்துள்ளோம் ஏற்கனவே நமது படைகள் மறவ நாட்டில் பட்ட பாட்டையெல்லாம் மறந்துவிட்டாயா எனத்திருமலை நாயக்கர் கேட்கிறார்.
"அருனாத்திரி" என்ற படைதலைவரையும் அவருடன் சென்ற ஆயிரம் ஆயிரம் படைவீரர்களை மறவர்களிடன் பலிகொடுத்து தோல்வி மேல் தோல்வி பெற்று பின் வாங்கி ஒடிவந்ததை மறந்து விட்டாயோ என கேட்கிறார் இம்முறை கண்டிப்பாக மறவர்களை வெற்றி கொள்ள முடியும் என ராமப்பையன் தொடர்ந்து வற்புறுத்துகிறான். தெலுங்கு படைகளோ ஒரிசாவை,மராட்டியத்தை வென்றபடை மறவர்களை ஜெயித்து விடலாம். என வற்புறுத்துகின்றான். வேண்டா வெறுப்பாக திருமலை மன்னரின் அனுமதி கொடுக்கிறார்.
ஒரு லடசம் பேருக்கு அதிகமாக படைதிரட்டப்படுகின்றது. யார் கலந்து கொண்டார்கள் என ராமப்பையன் அம்மானை தெளிவாக விளக்குகிறது.பல்வேறு கூலிப்படைகள் ராமப்பையனால் திரட்டப்படுகின்றன மேலும் இலங்கையில் இருந்து போர்த்துகீசியர் ,சிங்கள படைகளும் திருமலை நாயக்கருக்கு உதவியாக வருகின்றன. படைகள் திருப்புவனம் வழியாக மானாமதுரை வந்து முகாமிடுகின்றன.அங்குள்ள காடுகளை வெட்டி கோட்டையை சீர்மைக்கின்றனர். ஒரு தூதுவனை போர் தூது சொல்ல அனுப்புகின்றனர்.தூதுவன் சேதுபதியிடம் செய்தியை கூறுகின்றான்
சடைக்கன் உறைத்தல்
"ஆண்டவனே யிப்போது அடியேன் பயந்து வந்தேன்
என்று சொன்ன தூதுவனை யேறிட்டுத் தான்பார்த்து
ஒன்றுக்கு மஞ்சாதே உரையை இடு தூதுவனே
கச்சித்திருமலேந்திரனுக்கு கன்னான ராமய்யனும்
மானா மதுரையிலே வளைந்தடித்தான் கூடாரம்
கோடிக் குறுவெள்ளம் கொண்டுவந்து விட்டாற்போல்
இந்தப் பெருஞ்சேனை எங்கே யிருந்ததோ
கண்டு பயந்து வந்தேன் கர்த்தாவே அய்யாவே"
சடைக்கன் சீற்றம்
பூண்ட மணிமார்பன் புகழ்சடை காணும்போது
சீறுவடி வாளசைத்துஸ் சினந்தான் சடைக்கணுந்தான்
எறிந்துவிட்டு பம்பரம்போல் யிங்கே நீ வோடிவந்தாய்
முன்னால் நம்மாலே முண்டுவந்த மன்னரெல்லாம்
பரம்பக்குடி கோட்டையிலே பட்டன் தரிப்பரே
துப்பாக்கி தன்னாலே சூறையிட்டான் கண்டாயே
அறிந்திருந்தும் பார்ப்பான் அவன் படைதான் வந்ததேன்றால்
................................
பார்ப்பானை கண்ணை பிடுங்கி காட்டிலே யோட்டிடாமல்
என் பெயர் தான் சடைக்கனோ எடுத்ததுவு ஆயுதமோ
பின்குடுமி தன்னில் தேங்காயைக் கட்டி சிதற அடிக்காவிட்டால்
என்பேர் சடைக்கனோ எடுத்ததுவு மாயுதமோ
ராமநாதஸ்வாம் பூசைபண்ணு நல்லொதோர் பண்டாரமே
வாள்கோட்டைராயர்(சேதுபதி) வன்னியத்தேவனிடம் கூறுதல்
"எம்மருகா வன்னியரே யிப்புதமே கேட்கலையோ
மதியானவர்களை வாவென்று தானழைத்து
மக்கதிலானையெனும் மதப்புலியை தானழைத்து
சின்னாண்டி பெரியாண்டி சென்று சமர் வென்றவனே
வெண்ணிமாலை குமரா வீரா வாவென்று
சேதுக்கு வாய்த்த சேவகனே வாவென்று
வாதுக்குபடிவரும் மதுரை வழி கண்டவனே
கொண்டையங்கோட்டை மன்னவனே
செம்பி நாட்டிலுள்ள சேர்ந்த படை மன்னவனே
வீசுகொண்ட தேவனை அழைத்து
மங்கல நாட்டு வணங்காத மன்னவரே
குமாரன் அழகனையும் கூப்பிட்டு கிட்டவைத்து
கன்னன் கலியானி காவலனே வாருமென்று ராவுத்த
நரைபடை காவாளும் மாப்பிள்ளை வன்னியரே
வேங்கை புலியாரே வீரப் பரிவாரங்களை அழைத்து
மானா மதுரையில் சென்று சேருமின்
மறவர் பதில்
மதுச்சடைக்கன் தானுரைக்க மறவருமங்க் கேதுரைப்பார்
வீசு கொடை தேவன் வேந்தன் முகம் பார்த்து
பார்ப்பான் படையெடுத்தால் பறாமென்று சொன்னீரே
வந்த வடுகெரெல்லாம் மடிந்தார்களன்னாளில்
இந்த விசை வாரான் இவன் பிழைத்து போவேனோ
வாரபடை யத்தனையு மடியவே போர்டுவோம்
சூறையிட்டு சுத்தித் துணிபிடுங்கி வாரோமய்யா"
மறவர்களின் தரப்பிலோ சடையக்க சேதுபதிகளது மருமகனும் படைதலைவனான பட்டினம் காத்தான் வன்னிய தேவன் தன்னுடைய படைவீரர்களை அழைக்கிறார். வன்னியதேவனிடம் மறவர்கள் என்ன நினைக்கிறார்கள் என கேட்கிறார் மறவர் படையினரோ எந்த வித சமரசம் வேண்டாம் எனவும் தாங்கள் போரிட விரும்புவதாகும் தாங்கள் தலைவரிடம் தெரிவிக்கின்றனர். ஐந்து பெரும் படைதலைவர்கள் தலைமையில் மறவர் படைகள் யுத்தத்திற்கு தயாரகின்றன "மத்ததேவன் என்கிற ஒரு தளபதி இவர் பரமக்குடி அருகில் உள்ள கீழப்பெருங்கரை கிராமத்தை சேர்ந்தவர் என கருதப்படுகின்றது. இரண்டாவதாக உடையான் என்ற கருத்துடையான் என்ற தளபதி இவர் சிவகங்கை அரசர்களின் முன்னோரான பர்த்திபனூர் அருகில் இருக்கும் குளந்தாபுரி என்ற அருங்குளத்தை சார்ந்தவராக இருக்கலாம் என கருதப்படுகிறது. அடுத்தாக வீசுகொண்ட தேவன் என்ற கொண்டையங்க் கோட்டை மறவர் தலைவர் தமது படைகலுடன் வருகிறார். ஐந்தாவதாக ஒரு தமிழ் இஸ்லாமிய தளபதி அவரது பேரும் இதில் குறிப்பிடப்படுகின்றது. இவர்கள் சேது மன்னர்கள் மீது மிகுந்த பற்று கொண்ட கன்னிராஜ புரம் கனிசேர்வை என்ற சேர்வை பட்டமுடைய தமிழ் முஸ்லீம் தளபதியாக இருந்தார். இது தவிர மதியழகன்,குமரத்தேவன் என்கிற இரண்டு தளபதிகள் பற்றிய குறிப்புகள் அம்மானையில் வருகிறது.இவர்களுடன் பெரும்படை பூதாலுடைய தேவர்,வெற்றிமாலையிட்டான், செறுவாறுடை சிங்கத்தேவர், பகழியூர் கூத்ததேவர்,வில்லை கொண்ட வேதமுடைய தேவர், வல்வேல் சத்த உடையான், நற்சோனை சேர்வைக்காரர்,பெரியசந்தனத் தேவர்,கூரி சாத்த பெரிய உடையன தேவர்கோட்டைசாமி தேவர்,திருக்கை உடையன தேவர்,கொம்மாயத்தேவர்,பகைவென்ற ஜெயக்கொடி தேவர். படைதளபதிகள் உள்ளனர். இப்போரில் மறவர்களின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தளபதி வன்னியத்தேவனின் பெரும் பேராற்றல் வெளிப்படுகின்றது. போருக்கு செல்லும் முன் பெண்கள் குலவையிடுகின்றனர். படைவீரர்கள் குளித்து அரச முறைப்படி சந்தனமிட்டு வேல் கம்பில் பூ கட்டி. சேதுபதி அரசரின் அரச விருந்து ஏற்பாடாகின்றது.
வன்னிய தேவன் சொல்
மட்டுப்படாத வன்னியன் மதம்பொழிந்து கொக்கரித்து
"கெட்டனோ பார்ப்பன் கீழ்திசை நோக்கிவந்து
பஞ்சாங்க சொல்ல வேறு இடமில்லையா
பூசைபண்ணித் தான் பிழைக்க பிள்ளையார்
தானில்லையோ
பார்ப்பனும் முன் வந்து தெரிபட்ட முதலிமார் சொல்லவில்லையோ
வடுகர்பட்ட பாடெல்லாம் மறந்தார்கள் மன்னவர்கள்
பார்ப்பானு மிதுதேசம் படையெடுக்க வந்தானோ
"பார்ப்பான் குடுமியில் தேங்காயை கட்டி யடிப்பேன் என்றான் கன்னன் புலி
வன்னியன்றான் "மார்பிலிடும் பூனூல் பறித்து மாட்டுவடம் போட்டிடுவேன்
ஆண்பிள்ளை சிங்கம் வன்னி அம்மான் முகம் பார்த்து
"வேண்டாம் மறவர் விசாரமினி வேண்டாங்காண்"
வங்கார மான வன்னி வாது சொல்லி தாம் மெழுந்து.
சேனை செல்கை
மற்றைநாள் தானும் மன்னன் புலி வன்னித்துரை
மதியாற்றழகனையும் மன்னன் குமாரனையும்
சின்னயாளியவுக்கு சேர்ந்த படை யத்தனையும் அரியாணிபுரக் கோட்டைக்கு அதிசீக்கிரத்தில் போகசொன்னான்
புயத்தையுடைவாள் போர்வேந்தன் தன்
படையும் வீசுகொண்ட தேவன் வீமன் பெரும்படையும்
புதுக்குடி கோட்டைய்க்கு போமென்று தாமுரைத்தார்
மதுரை வழிகண்ட மத்ததேவன் தன்படையும்
கறுத்த உடையான் கன்னன் பெரும்படையும்
ராவுத்த உடையான் காத்தன் நல்லபடைக்கு காவாளும்
போகலூர் கோட்டைக்கு போமென்று தானுரைத்தார்
வட்டாணதொண்டியில் வையுந்தன் தானியத்தை இளையாங்குடிக்கோட்டை யெச்சரிக்கை
மற்றநாள் தாண்தானும் மன்னன் புலிவன்னியவன் அரியானிபுறக்கோட்டை
அதிசீக்கிரம் போயிறங்கி கோட்டை புகுந்து கொத்தளத்து மேலேறி
யெதிரி படையை யேறிட்டு தான்பார்த்து
"எங்கே இருந்த்தடா இந்த பெரும்படை
கோடாங்கிக்காரன் வெள்ளமென கொண்டு வந்து விட்டனோ" என வன்னியத்தேவன் வீரியங்கள் பேசினான்.
முதல் நாள் சண்டை
இங்கு ஒரு விஷயத்தை குறிப்பிடவேண்டும். திப்பு சுல்த்தான் காலத்திலே இராக்கட் வெடி பயன்படுத்தபட்டது என சிலர் கூறுகின்றனர். ஆனால் திப்புசுல்த்தானுக்கு 300 வருடங்களுக்கு முன்பே இராக்கட்டை நம் தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர். மேலும் சேதுபதிகளின் மறவர் படையில் குழல்வாய்(பீரங்கி),துப்பாக்கி,எறிவாணம்(இராக்கட்) முதலிய நவீன ரக ஆயுதங்கள் பயன்படுத்தியுள்ளதாக போர்ச்சுகீசியர் மற்றும் அரசு ஆவன குறிப்புகள் தெரிவிக்கின்றன.
பார்ப்பான் படைமேலே பாருலகு தானறிய
எறிந்தார் எரிவாணம்(இராக்கட்) எல்லையற்ற சேனைமேல்
சுடரா க்குவைக்கார சொல்லரியா மன்னரைத்தான்
குத்தி விரட்டிக் கூடாரன் கொள்ளையிட்டார்
வெறுப்பட்டு குத்தி விரண்டோடிப் போவாரும்
குத்துண்டு போர்க்களத்தில் கொலவையிட்டு நிற்பாரும்
காலறுந்து வீழ்வாரும் கையறுந்து வீழ்வாரும்
குறைப்பிண்மாய் நின்று கூத்தாடி நிற்பாரும்
மன்னன் புலி வன்னியவன் வாகாகவே திரும்பி
வெற்றி சங்கூதினான் விருது சடைக்கனவன்
பார்ப்பன் பெரும்படையில் பட்டார்கள் முன்னூறு
மறவர் அறுபது பேர் மாண்டார் களத்திலே
தெலுங்கர் படைக்கு தலைமை ஏற்றவர்கள்
அந்தநாள் சென்று அலைகதிரோன் போய் மறந்தான்
பாளையக்காரர்களுக்கு அழைப்பு விடுமென கதறினான்
"மண்டூறு பார்ப்பானே வாருமென்று
நத்தத்து லிங்கையனும் நல்ல படையாலும்
கோடப்ப நாயக்கன் கூட்டப் பெரும்படையும்
வீரமலை நாய்க்கன் வேந்த பெரும்படையும்
எட்டப்ப நாயக்கன் எல்லையற்ற காலாளும்
தொட்டப்ப நாயக்கனும் தொறாத சேவகனும்
இருவப்ப நாயக்கன் யெதிரில்ல மன்னவனும்
பூச்சி நாயக்கன் போர்வேந்தன் தன்படையும்
முத்தைய நாயக்கன் போர்வேந்தன் தன்படையும் முருக்கு நாடு மூவரைய தேவன் படையும்
தெண்காஞ்சி மூக்கன் சிவிலிமாறன் படையும்
கோத மறுடி கோத்ஹ்ட பெரும்படையும்
குற்றால தேவன் கூட்டப் படையும்
தென்மலை வன்னியனும் சேனை தளமும்
கட்டபொம்மன் நாயக்கன் கனத்த சேனையும்
ஊற்றுமலையானும் உகந்த பெரும்சேனையும்
கீழ்முகத்து தும்பிச்சி நாயக்கனும்
மேல்முகத்து தும்பிச்சி விருதுபுகழ் காலாளும்
ஏழு மடையிலி வைப்பான் தன்படையும்
வென் நாயக்கனும் உற்ற புகழ் காவலாளும்
போருக்கு அதிகாரி பொம்ம நாயக்கன் படையும்
அப்பச்சி கவண்டன் ஆன பெரும்படையும்
ஏழாயிரம் பண்ணை எதிரில்லான் தன்படையும் கணக்கதிகாரி கவண்டன் பெரும்படையும்
நரிக்கு விருந்தாக்கும் நல்ல சிறுபொம்மனும்
முட்டிவெட்டி சூறையிடும் முத்தப்ப நாயக்கனும்
இருந்துமாந்து இலப்பையூர் நாயக்கனும்
பள்ளியில் சின்னையனும் பார்வேந்தன் தன்படையும்
ஆய்க்குடி கொண்டைய நாயக்கனும் விருப்பாச்சி நாயக்கன் வேந்தன் படையும்
கன்னிவாடி நாயக்கனும் கதித்த படை காலாளும்
லிங்கம நாயக்கன் நீதியுள்ளன் தன் படையும
பெருஞ்சேனை பெத்த நாயக்கன் அனைத்தும்
வாலப்ப நாயக்கன் வலுவுள்ளான் படையும்
வெங்கம நாயக்கன் காவலாளும்
விசுங்க நாடு விருது புகழ் காவலாளும்
செல்வப்பொட்டி நாயக்கன் சேனையும்
திருமலை பூச்சியனும் சேனைபடையரும்
சொக்கலிங்க நாயக்கன் தன்படையும்
மனலூறு நாயக்கன் வேந்தன் படையும்
வேலப்ப நாயக்கன் வேந்தன் படையும்
மருதப்ப தேவன் வேந்தன் படையும்
கோடாங்கி ரெட்டிக் குலைகளும்
மூங்கிலனை பூசாரி படையும்
பட்டத்து நாயக்கன் பரிவாரமும்
அரியலூரும் அவன் படைகளும்
வால சமுத்திரத்தின் மன்னன் படை தளமும்
குன்னத்து ரெட்டி குமரன் படையனைத்தும்
நாஞ்சில் நாட்டு துரையும்
மலையாள ராஜாவும் பார்வேந்தன் தன்படையும்
கொளும்பினில் ராசாவும் கூட்டு படையும்
ஈரோடுவொன்ன கொங்குமன்னரும்
நல்லம நாயக்கனும் நாகம நாயக்கனும்
கரட்டிமலை நாயக்கன் கனத்த பெரும்படை
கச்சைகட்டி நாயக்கன் காங்கேய நாடன் படையும்
என பெரும்படை திரள்கிறது.
புரோயன்சா பாதிரியார் குறிப்பில் "மறவர்கள் வெற்றிபெரும் நற்திறத்தோடு போரிட்ட வீரமக்கள்" என கூறுகிறார்.
ஒவ்வொரு கோட்டையை பிடிப்பதற்க்கு கோரயுத்தம் நடைபெறுகிறது. ஒரு அதிரடி தாக்குதலை மறவர் தளபதிகளான மதியழகனும்,குமாரத்தேவனும் மேற்கொள்ளும் பொருட்டு தெலுங்கு படைகளிடம் சிக்கிகொண்ட இருவரும் கொடூரமாக ராமப்பையன் கொலை செய்து விடுகிறார்.
யுத்தம் பாம்பன் கோட்டையில் நடக்கிறது, மானாமதுரையிலிருந்து இளையான்குடி கோட்டை,அரியானி கோட்டை(அரியாண்டிபுரம்) அத்தியூத்து,போகலூர்,பாம்பன்,குந்துக்கால்,சேதுகரை,ராமேஸ்வரம் என ஆறுமாதங்கள் இந்த யுத்தம் நடக்கிறது.
முதலாவது போர் மானாமதுரைக்கு அருகில் உள்ள புதுக்கோட்டையில் நடைபெற்றதாக கருதப்படுகிறது.அரியானி என்ற ஊரில் தெலுங்கு கூட்டு படைகள் முழுவதுமாக மறவர்களால் சூறையாடப்படுகின்றது. 300 பேர்களுக்கு அதிகமாக தெலுங்கு படைகள் மடிகின்றனர். மறவர் தரப்பிலோ 60 மறவர்கள் இறந்தனர். தெலுங்கு படைகள் சிதறியடிக்கபடுகின்றனர். ராமப்பையைனோ தமது படைவீரர்களை மிரட்டி, மீண்டும் தூண்டி யுத்தத்தை தொடர்கிறான். மீண்டும் மதுரைப்படை சூறையாடப்படுகின்றது. இத்தோல்வியினால் சோர்வு அடைந்து விடாமல் இராமப்பையான் அரியாண்டிபுரக்கோட்டையை கைப்பற்றினான்.
