Thursday, April 21, 2016

ஊற்றுமலை வம்சாவளி

    (The hollow ethnic crown "Nicoles drakes")

வம்சாவளி:

ஊத்துமலை பாளையபட்டின் கைபீது முழு தேவர் வரலாறு ஆகாது!!!!

கர்ணல் மெக்கன்சி பிரபுவால் 1827-ல் தொகுக்கபட்ட பாளைபப்பட்டுகளின் கைபீது எனும் புத்தகம் கீழத்தேய சுவடிகள் என தமிழக ஆவணகாப்பகங்களீல் உள்ளது. இது பாளையபட்டுகளே தங்களது வம்சாவளியினர் பற்றி கிழக்க்கு இந்திய கம்பெனியினருக்கு கொடுக்கப்பட்ட கருத்துக்களாகும்.




















இதை பற்றி கல்வெட்டு ஆய்வாளர் ஆர்.நாகசாமி இந்த பாளையபட்டுகளின் வரலாறுகள் அவ்வளவாக எந்த ஜமீன் குடும்பங்களுக்கும் ஆவணங்கள் சரியாக இல்லை என்றும் 14-ஆம் நூற்றாண்டுகளில் இருந்தே தொடங்குவதாக செவி வழி கதைகளையும் சில திருவிளையாடல் புராணங்களையும் தருவதாக சொல்லியுள்ளார். எனவே இது வரலாறு ஆவணம் அல்ல அவர்களாக தந்த சொந்த கதையே இதற்க்கு முழுமையான ஆதாரங்கள் இல்லை எனினும் 15-ஆம் நூற்றாண்டுக்கு பின் வந்த சில சரித்திரங்கள் ஏற்புடையதாய் உள்ளது என கூறுகின்றார்.


விஸ்வநாத நாயக்கன் அமைச்சர் அரியநாத முதலியார் அவர்கள் 72 பாளையபட்டுகளை பிரித்தார் என வரலாறு தெரிவிக்கின்றது. ஆனால் மெக்கன்சியால் தொகுக்கப்பட்ட மொத்தம் 20 பாளையபட்டுகள் மற்றும் கொங்கு நாட்டின் பட்டக்காரர்களை பற்றி மட்டுமே வரலாறுகள் வருகின்றது.

ஆங்கிலேயரே எதிர்த்து போரில் மாண்ட நெற்கட்டான் செவ்வல்,வடகரை, போன்ற மறவர் பாளையபட்டுகள் பாஞ்சாலக்குறிச்சி சாப்டூர்,நாகலாபுரம் போன்ற நாயக்கர் பாளையபட்டுகள். இராமநாதபுரம் சிவகங்கை சீமை போன்ற அகன்ற சமஸ்தானங்கள் வரலாறுகள் சேர்க்க படவில்லை ஆங்கிலேயருக்கு ஆதரவாக போரிட்ட பாளையபட்டுகளான பாளையபட்டுகள் புராணங்களையும் செவிவழி கதைகளையும் எழுதி தங்களது பாளையபட்டுகளை தங்களுக்கு தருமாறு கொஞ்சி மன்றாடிய விஷயமே இங்கு குறிப்புகள் உள்ளன.

ஆங்கிலேய ஆதரவு பாளையபட்டுகளின் வரலாறு:

இந்த நூலில் எந்த சங்க இலக்கியம் குறிப்பிடபடவில்லை கல்வெட்டு குறிப்பிடபடவில்லை வேறு ஆதாரமான வரலாறுகள் தெளிவாக இல்லை மதுரா விஜயம் நாயக்கர் வரலாறை பின்பற்றியே எல்லா பாளையபட்டுகளும் உள்ளது. கொங்கு நாட்டில் பாளையக்காரன் அல்லாத பட்டயக்காரர்கள் என வந்துள்ளது. இதில் எந்த பாளையக்காரணும் சேரன்,சோழன்,பாண்டியன்,விஜயநகரம்,ஒய்சாளன் என அரச வம்சத்தில் தோன்றியவன் என ஒருவர் கூட கோறவில்லை மாறாக அவர்களுக்கு ஊழியம் செய்து இந்த நிலத்தை பெற்றதைப்போல் உங்களூக்கும் ஊழியம் செய்வேன் என கூறியுள்ளனர். ஏன் எனில் அன்றைய மகராஜா கும்பனி இராஜா தான் அவர்களிடம் சென்று நான் அரச வம்சம் என ஒருவரும் சொல்ல முடியாது சில காரணங்களுக்காக தன் சொந்த வரலாறே மறைத்துள்ளனர் சலுகைகளை பெற. கொஞ்சிய இறுதி வார்த்தைகளை கோடிடுகின்றேன். இதில் தாங்கள் அரச வம்சம் மூவேந்தர் பரம்பரை ஆந்திர அரசர் பரம்பரை என்று கூறியிருந்தால் அவர்கள் நிலம் அவர்களை விட்டு போயிருக்கும்.

இதில் ஒவ்வோறுவரும்

"மகாராஜா ராஜஸ்ரீ கும்பனியவர்களுக்கு கிஸ்திபனம் செலுத்தி கொண்டு மகராஜராஜஸ்ரீ கும்பனிவர்கள் கட்டளையிட்ட பிரகாரம் நடந்து வருகின்றேன். -அளகாபுரி ஜமீந்தார் இரட்டைகுடை வன்னியன்

"கும்பனி கார்யத்தில் கிழ்படிந்து வணக்கத்துடன் தயவும் அபிமானமும் வரவேண்டும் என பிராத்தித்து கொள்கிரேன்" -ஊத்துமலை மருதப்ப தேவர்.

"கும்பனி கார்யத்தில் கிழ்படிந்து வணக்கத்துடன் தயவும் அபிமானமும் வரவேண்டும் என பிராத்தித்து கொள்கிரேன்" -ஊத்துமலை மருதப்ப தேவர்.