இளையாங்குடி,அத்தியூத்து,அரியானி பாம்பன் என மறவர் நாட்டில் ஒவ்வொறு அடியில் யுத்தம் நடைபெற்றது. போகலூர் யுத்தத்தில் சேதுமன்னரான சடையக்க தேவரோ நேரடியாக போரிடுகிறார் மறவர்களின் மாமன்னருக்கு யுத்தத்தில் தோள்பட்டையில் வெட்டுகாயம் ஏற்படுகின்றது. தான் உயிருடன் இருக்கும் பொழுது தமது மைத்துனரும் அரசரான சடையக்கத் தேவருக்கு காயம் ஏற்பட்டதை என்னி வன்னியதேவன் கண் கலங்குவதாக அம்மானை கூறுகிறது.
மறவர் வளைகுடா என அழைக்கப்டும் பாக்ஜலசந்தியிலும், மன்னார் வளைகுடாவிலும் யுத்தம் நடைபெறுகிறது. மதுரை ராமப்பையனின் படைக்கு ஆதரவாக போர்ச்சுகீசியர்கள் போரிடுகின்றனர். ஐரோப்பிய கடற்படை தெலுங்கர்களுக்கு அதரவாக போரிட்டு மறவர்களால் கடற்போரில் சிதரடிக்கபடுகின்றது. கப்பல்களின் பெயர்களும் அம்மானையில் குறிப்பிடபடுகின்றது.
யுத்தத்தில் தோல்வி மேல் தோல்வி பெற்ற தெலுங்கு,கன்னட ஆக்கிரமிப்பு படையும் அவர்களின் கூலிப்படையுடன் தன்மான தமிழ் மறவர்களின் நாட்டை விட்டு ஓடுகின்றது. ஆறாயிரம் வருடங்களாக போரை மட்டும் தொழிலாக செய்து வந்த இனக்குழுவுக்கு முன் ஆனைகுந்தி நாட்டில் மாடு மேய்க்கும் தெலுங்கு மற்றும் கன்னட கூலிப்படையினரால் தாக்கு பிடிக்க முடியவில்லை. திருமலை நாயக்கர் ராமப்பையானை மதுரைக்கு அழைக்கிறார்.
மதுரைக்கு வந்த ராமப்பையன் மீண்டும் படை உதவிகள் பெற்று பெரும்படையுடன் ஒராண்டு கழித்து ராமேஸ்வரம் தீவை முற்றுகையிடுகிறார். இராமேஸ்வரத்தை முற்றுகையிடுவதற்காக இராமப்பையன் ஒரு பாலம் கட்ட திட்டமிடுகிறார்.புரானங்களில் சொல்லப்படும் சேது என்ற பாலத்தை புதிப்பதாக கதை கூறுகிறது. இதில் அவரது படை பாளையக்காரர்களுக்கு பிடிக்கவில்லை அதிலும் பலரை கல் சுமக்க வைத்து பாலத்தை கட்டுகிறார்.
வைசூரி கண்ட நிலையிலும் மாபெரும் படைத்தலைவனும் சேதுமன்னரின் மருகனுமான வன்னியத் தேவன் பாம்பன் முற்றுகை போரை வெற்றிகரமாக தகர்தெரிந்து உயிர்விடுகிறார். வன்னிய தேவனின் மனைவி கனவனுடன் உடண்கட்டை ஏறுகிறார்.
ராமப்பையன் நோய் வாய்பட்டு இறந்ததாகவும் விஷம் வைத்து கொல்லப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இருதரப்பிலும் பெரும் அழிவுகள் ஏற்படுகிறது.
வடநாட்டை சேர்ந்த இந்து மத துறவிகள் திருமலை நாயக்கரை சந்தித்து போரை நிறுத்தவும்,சடைக்கத் தேவனை சந்திக்கவும் ஏற்பாடு செய்கின்றனர். அப்போது நடந்த சந்திப்பில் திருமலைநாயக்கருடன் இராமப்பையன் இருக்கிறான் திருமலை நாயக்கரை மீறி அவனே அதிகாரமிடுகிறார். ஆத்திரம் கொண்ட ராமப்பையன் சடையக்க தேவனை சிறையில் அடைக்கபடுகிறார். இச்செய்தி மறக்குல மக்களை ஆத்திரம் கொள்ளச்செய்கிறது. ஆயிரக்கனக்கான மறவர்கள் தங்கள் விளைநிலங்களை துறந்து படைகளில் சேர்ந்து ஆவேசத்துடன் நாயக்கர்களின் காவல் அரண்களை தாக்குகிறார்கள் நாடெங்கும் வன்முறை வெடிக்குறது.
அப்போது, திருமால் சடைக்கத்தேவருக்குக் காட்சி கொடுத்தார். பூட்டியிருந்த கால் விலங்கு 'கலீரென தான் தெரித்து போனது'. அதை அறிந்த திருமலை நாயக்கரும் சடைக்கத்தேவரை அழைத்துவரச்செய்து அவரை மீண்டும் சேதுநாட்டுக்கு அனுப்பிவைத்தார்மறக்குல மக்கள் வெற்றி முழக்கமிடுகிறார்கள் ஆக்கிரமிப்பு படைகள் வெளியேறி ஓடுகிறது. சடைக்கத்தேவரும் இராமநாதபுரம் திரும்பி செங்கொல் நடத்தி மாயன் அருளால் மண்டலத்தை ஆண்டிருந்தார்.
இந்த செய்தி இயேசு சபைப் பாதிரிமார்களில்ன் கடிதங்களாலும் உறுதிப்படுத்தப்படுகின்றது.இரு படைகளும் கடல் சண்டைகள் நடைபெற்றதற்கான் ஆதாரங்கள் கூறுகின்றது. இந்த யுத்தத்தை தலைமை தாங்கி நடத்திய சடைக்க சேதுபதியின் மருகன் வன்னிய தேவன் குடும்பம் ராமநாதபுரம் அருகே பட்டினம் காத்தன் என்ற ஊரில் வசிக்கின்றனர். வன்னிச்சாமி தேவர்,ராமவன்னி எண்கின்ற பெயரை இன்றும் அந்த குடும்பத்தினர் பழமைமாறாமல் தங்கள் குழந்தைகளுக்கும் சூட்டுகின்றனர்.இரமநாதபுரம் காங்கிரஸ் தலைவர் ரவிசந்திர ராமவன்னி தேவர் இவர்களில் முக்கியமானவர்.
எனது குறிப்பு:
ஆர்.சத்தியநாத ஐயர் மதுரை நாயக்கர்கள் வரலாறு, நெல்சன் மதுரை மானுவலும் இப்போரில் இராமப்பையன் இறந்ததாக கூறுகிறார்கள். ஆனால் ஸ்ரீசைலத்தில் 1648-ல் கானப்பட்ட ஒரு கல்வெட்டு இராமப்பையன் கல்வெட்டு என குறிப்பிடுகின்றது. இந்த தளபதி மறவர் போர் முடிவடைந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு இறந்தார் என குறிப்புகள் வருகிறது
விசுவநாத நாயக்கன் ஜெயதுங்க தேவரோடு ஒரு போரும், திருமலை நாயக்கருடன் இரு போரும், சொக்கநாத நாயக்கனுடன் இருமுறையும் மங்கம்மள் மற்றும் ரங்ககிருஷ்ன நாயாக்கருடன் இரு போர்கள் நடைபெற்றது.
மதுரை தெலுங்கு கூட்டுபடைகளால் மறவர்களை எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் மறவர்களோ தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்யும் தமிழர்களின் உயரிய மான்பிற்கு ஏற்றவகையில் கன்னட படைகளை முறியடிக்க பேருதவி சொக்கநாதனை ருஸ்டம் கான் பிடியிலிருந்து முஸ்லீம் ஆக்கிரமிப்பை விடுவித்து மதுரையிலிருந்து அகற்றியது. தென்னாட்டு பாளையக்காரர்களை ஒடுக்கியது என மதுரை தெலுங்கர்களுக்கு நன்மையே செய்துள்ளனர்.
பங்காரு திருமலை நாயக்கரின் குடும்பம் நாட்டைவிட்டு நாடிழந்து ஓடிய போது திருப்பச்சேத்தி அருகே வெள்ளிக்குறிச்சியில் தங்கவைத்து திருமலை நாயக்கரின் வாரிசுக்கு நிலங்களை ஆதரித்தவர்கள் சிவகங்கை மன்னர்கள் தான். இவ்வாறு இராமப்பையன் அம்மானை கூறுகிறது.
நன்றி:முத்துராஜா(வழக்கறிஞர்) அவர்கள்
ஒரு நாட்டுபுற பாடல் காட்டும்(விரையாச்சிலை வகைப்பாட்டு)
வரலாற்று செய்திகள் ஒரு பார்வை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டத்தில் விரையாச்சிலை என்றொரு ஊர்
உள்ளது.விரையாச்சிலை ஊரைச்சுற்றிப் பல கோவில்கள் இருந்தாலும் விரையாச்சிலையின்
சிறப்புக்கும் பெருமைக்கும் காரணமாக விளங்குவது விரையாச்சிலை ஊரின் நடுவில்
அமைந்துள்ள ஸ்ரீ மது அடைக்கலம் காத்த அம்மன் கோவில் எனலாம், மேற்படி அடைக்கலம்
காத்த அம்மன் கோவிலில் வருடம்தோரும் வைகாசி மாதத்தில் வரும் திருவிழாவிற்கு
காப்புகட்டி 10 நாட்கள் திருவிழா நடத்தபடுகின்றது. 9 ஆம் நாள் திருநாளன்று மது
எடுப்பு விழா விரையாச்சிலை செவ்வாய் திருவிழாவில் முக்கியமான திருவிழாவாகும் அம்து
எடுப்பு விரையாச்சிலை 10 கரை(வகை) மறவர்களின் பெண்களைக் கொண்டு நடத்தப்படுகின்றது.
இந்த மது எடுப்பு விரையாச்சிலை செவ்வாய் திருவிழாவில் முக்கியமான திருவிழாவாகும்.
மது எடுப்பு சங்ககாலத்தில் கொற்றவை வழிபாட்டின் அடியொற்றியதாகும். 10 ஆம் நாள்
மஞ்சள் நீராட்டம் மற்றும் சந்தாதர்ணத்தோடு திருவிழா நிறைவு பெறும். இந்த அடைக்கலம்
காத்த அம்மன் கோவில் நிர்வாகம் திருவிழா செய்தல் அனைத்தும் விரையாச்சிலை மறவர்களை
சார்ந்ததே.விரையாச்சிலை அடைக்கலம் காத்த அம்மனுக்கு திருவிழா செய்வதற்கு முடிவு செய்ததும் திருவிழாவிற்கு நெல் வசூலிப்பதற்கு மேற்படி கோவிலுக்கு காப்புக் கட்டுமுன் விரையாச்சிலை மறவர்கள் விரையாச்சிலை தெருக்களில் குழுவாக சென்று கோலாட்ட முறையில் வளந்தான அடிப்பது திருவிழாவிற்கு முளை போட்டு பாலிகை வளர்ப்பதும் முக்கிய நிகழ்ச்சியாகும். முளைப்போட்ட நாளிலிருந்து முளைப்பாரி பிரிக்கும் வரையுள்ள ஏழு நாட்களும் முளைப்போடபட்டுள்ள செவ்வாய் வீட்டின் முன் ஒவ்வொரு நாள் இரவிலும் விரையாச்சிலை மறவர்கள் குழுவாக சென்று காலில் சலங்கை கட்டிக்கொண்டு கையில் துனியை பிடித்து ஒயிலாட்ட முறையில் 10 வகை மறவர்களின் வீரதீரச் செயல்களைப் பாடி ஆடப்படும் பாடலே விரையாச்சிலை வகைப்பாட்டாகும். இனத வளந்தானப் பாட்டு,வகைப்பாட்டு ஆகிய நாட்டுப்புறப் பாடல்கள் கூறும் வரலாற்று செய்திகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
விரையாச்சிலை வளந்தானை பாட்டு வகைப்பாட்டு வராலாற்று செய்திகளை அறிவதற்கு முன் அப்பாடலில் கண்டுள்ள மறவர்கலின் தொன்மையை தெரிந்து கொண்டால்தான் விரையாச்சிலை மறவர்களின் சிறப்புகளைப் புரிந்து கொள்ள முடியும். மறவர் என்போர் மதுரை,இராமநாதபுரம்,திருநெல்வேலி,விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் மக்களேயாவர்.
மெக்கன்சி என்ற ஆங்கிலேயர் தொகுத்த மறவர் ஜாதி வர்னனை பற்றிய ஏட்டுப் பிரதி ஒன்றில்,மறவர்களில் செம்பிய நாட்டு மறவர்,கொண்டையன் கோட்டை மறவர், ஆப்பநாட்டு மறவர், உப்புக்கோட்டை மறவர்,குறிச்சிக்கட்டு மறவர்,அகத்தா மறவர்,ஒரூர் நாட்டு மறவர் என ஏழு பெரும் பிரிவுகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தேவநேயப்பாவனர் அவர்களது தமிழர் வரலாறு என்ற நூலில் 38 பிரிவுகள் இருப்பதாக குறிக்கப்பட்டுள்ளது. பாவனர் அவர்களது நூலை ஆராய்ந்தால் மறவர்களிடத்தில் கிளை,நாடு,கோட்டை,தாலி என்ற பாகுபாட்டில் 55 பிரிவுகள் உள்ளதாக தெரிகின்றது.
மறவர்களில் செம்பியன் நாட்டு மறவரை நாட்டு வழக்கில் செம்மநாட்டு மறவர் என்று கூறுவர்.இந்த செம்பியன் நாடு என்றழைக்கப்பட்டதை பல வரலாற்று மத்திய காலக் கல்வெட்டுகள் மூலம் தெரிவிக்கின்றன.
செம்பி நாட்டு மறவர்கள்:
செம்பியன் நாட்டு மறவர்கள் இராமர் சிதையை மீட்பதற்கு இலங்கை செல்வதற்கு கட்டிய திருவணையை(சேதுவை) காப்பதற்க்கு நியமிக்க பட்ட ஒரு தலைவனின் வழிவந்தவர்கள் என்று சொல்லப்படுகின்றது. இன்னோர் அதாரமாக சோழ மன்னன் இராஜராஜ சோழன் இலங்கை படையெடுப்பின் போது சேதுவையும் பாண்டிய நாட்டையும் காக்க தன்னுடைய தளபதிகளில் ஒருவனை இப்பூமியின் காவலனாய் நியமித்ததாக ஒரு வரலாறு கூறுகின்றது. செம்பிய நாடு மறவர்களில் சேதுபதிகள் முக்கியமானவர்கள். செம்பிநாட்டு மறவர்கள் சேது அனையைக் காப்பதற்கு வந்தவர்களாதலால் சேதுகாவலர்கள் என்றும் சேதுபதிகள் என்றும் அழைக்கபட்டனர். செம்பிய நாட்டு மறவர்களில் சேதுபதிகள் முடிதரிக்கும் மன்னர்களாதலால் செம்பியநாட்டு மறவர்களுக்கு மறமன்னர் என்றும் கரந்தையர்கோன் என்ற பட்டம் உண்டு. செம்பி நாடு மறவர்களுக்கு பிச்சாகிளை,மரிக்கார் கிளை,கற்பகத்தார் கிளை,தனிச்சான்(துனிஞ்சான்) கிளை,பிச்சாகிளை,குடுதனார் கிளை,தொண்டமான் கிளை என பல உட்பிரிவுகள் உண்டு. செம்பிநாட்டு மறவர்களில் ஒரு பகுதியினர் இராமநாதபுரம் திருவாடனைக்கு என்ற ஊரின் நாரை பறக்காத 48 மடைப்பாசணத்தினுள்ள ஒருமடைப் போக்கிலிருந்தவர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக புதுக்கோட்டை பகுதிக்கு வந்ததாக பொது வரலாறு கூறுகின்றது. இராசசிங்க மங்கலம் கம்மாயில் 48 மடைகள் இருந்ததை 18 ஆம் நூற்றாண்டு நூலான மதிலைப்பட்டி அழகிய சிற்றம்பல கவிராயரின் சுசிலவள்ளல் அம்மானை என்ற நூல் பேசுகின்றது.
அவ்வாறு புதுக்கோட்டை வந்து தங்கிய மறவர்களது ஊர்களில் விரையாச்சிலையும் ஒன்று.கி.பி.12-ஆம் நூற்றாண்டிற்கு முன்பாக நடந்து இருக்கவேண்டும் என்றும் கூறுகின்றது.புதுக்கோட்டைபகுதி மறவர்களின் குடியேற்றத்தின் காலத்தை அறிவதற்கு புதுக்கோட்டை கல்வெட்டு நமக்கு உதவுகிறது. புதுக்கோட்டை பகுதிக்கு மறவர்கள் கி.பி.10 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே வந்திருக்க வேண்டும்.கல்வெட்டுகளில் மறவர்களை கி.பி.10. ஆம் நூற்றாண்டிலிருந்து கிடைக்கிறது.விரையாச்சிலை வந்து தங்கிய மறவர்கள் விரையாச்சிலையினை பல விதங்களில் மேம்படுத்தியதோடு விரையாச்சிலையை ஒரு படைப்பற்று ஊராகவும் தங்களை பாண்டிய படைப்பற்றின் ஊரவையராகவும் உயர்த்திக் கொண்டு விரையாச்சிலை கோவில்கலையும் நிர்வாகித்து வந்தனர்.
இக்கல்வெட்டுகள் மூலம் மறவர்கள் ஊரவையர்,அரையர், பேரரையர்,நாடாள்வார்,நாட்டர் போன்ற பட்டங்களை கொண்டவர்களாக வீரதீர செயல்கள் மிக்கவர்களாக விளங்கினர் என தெரியும். இதில் மறவர்களை செம்பியன் நாட்டு பேரரையன்(புரையர்) என்ற பட்டம் வழக்கில் கானப்படுகின்றது. பேரரையன்,அரையன் என்பது அரசமக்கள் எனும் பொருள் படும்.எனவே இங்கு உள்ள பேரரையர் 10 வம்சத்தை வளந்தானை பாட்டு குறிப்பிடுகின்றது.
இந்த வளந்தானை பாடலையும்,வகைப்பாட்டினையும் சுமார் 200 வருடங்கலுக்கு முன்பு விரையாச்சிலையில் வாழ்ந்த கருத்தக் குட்டை தேவர் என்பார் பாடியதாக கூறப்படுகின்றது. அது வாய்மொழிப் பாடலாகவே இன்று வரை இருந்து வருகிறது.
"சீரிலங்கும் கனயோகம் செழுந்தருளும் கானாடாம் தாரிலங்கும்
கானாட்டில் தழைக்கும் ஐந்தூர்ப் படைபத்தாம்(பற்று)"
கானாடு இதற்கு மற்றொரு பெயரும் உண்டு விருதராஜ பயங்கர நாடு கானாடு என்பது வடக்கே புதுக்கோட்டை அன்மையிலுள்ள பேரையூரையும்,மேற்கில் விரையாச்சிலையின் ஒரு பகுதியையும்,காரைக்குடியையும் தெற்கே அரிமளத்திற்கு அடுத்துள்ள நெடுங்குடியையும் எல்லையாக கொண்டது. பாடலில் கண்டுள்ள ஐந்தூர் படைப்பத்து, இதில் தேக்காட்டூர்,கோட்டூர்,லெமலக்குடி,விரையாச்சிலை,புலிவலம் ஆகிய ஐந்து ஊர்களேயாம். இந்த படைப்பற்று ஊர்களே கானாட்டு பேரையூர் நாகநாத சுவாமி கோவில் தேரோட்டத்தில் இன்றைக்கும் இந்த ஐந்து ஊர்களுக்கும் வரிசைக்கிராமத்தில் கோவில் மரியாதை கொடுக்கப்படுகின்றது குறிப்பிடதக்கதாகும்.