"கும்பனியார் உத்தரவுக்கு கீழ்படிந்து அவர்களுக்கு குமாரவர்க்கமாக மெத்தவுங்கீழ்படிந்து கொள்கிறேன் அருள் புரியவேண்டும்" -திம்மநாயக்கர்

"என் பேரில் கும்பனியாரவர்கள் பிள்ளையாக பாவித்து பாளையபட்டை சேரும்படி காப்பாத்தி ரட்சிக்க வேண்டும்" -வல்லம கொண்டம நாயக்கர்

"மகராஜராஜஸ்ரீ கும்பனிவர்கள் சகல சனங்களும் சுக்கப்பட கும்பனி ராஜ ராஜஸ்ரீ அவர்களை தவிர வேறு கதியில்லை" -நத்தம் லின்ஙகம நாயக்கர்

"நார்ப்பது சனம் சம்சாரத்துடன் மகராஜஸ்ரீ கும்பனி துரையவர்களுக்கு பத்திரனாக காத்துகொண்டு இருக்கின்றேன் -முத்து ரங்கப்ப நாயக்கர்

"எங்கள் தாய் தகப்பனாக கும்பனியே நம்புகிரோம்" -ஏழாயிரம்பன்னை சிதம்பர வன்னியன்

இப்படி எல்லா அழுகையுமே உள்ளது. கொங்கு பட்டயக்காரர்கள் வரலாறு பின்னால் தொகுக்கபட்டது எல்லாரும் அரசர்களுக்கு கீழ் இருந்து அரசாங்கத்தை பெற்றதாக உள்ளதே தவிர யாரும் அரசாங்கத்துக்கு சொந்தமானவன் என சொல்லவில்லை.


நாயக்கர்கள் விசுவநாத நாயக்கனுடன் தென்னகம் வந்ததாக சொல்லவில்லை இஸ்லாமியருக்கு பென் தர மறுத்து தென்னகம் வந்ததாக் தொடங்குகிறது. கொங்கு பட்டயக்காரர்கள் சேரனிடம் ஊழியம் செய்து இராச்சியத்தை பெற்றதாக உள்ளது. மறவர் பாளையபட்டுகளில் ஊத்துமலை,நடுவகுறிச்சி கொண்டையங்கோட்டை மறவர்களையும் அழகாபுரி,ஏழாயிரம்பன்னை என வன்னி கொத்து மறவர்களை பற்றி மட்டும் உள்ளது வேறு எந்த பாளையபட்டையும் குறிப்புகள் இல்லை.

இதில் சிவகிரி போன்ற வன்னிகொத்து மறவர் பாளையபட்டுகள் இல்லை.


இந்த குறிப்புகள் காலத்தில் சங்க இலக்கியம் கிடைக்கவில்லை கல்வெட்டு கிடைக்கவில்லை பெரியபுராணம்,இராமயனம் மகாபாரதம் மற்றும் சில வைனவ பாடல்கள் மட்டுமே கிடைத்ததால் அதை மட்டுமே வைத்து திருவிளையாடல் கதைகள் திவ்விய பிரபந்தங்கள் கதைகளை வைத்து பாளையபட்டுகள் வரலாறாக மாறியது

இந்த வரலாறுகளும் டல்ஹொசி பிரபு ராஜ்ஜியம் இல்லா அரசுகள் ஆங்கில கம்பெனி தனி நிர்வாகம் செய்யும் என அறிவித்த காரணத்தால் வந்த ஜமிந்தாரி முறைதான்.

ஏழாயிரம் பண்ணை பாளையபட்டின் கதை பன்றிகளில் தோன்றியதாக கூறிகின்றனர். பன்றியர் என்னும் பெயர் வன்னியர் என மாறியதாக நம்பி அந்த கதைகளை கோறினர். இது அறியாமையும் சொல்லாறாய்ச்சியால் வந்ததே. இந்த பன்றி பற்றிய கதைகளை புதுக்கோட்டை பகுதியில் பன்றி குறும்பர் என குறிப்பிட்டு அவர்கள் ஆண்ட பகுதியை பன்றி நாடு என குறித்துள்ளனர்.


ஆனால் திருவிளையாடல் புராணத்தில் "குட்டிப் பன்றிகளை காப்பாற்றிய கதை" வருகிறது அந்த கதையை ஏழாயிரம் பன்னை ஜமீன் கோரினர். ஆனால் சிவகிரி பாளையப்பட்டுகள் மறவர்கள் ஜமீனைபோல் "குறும்பர்களை" அழித்து நிலத்தை பெற்றதாக "சிவகிரி விஜயத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

ஊத்துமலை பாளையபட்டின் பின்னனி என்ன? ஊத்துமலை பாளையபட்டு வம்சாவளி மட்டுமே புராணக்கதைகள் அதிக கலப்பில்லாமல் யதார்த்தமான விஷயங்களை குறிப்பிட்டிருந்தன நிக்கோலஸ் டிரிக்ஸ் குறிப்பிடுகின்றனர்.

ஊத்துமலை பாளையபட்டின் தொடக்கம் திருவிளையாடல் புராணத்தையே குறிக்கின்றது. ஆதாவது பாண்டிய நாட்டை ஆண்ட இறைவி மீனாட்சி திக்விஜயம் செய்ய தன் தேகத்தில் வலப்புறத்தில்ல் உருவாக்கம் செய்து வீரர்களை தோற்றுவித்து அவர்கள் வீரம் கொண்டதால் "மறவர்" எனும் பெயராம் தெய்வத்தால் உருவாக்கபட்டதால் "தேவர்" என்பது பட்டநாமம் என கூறி தொடங்குகிறார் இதிலே பாண்டிய அரசியின் வலப்புரதேகத்தில் தோன்றியதால் "மறவர்" பாண்டியரே என நாம் சொல்லிவிடலாம். ஆனால் ஊத்துமலை பாளையபட்டு அவ்வாறாக கூறாமல் தாங்கள் வீரர்களே என கூறுகின்றனர்.

இதன் பின் கன்னப்பநாயனார் கதை வருகின்றது பெரியபுராணத்தை பின்பற்றி அதில் கன்னப்பநாயனாரே "மறவர்குல அரியேறு" என சேக்கிழார் குறிக்கிறார்.வேடர் எனவும் கூறுகிறார். மேலும் வேட குலத்தை மறவர்,மலையர்,எயினர்,வேடர்,நாகர்,மள்ளர் என பல சொல்லாடல் பெரியபுராணத்தில் பார்க்கலாம். இந்த கதையை ஊத்துமலை ஜமீன் ஒரு மறவர் அரசன் கதை என கூறுகின்றார். இதுபோக பெரியபுரானத்தில் சங்கபாடல்கள் சாயல்கள் நிறைய இருப்பது கன்கூடு. கன்னப்பநாயனாரை மறவர் என சேக்கிழாரே கூறினார்.


இதற்க்கு காரணம் நாயன்மாரில் ஒருவரை மறவர் என கோறுகின்றனர். ஆனால் இன்று கன்னப்பநாயனாரை கோறும் மறவர் எவரும் இல்லை. மறவர்கள் சைவர்கள் சிவகுலம் என பத்திரங்கள் பலவற்றை கூறுகின்றனர். எனவே 63 நாயன்மாறில் ஒருவரை ஊத்துமலை ஜமீன் கோரினார்.

ஆணால் கல்வெட்டுகள் படி திருகண்ணப்ப வம்சம் என கல்வெட்டு பொரித்திருப்பது மறவர்கள் அல்ல அது தொண்டைமண்டல பகுதியை சார்ந்த சம்புவரையர். என்பவர்
"சம்புராயர்களுக்கு இதற்கு விட்டோம் இதற்க்கு கழிவு சொல்லுவோர் வேட்டைகாரர் வம்சமும் திருக்கண்ணப்ப வம்சமும் அல்லோம்" என அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்பநாயனார் வழி வந்ததாக சம்புராயர்கள் கூறுகின்றனர். இதே போல் பள்ளிகள் என்னும் இனக்குழுவினர் வேட்டையில் வரும் விலங்குகளை விற்று பிளைக்கும் சம்புராயர் சந்திதி என கோறுகின்றனர்.


"நீலாங்கரையன் வன்னிய நாயனான உத்தம நீதி கண்ணப்பன்"
"இவன் வன்னிய நாயனாரான உத்தம நீதி கண்ணப்பன் பாக்கல் வேண்டு"
பள்ளி சாதி தான் கண்ணப்ப நாயனார் சாதி என உறுதியான கல்வெட்டு
வன்னிய வேட்டைக்காரன்

In the Pudukkottai District, kalappur Mayilapatti inscription pertaining to Sundara Pandiya says the following :-
"மஹாபிரதானி மண்டலிக குமாரர் வன்னிய வேட்டைக்காரன்
மல்லைய தொண்ட நாயக்கர் மருமகனார்
" (Avanam-13, Year-2002, Page-23)
"வேட்டைக்காரன் அத்தி மல்லன் விளக்கநேன்
களமிருதூர்ப் பள்ளி பெருமான் 
தொண்டநைச்
சாத்தி வைத்த விளக்கு"
(A.R.E No.365 of 1902)
வன்னியர்கள் அனைவரும் வேட்டை ஆடி பிழைப்பு நடத்துவபர்கள் என பாடல் அல்ல கல்வெட்டு படி உறுதியாகிறது. பாடல் கூட யார் வேண்டுமானாலும் பாடலாம் ஆனால் கல்வெட்டு மாற்ற இயலாது எனவே
இனி கண்ணப்பர் வம்ஸம் பற்றி யாருக்கும் கருத்து இருக்காது .



இதைப்போல் 12 ஆழ்வார்களில் ஒருவரான "திருமங்கை ஆழ்வார்" அவரை எந்த பிரபந்தம் மறவர் என குறிப்பிட்டது தெரியவில்லை அவரை ஒருவராக கோரினார். அதனாலே தாம் வைனவராக உள்ளதாக கூறியுள்ளார். நாம் கேட்பதல்லாம் கன்னப்பநாயனார் காலம் எது கன்னப்பநாயனாரை பெரியபுராணம் கூறும் காளஹஸ்தியில் இன்று மறவர் இருக்கின்றனரா? அல்லது மறவர்கள் இருந்த சுவடு உள்ளதா? கன்ன்ப்பநாயனார் வழி வந்தவர் திருமங்கை ஆழ்வார் என ஏதும் ஆதாரமுள்ளதா என கேட்டால் கிடையாது என்றே பதில் வரும்.

இது நாயன்மாரில் ஒருவரையும் ஆழ்வாரில் ஒருவரையும் மறவராக கோர எழுதிய சுயசரிதமே தவிர இதற்கு ஆதாரம் ஏதுமில்லை. ஊத்துமலை தவிர சேதுபதிகள் சிவகங்கை மன்னர் அல்லது மறவரில் வேறு பிரிவினர் கன்னப்பநாயனாரை கோறுவதில்லை. ஊற்றுமலை மட்டுமே சொல்லியுள்ளார் அதுவும் ஆங்கில அரசின் நிர்பந்ததத்திற்காக ஜமீனை காப்பாற்றுவதற்காக.


நிக்கோலஸ் டிரிக்ஸ் ஊத்துமலை பாளையபட்டின் திருமங்கை ஆழ்வாரை கோரியது அப்படியே புதுக்கோட்டை அரசின் கவிஞர் வெங்கன்னாவின் "கள்ள கேசரி" நூலை பின்பற்றி திருமங்கை ஆழ்வரை கோரியதின் காப்பிதான். ஊற்றுமலைக்கு முன்னாடியே வெங்கன்னா "திருமங்கை ஆழ்வாரை" கோரியதை பார்த்து ஊத்துமலையும் கோரியுள்ளார் தவிர அவருக்கும் முறையான மூதாதயர் பற்றிய ஆவனங்கள் கிடையாது.

திருமங்கை ஆழ்வாரையும் கன்னப்ப நாயனாரையும் மறவர் என உறைத்தது எங்களுக்கு பெருமையே ஆகும்.