"பெருநகரில் மறமன்னர்கள் பெருகி வளர் வீடுகளாம் பெருகிய பத்துஅம்பலமாம் பேரான
பாக்கியமாம் பாக்கியம் சேர் பல்தெருவாம் பனிமுகப்பாம் தோரனமாம்"
மறமன்னர்கள் என்போர் மறவர்களாவர், இவர்கள் சேதுபதியை சேர்ந்தவர்கலாதலால் மறமன்னர் என்றழைக்கப்பட்டனர்,இவர்கள் செம்பியன் நாடு மறவர்களைச் சார்ந்தவர்களான சேதுபதிகளுக்குரிய சேது காவலர் வாள் கோட்டைராயர் போன்ற பட்டங்களின் மூலம் அறியலாம். சேதுபதிகளுக்கு முன்னரே மறவர்கள் தென் தமிழ் நாட்டில் கி.பி.13.ஆம் நூற்றாண்டளவில் 8 இடங்களில் கோட்டைகளைக் கட்டிக்கொண்டு வாழ்ந்ததாக இலங்கை மகாவம்சம் கூறுகிறது ஆதாவது கொண்டையன் கோட்டை,வேம்பக் கோட்டை மறவர்,நாலுக்கோட்டை மறவர், அஞ்சுக்கோட்டை மறவர், அணில் ஏறாக் கோட்டை மறவர் என்ற இவர்களின் பெயர்களே சான்றாகும்.
அம்பலம் என்ற சொல் இறைவன் ஆடும் சபை,நடுவூர் மன்றம்,கள்ளர் மறவர்களின் தலைவன் பட்டம், வலையர் சாதிக்குரிய குலப்பட்டம் அதிகாரம் என பல பொருள் தரும் ஒரு சொல்லாகும். இங்கு பெருகிய பத்தம்பலமாம் என்றால் விரையாச்சிலை மறவர்களில் 10 கரை அம்பலத் தேவர்களை குறிக்கும்.
"ஓங்கி முளை வளர்த்திடவே உருமாப் பெண்கள் காப்பு கட்டி காப்புக் கட்டி
பாலிகைக்கு கனமாக நூலைச் சுற்றி"
இதில் முளிப்பாரி ஓடும்பாது பானையை மஞ்சள் கட்டுவதை குறிக்கு.
"பாடுவாளாம் விடங்கேசுவரர் உய்யவந்தம்மனும் துய்ய
கருப்பரும் பைரவர் சுவாமி பரிவாரங்களும்
தெய்வமது புதுமையுள்ள தேவி பத்திரகாளி அம்மன்
அடிக்கலாம் காத்த ஆயிதன் மேல் பாடுங்கடி"
விரையாச்சிலை சிவன் கோவில் இறைவன் உலகவிடங்கேசுவராவார். அக்கோவில் அம்மன் உய்யவந்த அம்மன் என்றழைக்கபடுகிறார்.
இந்த முளைப்பாரி பாடலின் தொடர்ச்சியும் அதன் சிறப்புகளையும் பலவகையில் விளக்குகிறது.
வகைப்பாட்டும் வரலாற்றுச் செய்திகளும்:
வகை என்றால் வம்சம்,கரை,கூட்டம் என்று பல பொருள் உண்டு. அதாவது ஒரு தலைவன் வழி வந்தவர்கள் அல்லது ஒரு தெய்வத்தை குலதெய்வமாக கொண்டவர்களின் பங்காளி கூட்டமே வகை(கரை) எனப்படும்.
விரையாச்சிலை மறவர்கள் செம்பி நாட்டு மறவர் பிரிவை சார்ந்தவர்கள்.விரையாச்சிலையில் மறவர்களிடத்திலே 10 வகை பங்காளிக் கூட்டம் உள்ளது இந்த 10 வகை மறவர்களது பெண்களில் வகைக்கு ஒருவர் வீதம் விரையாச்சிலை அடைக்கலம் காத்த அம்மன் கோவில் திருவிழாவிற்கு மது எடுக்கின்றனர். இந்த பத்து வகை மறவர்களின் வீரப் பிரதாபங்களையும் சிறப்புகளையும் பாடும் நாட்டுப் புறப்பாடலே விரையாச்சிலை வகைப்பாட்டாகும். வகைப்பாட்டு ஒவ்வொரு கரையின் தலைவரான அம்லக்காரரை பாடுவதன் மூலம் கதையின் சிறப்புகள் பாடப்படுகின்றன. வகைப்பட்டு தன்னானே நானேனோம் என்ற இசை குறிப்பின் தொடங்கி பல பாடல்கள் பின் இசையாக பாடப்படுகின்றது.
வகைப்பாட்டில் விரையாச்சிலை மறவர்களின் முதல் வகையில் ஆதி பொன்னம்பல அம்பலக்காரரை வகையில் வலஞ்சியரை வெட்டிய தேவனின் உட்கரை ஆவார். இவரை முன் வைத்தே இவ்வகைப்பாட்டு ஆரம்பிக்கின்றது.
"ஆகா ! சேனையும் தானும் படைமுகத்தில் சென்று துணிந்து ரணகளத்தில்
ஆணையைக் குத்தியஐநூற்றுவ புரையராம் ஆண் பிள்ளை என்றுமே பெயரும்
கொண்டான்"
யானையின் பலம் தும்பிக்கையிலே என்ற பழமொழிக்கு ஏற்ப யானையின் அசுர பலத்தை கண்டு அஞ்சாமல் துணிச்சலுடன் படைகளத்தில் யானைத் தும்பிக்கை வெட்டி கொண்டதால் இப் பெயர் என்றழைக்கப்பட்டனர் போலும்.
ஐநூற்று புரையர் என்ற பட்டமும் இவர்களுக்கு மரியாதை கொடுக்கப்படுகிறது. பனையூரில் வலஞ்சுவெட்டிய தேவனின் வகையும் வயிரமிதிச்சான் என்ற வயிரத்தேவன் கரையும் வகையும் உள்ளனர். இவர்கள் தனிக் கரையனராக இருந்தாலும் மறவர்களின் பெருங்கரையில் ஒரே கரையினர் ஆவர். சுமார் 300 வருடங்களுக்கு முன்பு நிலக் கொடையின் காரனமாக இவர்களது முன்னோர்களுக்கு கொடுக்கப் பெற்ற இவர்களது முன்னோர்களுக்கு கொடுக்கப் பெற்ற செப்பு பட்டயத்தில் கலங்காத கண்டன் மறமன்னர் வாள்கோட்டைராயர் அவிராய புரையர் வயிரமிச்சான் உள்ளிட்டாரும் ஆனை வெட்டி மாலை சூடும் ஐநூற்றுப் புரையர் வலஞ்சு வெட்டி தேவரும் கரை ஒன்று எனச் செப்பேடு கூறுவதிலிருந்து மறவர் வலஞ்சு வெட்டி தேவர்கள் யானையை வெட்டி வெற்றி கண்டதை அறியலாம். இது போல
குளிபிறையில் ஒரு வகையினர் மாச்சார் வெட்டி தேவர் என்றும் கோட்டூர் மறவர்களில் ஒரு வகையினருக்கு கரிசல் வெட்டி தேவர் என்றும் உள்ள பட்டங்கள் யானை வெட்டி என்ற பட்டத்துடன் தொடர்புடையவை எனலாம் அடுத்து.
"முன்னம்பலமாம் முதல்வகையானவன் முன் வைத்த காலை பின்னே வையான் பொன்னம்பலம்
ரெண்டு மதுவினில் பூவும் சிங்காரத்தை பாருங்கடி"
பொன்னம்பல அம்பலகாரர் முதல் வகையை சேர்ந்த இவர் 10 அம்பலகாரர்களுக்கு முன்னவர் ஆவார். முன் வைத்த காலை பின்னே வையான் என பாராட்டபடுகிறார். முன் வைத்த காலை பின்னே வையான் எனபதற்கு போர்களத்தில் எதிரியை கண்டு அஞ்சி பின்வாங்கி செல்லாமல் முன்னேறி சென்று வெற்றி வாகை சூடுவதையே குறிக்கோளாக கொண்டவர் எனலாம். பனையூர் மறவரில் ஒரு வகையினர் கண்டு போகாப் புரையர் என்ற பட்டமுள்ளது. ஆதாவது எதிரியை கண்டு பின் வாங்கி போகாதவன் என்று பொருள்,முன் வைத்த காலை பின்னே வையான் என்பது கண்டு போகா என்பது ஒன்றே எனலாம்.
"மேனாட்டு பூச்சியன் சேனை தளத்தையும் வெட்டி
ஜெயம் பெற்ற சேவகனாம் கானாடு எல்லைக்கு அதிபதியாம்
நல்ல கானாட்டுக் காரிய சேகரனடி தென்பாலும் போலும் இனசன
சேகரன் நல்ல செல்வ மிகுந்த கனயோகனான அம்பலக்காரன்
மது வரும் சந்தோசம் பாருங்கள்"
கானாட்டு புரையர் இரண்டாவது வகை மறவர்களின் தலைவராவார். அவர் கானாட்டு காரியக்காரர். அவர் புதுக்கோட்டை தொண்டைமானுக்கும் மருங்காபுரி பூச்சைய நாயக்கருக்கும் நடந்த எல்லைப் போரில் தொண்டைமான் பக்கம் நின்று பூச்சைய நாயக்கரை வென்றவர் என்பதை இப்பாடல் வரிகள் பெருமை சேர்க்கிறது.
"செம்பொன் நிதி செல்வ முள்ளவனாம் சிங்கடாகை சிவிகை உடையவனாம்
அன்பென்னும் கொம்ப ராச துரைத்தனம் ஆனவனாம் புவி ஆண்டவனாம்
சாயாத செல்வம் படைத்தவனாம் சௌபாக்கியனாம் வெகுயோக்கியனாம்
ஓயாமாறி மதுதான் கொண்டிருந்த உத்தமி வாரதைப் பாருங்கடி"
ஓயாமாறி என்றி சொல்லின் பொருள் எந்த நேரத்திலும் போருக்கு செல்வதை பெருவிருப்பாக கொண்டவர் என்பதை சுட்டுவதாகும், சிங்கடாகை சிவிகை உடையவர் என ஓயாமாறி போற்றப்படுகிறார். சிங்கடாகை சிவிகை என்றால் சிங்கமுகப் பல்லாக்கை குறிக்கும். இவர் சிவகங்கை மாவட்டம் காளையாட் கோவிலருகிலுள்ள புலியடி தம்பம் என்ற ஊரில் பாடி காவல் பார்த்த்ததாகவும் சுமார் 80 வருடங்களுக்கு முன் இவரது வீட்டில் பழைய பல்லாக்கு ஒன்று கட்டிக் கிடந்ததை பார்த்ததாகவும் இன்றைக்கு 80 வயதுக்கு மேற்பட்ட விரையாச்சிலை கா.சுப்பிரமணி தேவர் அவர்கள் கூறுகிறார்கள். விரையாச்சிலை அம்மன் கோவிலுள்ள ஒரு சிலை ஓயாமாறி தேவர் என்ற கல்வெட்டு உள்ளது.
அடுத்து விரையாச்சிலையில் தொண்டைமான் என்னும் பெயருடைய ஒரு வகை மறவர்கள் உள்ளனர். இவரை
"சண்டப்பிர சண்டனாம் மூவிராஜாக்களில் தம்பியைத் தானிவர்
நம்பினவர்
தொண்டைமானென்னும் புரையரடி துரை துலங்கு நகுலன்களின் தீரனடி"
செம்பி நாட்டு மறவர்கலில் தொண்டைமான் என்னும் கிளை ஒன்றுண்டு இவர் செம்பி நாட்டு மறவரில் தொண்டைமான் கிளை ஒன்றுண்டு. இவர் செம்பி நாட்டு மறவரின் கிளையை சேர்ந்தவர். பெண்ணுக்கு தான் கிளைகள் குறிக்கும்அறந்தாங்கி தொண்டைமான் களில் இவர்கள் பெண் எடுத்திருக்க கூடும் அதனாலே இவர்கள் தொண்டைமான் கிளை கூறுகின்றனர்.
அடுத்து மூவி ராஜாக்களில் தம்பியைத் தானிவர் நம்பினவர் என்பதில் பாண்டிய மன்னர்களில் சுந்தரபாண்டியன்,வீரபாண்டியன் என்ற அண்ணன் தம்பிகளில் இவர்கள் வீரபாண்டியைன் அணியிலே நின்றதை இது காட்டுகிறது.
விரையாச்சிலையில் பாண்டியம்பலகாரன் என்றொரு தலைவன் வழி பங்காளிகள் தங்களை பாண்டியர்களின் வம்சம்(வகை) எனச் சொல்வர். இப் பாண்டியம்பலகாரன்
"காண்டீபன் பாம்பாறு காவல் கொண்டான் கிளை சார்ந்தவனாம் இனம்
சேர்ந்தவனாம்
பாண்டியன் சீமையில் பாண்டி மதுவிது பாருங்கள் பாருங்கள் தோழிப்
பெண்கள்"
இவர் பாம்பாற்று நாட்டில் பாடிகாவல் செய்ததை இப்பாடல் வரிகாட்டுகிறது இவர் பாண்டியன் என்னும் இயற்பெயர்
கொண்டவர்,ஓயாமாறிக்கும் இப்பாண்டியனுக்கும் விரையாச்சிலை அம்மன் கோவிலில் கற்சிலைகள் உள்ளன்.
"சென்னி மகுட முடிராசன் கொடி செலுத்தும் ராசன் மகாராசன்
மன்னியராசர் மறமன்னர் மகாராசன் அனும-கருட கொடியுடைய
ஜெயமுடையோன்
அபிமானம் உள்ளவனாம் நல்ல இலங்கு யோகம் மிகுந்தவனாம்
கண்ணுக்கு கண்ணனான் கொப்புடைய நாயகி காவல் கொண்ட கானாடன்
அன்னதானம் பசுஞ்சொர்ணதானம் செய்ய அஞ்சாத நெஞ்சன் அபிராமன்
கர்ணனெனவே பிறந்தவனாம் இந்த காசினியோர்க்கு உகந்தவனாம்
வேலன் துனை பெற்ற சீலன் அனுகூலன் விரசை நாட்டுக் கதிபதியாம்
மேல வணங்கின தேவனடி வெகு மேன்மை செளந்திர வாகனடி"
இவர் மேல வணங்கின தேவர் என்ற பட்டமுடையதேவர் . மேல வணங்கின தேவர் என்ற பட்டத்திற்கு மேற்க்கு எல்லையான கொப்புடைய நாயகி அம்மன் குடி கொண்டுள்ள காரைக்குடி பாடிகாவல் காத்தவர் என குறிக்கபடுகிறார்.
சேதுபதிகளுக்கு நாயக்க மன்னர்கள் அனும-கருட கொடி வழங்கினர். அதற்குமுன் பாண்டியர் வழங்கிய கயல்கொடி,புலிக்கொடி முதலான பெயர்களில் கயல்கொடி கேதனன், புலிக்கொடி கேதனன், கருட-அனுமக் கொடி கேதனன் முதலிய பெயர்கள் உள்ளன. மேல வனங்கின தேவர் சேதுபதிகளின் முன்னோர்களை சேர்ந்த நேரடி தொடர்பு காரணமாக இவரும் மறமன்னர்,கருட-அனும கொடியுடையவர் எனப்பட்டம் வந்தது.
"உபரி மந்திரி யோசனை வாசனை யுக்தி புத்தி மதியூகிகள் நகூரி
பூவன் வழிக்கால் நாட்டி மது நாகரிகத்தையும் பாருங்கடி"
விரையாச்சிலை மறவர்கலில் நகரி அம்பலகாரரும் அவரைச்சார்ந்தவரும் நகர காவல் செய்தவர்கள் ஆதலால் நகரி அம்பலம் என பெயர் பெற்றது எனலாம்.
அடுத்ததாக கீழ வணங்கின தேவர் என்ற பெயருடைய ஒரு வகை உண்டு
" காலபய்ங்கரன் கானாடன் இந்தக் காசினியோருக்கு உகந்தவனாம்
கீழ வணங்கின தேவரடி கிளை சார்ந்தவனாம் இனம் சேர்ந்தவனாம்"
எண்கின்ற பாடலில் கீழ வனங்கின தேவர் என்ற பட்டத்திற்கு பொருள் கானாட்டின் கிழக்கு பகுதியினை காவல் செய்தவர்.
"பாந்துவமான் சனக்காரன் கன் பக்கியக்காரன் பதக்காரன்
சாந்திமது தான் அவரும் சந்தோசம் பாருங்கள் தோழிப்பெண்காள்"
எண்கின்ற பாடலில் சாந்தி அம்பலகாரர் என்ற பட்டத்தில் வரும் தலைவரை குறிக்கும்.
"தேனாறு பாயும் மல்லாங்குடியும் செல்வம் செழிக்கும் விராச்சிலையில்
வானாதிராயர் நிலைமையடி நல்வாழ்வு மிகுந்த விவேகனடி".
வானாதிராயர் என்ற வகையின் பங்காளிகள் மல்லாங்குடி(மலையாளங்குடி) என்ற பக்கத்து ஊரில் குடியேரியுள்ளதால் மல்லாங்குடி என்று பேசப்படுது. இந்த வாணாதிராயர்,பல்லவராயர் போன்ற பட்டம் மறவர்களுக்கு உரிய பட்டமல்ல. இது கி.பி.12,13, ஆம் நூற்றாண்டுகளில் சில அரசியல் தலைவர்கள் வாணவராயர்,வைத்தூர் பல்லவராயர் போன்ற குறுனிலத்தலைவர்கள் இருந்தனர். அத்தலைவர்களின் செல்வாக்கு,புகழ் இவர்களை கவர்ந்ததன் காரணமாகவும் அவர்களின் பணிமக்களாக இவர்கள் விளங்கியதன் காரணமாகவும் அவர்களின் பெயர்களே இவர்கள் வைத்துகொண்டனர்.
"அங்குசமானவன் வங்குசமானவன் நல்ல அம்பலமான அரசர்களாம்
சிங்கான் மதுவரும் சிங்காரம் நல்ல சென்பக வல்லியே பாருங்கடி"
இந்த சிங்கான் அம்பலகாரரின் வகையினைப் பாராட்டும் வரிகளும்,விராச்சிலைக்கு அன்மையிலுள்ள பனையூர் சிவன் கோவிலில், குளமங்கல மறவர்களில் மழவர்மாணிக்கம் என்ற மழவசக்கரவர்த்தி என்பவரும் மாளுவராய பேரரையர் என்பவரும் கி.பி.15 ஆம் நூற்றாண்டுகளில் ஒரு கல் உத்திரம் கொடுத்ததன் பொருட்டு வெட்டி வைத்துள்ள கல்வெட்டில் "பனையூர் மறவரில் மழவராய சோழ சிங்க பெரியான்" என்றும். இம்மழவராயன் தன்னை மழவராய சோழசிங்கன் என்று கூறிக்கொள்கிறார். கார்காத்த வேளாளருக்கு நிலம் வழங்கிய செப்புபட்டயத்தில் "மறமன்னர் மாளுவிராயப்புரையர் தனி மதிச்சான் உள்ளிட்டாற்கும் அசையாக்கட்டை மதியா வீரனுள்ளிட்டாற்கும் ஊரது புறவில் ஒன்பதிலே ஒரு கரைக்கு வகைப்பிரியல் நஞ்சையில்" என்றும் கூறுகின்றது. இவர் பாண்டிய தொடர்புடைய மழவராயர், இவன் பாண்டிய அரசு அதிகாரத்தில் பாண்டியனால் காளையார்கோவில் பாடிகாப்போனாக நியமிக்கப்பட்டவன்.இவனுக்கு குருவாக விளங்கிய ஈஸ்வர முடையாருக்கு நிலம் வழங்கியதாக ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது.இவனுக்கு பாண்டியனால் மழவசக்கரவர்த்தி என்று பட்டம் கொடுக்கபட்டவன்(பாண்டியர் வரலாறு:சதாசிவ பண்டாரத்தார்). இவன் தன்னை சோழசிங்கன் என்று ஆதாவது சோழனுக்கு சிங்கத்தை போன்றவன் என்று பட்டம் கொண்டவனாக இருக்கிறார். இவர் சிங்கான் அம்பலக்காரரின் கரைப்பாட்டு விளக்குகிறது.இவரது குலதெய்வம் வடக்கி வாசல் கருப்பர்.