வம்சாவளியில் "சூரிய வம்ச பாண்டியனுக்கு பென் தர மறுத்தது " யாரை பற்றிய குறிப்பு:

சமூக நினைவுகளும் வரலாறும் ஆ.சிவசுப்பிரமணியன் http://keetru.com/visai/Visai%20_%20Aadhavan%20_%20visai%20_%20Story%20_%20S.V.Rajadurai.html

ஊத்துமலை இராமநாதபுரத்திலிருந்து குடி பெயர்ந்தவர் என மட்டும் கோர்டில் சமர்பித்துள்ளார். ஆதலின் அவர் இராமநாதபுரத்திலிருந்து சில காரணங்களுக்கு இடம் பெயர்ந்த காரணம் பற்றி விளக்கம் அளிக்கிறேன் ஊத்துமலை பாளையபட்டின் வம்சாவளி

"ராமஸ்வரத்தில் வழிபட்டு கொண்டிருந்த ஊத்துமலை மூதாதயரின் பென்னை கண்ட பாண்டியராஜா பென் கேட்க அதற்க்கு உங்கள் சூரிய வம்சத்திர்கும் எங்கள் மச்ச வம்சத்திற்கும் சம்பந்தம் கூடாது அதனால் பென் தர இயலாது " என கூறியுள்ளனர்

பாண்டியன் சூரியவம்சமாம். ஊத்துமலை ஜமீன் மச்ச வம்சமாம். மச்சவம்சம் என்றால் சந்திர குலம் என அர்த்தாம். பாண்டியன் சூரியவம்சமாம்? ஊத்துமலை சந்திர வம்சமாம் அதனால் பென் தரவில்லையாம்.???????????

பாண்டியன் சூரிய வம்சத்தவனா? பின் எப்படி பாண்டிய வம்சத்தவனுக்கு பென் இல்லை என கூற முடியும். இதில் சூரிய வம்சத்து பாண்டியனாக குறிப்பிட்டு இருப்பது சேதுபதி மன்னர்களை தான் ஏனெனில் சேதுபதி மன்னர்கள் சூரிய வம்சம் ரவிகுலம் எனவும் செம்பி வளநாடன் என கூறியிருக்கும் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் நூத்து கனக்கில்.

சேதுபதிகளூக்கு தெஷின கர்த்தா,தெஷின சிம்மாசனபதி,பாண்டியமண்டல ஸ்தாபனாசிரியன் தென்னவன் என பாண்டியன் எல்லைக்குட்பட்டு இருந்ததால் சேதுபாண்டியன் என பெயரும் உள்ளது எனவே அந்த சூரியவம்சத்து பாண்டியன் என கூறியிருப்பது சேதுபதி மன்னர்களை தான்.


சேதுபதிகளூக்கு பென் தர மறுத்து திருநெல்வேலி இடம்பெயர்ந்த ஆதாரப்பூர்வமான கதை,

இராமநாதபுரம் மாவட்டம் நாடு என்ற உட்பிரிவுகளாகப் பகுக்கப்பட்டிருந்தது. இன்று அரசின் வருவாய்த் துறையின் ஆவணங்களில் நாடு என்ற பிரிவு இடம் பெறாவிட்டாலும் நடைமுறையில் ‘நாடு’ என்ற பிரிவு அதிகார மையமாக இன்றும் விளங்கி வருகிறது. இத்தகைய ‘நாடு’ என்ற அமைப்பில் ஒன்றாக ஆப்பநாடு இருந்தது. ஆப்ப நாட்டு மறவர் தலைவரின் மகளைச் சிறையெடுக்க இராமநாதபுரம் ஜமீன்தார் ஒருவர் விரும்பியபோது ஆப்ப நாட்டு மறவர்களின் தலைவர் அதற்கு உடன்படவில்லை. மேல பார்த்த சமூக நினைவில் குறிப்பிட்ட காரணங்களே அவர் உடன்படாமைக்கான காரணங்களாக இங்கும் அமைந்தன.

ஜமீன்தாரின் சிறையெடுப்பிலிருந்து காப்பாற்றும் வழிமுறையாக தென்திசையில் சற்றுத் தொலைவிலுள்ள வேம்பாறு என்ற கடற்கரைச் சிற்றூருக்குத் தன் மகளை அவர் அனுப்பிவிட்டார். அங்கு வாழ்ந்து வந்த பரதவர் சாதியினரின் தலைவரான அவரது நண்பர் வீட்டில் அடைக்கலமாக அப்பெண் ஒன்றிரண்டு உறவினர்களுடன் தங்கியிருந்தாள். பெண்ணை அழைத்துப்போக வந்த ஜமீன் ஆட்களிடம் பெண் எங்கோ ஓடிப்போய்விட்ட தாக கூறிவிட்டார்கள். அங்கு பெண்ணைத் தேடிக் கிடைக்காமல், விடாது தேடி, வேம்பாறு பரதவர் தலைவர் வீட்டில் அப்பெண் இருப் பதை அறிந்து அவளைச் சிறையெடுக்கப் புறப்பட்டு வந்தனர்.

இதை அறிந்த பரதவர் தலைவர் இக்கட்டான நிலைக்கு ஆளானார். அவர்களை எதிர்க்க வலிமையான படை அவரிடமில்லை. அதேநேரத்தில் தம்மிடம் அடைக்கலமாக ஒப்படைக்கப்பட்ட பெண்ணைக் காப்பாற்றியாக வேண்டும். இறுதியில் அவர் ஒரு முடிவுக்கு வந்தார். அதன்படி ஆப்பநாட்டு மறவர்களின் முறைப்படி திருமணம் செய்து கொடுத்து விட்டார். கன்னிப் பெண்ணை, சிறையெடுக்க வந்தவர்கள் ஏமாந்து திரும்பிச் சென்றனர். இச்செய்தியையும் ஒரு வாய்மொழிக் கதையாகக் கொள்ள முடியும். இதன்படி இராமநாதபுரம் பகுதியிலிருந்து கால்நடையாகப் புறப்பட்டு வந்த கொண்டையங்கோட்டை மறவர்கள் இவ்வூரில் இரவு நேரத்தில் தங்கி ஓய்வெடுத்தார்கள். அவர்கள் புறப்பட்டு வரும்போது தம்முடன் தம் குலதெய்வமான சிலையையும் கொண்டு வந்திருந்தனர். அதற்குத் திருநீராட்டு செய்யப் பால் தேவைப்பட்டது. அவ்வூரிலுள்ள இடையர்களிடம் பால் கேட்டபோது அவர்கள் தர மறுத்துவிட்டனர். மறுநாள் அங்கிருந்து புறப்படும்போது அத்தெய்வத்தின் உருவச் சிலையைத் தூக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. சரி இது தெய்வத்தின் விருப்பம் போல என்று கருதி தம் பயணத்தைத் தொடர்ந்து இறுதியில் மறுகால்குறிச்சியில் குடியேறினர்.

அவர்கள் சென்றபின்னர், பாண்டியாபுரம் கிராமத்து ஆயர்களின் கால்நடைகள் இறந்து விழத் தொடங்கின. இது குறித்து அவர்கள் குறி கேட்டபோது, அய்யன் செங்கமல உடையார்க்குப் பால் கொடுக்காமையால் அத்தெய்வத்தின் கோபத்தால் கால்நடைகள் அழிகின்றன என்றறிந்தனர். அத்தெய்வத்தின் கோபத்தைத் தவிர்க்கும் வழிமுறையாக, அதை வழிபடத் தொடங்கினர். அதன்பின்னர் அவர்களது கால்நடைகள் அழிவிலிருந்து தப்பின.

மறுகால்குறிச்சியில் குடியேறிய கொண்டையங்கோட்டை மறவர்கள் தம் குலதெய்வத்தை மறக்கவில்லை. திருமண நிகழ்ச்சிக்கு முதல் வெற்றிலை பாக்கு வைத்தல், புதுமணப்பெண் உறவினர்களுடன் வந்து பொங்கலிடல் ஆகிய செயல்களின் வாயிலாக, குலதெய்வத்துடனான உறவை வெளிப்படுத்தி வருகின்றனர். நோய்த்தீர, வழக்குகளில் வெற்றிபெற, குடும்பச்சிக்கல்களில் இருந்து விடுபட இத்தெய்வத்தை வேண்டிக் கொண்டு அவ்வேண்டுதல் நிறைவேறினால் இங்கு வந்து விலங்கு உயிர்ப்பலி கொடுத்தல், பொங்கலிடல் ஆகிய சடங்குகளை மேற்கொள்கின்றனர். இங்கு குலதெய்வ வழிபாடு என்ற சமயச் சடங்கின் வாயிலாக கொண்டையங்கோட்டை மறவர்களின் இடப்பெயர்ச்சியும் அதற்கான காரணமும் சமூக நினைவாகத் தொடர்கின்றன. இரண்டாவது சமூக நினைவை உறவுச்சொல் ஒன்று, இன்றும் மறக்கவிடாமல் வைத்துள்ளது. ஆப்பநாட்டு மறவர் தலைவரின் பெண்ணுக்கு திருமணம் செய்வித்த தன் வாயிலாக தந்தையின் கடமையை வேம்பார் பரதவர்களின் சாதித்தலைவர் செய்துள்ளார். இவ்வுதவியின் வாயிலாக, தம் குலமானத்தைக் காத்ததாக ஆப்பநாட்டு மறவர் சமூகம், இன்றளவும் கருதி வருகிறது. இதன் வெளிப்பாடாக ‘அப்பச்சி’ என்ற உறவுச் சொல்லால் வேம்பார் பரதவ சமூகத்தினரை அழைத்து வருகின்றனர்.

"இதைத்தான் திருவரங்க கலம்பகத்தில் கொற்றவன் திருமுகத்தை கொனர்ந்த தூதா குறையுடலுக்கே மறவர் கொம்பை கேட்டாய் அற்றவர் சேர் பெருமாள் தோழன் அவதரித்த திருக்குலம் என அரியாய் போல"

இதில் குறிப்பிட்ட 'வல்லப மகராஜா" யார்?

இதுவும் சிவகங்கை அரசர்களை குறிக்கின்றது. சிவகங்கை அரசர்கலே தங்களை "கவுரி வல்லப தேவர்" என குறிப்பிடுவது. "வல்லப மகராஜா" என்பவர்கள் பாண்டியர் வம்சமான கவுரியர். மேலும் ஊத்துமலை ஜமீன் "நவராத்திரி" பண்டிகை நடக்கும் உரிமை கிடைத்தாக உள்ளது. "நவராத்திரி" தசரா பண்டிகை மைசூருக்கு அடுத்து அதிகமாக விமரிசையாக கொண்டாடுவது இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை இராஜராஜேஸ்வரி அம்மனுக்காக மட்டுமே. இதை கொண்டாடுவது சேதுபதிகள் மற்றும் சிவகங்கை கவுரி வல்லபர்களும் தான் இதையே ஊத்துமலை வம்சாவளி குறிப்பிட்டது.

குறும்பர் கொட்டமடக்கி:

சேதுபதிகள் செப்பேடுகள் சிவகிரி,தலைவன்கோட்டை,வடகரை,ஊத்துமலை எல்லா பாளையபட்டுகளினும் சோழ,பாண்டியர்களுக்கு எதிரியான குறும்பர்களை கொன்று அப்பகுதியை ஆக்கிரமித்தாஅக வரலாறு உள்ளது. இதுவும் ஊத்துமலையில் குறிப்பிட பட்டுள்ளது.

ஊத்துமலை பாளையப்ட்டின் மூலம் எது?

ஊத்துமலை "மச்ச"வம்சம் என கூறுவதே அவர்கள் சந்திர வம்சம் என்பது தான். இவர்கள் சொன்ன கிளுவை நாடு செங்கோட்டை அருகே உள்ளது என வடகரை பகுதியில் உள்ளது என கல்வெட்டு கூறுகிறது. உப்பரங்கோட்டை "உக்கிரங்கோட்டை" செங்கோட்டை போல் குண்டையங்கோட்டையும் சேரர் பாண்டியர் எல்லையிலே இருக்கும் என்பது தெரிகின்றது.

ஊத்தும்லை ஜமீனுக்கு முனையதரையன் என பட்டம் இருப்பதாக ஒரு கருத்து உள்ளது. இதைப்போல் ஊத்துமலைக்கு "வீரகேரளன் புதூர்" என பேர் உள்ளது. அதேப்போல் "ரவிகொண்டா" என்ற சேர மன்னன் இருந்துள்ளான். ஆப்பனூர் முலைப்பாரி பாடல் ஒன்றில் "சேரர் சீமையிலே கிளுவை நாட்டிலே நாங்கள் திக்கு விஜயமாய் வாழையிலே" என பாடல் உள்ளது. எனவே குண்டையங்கோட்டை அனேகமாக செங்கோட்டை அருகே பூழிநாடு அருகே இருக்கும் கோட்டை என விரைவில் வெளி வரும். மூவேந்தர்களும் பல குறுநில மன்னர்களும் சங்கமித்த மறவர் ஐக்கியத்தில் குண்டையங்கோட்டை மறவர்களும் ஒன்றே. எனவே ஊத்துமலை ஜமீன் வரலாறு ஒன்று மட்டும் மொத்த வரலாறு ஆகாது.