"பொன்னனூர் முற்றிலும் காவல் கொண்டான் வர்ணப்புரவியேறும்
பரிநகுலன் சொர்ணநிதி பெற்ற நஞ்சுண்டான் வாபோசி
சொல்ல சொல்லும் புவிதேசமெங்கும்"
"மிக்க புகழ்பெற்ற திக்கு விஜயமும் மேன்மை செலுத்தும் விவேகனடி
மொக்கன்
மதுவிது திக்கும் மொய்க்கவே முன்மையாய் பாருங்கள் தோழி
பெண்கள்"
மொக்கன் அம்பலக்காரர் வகையைப் பற்றியும் அவரது பங்காளிகளைப் பற்றியும் இப்பாடல் வரிகள் தெரிவிக்கிறது. புதுக்கோட்டை பகுதி மறவர்கள் சிலருகு அதிராப்புலி,செண்டுப்புலி,வீரப்புலி,ஈரப்புலி,கலங்காப்புலி என்ற பட்டப்பெயர்கள் உள்ளது போல இவ்வம்பலக்காரர் மொக்கன்புலி என்றழைக்கபட்டார் இவர் புலியின் வீரத்திற்கு ஒப்பானவர் என கருத்தில் கொள்ளலாம்.
"தாலிக்கு வேய் மணிகட்டியான் சௌபாக்கியனாம் வெகுயோக்கியனாம்
வாலிசுக்கிரிவன் போல் வந்துதித்த மறவர் குலம்"
இந்த மணிகட்டியான் தாலிக்கு வேலி என்பவர் கரையில் இரு சகோதரர்கள் வாலி சுக்கிரீவன் போல இருந்த கதை உள்ளது போல.
10வது வகையாக பல்லவராயர் வகையினைப் பற்றி
"வல்லவனாம் வெகு நல்லவனாம் அவன் மார்கண்டேயன் ஆயுசு
பெற்றவனாம் பல்லவராயன் மதுவரும் வேடிக்கை பார்க்க
வாருங்கள் தோழிப் பெண்காள்"
என்று பல்லவராயர் சுட்டப்படுகிறார். பல்லவராயர் என்ற பெயரும் வானாதிராயர் போல வேறுதலைவர்களின் பட்டமாகும். பல்லவராயர் என்ற பெயர் இப்பகுதி கள்ளர்,மறவர்,அகம்படியர்,வெள்ளாளர்களுக்கு வழங்கும் பட்டமாகும்.
"சதுராய் பொட்டிட்டு முளை வாட்டி படை தத்தளிக்கும்படி வெட்டியொட்டி எதிர்
மிகுதியாக வந்த தளத்தையும் எல்லை கடக்க விரட்டினான் முப்பாடு தானும் கொடுக்காத
வாள்வீச்சான் முகமை மதுவீடு பாருங்கடி"
முற்பாடு கொடாத வாள்வீச்சான் என்பது விரையாச்சிலை மறவர்களில் ஒருகரையினரின் பட்டமாகும். மேலப்பனையூர் சிவன் கோயிலில் கல்வெட்டு கூறும் குளமங்கல மறவரை குறிக்கும்போது இந்த உத்திரம் குளமங்கலம் மறவரில் அடைக்கலம் காத்தனான வாள்வீசி காட்டினன் தன்மம்" என்று கூறுகின்றது. தற்போது குளமங்கலம் மறவர்களில் வாள்வாசி என்ற பெயருடைய ஒரு கரையினர் உள்ளனர். வாள்வீச்சான் என்ற பட்டம் வாள்வீசி என்ற பட்டத்தின் திரிபு எனலாம்.இதைப்போல் பூவாலைக்குடி கல்வெட்டில் மறவரில் முற்பாடு கொடாதான் சூரிய தேவன் என ஒரு மறவனை குறிக்கின்றது.
இது போக பனையூர் குலமங்கலத்தில் மொத்தம் 18 மறவர்கள் உள்ளனர். அதில் பனையூரில் 1)வைரத்தவன் புறம் 2)சோழயான் கூட்டம் 3)வலஞ்சுவெட்டி பிச்சதேவன் கரை 4) வெள்ளை ஆவுடையாபுறம் 5)ஆதியான் கரை
குளமங்கலத்தில் 1)மழவராயன் புறம் 2)குமுடத்தேவன் புறம்3)கொம்பன் புறம் 4)ராமநாதன் புறம் 5)காலிங்கராயன் கரை 6)வாவாசி கூட்டம் 7)கோடாள் புறம் 8)சின்னழகன் கூட்டம் 9)ராஜராஜ பெரியான் வகை 9)வலங்கி புறம் 11) செல்லத்தேவன் கூட்டம் 12)சோழயான் கரை என பன்னிரண்டு கரை உள்ளது.மொத்தம் 18 கரைகளில் பெருங்கரை 9 ஆக சிறு கரைகள் 18 ஆக கணக்கிட பட்டுள்ளது.
நிலக்கொடயின் பொருட்டு கார்காத்த வெளாளருக்கு மறவர் வழங்கிய செப்பேடுகளில் பனையூர் குலமங்களத்து கரை மறவர்களை குறிக்கும் பொழுது "சேது காவல் பேரரையன் மற மன்னர் வாள்கோட்டை ராயர் சிறுகரை 18க் கும் 9 பெருங்கரைக்கும்" என்ற குறிப்புக்களும் மற்றோரு செப்பேட்டின்ல் "பனையூர் குளமங்கலம் ஊராயமந்த ஊரவர் அனைவர் உள்ளிட்டாரும் கூடி கரப்பிரியல் பட்டயம் வகையாவது வாள்கோட்டைராயன் சேது காவலப் பேரரையர் மறமன்னர் கலங்காத கண்டன் அவராயபுரையர் வைரமதிச்சான் உள்ளிட்டாரும் ஆனைவெட்டி மாலை சூடும் ஐநூற்றுவ பேரரையர் வளஞ்சுவெட்டி உள்ளிட்டாரும் 1 ஊரது புறவில் ஒன்பதிலே ஒரு கரைக்கு ஒன்பது வகைப்பிரியல்" என்று மேலப்பனையூர் ஸ்ரீ கோனட்டு நாயகி அம்மன் கோவில் திருவிழவில் முதல் மண்டகப்படி முதல் குளிபிரை,செம்பூதி,மூலங்குடி ஊர்களின் மறவருக்கு மரியாதை வழங்கும் செய்திகள் அவரவர்க்குரிய செப்பு பட்டயங்கள் மூலம் அறிகிறோம்.
சோழயான் கரை:
சோழயான் என்பது சோழகன் என்று இன்று சோழயான் என வழங்கபடுகின்றது.இது சோழ படைதலைவனின் பட்டம் என விக்கிரமசோழன் உலாவில் மூலம் அறிகின்றோம். இந்த சோழயான் கரையை சார்ந்தவன் பனையூர் சிவன் கோவிலில் கி.பி12. ஆம் நூற்றாண்டில் செய்தமைத்த கல்வெட்டு தனில் தன்னை சோழத்தேவன் என கூறிகொள்கிறான் சோழயா கூட்டத்தில் ஆசிரியன் வீடு,குத்தார வீடு,கோனாட்டன் வீடு,சுந்தாயி வீடு ,குண்டத்தீத்தார் வீடு என்ற பெயர்களில் உடைய குடும்பகளுக்கு கதவங்குடிகண்மாய் கரையிலுள்ள சம்பந்தகருப்பு குலதெய்வமாகும்.
திணியத்தேவன் புறம்:
இவன் திண்மை மிகுந்த மறமன்னாக இருக்கலாம் அதனால் இந்த திண்ணியன் என்ற பெயர் பெற்றவராக இருக்கலாம்.இக்கரையில் சித்திரையன்,கண்டுவான்(கண்டுபோகாதவன்) ஆதாவது எதிரியை கண்டு பின்வாங்கி போகாதவன் குப்பாத்தேவன்,சாத்தப்பன் என்ற குடும்பங்கள் இருக்கின்றது. இது போக "ஆனைவெட்டி மாலைசூடிய ஐநூற்றுபுரையர்" கரையாரைப் பற்றிய மாறவர்மன் குலசேகரனின் கல்வெட்டில்[கி.பி.12-ஆம் நூற்றாண்டு] இவர்களை "விரையாச்சிலை மறவர் நம்பி ஐநூற்றுவ பெரியான்" என கூறுகின்றது.
செல்லத்தேவன் கூட்டம்:
இவர்கள் கோனாட்டில் 3ஆம் கரையை சார்ந்தவர்கள்.இவர்களுக்கு கருப்பர் மற்றும் பட்டனவன் கரையை சார்ந்தவர்கள். சேதுபதிகளில் பலர் செல்லத்தேவன் என இருந்துள்ளனர். இவர்களில் கௌரிப் பாண்டியன்,சேதுராயன்(சேதிராயன்) என்ற பெயர்களில் பலர் இருந்துள்ளனர்.இந்த கௌரியர் பாண்டியர் தொடர்புடையவர்கள். இந்த சேதுராயன் மலையர்க்கு அரசராகி சேதிராயரை குறிக்கும் அல்லது சேதுவேந்தர்களை குறிக்கும் தொடராகும்.
`வீரமே துணையாக` என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியை உடைய இராஜகேசரி வர்மன் திருபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்க சோழ தேவரின் 46 ஆவது ஆட்சியாண்டில் கீழையூர் மலையமான் நானூற்றுவன் மலையமானாகிய இராஜேந்திரசோழ சேதுராயன், இத்திருக்கோயிலில் தட்சிணாமூர்த்தியை எழுந்தருளுவித்து, அத் தேவர்க்கு நித்திய வழிபாட்டிற்கும் விளக்கினுக்கும் வீரசோழனல்லூர் நிலங்களின் வரிகளைக் கொடுத்துள்ளான்.
கொம்பையன் புறம்:
இவர்கள் ரண்டன் கொம்பன் என்னும் யானை(கொம்பன்)யை போன்ற வலிமையை உடையவர்கள் என்பதை குறிக்கும் தொடராகும். இவர்களை கொம்பன் பேரரையர் அல்லது கொம்மாயத்தேவர் என குறிப்பிடுகின்றனர்.
இராமநாதன் கரை:
இவர்கள் 4-ஆம் கரையை சார்ந்தவர்கள் இவர்களுக்கு பட்டவன் மற்றும் கருப்பர் தெய்வமாகும்.கி.பி.1553-ம் ஆண்டு கல்வெட்டில் ஊரணிக்கு எல்லை சொல்லும்போது இராமநாத தேவர் பக்கல் என்று இவரது நிலம் குறிப்பிடபட்டுள்ளது.
காலிங்கராயன் புறம்:
மழவராயன் காலிங்கராயன் என்பது பாண்டிய அரசு அதிகாரிகளின் அரியனைக்கு வழங்கிய பெயர்களாகும்.பிற்கால சோழர் படையில் தளபதியாக காலிங்கராயன் என்று ஒருவன் சுட்டபடுகின்றான்.காலிங்கராயன் பெயர் இவரது மூன்னோர்களில் ஒருவனது பெயராக இருக்கலாம். இவர்களுக்கு குலதெய்வம் ஆலடி-கருப்பர்.
கோடாளி புறம்:
கோடாளி கரை அம்பலங்களின் குடும்பங்களுக்கு கோடாளி வகையில்கோடாளியர் கூட்டம் என்ற பெயர் வழங்குகிறது.செப்பேடு ஒன்று "பரியேறு தேவர் கோடாளி புரையர்" என்று குறிப்பிடுகின்றது.
தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் 72 ஆம்பாட்டு
"படையுன் கொடியுங்க் குடையும் முரசும்
நடைநவில் புரவியும் களிருந்தேரும் தாரும்
முடியும் நேர்வன பிறவும் தெரிவு
கொள் செங்கோல் அரசர்க்குரியன"
மேற்கண்ட 72 ஆம் செய்யுளில் "அரசர்க்குரிய"என்றதொடருக்கு விளக்கம் தரும்பாது முடி,செங்கோல்,வெண்கொற்றக்குடிய,யானை,குதிரை,தேர் முதலியன குறிப்பிடுகிறார்கள்.
அதைப்போல் 84 ஆம் நூற்பாவில் வரும் "வேலும் கழலும் ஆரமும்தேரும் மாவும்" மன்னருக்கு உரிய வில்,வேல்,வீரக்கழல், குதிரை,மாலை,முரசு,யானை, குறிப்பிடுகின்ற கோட்பாடினை ஒட்டியே பனையூர் குலமங்கலம் மறவர்கள் குதிரை ஏறிவந்தனர் எனத்தெரிகின்றது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் வட்டத்தை சார்ந்த இடிந்த சிவன் கோவிலில் அர்த்த மண்டபத்தின் வெளிப்புறசுவரிலிருந்த கிபி.12 அல்லது 13 ஆம் நூற்றாண்டுக்குரிய கல்வெட்டு ஒன்றில் "குளமங்கல மறவரில் பரியேறு சேவகனான" என சொற்றொடர் காட்டப்படுகின்றது. அதன்பின் 15 ஆம் நூற்றாண்டுகலில் புதுக்கோட்டை பகுதியில் நில பிரபுக்களான கார்காத்த வேளாளர்கள் பனையூர் குலமங்கல மறவர்களுக்கு வழங்கிய செப்புபட்டயத்தில் "பனையூர் குலமங்கலத்துக்கு வந்தவன் தெஷினபூமிக்கு கர்த்தராகிய சேதுக்காவலப் பேரரையர் மறமன்னர் வாள்கோட்டையாரின் பரியேறு தேவர் கோடாளிப் புரையர்" என வருகின்றது.இதில் இருந்து இவர்கள் பாடிகாவல் முதல் திருமணம் வரை பரியேறும் சம்பிரதாயம் அடையாளப்படுத்ஹ்டபடுகின்றது.இவர்கள் திருமணத்தின் போது இவர்களை சார்ந்தோர் குதிரையேறுவதை சடங்காக கொண்டுள்ளனர்.
சின்னழக தேவன் புறம் :
இவர்கள் குலமங்கலத்தில் ஒன்பதாவது கரையினர்.இவர்களுக்கு பட்டவன் மற்றும் கருப்பர் தெய்வமாகும்.
ராஜராஜ பெரியான் கரை:
இவர்கள் குலமங்கலத்தில் பத்தாவது கரைக்காரர். இவர்களுக்கு தெய்வம் ஆலடி கருப்பர்.
வலங்கி புறம்:
இவர்கள் 11வது கரையாகும்.வலங்கை-இடங்கை சண்டையில் இவர்கள் வலங்கை பக்கம் நின்ரதால் வலங்கை ஆண்டான் என வழங்கப்படுகின்றது. இது பின்னாளில் குறுகி வலங்கி என மருவி வலங்கியை வலம்புரியான்.இவர்கள் விரையாச்சிலை,செவலூரில் அதிகமாக வாழ்கின்றனர். பனையூர் கல்வெட்டு ஒன்று ஸ்ரீ உத்தமரான வலங்கை ஆண்டான் என ஒரு மறவனை கூறுவது காண்க.
சோழயான் கரை: இவர்கள் 12வது கரையாகும். இவர்கள் குடும்பகளுக்கு கதவங்குடிகண்மாய் கரையிலுள்ள சம்பந்தகருப்பு குலதெய்வமாகும்.
மேற்கண்ட விராச்சிலை வளந்தானைப்பாடு,வகைப்பாட்டு என்ற நாடுப் புறப் பாடல்களால் விரையாச்சிலை மறவர்களின் வீரதீரச் செயல்,குணநலன்,குலத் தொன்மை,பட்டப் பெயர்களின் சிறப்புகள் ஆகியவை இவர்களின் பண்பாட்டை விளங்கும் காலக் கண்ணாடியாகும் எனலாம்.
நன்றி:
கட்டுரை வழங்கியவர்:
உயர்
திரு.அமரர் மாணிக்கம் அவர்கள்
சங்க கால மறவர் கல்
(பொ.ஆ.மு 400 - பொ.ஆ.மு 300)
(பொ.ஆ.மு 400 - பொ.ஆ.மு 300)
தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுப் பெட்டகமாக விளங்கும் செம்மொழி இலக்கியங்கள்
கருத்தாழம் மிக்கவை. அவற்றில் இல்லாத செய்திகளே இல்லை என்று கூறும் அளவிற்கு
பரந்துபட்ட தன்மை உடையவை. ஆயினும் அவற்றில் கூறப்பட்டிருக்கும் ஒரு சில செய்திகளில்
மிகைப்படுத்துதல் அதிகம். அவற்றினைக்கொண்டு அவை எழுதப்பெற்ற காலத்தினை அறிய இயலாது,
இதுபோன்ற எதிர்மறைக் கருத்துக்களும் உண்டு. சங்க கால இலக்கியங்களில் கூறப்படும்
செய்திகள் உண்மையில் நடைப்பெற்றிருக்குமா? அக்காலத்தில் வழக்கத்திலிருந்த
வர¤வடிவங¢கள¢ என்ன? என்பது போன்ற ஐயங்களைத் தகர்த்தெறிந்து சங்க காலத்தைப் படம்
பிடித்துக்காட்டும் அளவிற்கு நமக்கு ஏறத்தாழ நூற்றுக்கணக்கான சங்ககாலப் பழந்தமிழ்
கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. இது போன்ற எழுத்துக்கள் இதுகாறும் பெரும்பாலும் சமணர்
படுக்கைகளிலேயே கிடைத்துவருகின்றன. சமணர்களுக்கு இருக்கை அமைத்துகொடுத்ததைப்
பற்றியே கூறுகின்றன. பல பெயர்சொற்கள் பானை ஓடுகளிலும் காசுகளிலும்
காணக்கிடைக்கின்றன. அவற்றுள் மிகவும் முக்கியமான எழுத்துப்பொறிப்புகளாகக்
கருதத்தக்கவை தமிழர் தம் வீரம் போற்றும் நடுகற் கல்வெட்டுகளாகும்.. இவ்வகைக்
கல்வெட்டுக்கள் இதுகாறும் கிடைத்ததில், தற்பொழுது முதன் முறையாக 2006ஆம் ஆண்டு
புலிமான் கோம்பை (தேனி), தாதப்பட்டி (திண்டுக்கல்) ஆகிய ஊர்களிலிருந்து
கண்டுபிடிக்கப்பெற்றுள்ளன. அண்மையில் 2012 ஜூலை மாதம் தமிழ்ப் பல்கலைக்கழக,
கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையின் ஆய்வு மாணவர்கள் புதுக்கோட்டை மாவட்ட
பொற்பனைக்கோட்டையில் மற்றுமொரு சங்க கால நடுகல்லைக் கண்டுபிடித்துள்ளனர். ஆக
தமிழகத்தில் இதுவரையில் மொத்தம் 5 நடுகற்களே சங்க காலத்தைச் சேர்ந்ததாகக்
கிடைத்துள்ளன.
இந்திய சமுதாயத்தின் பல குழுக்கள் துவக்கத்தில் கால்நடை கவர்தல் மற்றும் மீட்டல் என்ற செயலை அடிப்படையாகக் கொண்ட பண்பாட்டைப் பெற்றுள்ளன. காலம் செல்லச் செல்ல கால்நடைக்காக நடைபெற்ற போர் நிலப்பகுதிக்காக மாற்றம் பெற்றது. இன்றளவும் அந்த மரபு தொடர்வது நாம் அறிந்ததே.