எங்களுக்கு சேர,சோழ,பாண்டிய சூரிய சந்திர நாக வம்சங்கள் என எங்களுக்கு அடையாளங்கள் அதிகம்.

நன்றி பாளையபட்டு வம்சாவளி
நிகோலஸ் டிரிக்ஸ்




விசை


ஜமீன்தார்கள் தமிழகத்தின் சிறுசிறு நிலப்பகுதிகளை ஆண்டு வந்த கால கட்டத்தில் அவர்களின் ஆட்சிக்காலத்தில் நடந்த பல சம்பவங்களை அப்பகுதி கதை சொல்லிகள் இன்றும் மிகச் சுவாரஸ்யமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஊத்துமலை சமஸ்தானத்தை ஆண்ட ஜமீன்தார்களுள் இருதாலய மருதப்ப பாண்டியன் மிகுந்த தமிழ் பற்றும் திராவிட இனப்பற்றும் உடையவராகத் திகழ்ந்தார். அவரின் அரண்மனையில் தமிழ்ப் புலவர்கள் போற்றிப் பாதுகாக்கப்பட்டார்கள். வீரகேரளம் புதூரை தலைமையிடமாகக் கொண்டே ஊத்துமலை மலை ஜமீனை இருதாலயமருதப்ப பாண்டியன் ஆண்டார்.


அரண்மனைக்குச் சற்று தொலைவில் நவநீதகிருஷ்ணன் திருக்கோயில் கட்டப்பட்டிருந்தது. கோயிலைச் சுற்றிலும் அக்ரஹாரம் அமைந்திருந்தது. அக்ரஹாரத்தில் வாழ்ந்த பிராமணர்கள் கோயில் காரியங்களைப் பார்ப்பது அரண்மனைக் காரியங்களைப் பார்ப்பது என்று வாழ்ந்து கொண்டிருந்தார்கள். மருதப்ப பாண்டியர், சிறந்த ரசிகராகத் திகழ்ந்தார். தமிழ்ப்புலவர்கள் பலரையும் ஆதரித்தார். இசைக்கலைஞர்களையும் ஆதரித்தார். மருதப்பரின் அரண்மனையில் அடிக்கடி நாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. நாட்டியக் கலைஞர்களுக்கு பரிசுகளையும் கொடுத்து மருதப்பர் மகிழ்ந்தார். இரவில் கிட்டத்தட்ட தினசரி பொதுமக்களின் பொழுது போக்கிற்காக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அவைகளை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் மருதப்பரும், மக்களோடு சேர்ந்து ரசித்து மகிழ்ந்தார்.

கவிதை அரங்கேற்றம், மற்போர் அரங்கம், நாடகம், ஒயிலாட்டம், கோலாட்டம், கும்மியாட்டம் போன்ற நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகள், சொற்போர், பரத நாட்டியம் என்று அரண்மனைக்கு அருகில் உள்ள அரங்கில் தினமும் ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடைபெற்ற வண்ணமிருந்தது. இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்த என்றே நிரந்தரமாக அரண்மனைக்கு அருகிலேயே மருதப்பர் ஒரு கலை அரங்கையும் கட்டி இருந்தார். ஒவ்வொரு நாளும் கலை நிகழ்ச்சி முடிந்த பிறகு, “நாளை என்ன நிகழ்ச்சி நடக்கும்” என்று அறிவிப்பார்கள். கலை நிகழ்ச்சிகளைக் காண பொதுமக்களுக்கு கட்டணம் ஏதும் கிடையாது.

கலை நிகழ்ச்சிகளை நடத்தும் கலைஞர்கள் தங்குவதற்கு என்று ஒரு இல்லமும், அங்கு தங்குபவர்களுக்குச் சாப்பாடு தயாரித்துக் கொடுக்க என்று சில சமையல்காரர்களையும் மன்னரே ஏற்பாடு செய்திருந்தார். கலை நிகழ்ச்சிகளை நடத்தும் கலைஞர்களுக்கு அவர்களின் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப மன்னரே பரிசுகளையும் வழங்கி கௌரவித்தார். எனவே, மருதப்பரின் அவையை நாடி, கலைஞர்கள் பலரும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் வந்த வண்ணம் இருந்தனர். கலை நிகழ்ச்சிகளைக் காண அக்ரஹாரத்துப் பிராமணர்கள் தவறாமல் வந்து ஆஜராகிவிடுவார்கள்.

கலை நிகழ்ச்சிக்கான அரங்கை அழகு படுத்துவது, நடக்க இருக்கும் கலை நிகழ்ச்சிக்கு ஏற்ப கலாபூர்வமான வேலைகளைச் செய்யும் பொறுப்பை அக்ரஹாரத்தைச் சேர்ந்த் சிலரிடம் மன்னர் ஒப்படைத்திருந்தார். எனவே, அக்ரஹாரத்துக்காரர்களின் ஆதிக்கம். அங்கு சுற்று தூக்கலாகவே இருந்தது. பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த கலைஞர்கள் தங்கள் திறமையைக் காட்ட அதிக வாய்ப்புக் கிடைத்தது. மன்னரும், கலை நிகழ்ச்சிகளை நடத்தும் கலைஞர்களைத் தேர்ந்தெடுப்பது, அவர்களுக்குத் தேதி கொடுப்பது போன்ற பொறுப்புகளை அக்ரஹாரத்தைச் சேர்ந்த ஒரு பெரியவரிடம் ஒப்படைத்திருந்தார்.

அந்தக் காலகட்டத்தில் தமிழகம் எங்கும் ஜமீன்களைச் சுற்றி இருந்த கலை-இலக்கியச் சூழலே, ஊத்துமலை ஜமீனிலும் இருந்திருக்கிறது. அக்காலத்தில் சொக்கம்பட்டி என்ற ஊரில் ராமசாமி புலவர் என்று ஒருவர் இருந்தார். அவர் தமிழ்ப்புலமை மிக்கவர். ஆரம்பத்தில் குருவிடமும், அதன்பின் அண்ணாவி மார்களிடமும் தமிழ் இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். பிறகு தானே முயன்று இராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்களை எல்லாம் கற்றுக் கொண்டார்.