இலக்கியத்தில் நடுகற்கள் பற்றிய செய்திகள் :
சங்க இலக்கியங்களில் எங்கும் நிரவி நிற்பது வீரமும் காதலுமே. தமிழ்ச் சமூகத்தின்
ஆணிவேர் வீரமே. இச்சமுகத்தின் முக்கிய பண்பாட்டு கூறுகளுள் ''ஆநிரை கவர்தல்'' (பசு
கூட்டங்களை கவர்தல்) ''ஆநிரை மீட்டல்'' (எதிரிகளால் கவர்ந்து செல்லப்பட்ட
பசுக்கூட்டங்களை மீட்டல்) இவையும் ஒன்றாகும். ஆநிரை கவர்தலை ''ஆகோள்'' என்ற
சொல்லால் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது (தொல் 20 : 3).
ஊர் கொலை ஆகோள் பூசன் மாற்றே (தொல் 20:3)
விழுத்தொடை மறவர் வில்லிடத்
தொலைந்தோர் எழுத்துடை நடுகல் (ஐங்: 352)
பேயம் முதிர் நடுகல் பெயர் பயம்
படரத்தோன்று குயில் எழுத்து (அகம் :297)
மரம்கோள் உமண் மகன் பெயரும் பருதிப்
புன்தலை சிதைத்த வன்தலை நடுகல்
கண்ணி வாடிய மன்னர் மருங்குல்
கூர் உளி குயின்ற கோடுமாய் எழுத்து (அகம் 343)
இவ்விதம் தன் ஊரைச்சேர்ந்த ஆநிரைகளைக் காக்கும் பொருட்டு உயிர் நீக்கும்
வீரர்களுக்குக் கல் எடுத்து அவர்களது பெயரையும் பெருமையையும் எழுதும் செய்திகளை
இலக்கியங்கள் கூறுகின்றன. 25க்கும் மேற்பட்ட சங்கப் புலவர்கள் இதுபற்றி வியந்து
கூறுகின்றனர். '''பீடும் பெயரும் எழுதி "; ''எழுத்துடை நடுகல்'' போன்ற தொடர்கள்
நடுகற்களில் வீரர்களின் பெயரை மட்டுமன்றி அவர்கள் எதன்பொருட்டு மரணம் எய்தினர்
என்பதையும் பொறித்துள்ளனர் என்பதையே குறிக்கின்றது. மேற்சுட்டிய நடுகற்கள்
கண்டுபிடிக்கும் வரை (2006) இலக்கியங்களில் வரும் ''எழுத்து'' என்ற தொடர்
வரிவடிவத்தைக் குறிப்பிடவில்லை அவை ஓவியமாகவும் இருக்கலாம் என்ற ஐயப்பாடு
தொடர்ந்தது.
நடுகற்களும் குத்துக்கல்லும் (hero stones and a menhir) :
புலிமான் கோம்பையில் கிடைத்துள்ள சங்கத் தமிழ் எழுத்து பொறித்த கல்வெட்டுக்கள்
எழுத்தமைதியுடன் கீழ் தரப்பெற்றுள்ளன
1
|
2
|
3
|
|
|
|
மேற்குறித்த மூன்றும் நடுகல் வகையைச் சார்ந்தவை. ''கல்'' என்ற தொடர்
பெரும்பாலும் இறந்தவருக்காக எடுக்கப்பெறும் நடுகல்லையே குறிக்கும்.
மேற்குறிப்பிட்டுள்ள மூன்று கல்வெட்டுக்களுள் இரண்டு கல்வெட்டுக்கள் பொ.ஆ.மு. 3ஆம்
நூற்றாண்டிற்கு முற்பட்டவை. ''ஆகோள் '' என்ற தொடர் இடம்பெற்றிருக்கும் கல்வெட்டு
(எண்: 3) பொ.ஆ.மு 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என இக்கல்வெட்டுக்களைக்
கண்டுபிடித்து வெளியிட்ட ஆய்வறிஞர்களுள் ஒருவரான கா. ராஜன் அவர்கள்
கருதுகிறார்.
முதல் கல்வெட்டின் முன் பகுதி உடைந்துள்ளது. முதல்வரியில் “..அன் ஊர் அதன்” என்றும் இரண்டாவது வரியில் “..ன் அன் கல்” என்றும் இடம்பெறுகிறது. இந்த ஊரைச்சேர்ந்த இவருக்காக எடுக்கப்பெற்றது என்று கூற வருகிறது. கல்வெட்டு சிதைந்துள்ளதால் ஊரின் முழுப்பெயரையும் வீரரின் முழுப்பெயரையும் பெற இயலவில்லை.
இரண்டாவது கல்வெட்டு ''வேள் ஊர் பதவன் அவ்வன்'' எனக் காணப்பெறுகிறது. வேள் ஊரைச்சேர்ந்த பதவனின் மகனாகிய அவ்வனுக்காக எடுக்கப்பெற்ற நடுகல் இது. இதில் முதலில் “அவ்வன்” என்ற பெயர் எழுதப்பெற்றிருக்கவேண்டும் பின்னரே அவ்வனின் தந்தை பதவனின் பெயரும் ஊரின் பெயரும் சேர்க்கப்பெற்றிருக்கவேண்டும் என்று இது எழுதப்பெற்றிருக்கும் முறையைக் கொண்டு கா. ராஜன் கூறுகிறார்.
மூன்றாவதாகக் குறிப்பிட்டிருக்கும் கல்வெட்டில் ''கல் பேடு அந்தவன் கூடலூர் ஆகோள்'' என்று மூன்று வரியில் எழுத்துப்பொறிப்புகள் இடம்பெறுகின்றன. இக்கல்வெட்டு மிகவும் முக்கியமான கல்வெட்டாகும் . ஆநிரை கவரும் பொழுது இறந்த வீரனுக்காக எடுக்கப்பெற்ற கல் இதுவே. தொல்காப்பியத்தில் இடம்பெற்றிருக்கும் ஆகோள் என்ற சொல்லாட்சி இக்கல்வெட்டிலும் இடம்பெற்றிப்பது குறிப்பிடத்தக்கது. கூடலூரில் நடந்த தொறுபூசலில் உயிர்நீத்த பேடு தீயன் அந்தவனுக்கான எடுக்கப்பெற்ற கல் ஆகும்

குத்துக்கல் :
அடியோன்
பாகற்பாளிய்
|
இக் கல்வெட்டு குத்துக்கல் (menhir) வகையைச் சேர்ந்தது.. திண்டுக்கல் மாவட்டம்
நிலக்கோட்டை வட்டம் தாதப்பட்டியில் கண்டுபிடிக்கப்பெற்றுள்ளது. 180 செ.மீ. உயரமும்
60 செ.மீ அகலமும் கொண்டது.. இதன் தொடக்கப்பகுதி உடைந்துள்ளதால் தொடக்க எழுத்துக்களை
அறியஇயலவில்லை. '' ...ன் அடியோன் பாகற்பாளிய் கல் ''என்று பொறிக்கப்பெற்றுள்ளது.
ஒரு தலைவனின் (தலைவனின் பெயர் உடைந்துள்ளது) அடியோன் ஆகிய பாகல் என்பவர்க்காக
எடுக்கப்பெற்ற கல். என்பதே இதன் பொருள். ''அடி ஓன்'' என்பதை அடிமக்களைக்
குறிக்கலாம் என ''அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்'' என்ற தொல்காப்பிய
நூற்பாகொண்டு (தொல் :25) ஊகிக்கிறார் கா. ராஜன்.
பொற்பனைக்கோட்டை நடுகல் :
4) அங்கபடை தாணைத் தணயன் கணங்
5) குமாரன் கல்
பொற்பனைக்கோட்டையில் கிடைத்த நடுகல் முக்கோண வடிவத்தில் உள்ளது. இதில் 5வரிகள் இடம்பெறுகின்றன. கடைசி இரு வரிகளும் தெளிவாகப் படிக்கும் அளவில் தெளிவாகவுள்ளன. முதல் மூன்று வரிகளைப் படிப்பதில் ஆய்வாளர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. எவ்வாறிருப்பினும் இது நாட்டிற்காக வீர மரணம் எய்திய வீரனுக்காக எடுக்கப்பெற்றது என்பதில் ஐயமில்லை. எழுத்தமைதிக்கொண்டு இதன் காலத்தை பொ.ஆ 3 ஆம் நூற்றாண்டு எனக்கருதலாம். தானைத் தனையன் என்பது கோட்டையை பாதுகாத்த தலைவனைக் குறிக்கும்.

இந்தியாவின் தொன்மையான நடுகற்கள் என்ற சிறப்பினை இவை பெற்றுள்ளன. நமது செவ்வியல்
இலக்கியங்கள் முழுவதும் இந்த எழுத்துக்களிலேயே எழுதப்பெற்றிருக்க வேண்டும் சங்க
காலத்தில் வழக்கத்திலிருந்த எழுத்துக்களிலேயே சங்க கால நடுகற்கள் கிடைத்திருப்பது
குறிப்பிடத்தக்கது. சங்கத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் எழுத்துப்
பொறிக்கப்பெற்ற நடுகற்கள் இவையே. எனவே, இலக்கியங்களில் குறிக்கப்பெறும் நடுகல்
பற்றிய செய்திகள் (எழுத்துநடை நடுகல், கூறுளி குயின்ற கோடுமா எழுத்து ) உண்மையே என
மெய்ப்பித்துள்ளன. இதுவரை அவை ஓவியங்களைக் குறிக்கின்றன. வரி வடிவங்களை அல்ல என்ற
கருத்தும் நிலவியது. இதுநாள் வரை பொ.ஆ.மு 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துப்
பொறிக்கப்பட்ட இருளப்பட்டி நடுகல் கல்வெட்டே காலத்தால் முந்தியது என்ற கூற்று
மாற்றப்பெற்றுள்ளது. நெடுநிலைக் கல்லில் (menhir) எழுத்துக்கள் கிடைத்திருப்பதும்
இதுவே முதல் முறையாகும். காலக்கணிப்பில் இருந்த புரியாத பல புதிர்களுக்கு
விடையளித்துள்ளது. தொன்மைத் தமிழக மக்கள் பரவலான கல்வியறிவுப் பெற்றிருந்தனர்
என்பதை அறிய முடிகிறது. தமிழர் தம் பாரம்பரியத்தை பறைசாற்றும் இந்நடுகற்கள் இந்திய
வரலாற்றின் மைல்கற்கள் என்றால் அது மிகையன்று.
மதுரைக் காஞ்சி-ன்னா என்ன?
காஞ்சிப் போன மதுரையா? :)
இல்லை மதுரையும் காஞ்சிபுரமுமா?
இரண்டுமே இல்லை! காஞ்சி என்பது காஞ்சித் திணை! வஞ்சி x காஞ்சி, உழிஞை x நொச்சி-ன்னு எல்லாம் சின்ன வயசில் உருப்போட்டு இருப்பீங்களே! :)
இவையெல்லாம் போர்த் திணைகள்! வஞ்சிப்பூ சூடி வரும் எதிரிப் படைகளை, நாட்டின் எல்லையில் தடுத்து நிறுத்தி, அந்த நாட்டு வீரர்கள் காஞ்சிப்பூ சூடி, எதிர்ப்பது!
ஆனால் இந்த நூலுக்கு அதுவும் பொருளில்லை! தொல்காப்பியர் குறிப்பிடும் காஞ்சி-ப்படி பொருள் அமைகிறது! அதாவது "நிலையாமை"யைச் சொல்ல வந்த திணை!
போர் என்னும் மறக் கூறாக இல்லாமல், போரில் செல்வம்/இளமை என்று ஒரே நேரத்தில் சாய்ந்துவிடும் "நிலையாமை" பற்றிச் சொல்ல வந்ததால் காஞ்சி!
அப்பறம் என்ன மதுரைக் காஞ்சி? மதுரையில் பாடப்பட்ட "நிலையாமைத் தத்துவக் காஞ்சி"!
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரையில் பாடியது!
இது தான் பத்துப் பாட்டிலேயே நீளமான பாடல்! :)
இதில், மதுரையின் பல சிறப்புகளையும், விழாக்களையும் சொல்லும் கவிஞர்,
பெருமாளுக்கு உரிய திருவோண விழாவை,
பண்டைய தமிழ் மக்களும், மதுரை மறவர்களும் கொண்டாடுவது பற்றி விரிவாக எடுத்துச் சொல்கிறார்!
(மாயோன் மேய ஓண நன்னாள் - மாயோனுக்குரிய திரு ஓண விழா பற்றிய குறிப்புக்கள்)
பாடியவர்: மாங்குடி மருதனார்
பாடப்பட்டவன்: தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன்
திணை: காஞ்சி
பாவகை: ஆசிரியப்பா
மொத்த அடிகள்: 782
என்று ஆங்கில/கிரேக்க/லத்தீனிலும் குறிக்கப்படுவது இஃதே!
பார்க்க, சிறகுகள் விரித்துப் பறக்கும் பருந்து/கருடன் போல் இருக்கும்!
மிகவும் ஒளி பொருந்திய நட்சத்திர மண்டலம்! பல மண்டலங்களைத் தன்னுள் அடக்கியதும் கூட!
பண்டைத் தமிழர்கள் தங்கள் தெய்வமான மாயோனுக்குரிய விழாவினை, ஓணத்தில் தான் கொண்டாடினர்!
இன்றும் திராவிடத் தோன்றல்களுள் ஒன்றான மலையாளத்திலும் ஓணம் அவர்களுக்கே உரித்தான பெரும் பண்டிகை!
பத்து நாட்கள் உள்ள ஓண விழா, அத்தத்தின் பத்தாம் நாள் என்னும்படிக்கு, அத்தம் என்ற விண்மீனில் துவங்கி, ஓணத்தில் நிறைவு பெறும்! பூக்கோலங்களும், ஆடல்-பாடல் துள்ளல்களும், யானைத் துள்ளல்களும், ஒளி விளக்குகளும், சுவை உணவுகளும் - எல்லாம் உண்டு!
பாடலுக்கு வருவோமா?
ஓங்கு திரை வியன் பரப்பின்
ஒலி முந்நீர் வரம் பாகத்
தேன் தூங்கும் உயர் சிமைய
மலை நாறிய வியன் ஞாலத்து
வல மாதிரத்தான் வளி கொட்ப....5
...
...
...மறவர்கள் ஓண விழாவில் மகிழ்ந்து திரிதல்)
கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந் தார்
மாயோன் மேய ஓண நன்னாட்...591
கோணந் தின்ற வடுவாழ் முகத்த
சாணந் தின்ற சமந்தாங்கு தடக்கை
மறங்கொள் சேரி மாறுபொரு செருவில்(அவுணரைக் கடந்து வெற்றி கொண்ட மாயோன், பொன்மாலை அணிந்துள்ள அவன் தோன்றிய ஓண நன்னாளில்...ஊர் விழா எடுக்க,
வடுக்கள் உள்ள முகம் கொண்ட மறவர்கள், சேரியில் வீர விளையாட்டுகளில் ஈடுபட)
மாறா துற்ற வடுப்படு நெற்றிச்
சுரும்பார் கண்ணிப் பெரும்புகல் மறவர்
கடுங்களிறு ஓட்டலிற் காணுநர் இட்ட
நெடுங்கரைக் காழக நிலம்பரல் உறுப்பக்
(வளைந்த பூக்கள் கொண்ட மாலைகள் தரித்து, மறக் கூட்டம், களிறு ஓட்டம் முதலியன செய்ய...யானைக்கு முன்னே ஓடிய வீரர்கள்....
வேகமாக ஓடும் யானையை அடக்க, நெருஞ்சி முள் போல் கொத்துள்ள கப்பணம் என்னும் கருவியை, காழகம் என்னும் நீல ஆடையில் சுற்றி, நிலத்தில் பரவ, கால் பொதுக்கி, யானைகள் ஒரே இடத்தில் நிற்கின்றன...
அப்படியே கேரள ஓணம் திருவிழாக் காட்சி போலவே இருக்கு-ல்ல?)
கணவர் உவப்பப் புதல்வர் பயந்து
பணைத்தேந் திளமுலை அமுதம் ஊறப்
புலவுப்புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு
வள மனை மகளிர் குளநீர் அயர
திவவு மெய்ந் நிறுத்துச் செவ்வழி பண்ணி,
குரல் புணர் நல் யாழ் முழவோடு ஒன்றி, 605
கணவருடனும், புதல்வர்களுடனும், சுற்றத்தோடும் குழுமி, செவ்வழிப் பண்ணில் பாடி, யாழ்-முழவு போன்ற இசைக் கருவிகள் வாசித்து...குரவைக் கூத்து ஆடி....
நுண் நீர் ஆகுளி இரட்ட, பலவுடன்,
ஒண் சுடர் விளக்கம் முந்துற, மடையொடு,
நல் மா மயிலின் மென்மெல இயலி,
கடுஞ்சூல் மகளிர் பேணி, கைதொழுது,
பெருந் தோள் சாலினி மடுப்ப
மயில் போல் ஒன்று திரண்டு, மகளிர் தேவராட்டியுடன் நின்று, தெய்வத்திற்கு மடை கொடுக்க...குலவை இட்டு, கை தொழுது, சாலினின் பெண்கள் அருள் வந்து ஆட...
....
....
இப்படி விழா இரவின் பல யாமங்கள் நீடிக்கிறது! சாலினி என்னும் அருள் வந்து ஆடலால், முருகனுக்கும் வேலன் வெறியாட்டு நடக்கிறது! இரவு முழுதும் விழா ஒலி பரவ.....மன்பொலந் தார் மார்பின், நெடியோன் உம்பல்! <புணர் கூட்டு உண்ட புகழ் சால் சிறப்பின், நிலம் தரு திருவின் நெடியோன் போல, வியப்பும், சால்பும், செம்மை சான்றோர் பலர் வாய்ப் புகர் அறு சிறப்பின் தோன்றி,
எல்லா நிலங்களையும் தன்னிடத்தே அளந்த திருவுடைய மாயோனைப் போல...
சிறப்புடன் தோன்றுவாயாக என்று பாண்டியனை வாழ்த்துகிறார்!
....
....
மாயோனுக்குரிய திரு ஓண நன்னாளைச் சுற்றத்தோடு கொண்டாடும் காட்சி காட்டப்படுகிறது!
பின்னாளில் இம்மரபையே ஆழ்வார்களும் சொல்லப் போந்தனர். திரு ஓணத்தான் உலகாளும் என்பார்களே என்பது பெரியாழ்வார் திருமொழி!
ஆவணி மாதத்தில் ஓணம் விண்மீனில் (Shravanam Star in Shravanam Month) வரும் இவ்விழா தான், பின்னால் வரும் மற்ற விழாக்களுக்கு எல்லாம் துவக்க விழா!
கேரளத்தில் இன்றும் வீடுகளில் சிறப்பாகக் கொண்டாடும் இந்த விழா, தமிழகத்தில் ஆலயங்கள் அளவில் மட்டும் நின்று விட்டது!
திருமாலின்/மாயோனின் தோற்றங்கள் பலவும் இந்தத் திருவோண/கருட/பருந்து விண்-மீன் நாளிலே தான் நிகழ்வதாகவே தொன்மங்களும் கதைகளும் பேசுகின்றன!
மாவலியின் பொருட்டும், உலகின் பொருட்டும் மூன்றடி மண் இரந்து பெற்ற இறைவன், இந்தத் திருவோண விண்மீனில் தான் தோன்றினான்! இதே விண்மீனில் தான் அத்தனை உலகையும் உயிரையும் அளந்தான்! திருவடிகளால் அத்தனை படைப்புகளும் தோய்க்கப் பெற்ற நாளும் இதுவே!
கீழுலகங்களுக்கு மட்டும் மாவலியைத் தலைவனாக்கி, அதிகாரப் பரவல் செய்து முடித்து, இருப்பினும் ஆசை தீராத மாவலிக்கு, அடியவன் என்பதால்...