தான் கற்ற கல்வி வீணாகப் போகக் கூடாதே என்பதால் கிராமம் கிராமமாகச் சென்று இராமாயணம். மகாபாரதம் போன்ற காவியங்களைக் கதாகாலாட்ஷேபமாகப் பாடி மக்களை மகிழ்வித்து, அவர்கள் தரும் எளிய அன்பளிப்பைப் பெற்றுத் தன் காலஜீவனைக் கழித்துக் கொண்டிருந்தார். இராமசாமிப் புலவர், ‘ஆள் பார்க்க கன்னங்கரேர்’ என்று கரிப்பானைத்தூர் நிறத்தில் இருப்பார். ஓங்கல் தாங்கலான முரட்டு உடம்பு வேறு. மேலும் சட்டையும் போட்டிருக்கமாட்டார். இடுப்பில் மல்லுவேட்டி (தறியில் நெய்த பருத்தி வேட்டி) உடுத்தியிருப்பார்.

சம்சாரி மாதிரி தலையில் ஒரு துண்டை தலைப்பாகையாகக் கட்டி இருப்பார். நெற்றியில் இத்துனூண்டு (சிறிதளவே) திருநீறு மட்டும் தீற்றி (பூசி) இருப்பார். திராவிடப் பாரம்பரியத்தின் அச்சு அசலான அங்க அடையாளங்களோடு இருந்த சொக்கம்பட்டி ராமசாமிப் புலவர் ஊத்துமலை ஜமீன்தாரரான மருதப்பாண்டியரின் தமிழ்ப்பற்றைக் கேள்விப்பட்டு மன்னரைத் தரிசித்து வாய்ப்புக் கேட்க வீரகேரளம்புதூர் அரண்மனைக்கு வந்தார். புலவர் வந்த சமயம், மன்னர் அரண்மனையில் இல்லை. வேட்டைக்குச் சென்றிருந்தார். எனவே புலவர், அரண்மனையில் உள்ள மற்ற ஊழியர்களிடம் தான் வந்ததன் நோக்கத்தைக் கூறினார்.

அரண்மனை ஊழியர்கள், “இந்த மாதிரியான விசயங்களை எல்லாம் அக்ரஹாரத்தில் உள்ள இன்னார்தான் கவனிக்கிறார். எனவே, நீங்கள் அவரைப் பேய்ச் சந்தியுங்கள்” என்றார்கள். புலவரும் அக்ரஹாரத்தில் உள்ள அந்தப் பெரியவரின் வீட்டிற்குச் சென்றார். பெரியவரின் வீட்டு வாசலிலேயே, புலவர் அங்குள்ளவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். பெரியவர் பூஜையில் இருக்கிறார். ‘ரெண்டு நாழிகை’ கழிச்சி வாரும் என்று புலவரிடம் சொன்னார்கள் அந்த வீட்டில் இருந்ததவர்கள்.

புலவரும் பூஜையில் இருக்கும் பெரியவருக்குச் சிரமம் கொடுக்க வேண்டாம் என்று நினைத்து அங்கிருந்து சென்று கோயில் மடத்தில் தங்கிவிட்டார். ரெண்டு நாழிகை நேரம் கழித்துச் சென்ற பிறகும் வெகுநேரம் பெரியவரின் வீட்டுத் தாழ்வாரத்தில் புலவர் காத்திருந்த பிறகே, பெரியவரைப் பார்க்க முடிந்தது. புலவர், பெரியவரை வணங்கி, தான் வந்த நோக்கத்தைச் சொன்னார். புலவரின் ஆஜானுபாகமான தோற்றம், கருத்த நிறம், உடை, இவைகள் பெரியவரை முகம் சுளிக்க வைத்தது.

“உம்மைப் பார்த்தால் மலைப்பளினன் (காட்டுவாசி) போல் இருக்கிறது. நீர் எங்கஓய், ராமாயணம், கீமாயணம் எல்லாம் சொல்லப் போகிறீர்? இங்கே, அவையில் இன்னும் ஒரு மாசத்திற்கு நிகழ்ச்சிகள் எல்லாம் ஏற்கெனவே, முடிவாயிற்று. மகாராஜா வேறு ஊரில் இல்லை. எனவே நீர் ஊருக்குப் போயிட்டு இன்னும் நாலைந்து மாதம் கழித்து வாரும் பார்க்கலாம்” என்று சொல்லி விட்டார், பெரியவர். புலவர் ‘இந்தப் பெரியவர், ஆளைப்பார்த்து எடை போடுகிறார். நம் புலமையைப் பற்றி தெரிந்து கெள்ள இவர் முயற்சிக்கவில்லை’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, பெரியவரிடம் மறுமொழி ஏதும் கூறாமல் விடைபெற்றுக் கொண்டு நேரே, கோயில் மடத்திற்குச் சென்றுவிட்டார்.

புலவர், அன்று மாலையில் பக்கத்தில் உள்ள சிற்றூர் ஒன்றிற்குச் சென்று அங்குள்ள ஒரு மரத்தடியில் அமர்ந்து அவ்வூர்ச் சிறுவர்களுக்குத் தமிழ்ப் பாடல்களை எளிய நடையில் இசையோடு பாடி விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தார். புலவரின் இசை இன்பத்தையும், இலக்கியச் சுவையையும் கேட்டு, ஊரில் உள்ள சில, பெரியவர் களும், மரத்தடிக்கு வந்து உட்கார்ந்து, புலவரின் கதாகாலட்சேபத்தைக் கேட்க ஆரம்பித்தார்கள். அப்போது அந்த வழியாக மருதப்ப பாண்டியன் வேட்டையை முடித்துக் கொண்டு அரண்மனைக்குத் தன் பரிவாரங்களுடன் திரும்பிக் கொண்டிருந்தார்.

சற்று தொலைவில் வரும் போதே புலவரின் இசையும், பாடலும் மருதப்பரின் காதில் விழுந்தது. எனவே அங்கேயே நின்று புலவர் பாடுவதை ரசிக்க ஆரம்பித்தார். மகாராஜா நின்றதும். அவரோடு சேர்ந்து வந்த பரிவாரங்களும் நின்றுவிட்டன. புலவரின் இசைப் பாடல்களை மருதப்பரை மயக்கியது. எனவே மன்னர், குதிரையில் சவாரி செய்தபடி, புலவர் பாடிக் கொண்டிருக்கும் இடத்திற்கு வந்தார். மகாராஜா வருகிறார் என்றதும், அங்கு குழுமி இருந்த மக்கள் எல்லாம் எழுந்து அவருக்கு வணக்கம் சொன்னார்கள். புலவரும், இவர்தான் மருதப்பர் என்பதைப் புரிந்துகொண்டு மகாராஜாவை வணங்கினார்.

மன்னர் குதிரையில் இருந்து கீழே இறங்கி, அந்த இடத்திலேயே புலவரை ஆரத் தழுவி, ‘புலவரே நான் சற்று தொலைவில் இருந்தே உம் சையையும், தமிழ்ப்புலமையையும் கேட்டு ரசித்தேன். இன்றே இப்போதே தாங்கள் என்னுடன் அரண்மனைக்கு வரவேண்டும்” என்றார். ‘மன்னன் சொல்லுக்கு மறு சொல் ஏது?’ என்பது பழமொழி. எனவே, புலவரும் மருதப்பரோடு அரண் மனைக்கு வந்தார். அன்று இரவு அரண்மனையில் மன்னரின் விருந்தி னராகத் தங்கினார். புலவரைப் பாடச் சொல்லிக் கேட்டு தமிழ் இன்பம் சுவைத்தார் மருதப்பர்.

மறுநாள் காலையில் அக்ரஹாரத்தில் இருந்த பெரியவர் மருதப்பரைக் காண வந்தார். மகா ராஜாவோடு தான் நேற்று விரட்டி விட்ட புலவர் சமதையாக (சமமான ஆசனத்தில்) உட்கார்ந் திருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். மருதப்பர், அந்த அக்ரஹாரத்துப் பெரியவரைப் பார்த்து, “இன்றைக்கு இரவு முதல் ஒரு வாரத்திற்கு இந்த ராமசாமிப் புலவரின் இராமாயண கதா காலட்சேபத்திற்கு ஏற்பாடு செய்யும்” என்றார். பெரியவர்க்கு தலை சுற்றியது. எப்படி இந்தப் புலவர் இங்கு வந்தார் என்ற விபரம் புரியவில்லை. என்றாலும் மகாராஜாவிடம் தைரியமாக, “ராஜா இராமாயண கதா காலட்சேபத்தை எல்லாம் பிராமணர்கள்தான் செய்ய முடியும். இவர் சூத்திரர். ஆளைப் பார்த்தாலே தெரியவில்லையா? இவர் இராமாயன விளக்கம் சொல்லி நாங்கள் உட்கார்ந்து கேட்கவா..- இது அபச்சாரம்” என்றார்.

மருதப்பருக்கு ‘பெரியவரிடம் பொதுப் புத்தி இல்லை. ஜாதிப் புத்திதான் இருக்கிறது’ என்பது ஒரு நொடியில் புரிந்துவிட்டது. மருதப்பர் கோபத்துடன் அந்த அக்ரஹாரத்துப் பெரியவரைப் பார்த்து, ‘சூத்திராள் ராமாயணம் சொன்னால் உங்களுக்கு ஆகாது. நானும் உங்கள் பார்வையில் சூத்ராள்தான். சூத்ராள் சொல்கிற ராமாயணத்தைக் கேட்க விரும்பாத நீங்கள், சூத்ராளாகிய நான் தரும் சம்பளத்தையும், சன்மானத்தையும் மட்டும் எப்படி கை நீட்டி வாங்கிக்கொள்கிறீர்கள்?

கலைகளை ரசிக்க வேண்டுமே தவிர, அது இன்ன ஜாதிக்காரனின் கலை என்று பார்க்கக் கூடாது. ஆளைப் பார்த்து, தோற்றத்தைப் பார்த்து, அவன் பிறந்த ‘குடி’யைப் பார்த்து அவனின் கலையை எடை போடக்கூடாது. இப்போது நான் உத்தரவு போடுகிறேன். “இவர் ஒருவாரம் சொல்லப்போகும் ராமாயணத்தை நீர் உட்பட இவ்வூர் அக்ரஹாரத்தில் உள்ள அனைவரும் கேட்க வேண்டும்” என்றார். மகாராஜாவின் கோபத்தைப் புரிந்துகொண்ட பெரியவர், மகாராஜா உத்தரவுப்படியே ஆகட்டும், ‘புத்தி, புத்தி’ என்று தன் தலையில் தானே கொட்டிக் கொண்டு, புலவரைப் பார்த்ததும ஒரு பெரிய கும்பிடைப் போட்டு விட்டுச் சென்றார்கள்.

அன்று மகாராஜா உத்தரவுப்படி சூத்ராளான ராமசாமிப்புலவர், இராமாணன கதா காலட்சேபதைத் தொடங்கினார். மகாராஜாவின் முன்னிலையில் ஊர் மக்களும், அக்ரகாரத்துக் காரர்களும், கலை அரங்கில் ஒருங்கிருந்து புலவர் பாடிவிளக்கம் சொன்ன ராமாயணத்தைக் கேட்டு ரசித்தார்கள். “முதலில் ஒரு வாரம் மட்டும் நிகழ்ச்சி நடத்த அனுமதி கொடுத்த மருதப்பர் புலவரின் புலமையைக் கண்டு வியந்து பத்து நாட்களுக்கு நிகழ்ச்சியை நடத்தச் சொல்லி ஒவ்வொரு நாளும் தானும் அமர்ந்து புலவரின் கதைபாடல்களைக் கேட்டு ரசித்தார். முடிவில் புலவருக்கு, மருதப்பர் கணிசமான அளவு அன்பளிப்புகளையும் கொடுத்து அவரை மகிழ்வித்தார்” என்று இருதாயல மருதப்பர் காலத்தில் நடந்த இந்நிகழ்வை நினைவு கூர்ந்தார் ஊத்துமலையைச் சேர்ந்த வித்வான் தங்கப் பாண்டியனார். மருதப்பரின் தமிழ்ப் பற்றையும், கலை ரசனையையும் இத்தரவால் நாம் அறிந்து கொள்ள முடிகிறது


(தடங்களைத் தேடுவோம்)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.