அடுத்த சுழற்சியில், அமரர் தலைவன் பதவியும் அளித்து இன்புறச் செய்தான்! இன்றும் ஆண்டுக்கொரு முறை மாவலி, தன் பழைய நாட்டினையும் மக்களையும், இதே ஓணத்தன்றே பார்க்க வருவதாக நாட்டார் நம்பிக்கை! அதன் பொருட்டே மலையாள ஓணம்!
தூக்குத்துரை
வித்தியாசமானது அந்த ஜமீன். வெறுமனே சுகபோகங்களிலேயே மற்ற ஜமீன்களைப் போல மூழ்கிக் கிடக்கவில்லை.
‘தன்னை நம்பியவர்களைத் தனது தலையைக் கொடுத்தாவது காப்பாற்றியாக வேண்டும்’ என்பதில் அவ்வளவு தீவிரம்!
அந்த நம்பிக்கைக்கேற்றபடியே வாழ்ந்தும் காட்டியிருக்கிறது ‘சிங்கம்பட்டி ஜமீன்.’
பெரியசாமித் தேவர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிங்கம்பட்டியின் 24-வது தலை முறையின் ஜமீன்தார். அவருடைய நண்பர் ராமசாமித் தேவர். அந்தச் சமயத்தில் அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சொல்லி மதுரை சிறையில் அடைத்திருந்தார்கள். தூக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டாகி விட்டது. தர்மசங்கடமான நிலையில் நண்பரான சிங்கம்பட்டி ஜமீன்தாருக்குச் சிறையிலிருந்தபடியே கடிதம் எழுதியிருந்தார்.
நம்பி எழுதியிருக்கிற நண்பரைக் கைவிட முடியுமா? நேரே மதுரைக்குப் போனார் ஜமீன். ஜெயிலுக்குள் எப்படி நுழைவது? மதுரை ஜெயிலரைப் பழக்கம் பிடித்தார். அவர் மூலம் ஜெயிலுக்குள் போனார். கைதிகளுக்கு உதவினார். அங்கே சந்தடி சாக்கில் தனது நண்பர் ராமசாமித் தேவரையும் பார்த்தார். நம்பிக்கையூட்டினார்.
ஜெயிலரைப் பலவழிகளில் வசப்படுத்தி எப்படியாவது ராமசாமித் தேவரை வெளியே கொண்டு போய்விட முயற்சி பண்ணினார். ஜமீன்தாரின் நோக்கம் தெரிந்ததும் கோபமாகி விட்டார் ஜெயிலர். பார்த்தார் ஜமீன். ஒரே போடு. சாய்ந்து விட்டார் ஜெயிலர்.
அவருடைய உடம்பைக் கொண்டு போய்ப் பத்திரமாக ஆற்று மணலில் புதைத்தார். அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஜெயிலரின் நண்பராகவே ஜெயிலுக்குள் போய் ராமசாமித் தேவரை தனியே பேச அழைத்துக் கடத்திக் கொண்டு வந்து விடுகிறார்.
நேரே இருவரும் சிங்கம்பட்டி ஜமீனுக்குப் போய் விடுகிறார்கள். ‘இவ்வளவு கஷ்டப்பட்டுத் தன்னைக் காப்பாற்றியிருக்கிறாரே’ என்று பெருமிதம் தாளவில்லை ராமசாமித் தேவருக்கு.
அந்தச் சந்தோஷமெல்லாம் சில நாட்களுக்குத்தான். ஆற்று மணலில் புதைக்கப்பட்டிருந்த ஜெயிலரின் சடலம் வெளியே தெரியவர, அடையாளம் காட்டிவிட்டது அங்கிருந்த குதிரையின் சேனத்தில் இருந்த ஜமீன் அடையாள முத்திரை.
சிங்கம்பட்டி ஜமீன்தான் கொலை செய்திருக்கிறார் என்று ஆதாரங்கள் தெளிவானதும் கைதாகிறார். வழக்கு விசாரணை. பிறகு ஜமீனுக்குத் தூக்குத் தண்டனை – அதிலும் பொது இடத்தில்.
‘ஜமீன்தாரைத் தூக்கில் போடுகிறார்கள்’ என்று ஒரே பேச்சு. எதிரே தூக்குமரம். அதில் சுருக்குக் கயிறு. சுற்றிலும் தன்னுடைய ஆளுகைக்குட்பட்ட மக்கள்.
கூட்டத்தை விலக்கிவிட்டு, தூக்குமரத்தை நெருங்கினார் ஜமீன். கழுத்தில் சுருக்கு விழுகிறது. பகல் நேரத்தில் யாரிடமும் கெஞ்சிக் கதறாமல் கம்பீரத்துடனேயே உயிர் பிரிகிறது.
117 வருஷங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது.
திருமணம் செய்து கொள்ளாமலேயே வைராக்கியமும், வீர உணர்வும், நட்பை மதிக்கிற குணமும் கொண்டிருந்த ஜமீன்தார் இப்போது சிலையாக அதே இறுக்கத்துடன் கும்பிட்டபடி நிற்கிறார். சிங்கம்பட்டியிலுள்ள சுப்பிரமணியசாமி கோயிலிலேயே ஒரு பக்கத்தில் ஜமீனின் சிலை. ‘தூக்குத்துரை’ என்றே சொல்கிறார்கள் சிங்கம்பட்டி மக்கள். இப்போதும் அவரை வழிபடுகிறார்கள்.
ஜமீனிலேயே அடுத்து எட்டு தலைமுறைகள் கடந்துவிட்டன. இப்போது சிங்கம்பட்டி ஜமீனாக இருக்கிறார் முருகதாஸ் தீர்த்தபதி. தூக்குத்துரை தூக்கிலிடப்பட்ட இடத்தை இன்னும் நினைவுடன் கொண்டாடுகிறார்கள் ஊர் மக்கள்.
நான் மலடி என எல்லோரும் ஒதுக்குகின்றனரே! நமக்கு கொள்ளி வைக்க மகன் வேண்டாமோ? இல்லை என்றால் உலகோர் பழிப்பார்களே, 12 வயதிலே எனக்கு மாலையிட்டீர். இப்போது வயது 32 கிறதே, என் அரசே என் வார்த்தைகளைக் கேளும். நான் குழந்தைகளுக்காக தவம் செய்யப் போகிறேன் என்றாள்.
அவள் பேசுவதைக் கேட்ட மறவன் கவலைப்படாதே.இந்த நகரத்திலிருந்து குழந்தை ஒன்றை எடுத்து உனக்கு வளர்க்கத் தருகிறேன் என்றான்.
ஆனால் அவளுக்கு அதில் விருப்பம் இல்லை. சொந்த ரத்தம் போலாகுமா பிறர் ரத்தம்? எடுத்து வளர்த்த குழந்தை ஓடிவிடும். வேண்டாம். நான் இறைவனுக்கு நேர்ச்சை செய்து பிள்ளையை வாங்கிக்கொள்வேன். என் தோழிகளுடன் செல்வேன் என்றாள்.
கருமறத்தி தன் தோழிகள் ஐந்து பேருடன் பலவகைப் பொருள்களுடன் புறப்பட்டாள். தொலை வழி நடந்தாள். வழியில் உள்ள தெய்வங்களுக்கெல்லாம் நேர்ந்தாள். எல்லா தெய்வத்தினிடமும் வேண்டினாள். தெய்வங்கள் அவள் குரலுக்குச் செவி சாய்க்கவில்லை. பலன் கிடைக்கவில்லை. அவள் பல ஊர்களைக் கடந்து சென்றாள்.
அவள் திருவனந்தபுரம் காட்டுவழிச் சென்றபோது அச்சுதனார் குறத்தி வேடம் கொண்டு வந்தார். கருமறத்தியைக் கண்டார். நீ எந்த ஊர் மகளே, நீ வந்த காரணத்தைக் கூறுகிறேன். அடக்காயும் வெத்திலையும் தா வாடி மகளே என்றாள்.
கருமறத்தி நெல்லை அளந்து அவள் முன்னே வைத்தாள். குறத்தி நெல்லைக் குவித்து வைத்துவிட்டு பார்த்தாள். பெண்ணே உனக்குப் பல நாட்களாகக் குழந்தை இல்லை. போகாத குளமெல்லாம் குளித்தாய். கோவிலகள் பல சென்றாய். பின்னர் குழந்தைச் செல்வம் இல்லை. உறியில் தயிர் இருக்கும்போது வெண்ணைய்க்கு அலைந்தால் யார் மகளே தருவார்? பெண்ணே உன் குடும்ப தெய்வம் ஒன்று போகமாய் நிற்கிறது. கோவிலின் சுவர்கள் பாழடைந்து கிடக்கிறது. அதற்குக் குருபூஜை காத்து கோவிலைச் செப்பனிடு. உனக்கு ண் மகவு பிறக்கும். அதற்கு மேல் குழந்தை இல்லை. போய் வருவாய் கருமறத்தியே என்றாள்.
கருமறத்திக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. குறத்திக்கு பொன்னாபரணம் ஒன்று கொடுத்தார். அதைக் குறத்தி வாங்கவில்லை. மறத்தியை அனுப்பி வைத்தாள் குறத்தி.
மறத்தி திருவட்டாறு மலைவிட்டு இறங்கி தோவாளை வழி பணகுடி. வள்ளியூர் வந்து தன் வீட்டிற்கு வந்தாள். குடும்ப தெய்வம் வாழ்ந்த கோவிலைச் செப்பனிட்டாள். தெய்வத்திற்கும் குலபூசை செய்தாள். உடனே தன் மடியில் பாம்பு வந்து படம் எடுத்து டுவதுபோல் கனவு கண்டாள். பொன் எழுத்தாணியும் புத்தகமும் கண்டாள். கணவனிடம் தான் கண்ட கனவைச் சொன்னாள். கணவன் அதனால் மிக மகிழ்ந்தான். கனவு கண்ட சிலநாளில் கர்ப்பமுற்றாள்.
கருமறத்தியின் தனங்கள் கறுத்தன. கர்ப்பமுற்றதற்கு அடையாளங்கள் தோன்றின. மாதம் பத்தாகியது. மருத்துவச்சியை அழைத்துவரச் சொன்னான் மறவன். தூதன் ஓட்டமாக ஓடிச் சென்றான். மருத்துவச்சியின் வீட்டிற்கு சென்று அழைத்தான். அவள் என்னடா மணிக்காஞ்சி மறத்திற்குத்தானே மருத்துவம்? வரமாட்டேன் போ. அவள் எனக்கு எதைத் தந்துவிட்டாள் வருவதற்கு என்றாள்.
தூதன் விடவில்லை. அவள் காலில் விழுந்தான். கட்டிப் பொன்னைத் தருகிறேன் என்றான். மருத்துவச்சி அதற்கு இசைந்து வழி நடந்தாள். மருத்துவச்சி வந்ததும் குழந்தை பிறந்தது. கன்னிக்குடம் உடைந்தது. கொப்புளும் அறுத்தாள். பிறந்த ண் குழந்தைக்கு வன்னியப்பனின் பெயரை வன்னியடி மறவன் என விட்டனர்.
குழந்தைக்கு நாள் கோள் பார்த்தவர்கள் இக்குழந்தை பிறந்த நேரம் சரியில்லை. இவனுக்கு 22ம் வயதில் இவந்தந்தை மாடப்பதேவன் மறவர்களால் வெட்டப்படுவான் என்றனர். மறத்திக்கு அதனால் துன்பம்தான். என்றாலும் மகனுக்கு னை ஏற்றம் குதிரை ஏற்றம் போன்றவற்றைக் கற்பித்தாள். கலைகள் பல படித்தான் மகன்.
வன்னியடி மறவன் வளர்ந்தான். சோதிடன் கூறியபடி ஊற்றுமலை மறவர்கள் கூடி ஒரு சண்டையில் மாடப்பனை வெட்டிக் கொன்றனர். வன்னியடி மறவன் தாயின் பாதுகாப்பில் வளர்ந்தான். தலால் அவனுக்கு போதிய உரம் இல்லாமல் இருந்தது. அவன் உரிய வயது வந்ததும் ஊர்த்தேவனான பொன் பாண்டித் தேவனுடன் கச்சை கட்டிக்கொண்டு களவு செய்யப் புறப்பட்டான்.
போனவிடத்தில் அவன் ஒரு செட்டியைக் கண்டான். அவனிடம் கள்ளரின் குறியீட்டு மொழியில் பஞ்சுக்குப் புண்ணுக் கொடுப்பீரோ ?" எனக் கேட்டான். வலிமையானவானாக இருந்த செட்டி வன்னியடி மறவனின் செவிட்டில் ஓங்கி அடித்தான். எதிராபாராத அடி பொறுக்காத வன்னியடி மறவன் அப்படியே வீழ்ந்தான். செட்டி தப்பிச்சென்றுவிட்டான். மற்ற மறவர்கள் அதைக்கண்டு அருவருப்பும் கோபமும் கொண்டார்கள். இவன் என்ன மறவன்! அடி தாங்காதவன்! இவனை இப்போதே வெட்டிவிடுங்கள் ! என்றனர்.
மறவர்கள் வன்னியடி மறவனை சூழ்ந்துகொண்டு வெட்டிவிட்டனர். இறந்துபோன வன்னியடி மறவன் யுள் அறமல் இறந்தமையால்ற்றாமல் பேயாகி அலைந்தான். நீலராசனிடம் வரம் வேண்டி, இசக்கி அம்மை அருள் கொடுக்க வடக்கு சூரன்குடியில் கோயில் கொண்டான்.
வன்னிக்களந்தை என்னும் ஊரில் மறவர் சாதியினர் நிறையபேர் இருந்தனர். அவர்களில் பணக்கார ஜமீன் குடும்பத்தைச் சார்ந்த அம்மையடி என்ற பெண் இருந்தாள். அவளுக்கு திருமணமாகி பல நாட்கள் குழந்தையில்லாமல் இருந்தது. மலடி என்ற பழி ஏற்பட்டதனால் மனம் நொந்த அவள் கோவில்கள் பல சென்று நேர்ந்தாள். குழந்தைக்காக தவமிருந்தாள். கடைசியில் சங்கரநயினார் கோவிலுக்குச் சென்று வேண்டித் தவம் இருந்தாள். அக்கோவிலிலேயே படுத்துக்கொண்டாள்.
அம்மையடி மறத்தி உறங்கிக்கொண்டிருந்தபோது ஒரு கனவு கண்டாள். கனவில் தென்கரை சாஸ்தாவின் துணைச்சாமியான தளவாய் மாடன் கோடங்கி அடிப்பவராக வேடம் தாங்கி வந்தார். அவர் அம்மையிடம் பெண்ணே நம்பி ற்றங்கரையில் ஒரு சாஸ்தான் கோவில் இருக்கிறது. அங்கே வந்து தவமிருப்பாய். உனக்கு எட்டுக் குழந்தைகள் பிறக்க சாஸ்தா வரம் கொடுப்பார். அந்தப் பிள்ளைகளை உரிய காலத்தில் சாஸ்தாவின் கோவிலுக்குக் காவு கொடுக்கவேண்டும் என்றார்
மறத்தி கனவில் கண்ட நிகழ்ச்சியை எண்ணி வியபப்டைந்தாள். தளவாய் சொன்னபடி தென்கரைக்கு வந்தாள். நாட்கள் 41 னதும் அவள் சாஸ்தாவிடம் மேலும் கெஞ்சி வேண்டினாள். அப்போது அவளுடன் இருந்த அவளது கணவன் பெண்ணே என் நிலபுலன்களைக் கவனிக்கவேண்டும். பயிராக்கவேண்டிய காலம் வந்துவிட்டது . இப்படியே எத்தனைநாள் தவ்மிருப்பது? நான் ஊருக்குப் போகிறேன் என்று கூறி அவளிடம் விடை பெற்றுக்கொண்டு தன் ஊருக்குச் சென்றான். அவள் தொடர்ந்து தவம் செய்து வந்தாள்.
அம்மையடி மறத்தியும தென்கரையில் ஒரு இடத்தை வெட்டிச் சீர்திருத்தி வீடுகட்டி வாழ்ந்தனர். அவர்களுக்கு அடுக்கடுக்காக ஏழு ண்குழந்தைகளும் ஒரு பெண்ணும் பிறந்தனர். ண்மக்களுக்கு சின்னத்தம்பி வன்னியன், சிதம்பர வன்னியன், முத்துமாலை வன்னியன், ண்டுகொண்ட வன்னின். அழகு விலங்காடி வன்னியன், தென்கரை வன்னியன், வடகரை வன்னியன் எனப் பெயரிட்டாள். பெண்மகள் வன்னிச்சி எனப் பெயர் பெற்றாள்.
அம்மையடி மறத்தித் தன் குழந்தைகளை தன் மறக்குல வழக்கப்படி வளர்த்தாள். அவர்களும் நல்ல உடல்வாகு கொண்டவர்களாய் விளங்கினர். வேல்கம்பு, சிலம்பு போன்ற பயிற்சிகள் பெற்றனர். அவர்களுக்குத் திருமணப் பருவம் வந்தது. அம்மையடி தன் மக்களுக்குத் திருமணம் செய்ய விரும்பினாள். தன் குலத்தில் பிறந்த ஒன்றுவிட்ட சகோதரர்களிடம் பெண் கேட்டாள். அவர்களின் மாமன்மார்கள் நம் குல வழக்கப்படி இந்த ஏழு பேரும் திருட்டுத் தொழிலில் திறம் காட்டிச் சாதனை செய்தால் பெண்ணைத் தருகிறோம் என வாக்களித்தனர்.
அம்மையடியாள் தன் மக்களிடம் மாமன்மார்களின் வேண்டுகோளைத் தெரிவித்தாள். வன்னியர்கள் குலவழக்கப்படி களவுத்தொழில் செய்யத் தயாராயினர். திருச்செந்தூர் கோவில் கருவறையில் அளவு கடந்த பொற்குவியல் இருப்பதைக் கேள்விப்பட்டனர். னால் அங்கே கடுங்காவல் இருப்பதை அறிந்து அங்கே செல்லவேண்டாம் என முடிவு கட்டினர். இப்படி இருக்கும்போது மூத்த வன்னியனின் கனவில் தளவாய் சுவாமி சோதிடர் உருவில் வந்தார். தென்கரை அருகே வெங்கலராசன் கோட்டை ஒன்று உள்ளது. அங்கே சென்று திருடுங்கள் என்றார்.
மூத்த வன்னியன் தம்பிகளிடம் தான் கண்ட கனவைப் பற்றிக் கூறினான். அவர்களும் வெங்கலராசன் கோட்டைக்குச் செல்வோம் என்றனர். அடுத்தநாள் மாலை நேரத்தில் தென்கரைக்கு வந்தனர் சகோதரர்கள். அவர்களில் ஒருவன் இப்போது நல்ல வெளிச்சம் இருக்கிறது. இப்போதே நாம் வெங்கலராசன் கோட்டைக்குச் செல்லவேண்டாம். அதுவரை இங்கே கிளியாந்தட்டு விளையாடுவோம் என்றான்.
அவர்கள் நம்பியாற்று மணல்வெளியில் கிளியாந்தட்டு விளையாட ரம்பித்தபோது மாடு மேய்க்கும் சிறுவனைப்போல் வேடமிட்டு தளவாய்சாமி வந்தார். அவர் வன்னியர்களிடம் மணலில் விளையாடினால் சரியாக இருக்காது. நம்பியாற்றின் நடுவே ஒரு பாறை இருக்கிறது. அந்தப் பெரிய பாறை மீது விளையாடுவோம் என்றார்.
வன்னியர்கள் தளவாய் சுவாமியாக வேடமிட்டிருந்த மாடுமேய்க்கும் சிறுவன் சொன்னபடி நம்பிப்பாறைக்குச் சென்றனர். அங்கே அவர்கள விளையாட ரம்பித்தனர். நேரம் போவது தெரியாமல் விளையாடினர். வானத்து நட்சத்திரங்களின் போக்கை பார்த்த மூத்த அண்ணன் நேரம் கடந்துவிட்டது. இனி வெங்கலராசன் கோட்டைக்குப் போனால் நேரம் விடிந்துவிடும். என்ன செய்வது ? எனக் கேட்டான்.
உடனே மாடு மேய்க்கும் சிறுவன் நீங்கள் சாமர்த்தியமான சிறுவர்களாகத் தோன்றவில்லையே. தென்கரை மகாராசன் கோவிலிலேயே திருடலாமே. அங்கே அளவு கடந்த பொன் இருக்கிறது. இதற்கு வெகுநேரம் நடக்கவும் வேண்டாம் என்றான்.
சகோதரர்களும் தென்கரை சாஸ்தா கோவிலில் திருட முடிவு செய்தனர். மாட்டுக்கார சிறுவன் கோவிலின் கருவறை இருக்கும் இடத்தை அடையாளம் சொன்னான். அவர்களிடம் மேலைவாசல் வழியாகச் செல்லுங்கள் அதுவே நல்ல வழி ! என்றும் கூறினான். பின்னர் நான் என் வழி செல்லுகிறேன். நீங்கள் உங்கள் தொழிலைச் செய்யுங்கள் என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டான்.
ஏழு சகோதரர்களும் தென்கரை சாஸ்தா கோவிலின் மேற்குபக்கம் வந்து சுவரில் ஏறினர். மேல் சுவரின் ஒரு பகுதியை இடித்தனர். இந்த நேரத்தில் தயவாய் சாமி ஒரு சாதாரண மனிதனாக அந்த ஊர் அரசனிடம் சென்றார். தென்கரை சாஸ்தா கோவிலில் 7 பேர்கள் திருடிக்கொண்டிருக்கின்றனர். என்னுடன் கொஞ்சம் குதிரை வீரர்களை அனுப்புங்கள். அவர்களைப் பிடித்துவிடலாம் என்றார்.
ராஜா அந்த மனிதருடன் குதிரை வீரர்களை அனுப்பினார். தளவாய்சாமி தென்கரைக்கு வரும்போது வன்னியர்கள் கோவிலில் திருடிவிட்டு வெளியே வந்துகொண்டிருந்தனர். தூரத்தில் குதிரை வீரர்கள் வருவதைக் கண்டு கையிலுள்ள திருட்டுப் பொருட்களைக் கோவிலின் பக்கத்திலிந்த கிணற்றில் போட்டுவிட்டனர். னால் அதற்குள் குதிரைவீரர்கள் அவர்கள் அருகே வந்துவிட்டனர். வன்னியர்கள் ஓட்டமாய் ஓடினர். தளவாய்சாமி அவர்களைக் குருடராகும்படிச் செய்தார். அவர்களும் குருடராயினர்.
எழுவரும் கண் தெரியாமல் தட்டுத்தடுமாறித் தவித்தனர். குதிரை வீரர்கள் அவர்கள் ஏழு பேரையும் பிடித்துக் கயிற்றால் கட்டினர். கோயிலருகே இருந்த புளியமரத்தில் கட்டி வைத்தனர்.
திருடர்களின் கழுத்தில் ஊமத்தை பூமாலை போட்டனர். வில்லன்புதூர், கண்ணன்புதூர் என்னும் ஊர்களிலிருந்து வந்த வீரர்கள் வன்னியர்களை வாளால் வெட்டினர். இந்தச் சமயத்தில் வன்னியர்களின் சகோதரி வன்னிச்சி அண்ணன்மார்கள் கேட்டுக்கொண்டபடி பலவகைக் கறிகளுடன் அடுக்குப் பானைகளில் சாதம் கொண்டுவந்தாள். அண்ணன்மார்கள் அவளைத் தென்கரை நம்பியாற்றங்கரையில் கோழி கூவும்போது காத்திருக்கச் சொல்லியிருந்தார்கள். அதன்படி அவள் அங்கே வந்தாள். அவள் வரும்போது தீய சகுனங்களைக் கண்டு திடுக்கிட்டாள். நடக்கக்கூடாதது நடந்துவிட்டது என்பதை உணர்ந்தாள்.
தென்கரை நம்பியாற்றங்கரையில் அண்ணன்மார்கள் வெட்டப்பட்டுக் கிடப்பதைக் கண்டாள். தரையில் விழுந்து அழுதாள். அரற்றினாள். தலைகளை அதனதன் உடலில் பொருத்தினாள். அவர்களின் வாயில் அரிசியைப் போட்டாள். தன் நாக்கைப் பிடுங்கி அவர்களின் முன்னே போட்டாள். இந்தப் பெரிய ஊர் சிற்றூர் கட்டும். இங்கு ஏழு வீடுகளுக்கு மேல் இருக்கக்கூடாது. இங்கே கோழி கூவக்கூடாது. நாய் குரைக்கக்கூடாது என்று சாபம் இட்டாள். அவளும் இறந்துபோனாள்.
ஏழு மக்களும் வெட்டுப்பட்டு இறந்த செய்தியை அம்மையடி மறத்தி கேள்விப்பட்டாள். ஓடோடி வந்தாள். எல்லா மக்களும் செத்துக் கிடக்கும் காட்சியைக் கண்டாள். அப்போது அவளுக்குப் பழைய நினைவு வந்தது. தென்கரை மகராஜனுக்குக் காவலாக ஏழு பேரும் இருப்பார்கள் என்று கனவில் தான் கண்டதை நினைத்தாள். அவளும் நாக்கைப் பிடுங்கி உயிர் விட்டாள்.
இறந்துபோன ஒன்பது பேரும் சாந்தி அடையாமல் கைலாயம் சென்றனர். அவர்களுக்குச் சிவன் வரம் கொடுத்தார். வன்னியர்களில் கடைசித் தம்பியான வன்னிராசன் தெய்வமாகத் தென்கரையில் நிலைபெறட்டும் என சி வழங்கினார். எல்லோரும் தென்கரையில் சாஸ்தா கோவிலில் நிலைபெற்றனர்.
மதுரை காஞ்சி - பாண்டியனுடன் மறவர் கொண்டாடிய ஓனம்

வன்னியடி மறவன் கதை
நீண்ட நெடிய
ஆய்விக்கு பின்னே நாம் கூறுவது இது தான். வன்னியர் என்பது பட்டமோ சாதியோ அல்லது
அரசரால் வழங்கும் விருதோ கிடையாது. இது ஒரு காடு சூழ்ந்த பகுதியை
குறிக்கும் காரண பெயராகும். எடுத்துகாட்டாக கொங்கு என எடுத்து
கொள்வோம். கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து சாதியினருக்கும் கொங்கு என பெயர்
இருக்கும். சோழிய என எடுத்து கொள்வோம் அது சோழநாட்டில் வாழும் சகல் பிரிவினருக்கும்
ஏன் இசுலாமியருக்கும் மறாட்டியருக்கும் உள்ள பகுதி பேராகும்.
கொங்கு,சோழிய,பாண்டிய,நாஞ்சில்,கேரள,தொண்டை என்பது போல தான் வன்னி என்னும் பகுதியை
குறிக்கும் பெயர். அதே போலத்தான் வன்னியர் என்பது தொண்டை மண்டலத்தில் உள்ள
அனைத்து சாதியினரையும் குறிக்கும்.
தொண்டை
மண்டலத்தை கச்சி வன நாடு (அ) வன்னிய நாடு என கூறுவர். இதில்
குடியிருக்கும் இறைவனை கச்சி வனராசர் இறைவியை கச்சி வனத்தில் தவமிருக்கும்
காமாச்சி என
கூறுவர். காமாட்சி கோவில் தொண்டை மண்டல உட்பட எல்லா இடங்களிலும் காடுகளில் தான்
அமைந்திருக்கும். காமாட்சியை வனக்காமாட்சி,வனப்பேச்சி
அல்லது வன்னிய பேச்சி என கூறுவர். எனவே தொண்டை மண்டலத்தை
பொருத்தவரை வன்னியராஜன் மற்றும்
வன்னிய பேச்சி என்பது தொண்டை மண்டலத்தை ஆளும் ஏகாம்பரேஸ்வரர்-காமாட்சி அம்மனையே
குறிக்கும்.
எனவே தொண்டை மண்டலம் மட்டுமல்ல காடுகள்
எங்கல்லாம் உள்ளதோ அந்த பகுதியில் வாழும் அனைவருக்கும்
உள்ள காரண பெயரே வன்னியர் (அ) காடுவாழ்னர்.
மணிக்காஞ்சி நாட்டில் மாடப்பன் என்ற மறவன் வாழ்ந்து வந்தான். அவன் புலியின் வாலை
உருவும் அளவுக்குப் பெருவீரன். அவனுக்கு வயது 22 னதும் சமுதாயத்தார் கூடி
கருமறத்தியை அவனுக்கு மணமுடிதது வைத்தனர். நாட்கள் பல சென்றன. அவர்கள் மகிழ்வோடு
வாழ்ந்தனர். னால் அவர்களுக்குக் குழந்தையில்லை. அதனால் கருமறத்தி மணம் மிக
நொந்தாள்.நான் மலடி என எல்லோரும் ஒதுக்குகின்றனரே! நமக்கு கொள்ளி வைக்க மகன் வேண்டாமோ? இல்லை என்றால் உலகோர் பழிப்பார்களே, 12 வயதிலே எனக்கு மாலையிட்டீர். இப்போது வயது 32 கிறதே, என் அரசே என் வார்த்தைகளைக் கேளும். நான் குழந்தைகளுக்காக தவம் செய்யப் போகிறேன் என்றாள்.
அவள் பேசுவதைக் கேட்ட மறவன் கவலைப்படாதே.இந்த நகரத்திலிருந்து குழந்தை ஒன்றை எடுத்து உனக்கு வளர்க்கத் தருகிறேன் என்றான்.
ஆனால் அவளுக்கு அதில் விருப்பம் இல்லை. சொந்த ரத்தம் போலாகுமா பிறர் ரத்தம்? எடுத்து வளர்த்த குழந்தை ஓடிவிடும். வேண்டாம். நான் இறைவனுக்கு நேர்ச்சை செய்து பிள்ளையை வாங்கிக்கொள்வேன். என் தோழிகளுடன் செல்வேன் என்றாள்.
கருமறத்தி தன் தோழிகள் ஐந்து பேருடன் பலவகைப் பொருள்களுடன் புறப்பட்டாள். தொலை வழி நடந்தாள். வழியில் உள்ள தெய்வங்களுக்கெல்லாம் நேர்ந்தாள். எல்லா தெய்வத்தினிடமும் வேண்டினாள். தெய்வங்கள் அவள் குரலுக்குச் செவி சாய்க்கவில்லை. பலன் கிடைக்கவில்லை. அவள் பல ஊர்களைக் கடந்து சென்றாள்.
அவள் திருவனந்தபுரம் காட்டுவழிச் சென்றபோது அச்சுதனார் குறத்தி வேடம் கொண்டு வந்தார். கருமறத்தியைக் கண்டார். நீ எந்த ஊர் மகளே, நீ வந்த காரணத்தைக் கூறுகிறேன். அடக்காயும் வெத்திலையும் தா வாடி மகளே என்றாள்.
கருமறத்தி நெல்லை அளந்து அவள் முன்னே வைத்தாள். குறத்தி நெல்லைக் குவித்து வைத்துவிட்டு பார்த்தாள். பெண்ணே உனக்குப் பல நாட்களாகக் குழந்தை இல்லை. போகாத குளமெல்லாம் குளித்தாய். கோவிலகள் பல சென்றாய். பின்னர் குழந்தைச் செல்வம் இல்லை. உறியில் தயிர் இருக்கும்போது வெண்ணைய்க்கு அலைந்தால் யார் மகளே தருவார்? பெண்ணே உன் குடும்ப தெய்வம் ஒன்று போகமாய் நிற்கிறது. கோவிலின் சுவர்கள் பாழடைந்து கிடக்கிறது. அதற்குக் குருபூஜை காத்து கோவிலைச் செப்பனிடு. உனக்கு ண் மகவு பிறக்கும். அதற்கு மேல் குழந்தை இல்லை. போய் வருவாய் கருமறத்தியே என்றாள்.
கருமறத்திக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. குறத்திக்கு பொன்னாபரணம் ஒன்று கொடுத்தார். அதைக் குறத்தி வாங்கவில்லை. மறத்தியை அனுப்பி வைத்தாள் குறத்தி.
மறத்தி திருவட்டாறு மலைவிட்டு இறங்கி தோவாளை வழி பணகுடி. வள்ளியூர் வந்து தன் வீட்டிற்கு வந்தாள். குடும்ப தெய்வம் வாழ்ந்த கோவிலைச் செப்பனிட்டாள். தெய்வத்திற்கும் குலபூசை செய்தாள். உடனே தன் மடியில் பாம்பு வந்து படம் எடுத்து டுவதுபோல் கனவு கண்டாள். பொன் எழுத்தாணியும் புத்தகமும் கண்டாள். கணவனிடம் தான் கண்ட கனவைச் சொன்னாள். கணவன் அதனால் மிக மகிழ்ந்தான். கனவு கண்ட சிலநாளில் கர்ப்பமுற்றாள்.
கருமறத்தியின் தனங்கள் கறுத்தன. கர்ப்பமுற்றதற்கு அடையாளங்கள் தோன்றின. மாதம் பத்தாகியது. மருத்துவச்சியை அழைத்துவரச் சொன்னான் மறவன். தூதன் ஓட்டமாக ஓடிச் சென்றான். மருத்துவச்சியின் வீட்டிற்கு சென்று அழைத்தான். அவள் என்னடா மணிக்காஞ்சி மறத்திற்குத்தானே மருத்துவம்? வரமாட்டேன் போ. அவள் எனக்கு எதைத் தந்துவிட்டாள் வருவதற்கு என்றாள்.
தூதன் விடவில்லை. அவள் காலில் விழுந்தான். கட்டிப் பொன்னைத் தருகிறேன் என்றான். மருத்துவச்சி அதற்கு இசைந்து வழி நடந்தாள். மருத்துவச்சி வந்ததும் குழந்தை பிறந்தது. கன்னிக்குடம் உடைந்தது. கொப்புளும் அறுத்தாள். பிறந்த ண் குழந்தைக்கு வன்னியப்பனின் பெயரை வன்னியடி மறவன் என விட்டனர்.
குழந்தைக்கு நாள் கோள் பார்த்தவர்கள் இக்குழந்தை பிறந்த நேரம் சரியில்லை. இவனுக்கு 22ம் வயதில் இவந்தந்தை மாடப்பதேவன் மறவர்களால் வெட்டப்படுவான் என்றனர். மறத்திக்கு அதனால் துன்பம்தான். என்றாலும் மகனுக்கு னை ஏற்றம் குதிரை ஏற்றம் போன்றவற்றைக் கற்பித்தாள். கலைகள் பல படித்தான் மகன்.
வன்னியடி மறவன் வளர்ந்தான். சோதிடன் கூறியபடி ஊற்றுமலை மறவர்கள் கூடி ஒரு சண்டையில் மாடப்பனை வெட்டிக் கொன்றனர். வன்னியடி மறவன் தாயின் பாதுகாப்பில் வளர்ந்தான். தலால் அவனுக்கு போதிய உரம் இல்லாமல் இருந்தது. அவன் உரிய வயது வந்ததும் ஊர்த்தேவனான பொன் பாண்டித் தேவனுடன் கச்சை கட்டிக்கொண்டு களவு செய்யப் புறப்பட்டான்.
போனவிடத்தில் அவன் ஒரு செட்டியைக் கண்டான். அவனிடம் கள்ளரின் குறியீட்டு மொழியில் பஞ்சுக்குப் புண்ணுக் கொடுப்பீரோ ?" எனக் கேட்டான். வலிமையானவானாக இருந்த செட்டி வன்னியடி மறவனின் செவிட்டில் ஓங்கி அடித்தான். எதிராபாராத அடி பொறுக்காத வன்னியடி மறவன் அப்படியே வீழ்ந்தான். செட்டி தப்பிச்சென்றுவிட்டான். மற்ற மறவர்கள் அதைக்கண்டு அருவருப்பும் கோபமும் கொண்டார்கள். இவன் என்ன மறவன்! அடி தாங்காதவன்! இவனை இப்போதே வெட்டிவிடுங்கள் ! என்றனர்.
மறவர்கள் வன்னியடி மறவனை சூழ்ந்துகொண்டு வெட்டிவிட்டனர். இறந்துபோன வன்னியடி மறவன் யுள் அறமல் இறந்தமையால்ற்றாமல் பேயாகி அலைந்தான். நீலராசனிடம் வரம் வேண்டி, இசக்கி அம்மை அருள் கொடுக்க வடக்கு சூரன்குடியில் கோயில் கொண்டான்.
வன்னியன் கதை
வன்னிக்களந்தை என்னும் ஊரில் மறவர் சாதியினர் நிறையபேர் இருந்தனர். அவர்களில் பணக்கார ஜமீன் குடும்பத்தைச் சார்ந்த அம்மையடி என்ற பெண் இருந்தாள். அவளுக்கு திருமணமாகி பல நாட்கள் குழந்தையில்லாமல் இருந்தது. மலடி என்ற பழி ஏற்பட்டதனால் மனம் நொந்த அவள் கோவில்கள் பல சென்று நேர்ந்தாள். குழந்தைக்காக தவமிருந்தாள். கடைசியில் சங்கரநயினார் கோவிலுக்குச் சென்று வேண்டித் தவம் இருந்தாள். அக்கோவிலிலேயே படுத்துக்கொண்டாள்.
அம்மையடி மறத்தி உறங்கிக்கொண்டிருந்தபோது ஒரு கனவு கண்டாள். கனவில் தென்கரை சாஸ்தாவின் துணைச்சாமியான தளவாய் மாடன் கோடங்கி அடிப்பவராக வேடம் தாங்கி வந்தார். அவர் அம்மையிடம் பெண்ணே நம்பி ற்றங்கரையில் ஒரு சாஸ்தான் கோவில் இருக்கிறது. அங்கே வந்து தவமிருப்பாய். உனக்கு எட்டுக் குழந்தைகள் பிறக்க சாஸ்தா வரம் கொடுப்பார். அந்தப் பிள்ளைகளை உரிய காலத்தில் சாஸ்தாவின் கோவிலுக்குக் காவு கொடுக்கவேண்டும் என்றார்
மறத்தி கனவில் கண்ட நிகழ்ச்சியை எண்ணி வியபப்டைந்தாள். தளவாய் சொன்னபடி தென்கரைக்கு வந்தாள். நாட்கள் 41 னதும் அவள் சாஸ்தாவிடம் மேலும் கெஞ்சி வேண்டினாள். அப்போது அவளுடன் இருந்த அவளது கணவன் பெண்ணே என் நிலபுலன்களைக் கவனிக்கவேண்டும். பயிராக்கவேண்டிய காலம் வந்துவிட்டது . இப்படியே எத்தனைநாள் தவ்மிருப்பது? நான் ஊருக்குப் போகிறேன் என்று கூறி அவளிடம் விடை பெற்றுக்கொண்டு தன் ஊருக்குச் சென்றான். அவள் தொடர்ந்து தவம் செய்து வந்தாள்.
அம்மையடி மறத்தியும தென்கரையில் ஒரு இடத்தை வெட்டிச் சீர்திருத்தி வீடுகட்டி வாழ்ந்தனர். அவர்களுக்கு அடுக்கடுக்காக ஏழு ண்குழந்தைகளும் ஒரு பெண்ணும் பிறந்தனர். ண்மக்களுக்கு சின்னத்தம்பி வன்னியன், சிதம்பர வன்னியன், முத்துமாலை வன்னியன், ண்டுகொண்ட வன்னின். அழகு விலங்காடி வன்னியன், தென்கரை வன்னியன், வடகரை வன்னியன் எனப் பெயரிட்டாள். பெண்மகள் வன்னிச்சி எனப் பெயர் பெற்றாள்.
அம்மையடி மறத்தித் தன் குழந்தைகளை தன் மறக்குல வழக்கப்படி வளர்த்தாள். அவர்களும் நல்ல உடல்வாகு கொண்டவர்களாய் விளங்கினர். வேல்கம்பு, சிலம்பு போன்ற பயிற்சிகள் பெற்றனர். அவர்களுக்குத் திருமணப் பருவம் வந்தது. அம்மையடி தன் மக்களுக்குத் திருமணம் செய்ய விரும்பினாள். தன் குலத்தில் பிறந்த ஒன்றுவிட்ட சகோதரர்களிடம் பெண் கேட்டாள். அவர்களின் மாமன்மார்கள் நம் குல வழக்கப்படி இந்த ஏழு பேரும் திருட்டுத் தொழிலில் திறம் காட்டிச் சாதனை செய்தால் பெண்ணைத் தருகிறோம் என வாக்களித்தனர்.
அம்மையடியாள் தன் மக்களிடம் மாமன்மார்களின் வேண்டுகோளைத் தெரிவித்தாள். வன்னியர்கள் குலவழக்கப்படி களவுத்தொழில் செய்யத் தயாராயினர். திருச்செந்தூர் கோவில் கருவறையில் அளவு கடந்த பொற்குவியல் இருப்பதைக் கேள்விப்பட்டனர். னால் அங்கே கடுங்காவல் இருப்பதை அறிந்து அங்கே செல்லவேண்டாம் என முடிவு கட்டினர். இப்படி இருக்கும்போது மூத்த வன்னியனின் கனவில் தளவாய் சுவாமி சோதிடர் உருவில் வந்தார். தென்கரை அருகே வெங்கலராசன் கோட்டை ஒன்று உள்ளது. அங்கே சென்று திருடுங்கள் என்றார்.
மூத்த வன்னியன் தம்பிகளிடம் தான் கண்ட கனவைப் பற்றிக் கூறினான். அவர்களும் வெங்கலராசன் கோட்டைக்குச் செல்வோம் என்றனர். அடுத்தநாள் மாலை நேரத்தில் தென்கரைக்கு வந்தனர் சகோதரர்கள். அவர்களில் ஒருவன் இப்போது நல்ல வெளிச்சம் இருக்கிறது. இப்போதே நாம் வெங்கலராசன் கோட்டைக்குச் செல்லவேண்டாம். அதுவரை இங்கே கிளியாந்தட்டு விளையாடுவோம் என்றான்.
அவர்கள் நம்பியாற்று மணல்வெளியில் கிளியாந்தட்டு விளையாட ரம்பித்தபோது மாடு மேய்க்கும் சிறுவனைப்போல் வேடமிட்டு தளவாய்சாமி வந்தார். அவர் வன்னியர்களிடம் மணலில் விளையாடினால் சரியாக இருக்காது. நம்பியாற்றின் நடுவே ஒரு பாறை இருக்கிறது. அந்தப் பெரிய பாறை மீது விளையாடுவோம் என்றார்.
வன்னியர்கள் தளவாய் சுவாமியாக வேடமிட்டிருந்த மாடுமேய்க்கும் சிறுவன் சொன்னபடி நம்பிப்பாறைக்குச் சென்றனர். அங்கே அவர்கள விளையாட ரம்பித்தனர். நேரம் போவது தெரியாமல் விளையாடினர். வானத்து நட்சத்திரங்களின் போக்கை பார்த்த மூத்த அண்ணன் நேரம் கடந்துவிட்டது. இனி வெங்கலராசன் கோட்டைக்குப் போனால் நேரம் விடிந்துவிடும். என்ன செய்வது ? எனக் கேட்டான்.
உடனே மாடு மேய்க்கும் சிறுவன் நீங்கள் சாமர்த்தியமான சிறுவர்களாகத் தோன்றவில்லையே. தென்கரை மகாராசன் கோவிலிலேயே திருடலாமே. அங்கே அளவு கடந்த பொன் இருக்கிறது. இதற்கு வெகுநேரம் நடக்கவும் வேண்டாம் என்றான்.
சகோதரர்களும் தென்கரை சாஸ்தா கோவிலில் திருட முடிவு செய்தனர். மாட்டுக்கார சிறுவன் கோவிலின் கருவறை இருக்கும் இடத்தை அடையாளம் சொன்னான். அவர்களிடம் மேலைவாசல் வழியாகச் செல்லுங்கள் அதுவே நல்ல வழி ! என்றும் கூறினான். பின்னர் நான் என் வழி செல்லுகிறேன். நீங்கள் உங்கள் தொழிலைச் செய்யுங்கள் என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டான்.
ஏழு சகோதரர்களும் தென்கரை சாஸ்தா கோவிலின் மேற்குபக்கம் வந்து சுவரில் ஏறினர். மேல் சுவரின் ஒரு பகுதியை இடித்தனர். இந்த நேரத்தில் தயவாய் சாமி ஒரு சாதாரண மனிதனாக அந்த ஊர் அரசனிடம் சென்றார். தென்கரை சாஸ்தா கோவிலில் 7 பேர்கள் திருடிக்கொண்டிருக்கின்றனர். என்னுடன் கொஞ்சம் குதிரை வீரர்களை அனுப்புங்கள். அவர்களைப் பிடித்துவிடலாம் என்றார்.
ராஜா அந்த மனிதருடன் குதிரை வீரர்களை அனுப்பினார். தளவாய்சாமி தென்கரைக்கு வரும்போது வன்னியர்கள் கோவிலில் திருடிவிட்டு வெளியே வந்துகொண்டிருந்தனர். தூரத்தில் குதிரை வீரர்கள் வருவதைக் கண்டு கையிலுள்ள திருட்டுப் பொருட்களைக் கோவிலின் பக்கத்திலிந்த கிணற்றில் போட்டுவிட்டனர். னால் அதற்குள் குதிரைவீரர்கள் அவர்கள் அருகே வந்துவிட்டனர். வன்னியர்கள் ஓட்டமாய் ஓடினர். தளவாய்சாமி அவர்களைக் குருடராகும்படிச் செய்தார். அவர்களும் குருடராயினர்.
எழுவரும் கண் தெரியாமல் தட்டுத்தடுமாறித் தவித்தனர். குதிரை வீரர்கள் அவர்கள் ஏழு பேரையும் பிடித்துக் கயிற்றால் கட்டினர். கோயிலருகே இருந்த புளியமரத்தில் கட்டி வைத்தனர்.
திருடர்களின் கழுத்தில் ஊமத்தை பூமாலை போட்டனர். வில்லன்புதூர், கண்ணன்புதூர் என்னும் ஊர்களிலிருந்து வந்த வீரர்கள் வன்னியர்களை வாளால் வெட்டினர். இந்தச் சமயத்தில் வன்னியர்களின் சகோதரி வன்னிச்சி அண்ணன்மார்கள் கேட்டுக்கொண்டபடி பலவகைக் கறிகளுடன் அடுக்குப் பானைகளில் சாதம் கொண்டுவந்தாள். அண்ணன்மார்கள் அவளைத் தென்கரை நம்பியாற்றங்கரையில் கோழி கூவும்போது காத்திருக்கச் சொல்லியிருந்தார்கள். அதன்படி அவள் அங்கே வந்தாள். அவள் வரும்போது தீய சகுனங்களைக் கண்டு திடுக்கிட்டாள். நடக்கக்கூடாதது நடந்துவிட்டது என்பதை உணர்ந்தாள்.
தென்கரை நம்பியாற்றங்கரையில் அண்ணன்மார்கள் வெட்டப்பட்டுக் கிடப்பதைக் கண்டாள். தரையில் விழுந்து அழுதாள். அரற்றினாள். தலைகளை அதனதன் உடலில் பொருத்தினாள். அவர்களின் வாயில் அரிசியைப் போட்டாள். தன் நாக்கைப் பிடுங்கி அவர்களின் முன்னே போட்டாள். இந்தப் பெரிய ஊர் சிற்றூர் கட்டும். இங்கு ஏழு வீடுகளுக்கு மேல் இருக்கக்கூடாது. இங்கே கோழி கூவக்கூடாது. நாய் குரைக்கக்கூடாது என்று சாபம் இட்டாள். அவளும் இறந்துபோனாள்.
ஏழு மக்களும் வெட்டுப்பட்டு இறந்த செய்தியை அம்மையடி மறத்தி கேள்விப்பட்டாள். ஓடோடி வந்தாள். எல்லா மக்களும் செத்துக் கிடக்கும் காட்சியைக் கண்டாள். அப்போது அவளுக்குப் பழைய நினைவு வந்தது. தென்கரை மகராஜனுக்குக் காவலாக ஏழு பேரும் இருப்பார்கள் என்று கனவில் தான் கண்டதை நினைத்தாள். அவளும் நாக்கைப் பிடுங்கி உயிர் விட்டாள்.
இறந்துபோன ஒன்பது பேரும் சாந்தி அடையாமல் கைலாயம் சென்றனர். அவர்களுக்குச் சிவன் வரம் கொடுத்தார். வன்னியர்களில் கடைசித் தம்பியான வன்னிராசன் தெய்வமாகத் தென்கரையில் நிலைபெறட்டும் என சி வழங்கினார். எல்லோரும் தென்கரையில் சாஸ்தா கோவிலில் நிலைபெற்றனர்.
விருமாண்டி கதை பாடல் – தமிழ் மண்ணின் சாமிகள்
கமலஹாசனின் இயக்கத்தில் வந்த படம் விருமாண்டி. கதையின் தளம் மரணதண்டனையை
ரத்துசெய்வதை மையமாக கொண்டிருந்தாலும், விருமாண்டி என்ற கிராம தெய்வத்தினை
தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்த்தது. சண்டியர் என்று பெயர் சர்ச்சையில்
விருமாண்டி பெரிய விளம்பரத்தை தேடிக்கொண்டாலும், தெய்வத்தின் பெயரை தாங்கியே
இறுதியாக வெளிவந்தது. “இதுக்கெல்லாம் அந்த சாமிதாலே காரணம். அது பேர
வைச்சுக்கிட்டுதான் படத்தை வெளிவிடனும்முன்னு இப்படி பண்ணுது” என்று சொல்லி
சிரித்தார்கள் நண்பர்கள். அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்கள் தலையிட்டு
பிரட்சனையை தீர்த்ததாக சொன்னார்கள்.
விருமாண்டி பாடல் -
கருமாத்தூர் காட்டுக்குள்ளே ஒரு காலத்தில்
காளியம்மன் போல வந்தாள் பேச்சியம்மா (கருமாத்தூர்)
சைவசமையல் படையல் வைச்சு
சர்வசட்டியில் பொங்கல் வைப்பா
சாமிக்கெல்லாம் பூச வைப்பா
சங்கெடுத்து ஊதி நிப்பா (கருமாத்தூர்)
சங்குசத்தம் அந்தபொற்குலத்தில் உள்ள
பேய்க்காமன் காதில் கேட்டது… கேட்டது… கேட்டது…
பொங்கலோடு பழங்களும் சைவபடையல் வைச்சு
சாமிக்கு யார் அங்கு படைப்பது
சைவவாடையது கொஞ்சமும் சகிக்கவில்ல
தாக்கி முகம் சுழிக்க வைக்குது
என்று செங்கண் துடிதுடிக்க அங்கம் பளபளக்க
போங்கினானே பேய்க்காமனே!
மாட்டுக்கொடலெடுத்து மாலையாக போட்டுதான்
பேச்சியம்மா இடத்துக்குஅவன் வந்தானே (மாட்டுக்கொடலெடுத்து)
நானாளும் பகுதியே என்னென்னவோ சத்தம்தான்
நீயெழுப்பும் சத்தம் எல்லாம் சுத்தம்தான்
சத்தத்தாலே நேத்துபூரா தூங்கல
உங்க சங்கு சத்தம் கொட்டு சத்தம் தாங்கல
ஏழுநாளில் இங்கிருந்து கிளம்பனும்
அட இல்லாவிட்டால் நீங்களெல்லாம் புலம்பனும்
அச்சமூட்டி எல்லாரையும் மிரட்டுனான்
பொருளை அடிச்சு நொறுக்கி ஆவேசமா விரட்டுனான்
விரட்டுனான் ஐயயோ விரட்டுனான்
விரட்டுனான் ஐயயோ விரட்டுனான்
அன்னக்கொடுச்சி அழகுமயில் பேச்சியம்மா
தன்னந்தனியே வாடுரவ
கண்ணான கழுவநாதன் கண்டுமனம் கலங்கி நின்னு
அவ உள்ளங்கை ரேகையை ஊடுருவி பார்த்துட்டான்
புறங்கை ரேகையை புரட்டி புரட்டி பார்த்துட்டான்
உன்னையை காப்பாற்ற ஒரேஒரு ஆளைவிட்டா
உலகத்திலே யாருமில்லை… ஆமாம்
ஒட்டிநிக்கும் துன்பமெல்லாம்
ஒட்டடையா ஓட்டிடுவான் ஒருத்தனாக.. ஆமாம்
அனாதைக்கு ஆதாரவு தருவாண்டி
அவன்பேரு நான்சொன்னேன் விருமாண்டி
விருமாண்டிய வேண்டிவரதான் அந்த பேச்சியம்மா புறப்புட்டாளே
வனந்தரம் காடு கடந்து அந்த வண்ணமயில் புறப்புட்டாளே
எறும்பேற முடியாத எட்டு சுத்து கோட்டைக்குள்ளே
பாம்பேற முடியாத பத்து சுத்து கோட்டைக்குள்ளே
ஆதரவு இல்லாத ஆறாம்பிடி கோட்டைக்குள்ளே
அண்ணனிவ சந்திக்க அழகியவள் போனாளே!
விவரம் கோட்டு விருமாண்டி
வீரம் கொண்டு பொங்கி எழுந்தானே!
கன்னிப்பொண்ணு கதை கேட்டு
கண்ணுசெவக்க எழுந்தானே!
பெத்தபுள்ள துயரம் கேட்டு
பெத்தவங்க துடிப்பது போல்
பெரும்புழுதி புயலயடிக்க பேய்க்காமனும் இருக்குமிடம்
பிரமாண்டம் கிடுகிடுக்க விருமாண்டி வந்தானே…வந்தானே…வந்தானே…
வெண்பொங்கல் தேங்காப்பழம் விபூதி – அதை
வெறுப்பதென்ன அர்த்தம்கெட்ட கபோதி
இது பேச்சியம்மா குடியிருக்கும் திடலுடா
எதிர்த்து பேசினாக்க கிழிந்துபோகும் குடலுடா
மாட்டுகுடலில் மாலைபோடும் பராரி
உன்முதுகில் ஏறி செய்யப்போறேன் சவாரி… சவாரி.. சவாரி
இப்படி விருமாண்டி சொன்னதும் இரண்டு பேருக்கும் கடுமையா சண்டை நடந்துச்சு.அப்ப பூமியெல்லாம் நடுங்குச்சு மலையெல்லாம் உடைஞ்சுச்சு. இதைப்பார்த்த சிலபேரு வீணா ஏதுக்கையா சண்டை போடரிங்க, சமாதனமா பேசிதீர்த்துக்கலாம் அப்படின்னு சொன்னாங்க. அவங்களும் சம்மதிச்சாங்க. அதுக்கப்புறம் பஞ்சாயத்தார் தீர்ப்பு சொன்னாங்க.
என்ன சொன்னாங்க.
தொட்டப்பநாய்க்கனூரிலையும், மதுரை மொட்ட கோபுரம் பக்கத்துளேயும் கொடியென்னு நட்டுவைப்போம், உங்க ரெண்டு பேருலையும் யார் முதலபோய் அந்த கொடியை தூக்கிட்டு வாராகளோ, அவுங்களுக்கு அந்த எல்லை சொந்தமுன்னு பஞ்சாயத்தார் தீர்ப்பு சொல்ல பேய்க்காமன் யோசிச்சான். யோசிச்சு சதியொன்னு பண்ணுனான். விருமாண்டி கையில நொண்டி குதிரையொன்னு கொடுத்து, அவன் போன எங்கடா கொடிய தூக்கிக்கிட்டு வரப்போரான்னு நினைச்சான்.
ஆகா,..
மொட்டக்கோபுரந் தொட புறப்புட்டான் பேய்க்காமனும்
தொட்டப்பநாய்க்கனூரை தொட்டுட விருமன் போனான் (மொட்ட)
ஏய்க்க நினைச்ச அந்த
பேய்க்காமன் எல்லையையும்
சேர்த்தே அளந்துவந்து
ஜெயிச்சானே விருமாண்டியும்
ஜெயிச்சானே விருமாண்டியும்!
அண்ணே திரும்பிபோனா
இங்கே இவன் சும்மா இருப்பானா
பொண்ணுக்கு தொல்ல கொடுக்கும்
எவனும் இங்கே நல்லாருப்பானா
என்ன நானும் செய்யப்போறேன்
எனக்கு ஒன்னும் தெரியவில்லையே
அட அண்ணன்காரன் விருமன் போனா
வேறு ஏதும் வழியுமில்லையே
அதனால என்ன பண்ணறதுன்னு யோசிச்சு ஒரு தந்திரம் பண்ணுனா பேச்சியம்மா.
என்ன செஞ்சா.
தான் விரலுள்ள போட்டிருந்த மோதிரத்தை கிணத்துக்குள்ள போட்டுட்டு, அண்ணே அண்ணே மோதிரம் விழுந்துடுச்சு எடுத்துக்கொடுங்கன்னு அண்ணேன்னு சொன்னா.
தங்கச்சி வேண்டுதல நிறைவேத்தி வைக்கிற அண்ணன், தங்கச்சுக்காக கிணத்துல குதிச்சு மோதிரத்த எடுக்கையில, கிணத்துமேல வைச்சிருந்த கல்லை வைச்சுமூடி பேச்சியம்மா விருமாண்டிய கிணத்துக்குள்ளேயே சிறை வைச்சுப்புட்டா.
என்ன தங்கச்சி, உனக்கு உதவிபண்ண வந்த எனக்கு இதுதான் நீ காட்டுற நன்றியான்னு விருமாண்டி கேட்க, பேச்சியம்மா யோசிச்சு தினம் தினம் அண்ணனுக்கு சூலி பொண்ணும், சூலி மாடும் கொடுக்க நம்மலால முடியுமா. கொடுத்தா உலகம்தான் இத தாங்குமா அப்படின்னு நெனச்சு, அண்ணன்கிட்ட சொன்னா, அண்ணே நீ கேட்ட படி உனக்கு பூசை பண்ண முடியாது. ஆனா நாங்க என்ன பண்ணுவோம்னா,.
ஆடிக்கடைசி வெள்ளி
ஒனக்கொரு பூசை வப்போம்
ஆகாசப் பொங்கல் வச்சு
அப்போ படைய வப்போம்
ஆடிக்கடைசி வெள்ளி
ஒனக்கொரு பூசை வப்போம்
ஆகாசப் பூசை வச்சு
அப்போ படைய வப்போம்
அதிலே நீ கேட்டதெல்லாம்
ஆமாமா செஞ்சு வைப்போம்.
அதுக்காக எங்களையே எப்போவுமே காத்து இருந்து
இங்கே நீ இருக்க வேனும் – எங்கும்
பொங்கும் மங்கலம் தங்க வேனும்.
சாமி இங்கே நீ இருக்க வேனும் – எங்கும்
பொங்கும் மங்கலம் தங்க வேனும்.
பாடலோடு கதையின் சுருக்கத்தை தந்து, மேலும் விவரங்கள் சேர்த்து சொல்லாம் என நினைத்திருந்தேன். பாடலை கேட்டு எழுதவே இரண்டரை மணி நேரம் எனக்கு தேவைப்பட்டதால், இன்று முடியவில்லை. விருமாண்டி பதிவு அடுத்த இடுகையிலும் தொடரும்.

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.